சில மனிதர்களின் நினைவுகள், அவர்கள் பிறந்த தேதியில் இருந்து தொடங்கும். ஆனால் சிலரின் நினைவுகள் அப்படித் தொடங்குவதில்லை. வர லாற்றில் நீண்டுகிடக்கும் பெருநினைவொன்றின் நீட்சியாகத்தான் அது தென் படும். தோழர் முத்துராஜு வின் நினைவும் அப்படித் தான். அவர் பணியாற்றிய ஹார்வி மில்லின் நீட்சியாகத் தான் அவரின் நினைவு மேலெழுந்து வருகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண் டில், உருமாறிப் புதுப்பொலிவு பெற்ற நவீன மதுரையின் அடையாளம். பிரிட்டீஷா ருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சுதந்திரப் போராட்டத் தின் அடையாளம். புதிதாக உருவான தொழிற்சங்கங் களுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் அடையாளம். இதை மாற்றி சொல்வதாக இருந்தால், ஹார்வி மில் அர சியல் வாழ்விலும் பொருளியல் வாழ்விலும் உருவாக் கிய தாக்கத்தின் அடையாளமே நவீன மதுரை.
இந்த நூற்பாலையில் பணியாற்றிய பல்லாயிரக்க ணக்கான தொழிலாளிகளின் சக்தியே நூற்றாண்டுக் கால மதுரை அரசியலின் கருப்பொருள்.
தொழிலாளிகளின் உரிமையைக் காக்க, ஜார்ஜ் ஜோசப் தொடங்கி கே.டி.கே தங்கமணி, சங்கரய்யா என மாபெரும் தலைவர்கள் ஹார்வி மில் நூற்பாலையின் வாசலில் காவல்தெய்வங்களாக நிலைபெற்றிருந்தார்கள்
இந்த நூற்பாலையில் 1940களில் நிகழ்ந்த மாபெரும் போராட்டம் தமிழகத் தொழிலாளி வர்க்க அரசியலின் மைல்கல். இந்தப் போராட்டத்தின் விளைவுகளில் ஒன் றாக இங்கு பணியாற்றிய தொழிலாளிகள் குடியிருக்கத் தனித்த காலனி குடியிருப்பு ஒன்று உருவானது. ஹார்விப் பட்டி என்னும் அந்தக் குடியிருப்பிலிருந்து தொழிலாளி களை மூன்று ஷிப்டுகளுக்கும் ஆலைக்கு அழைத்துச் செல்ல தனி ரயில் ஏற்பாடானது. இந்தியாவில் தொழி லாளிகளுக்காகவே இயக்கப்பட்ட ரயில் அது.
இந்தப் போராட்டத்தால் தொழிலாளிகளுக்குக் கிடைத்த பலன் எண்ணற்றவை. இந்தப் பலன் கிடைக்க செங்கொடி இயக்கத் தோழர்கள் செய்த தியாகம் அதற்கு முன்னும் பின்னும் மதுரை வரலாறு சந்தித்திராதது.
வைகையின் கரையில், உரிமைக்குரலை ஒடுக்கு வோருக்கும் ஒடுக்குமுறையை முறியடிப்போருக்கும் இடையில் நீடித்து நடந்த போராட்டத்தின் விளைச் சல்தான் இன்றளவும் எந்த அதிகாரத்திற்கும் அடிபணி யாது செழித்து நிற்கும் மதுரை செங்கொடி இயக்கத்தின் வரலாறு.
இந்த பெரும் வரலாற்றின் துணைக்கதைகளில் ஒன்று தான் இப்பெரும் போராட்டத்தால் உருவான ஹார்விமில் காலனியின் கதை. ஹார்வி மில் காலனி என்பது எங்க ளது வாழ்வின், எங்களது அரசியலின் அடையாளம் என்று சொல்லுகிற எண்ணற்ற தோழர்களில் நானும் ஒருவன்.
எனது தாத்தாவும் பாட்டியும் ஹார்வி மில் தொழிலாளி கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டில்தான் மூன்று தலைமுறையை எங்களின் குடும்பம் கடந்துள்ளது. இந்த காலனியில் குடியிருந்த ஒவ்வொரு குடும்பத்தின் நினைவு களிலும் 1940 தொடங்கி சில பத்தாண்டுகள் நீடித்த தொழிற் சங்கப் போராட்டமும் அதன் முனைகளில் தெறித்த குருதியும் படிந்திருக்கும்.
அன்றைய தினம் அந்த மாபெரும் போராட்டத்தை நடத்திய பொழுது இரண்டு பெரும் தொழிற்சங்கங்கள் இருந்தன. போராட்டத்தின் முடிவில் நிர்வாகத்தோடு நடந்த ஒப்பந்தத்தின் விளைவாக அழகிய குடியிருப்பு உரு வானபோது அதில் செங்கொடிச் சங்கத்தினர் ஒருவர்கூட நுழைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது நிர்வாகம். அவர்களின் ஆசிபெற்ற சங்கத்தினர் மட்டுமே இங்கு குடியமர்த்தப்பட்டனர், என் தாத்தா உட்பட. பிரிட்டிஷாரின் மூலதனத்தால் இயங்கும் ஆலை, அவர்கள் கட்டிய குடியிருப்பில் ஒரு கம்யூனிஸ்ட் நுழைந்துவிடக்கூடாது என்று உறுதியோடு இருந்தது. இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தின் தொடர்ச்சியாக எழுச்சிபெற்ற மதுரை செங்கொடி இயக்கத்தை முழு முற்றாக ஒழிக்க நினைத்த பிரிட்டீஷார் “மதுரை சதி வழக்கை” உருவாக்கினர். மாபெரும் தலைவர்கள் எம்.ஆர். வெங்கட்ராமன், பி.இராமமூர்த்தி, என்.சங்க ரய்யா, கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட 150க்கும் அதிக மானோரை சிறையிலடைத்தனர். தலைவர்களைச் சிறை யில் பூட்டியபின் செங்கொடி இயக்க வீரர்களை அழிக்க அதிகாரத்தின் வேட்டைநாய்கள் மதுரையின் வீதிகள் தோறும் ஏவப்பட்டன. பட்டியக்கல் பதித்த நான்மாடக்கூட லின் தெருவெங்கும் எமது தோழர்களின் குருதிதோய்ந் தது. தேடித்தேடி வேட்டையாடப்பட்டார்கள். திசை எங்கும் வேட்டையாடப்பட்டார்கள். அழியும் வரை வேட்டையா டப் பட்டார்கள். வேட்டை முடிந்தது. ஆனால் அவர்கள் நினைத்த அழிவு மட்டும் நடக்கவே இல்லை. மாறாக சிந்திய குருதி செழிப்புற்று எழுந்தது. “சிறைக்குள் இருந்த படியே தோழர் பி. ஆர். வென்றார்” என்ற சத்தம் மதுரை தொழிலாளி வர்க்கம் முரசரைந்த பேரிகை ஓசை. 1940கள் தொடங்கி 1950களின் இறுதி வரை அடக்கு முறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட எமது தோழர் கள் இல்லையென்றால் மதுரையின் அரசியல் என்பது மிட்டாமிராசுகளின் அரசியலாகவும் பண்ணைகளின் அரசியலாகவும் மட்டுமே இருந்திருக்கும். ஜனநாய கத்தின் துணைகொண்டு செல்வாதாரத்தின் முது கெலும்பை முறித்துக் காட்டியது மதுரையின் உழைப்பாளி வர்க்கம்.
இந்தக் கதையின் இன்னுமொரு ஆற்றல்மிகு அத்தி யாயம்தான் ஹார்விமில் காலனி. சுமார் 8மாதத்திற்கும் அதிகமான காலம் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழி லாளிகள் பிரமாண்டமாக நடத்திய போராட்டத்தின் வெற்றிகளில் ஒன்றாகக் கிடைத்த குடியிருப்பில், அந்த போராட்டத்தின் ஜீவ ஊற்றாக இருந்த செங்கொடி இயக்கத்தின் நிழல்கூடப் படாமல் பார்த்துக்கொண்டது அதிகார வர்க்கம்.
வரலாறு, வல்லான் வகுத்த பாதையில் மட்டும் செல்லும் என்ற மூடநம்பிக்கையை தகர்ப்பதே முற்போக் குச் சக்திகளின் முதல் பணி. ஒரு கம்யூனிஸ்ட்கூட நுழைந்துவிடக்கூடாது என்று உருவாக்கப்பட்ட ஹார்வி மில் காலனி, ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக மாறியது. இந்த காலனி தனிப்பேரூ ராட்சியாக மாறியபோது அதன் தலைவராக கம்யூ னிஸ்டுகள் பொறுப்பேற்றனர். மதுரை மாநகராட்சி யோடு இணைந்தபோது அதன் மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றனர். இது எளிதில் நிகழ்ந்த ஒன்றன்று. ஒரு கொடிய வரலாற்றை முறித்து, எளிய மனிதர்களின் கொடி பறந்த கதை.
இந்த கதையில் எத்தனையோ நாயகர்கள் உண்டு. ஆனால் நானறிந்த தலைநாயகன் தோழர் முத்துராஜ். 1950களின் தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை ஹார்வி மில் நூற்பாலையில் இருந்து மேலெழுந்த போது அதில் விளைந்து வந்தவர் தோழர் முத்துராஜ். ஆலைத் தொழிலாளியாக பல உரிமைப் போராட்டங்க ளில் பங்கெடுத்தவர். ஆலையில் பணியாற்றி, தொழிற் சங்கப் பணிகளை பார்த்துக்கொண்டே வீதிகளில் அரசி யல் பணியை இமைசோராமல் பார்க்கக் கூடியவர். ஆலை யில் இருந்து ஓய்வுபெற்ற பின், கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழி யராக தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் தாலுகா செயலா ளராக பணியாற்றினார்.
களில் ஒருவர். மார்க்சிஸ்ட் கட்சியில் நான் இணைந்த போது எனது கிளையின் செயலாளர். பயிற்சி தரவும் பண்பு பாராட்டவும் அவருக்கு இணைகண்டதில்லை. வழி காட்டுவதும் வளர்த்தெடுப்பதும் எப்படி என்பதற்கு உதார ணமாக வாழ்ந்தவர் எங்களின் அசைக்க முடியா பேருறுதி தோழர் முத்துராஜ். அவரின் நினைவும் புகழும் பங்களிப்பும் நீண்டு நிலைக்கும். செவ்வணக்கம் தோழர் முத்துராஜ்.