articles

img

உலகை உலுக்கிய இரண்டு மரணங்கள் - அ.விஜயகுமார்

உலகை உலுக்கிய இரண்டு மரணங்கள்

பாலஸ்தீனத்தில் நாள்தோறும் அப்பாவி மக்கள் இஸ்ரேலின்  கொடூர விமானத்தாக்குதலில் கொல்லப்படு கின்றனர். சமீபத்தில் நிகழ்ந்த இரண்டு மர ணங்கள் உலகின் மனசாட்சியை தட்டிஎழுப்பி யுள்ளன. ஒன்று ‘பாலஸ்தீன பீலே’ என்று அன்பாக அழைக்கப்படும் அந்நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஒபெய்ட் படுகொலை. மற்றொன்று காசா பகுதி யின் துயரத்தை உலகிற்கு எடுத்துரைத்த அல் ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் அனஸ் ஜமால் அல்-ஷெரிஃப் படுகொலை. 

சுலைமான் அல் ஒபெய்ட் - பாலஸ்தீன பீலே  

1984 மார்ச் 24, அன்று காசா நகரில் பிறந்த சுலைமான், முற்றுகையிடப்பட்ட பகுதியின் நெரி சலான தெருக்களில் இருந்து எழுந்து பாலஸ்தீன கால்பந்தின் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒருவராக மாறினார். மேற்குக் கரையில் உள்ள பல அணிகளுக்காக விளையாடி 100 க்கும் மேற்பட்ட கோல்களை அடித்தார். இதன் மூலம் அவருக்கு பாலஸ்தீன பீலே என்ற பெயர் கிடைத்தது.  2007 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்காக தேசிய அணியில் அறிமுகமானார். 24 போட்டி களில் அந்த அணி வெற்றி பெற காரணமாக திகழ்ந்தார். 2010 மேற்கு ஆசிய கால்பந்து கூட்ட மைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் ஏமனுக்கு எதிராக அவர் அடித்த கோல் ‘கத்தரிக்கோல் உதை (சிசர் ஷாட்)’ என்று கால்பந்து ரசிகர்களால் அழைக்கப்படுகிறது.  “எந்தவொரு விளையாட்டு வீரரும் சர்வதேச மன்றங்களில் தனது தேசிய கால்பந்து அணியின் டீ சர்ட்டை அணிய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். உலகில் உள்ள மற்ற நாடுகளின் விளையாட்டு வீரர்களைப் போலவே, நாங்களும் சுதந்திரமாகப் பயணிக்க விரும்புகிறோம்” என்று ஒபெய்ட் கூறியிருந்தார்.  இஸ்ரேலின் இனப்படுகொலை அந்தக் குடும்பத்தின் அழகான வாழ்க்கையை நாசம் செய்துவிட்டது. அவர்களின் வீடு குண்டுவீச்சில் அழிக்கப்பட்டது. இப்போது காசா நகரத்தின் இடி பாடுகளுக்கு மத்தியில் ஒரு கூடாரத்தில் வசிக் கிறார்கள். தனது மனைவி மற்றும் 5 குழந்தை களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்க காத்திருந்தபோது சுலைமான்  ஒபெய்ட் கொல்லப்பட்டார்.  

மோ சலாவின் கேள்வி  

புகழ்பெற்ற லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் முன்னணி வீரரான மோ சலா, ஒபெய்ட் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரி வித்தார். “அவர் எப்படி இறந்தார், எங்கே, ஏன் இறந்தார் என்று சொல்ல முடியுமா?” என்ற கூர்மையான கேள்வியை சலா தனது எக்ஸ் பக்கத்தில் எழுப்பியிருந்தார். வெறும் 48 மணி நேரத்திற்குள் சலாவின் பதிவு 111.4 மில்லியன் முறை  பார்க்கப்பட்டது.

 அனஸ் அல்-ஷெரீப் - உண்மையின் குரல்

 28 வயதான அல்-ஷெரீப் இஸ்ரேல் படையின ரால் முற்றுகையிடப்பட்ட பகுதியில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்தவர். வடக்கு காசாவில் இருந்து விரிவாக செய்திகளை வெளி யிட்டு வந்தார். அல்-ஷிஃபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு வெளியே பத்திரிகை யாளர்களுக்கான கூடாரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.  “என்னிடமிருந்து கடைசி செய்தித் தொகுப்பு வந்தால் இஸ்ரேல் என்னைக் கொன்று என் குரலை அடக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று அவர் ஏற்கெனவே ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அது இப்போது நிஜமாகிவிட்டது.  “ஜபாலியா அகதிகள் முகாமின் சந்துகளிலும் தெருக்களிலும் உள்ள மக்களின் நரக வாழ்க்கை யை நான் பார்த்தபோது என் கண்கள் அவர்களுக் காக எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்” என்று அவர் கூறியிருந்தார்.  “நான் ஒவ்வொரு செய்தியை சேகரிக்கும் போதும் அனைத்து வகையிலும் வலியை அனு பவித்தேன். ஆனால் உண்மையை அப்படியே வெளிப்படுத்த நான் ஒருபோதும் தயங்கவில்லை” என்று அவர் உறுதியளித்தார்.  

உலகிற்கான செய்தி

 தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற  நிலையிலும் கடமை தவறாத அல்-ஷெரிஃப், காசாவின் துயரத்தையும் ஊட்டச்சத்து கிடைக்கா மல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எலும்பும் தோலுமாக சிதைந்து கொண்டிருப்பதையும் உலகின் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவர். “இஸ்லாமிய உலகின் ரத்தினமாகவும், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு சுதந்திர இதயத்தின் துடிப்பாகவும் இருக்கும் பாலஸ்தீனத்தை உங்க ளிடம் ஒப்படைக்கிறேன். சங்கிலிகள் உங்களை மவுனமாக்கவோ, எல்லைகள் உங்களைத் தடுக்கவோ விட வேண்டாம். எங்களிடமிருந்து திரு டப்பட்ட தாயகத்தின் மீது கண்ணியம் மற்றும் சுதந்திரத்தின் சூரியன் உதிக்கும் வரை நிலத்தையும் மக்களையும் விடுவிப்பதற்கான பாலங்களாக நீங்கள் இருங்கள்” என்று உலக மக்களுக்கு அந்த இளம் இதழியல் போராளி எழுதி வைத்துள்ள கடிதம் நமது கண்களை குளமாக்குகிறது.  பத்திரிகையாளர் அனஸ் ஜமால் அல்-ஷெரிஃப்பின் கடைசி வார்த்தை: “உலகமே காசாவை மறந்துவிடாதீர்கள்...” என்பதுதான். பல நூறு ஆண்டுகள் ஆனாலும் காசாவின் துயரத்தை மறக்க முடியாதே!