articles

img

இந்தப் போர் ஓயாது....

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் - 1

மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன நஷ்டம்? ஏன் இவர்கள் போராடுகிறார்கள் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எகத்தாளமாக பேட்டியளித்து வருகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மூன்று கொடிய வேளாண் சட்டங்களைப் பற்றியும் விரிவான விமர்சனங்களை முன்வைக்கிறார்.

“பாரதீய கிசான் சங்கம்” என்ற விவசாயிகள் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பா.ஜ.க கட்சியின் விவசாயிகள் சங்கம். இந்த சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.பத்ரி நாராயணன் சௌத்ரி நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபருக்கு பேட்டியளித்தார். அதில் “Those who came up with the legislations were not aware of the grass root reality” என்று சொன்னதுடன், பிரதமர் “குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று கூறியிருக்கிறாரே” என்று கேட்டதற்கு giving verbal assurance put same into bill என்று தெரிவித்தார். அடிமட்டத்தில் விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்றஉண்மையை அறியாதவர்களால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் என்றும், பிரதமர் வார்த்தை அளவிலான உறுதிமொழிகளை கொடுக்கிறார். அதை சட்டத்தில் இடம்பெறச் செய்யுங்கள் என்று நறுக்கென்று தெரிவித்தார்.

எனவே, அரசியல் காரணங்களுக்காக இந்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்பதில் கொஞ்சமும் உண்மையில்லை என்பதற்கு நாராயணனே சாட்சி. மற்றொரு உதாரணம், பாஜக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்கிற அதிமுகவின் மூத்த தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் இச்சட்டங்களை எதிர்த்து ஆற்றிய உரைவரலாற்றில் பதிந்துவிட்ட ஒன்று. ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போகிற இடங்களில் எல்லாம் இச்சட்டங்களை ஆதரித்து பேசி வருவதுதான் அரசியல் காரணங்களுக்காக என்று வேண்டுமானால் சொல்லலாம்.

வடஇந்திய மாநிலங்களில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ரயில் மறியல், சாலைமறியல், முற்றுகை, டிராக்டர் பேரணி, உருவ பொம்மை எரிப்பு என
பல்வேறு வடிவங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்தப் போராட்டங்களில் பங்கேற்கும் விவசாயிகள் அனைவரும் எதிர்க்கட்சிகளை சார்ந்தவர்களா? இந்தப் போராட்டங்கள் அனைந்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அறைகூவல் விடப்பட்டு நடைபெறுகிறது. 400க்கும் மேற்பட்ட விவசாயசங்கங்கள் இதில் இணைந்துள்ளன. அரசியல் சார்புள்ள,

சார்பற்ற மற்றும் இடதுசாரிகள் உட்பட இடம் பெற்றுள்ளனர். எனவே, சட்டம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திசைதிருப்பும் நோக்கத்துடன் மேம்போக்காக எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் பேசி வருகிறார்கள்.
இந்திய அரசியல் சாசனத்தில் மத்திய அரசுக்கான அதிகாரம் பட்டியல்-I லும், மாநில அரசுகளுக்கான அதிகாரம் பட்டியல் II லும், இரண்டு அரசுகளுக்குமான பொதுவான அதிகாரம் பட்டியல் III லும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை பட்டியல் II ல் பிரிவு 14லிலும், சந்தைபிரிவு 28லும் மற்றும் பிரிவு 46,47,48லும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலம் தொடர்பாக பிரிவு 18ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண்மையை மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் வைத்திருப்பதன் காரணம் என்ன? பயிரிடும் முறை, பருவநிலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். வேளாண்மை குறித்து உள்ளூர் மட்டத்திலான அறிவு மற்றும் செயல்திறன் முக்கியம் உள்ளிட்ட காரணங்களால் தான் மாநில அரசுகளுக்கு இது குறித்து அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் சட்டத்தைமீறும் இந்த செயல் குறித்து தமிழ்நாடு அரசு கிஞ்சிற்றும்கவலைப்படவில்லை. கேரள மாநில இடது ஜனநாயகமுன்னணி அரசு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது என்று முடிவு செய்துள்ளது. இடதுசாரி கட்சிகள், திமுக உள்ளிட்ட சில கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

வேளாண் சட்டங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றாலும் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டதன் மூலம் அமலுக்கு வந்துவிட்டதாகத்தான் ஐதீகம். எனவே, சட்டம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். மூன்று சட்டங்களும் வெவ்வேறு என்றாலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. அதனால் தான் சேர்ந்தார்போல் நிறைவேற்றி இருக்கிறார்கள். இது வேளாண் சட்டங்கள் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் இந்தியாவின் பெரும்பகுதி மக்களை பாதிக்கக்கூடிய சட்டங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம் The Farmers (Empowerment and protection) Agreement on price Assurance and Farm service Actவிவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் The Farmers produce Trade and commerce (promotion and Facilitation) Actஅத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 Essential commodities amendment act 2020
சட்டத்தின் பெயர்கள் மிகநீளமானதாக இருப்பதால் இனி சுருக்கமாக முதல் சட்டம் ஒப்பந்த சாகுபடி சட்டம், இரண்டாவது வேளாண் விளை பொருட்கள் விற்பனை சட்டம், மூன்றாவது அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் என்று வைத்துக் கொள்ளலாம்.இந்த மூன்று சட்டங்களையும் அவசர சட்டமாக கொண்டுவந்த போது இதன் நோக்கமாக பிரதமர் தெரிவித்தது,விவசாயத்துறையில் போட்டியை ஏற்படுத்தவும், விவசாயிகளுடைய வருமானத்தை பெருக்கவும், நுகர்வோருக்கு பொருட்கள் தாராளமாக கிடைக்கவும் என்று கூறினார். இந்தஉயரிய நோக்கங்களை சட்டம் எந்த வகையில் நிறைவேற்றுகிறது. இந்த சட்டங்களை படிக்கிற போது, “ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், அதன் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஆம்! நம் முன்னோர்களின் அனுபவமொழி அல்லவா இது!

ஒப்பந்த சாகுபடிச் சட்டம்
முதல் சட்டம் சாகுபடியை துவங்குவதற்கு முன்பாகவே, விளை பொருளுக்கு விலையை உத்தரவாதம் செய்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்பது மிகவும் நல்ல சட்டம்தானே! இதை ஏன் எதிர்க்கிறீர்கள். இந்த விலை உத்தரவாதம் என்பது தான் ஒய்யாரக் கொண்டை, உள்ளே இருப்பது என்னவென்று பார்ப்போம்.அரசு நியமனம் செய்யும் ஒரு பதிவாளரின் முன்னால் விவசாயி அல்லது விவசாயிகள் குழு தனிநபரிடமோ, அல்லது கம்பெனி அல்லது நிறுவனங்களிடமோ எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தை செய்து கொள்ளலாம். ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான மாதிரி படிவத்தையும், அதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிடும். இத்தோடு அரசின் கடமை முடிந்தது. அரசின் சார்பில் எவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்கமாட்டார்கள்.ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், குறிப்பிட்டுள்ள நேரத்தில் பொருளை ஒப்படைப்பது, அந்த பொருளின் தனித்த இயல்பு, தரம், அளவு, ஒப்புக்கொண்ட விலை ஆகியன பொருளை பண்ணையில் வந்து எடுத்துச் செல்ல வேண்டும். போனஸ் அல்லது ஊக்கத்தொகை குறித்து ஏதாவது இருந்தால் அதுவும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பண்ணை சேவை என்ற முறையில் குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்வதற்கான விதை மற்றும் இடுபொருட்களை நிறுவனங்கள் வழங்கும். தேவைப்பட்டால் தொழில்நுட்பத்திறன் வாய்ந்த தொழிலாளர்களை நிறுவனங்கள் வழங்கும். இதற்குரிய கட்டணத்தை விலையிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தை மீறி ஏதாவது தாவா ஏற்பட்டால் அரசு சமரசக் குழு ஒன்றைஅமைக்கும். அதனிடம் புகார் செய்யலாம். அதில் தீர்வு ஏற்படவில்லையென்றால் 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யலாம். அந்தப் புகாரின்மீது 30 நாட்களுக்குள் அவர்கள் தீர்வைசொல்ல வேண்டும். அதிலும் தீர்வு ஏற்படவில்லையென்றால் 30 நாட்களுக்குள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அங்கு விதிக்கப்படும் அபராதம் நிறுவனங்களுக்கு கொடுப்பதாக சொன்ன விலையைப் போல் 11/2 மடங்கு விதிக்கலாம். இடுபொருட்களுக்கான உண்மையான கட்டணம் எதுவோ அதைத்தான் நிறுவனங்கள் கோர வேண்டும். ஒப்பந்தத்தை விவசாயிகள் மீறினால் அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகைக்காக நிலத்தை பறிமுதல் செய்யக்கூடாது. இவை தான் ஒப்பந்த சாகுபடிச் சட்டத்தில் உள்ள சுருக்கம்.

கார்ப்பரேட் கம்பெனிகள் அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் எதை உற்பத்தி செய்ய வேண்டுமென்று கேட்கிறார்களோ அதைத்தான் விவசாயிகள் பயிரிட முடியும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட போது பிரிட்டனுக்கு தேவையான பருத்தி, அவுரி,கோகோ போன்ற பயிர்களை பயிரிடுமாறு நமது நாட்டு விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அத்தகைய மோசமான நிலை திரும்பவும் இந்த ஒப்பந்த சாகுபடிச் சட்டம் மூலம் ஏற்படும். என்னுடைய நிலத்தில் என்ன பயிரிட வேண்டும்என்பதை நான் தீர்மானிக்க முடியாது. உலக சந்தையில் எந்தப் பொருளுக்கு கிராக்கி இருக்கிறதோ, எதில் அதிகலாபம் கிடைக்குமோ அதைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்ய வற்புறுத்துவார்கள். நமது நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை நாம் உற்பத்தி செய்ய முடியாது.அதற்கான இடுபொருட்களை அவர்களே வழங்குவார்கள். அதற்கு அபரிமிதமான விலையையும் அவர்களேதீர்மானிப்பார்கள். அந்த இடுபொருட்கள் நமதுநிலவளத்தை, நீர்வளத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்குமா? அல்லது பாதிக்குமா என்பது குறித்து பரிசோதிக்க எத்தகைய சரத்தும் சட்டத்தில் இல்லை. அவர்கள் கொடுக்கும் விதை மற்றும் உரம், பூச்சிகொல்லி போன்றவற்றின் மூலம்புதிய வகை பூச்சிகள் உருவாகி பாரம்பரியமான நமது பயிர்களை அழித்தால் அதற்காக எவ்விதத்திலும் அந்நிறுவனங்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது. மனிதர்களுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் கேள்விகேட்க முடியாது. இப்படியொரு நிலை ஏற்பட்டால் என்ற 

===பெ.சண்முகம்===

====தொடரும்===

;