பாலஸ்தீனத்தில் தொடரும் பட்டினிப் படுகொலைகள்
இனப்படுகொலையை தடுக்க சர்வதேச சமூகம் விரைவாக செயல்பட அழைப்பு
காசா, ஜூலை 20 - காசாவில் இருக்கக்கூடிய 20 லட்சத்தி ற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் மிக மோச மான உணவு பற்றாக்குறையை எதிர்கொள் கிறார்கள் என உலக வங்கி மற்றும் ஐ.நா அறிக்கைகள் வெளிபடுத்தி வருகின்றன.
பாலஸ்தீனர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட இல்லாமல் பட்டினி யால் வாடிக்கொண்டு இருக்கிறார்கள். உணவுப் பொருட்களை பெறுவதற்காக பாதுகாப்பான இடங்களாக அறிவிக்கப் பட்ட சில விநியோக மையங்களை நோக்கி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் பசியோடு வருகிறார்கள்.
ஆனால் இந்த மையங்களுக்கு செல்லக் கூடிய வழிகளிலும் அங்கு உணவுக்காக காத்திருக்கும் பாலஸ்தீனர்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்கிறது
கடந்த சிலவரங்களில் மட்டும் இவ்வாறு உணவு வாங்குவதற்காக வந்த 1000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உதவி மையத்திற்கு அருகே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதல்களில் 98 பாலஸ்தீனர்கள் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். 511 பேர் காய மடைந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரி வித்துள்ளது.
காசாவில் உணவுப் பற்றாக்குறை என் பது பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ய திட்டமிட்ட போர் உத்தியாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது என மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
நிவாரண வாகனங்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தடுத்து வருகிறது. இத னால் காசாவுக்கு தேவையான எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் முறையாக வந்து சேர்வது இல்லை என்றும் இதனால் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன என்றும் ஐ.நா அவை, மனிதாபிமான அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. சுத்தமான குடிநீர் மற்றும் சமையலுக்கான எரிபொருள் இல்லாத தால் கிடைக்கும் மிக குறைந்த உணவுப் பொருட்களையும் சமைக்க முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இந்த இனப்படுகொலையை தடுக்க சர்வதேச சமூகம் விரைவாகச் செயல்பட வேண்டும் எனவும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஐ.நா., அவை யும், பாலஸ்தீன ஆதரவு இயக்கங்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.