articles

img

ஸ்கேன் இந்தியா

உள்குத்து

 திரிபுராவில் ஆளும் கூட்டணியில் வெட்டு குத்து உச்சத்தை எட்டி யிருக்கிறது. மேற்கு திரிபுராவில் உள்ள கிராமமொன்றில் நடந்து கொண்டிருந்த பாஜக நிகழ்ச்சிக்குள் புகுந்து சிலர் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாஜகவின் பழங்குடி பிரிவின் மாநிலத் துணை த்தலைவர் மங்கள் தேப்பர்மா உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை கூட்டணிக்கட்சியான திப்ரா மோதாவைச் சேர்ந்தவர்கள்தான் நடத்தினர். பழங்குடியினர் பகுதிகளில் பாஜக நிகழ்ச்சிகளை நடத்து வதற்கு திப்ரா மோதா எதிர்ப்பு தெரிவித்தது தான் தாக்குதலுக்குக் காரணம். ஏற்கெனவே சில தாக்குதல்கள் நடந்துள்ளன. மேலும் மோதல்கள் ஏற்படாமல் இருக்க முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப், திப்ரா மோதா தலைவர் பிரத்யோத் தேப்பர்மா ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.  

முறிவு  

ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்த லில் பாஜக சார்பு ஏபிவிபி வெற்றி பெற்றுள்ளது. வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டு விட்டதாக பாஜகவினர் கொண்டாடுகிறார்கள். ஜனநாயக சக்திகளுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுதான் இந்த வெற்றிக்குக் காரணமாகும். கடந்த முறை ஒன்றாக அணி சேர்ந்து போட்டியிட்ட இந்திய மாணவர் சங்கம்(எஸ்.எப்.ஐ) மற்றும் அம்பேத்கர் மாணவர் சங்கம் ஆகியவை நடப்பாண்டில் தனித்தனி யாகப் போட்டியிட்டன. அனைத்துப் பொறுப்பு களுக்குமான வாக்குகளில் இந்த இரண்டு அமைப்புகளும் பெற்ற வாக்குகள் வெற்றி பெற்ற ஏ.பி.வி.பி. வேட்பாளர்களின் வாக்கு களை விட மிக அதிகமாகவே இருந்தது. இஸ்லா மியப் பழமைவாத அமைப்புகளை அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அம்பேத் கர் மாணவர் சங்கம் வலியுறுத்தியதுதான் கூட்டணி முறிவுக்குக் காரணமாகும்.  

கசிவு  

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து பல மாநில அரசுகளின் பணியாளர் தேர்வாணையங்கள் வரையில் வினாத்தாள்கள் கசிவது வழக்கமானதாகியுள்ளது. பட்டப்படிப்பு தகுதியைக் கொண்டவர்களுக்கான தேர்வை அண்மையில் உத்தரகண்ட் தேர்வாணையம் நடத்தியது. தேர்வு 11 மணிக்குத் தொடங்கி யது. 11.30 மணிக்கெல்லாம் வினாத்தாள்கள் மையங்களுக்கு வெளியில் கிடைக்கத் தொடங்கின என்று குற்றம்சாட்டி சில அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. வாட்ஸ்அப்பில் வினாக்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அதற்கான விடைகள் சில  பேராசிரியர்களிடம் பெற்று மீண்டும் மையத்திற் குள் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.  தேர்வுக்கு முந்தைய நாளன்று 12 முதல் 15 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு வினாத்தாள் களைத் தருவதாக சிலர் கேட்டதும் அம்பல மாகியிருக்கிறது. இந்த மோசடிகள் அனை த்துமே பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

புதைத்தல்  

நாட்டின் கொள்கை வழி என்பது பாரம்பரியச் சிந்தனையின் அடிப்படையில்தான் இருக்க  வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அதே கூட்டத் தில் பங்கேற்றிருந்த நிதி ஆயோக்கின் முன் னாள் துணைத்தலைவர் ராஜிவ் குமார், எப்படி நடைமுறைப்படுத்துவது என்று பாடம் எடுக்கத் தொடங்கினார். இளங்கலை மருத்துவப் படிப்பு(எம்.பி.பி.எஸ்) தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு அனைவருக்கும் ஒரே படிப்பாக இருக்கட்டும். மூன்றாம் ஆண்டில் சித்தாவா, ஆயுர்வேதமா, அல்லோபதியா என்பதை மாண வர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று ஒரு குண்டை வீசியிருக்கிறார். இது பொதுவான நிகழ்ச்சி என்பதால் பல தரப்பினரும் வந்திருந்த னர். மருத்துவப் படிப்பு ஏற்கனவே சீரழிந்து கிடக்கிறது. இவர்கள் குழி தோண்டிப்புதைத்து விடுவார்களோ என்று பலர் முணுமுணுத்தனர்.