articles

img

முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க ஆர்ப்பரிப்போம்! - வி.குமார்

உழைக்கும் மக்களில் 93 சதவீதத் திற்கும் மேற்பட்டவர்கள் முறை சாராத் தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்கள்.இத்தொழிலாளர்களுக்கு பல பெயர்கள் உண்டு. அணி திரட்டப்படாத தொழிலா ளர்கள், உதிரித் தொழிலாளர்கள், முறைசாராத் தொழி லாளர்கள், கூலித் தொழிலாளர்கள், பதிலிகள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலா ளர்கள் என்ற பல பெயர்களில் வாழ்கிற உரிமை யின்றி வாழும் உழைக்கும் மக்கள் ஆவர்.  முறைசாராத் தொழிலாளர்கள் பணி புரியும் பல்வேறு தொழில்கள் நலவாரிய பட்டியலில் இடம்பெற வில்லை. 18 தொழில்களுக்கான நல வாரியங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. அதுவும் செயலி ழந்து உள்ளது. அனைத்து முறைசாராத் தொழிலா ளர்களுக்கும் ஒரே வாரியம் என்பது போதுமான தன்று என பலமுறை தொடர்ச்சியாக சிஐடியு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாகத் தான் பதினெட்டு தனித்தனி நல வாரியங்கள் ஏற் படுத்தப்பட்டன. 1999- ஆம் ஆண்டு தமிழக அரசால் கண்டறியப்பட்டுள்ள 54 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான நல வாரியங் களை உருவாக்குவதற்குப் பதிலாக கட்டுமானம், உட லுழைப்பு, ஆட்டோ மற்றும் வாடகை ஊர்தி, சலவை, முடிதிருத்துவோர், தையல், கைவினைத்தொழில், பனைமரத் தொழில், கைத்தறி, காலணி தோல் பொருட்கள், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்டம், வீட்டு வேலை, சமையல், சாலையோர வியாபாரிகள், அரவாணிகள் என தனித்தனி நலவாரியம் உள்ளன. லட்சக்கணக்கான சுமைப்பணித் தொழிலாளர்கள் இருந்தும் அவர்களுக்கான தனி நலவாரியம் உரு வாக்கப்படவில்லை.

1978-இல் கேரளாவில் சுமைப்பணி தொழிலாளர் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1983இல் நல வாரியமும்  அமைக்கப்பட்டது. 1989இல் கட்டுமானத் தொழிலாளர் சட்டத்தை கேரளாவில் தோழர்.இ.கே. நாயனார் அரசு கொண்டு வந்து 23 முறை சாரா நல வாரியங்கள் கேரளாவில் செயல்படுகின்றன. முறைசாராத் தொழி லாளர்களுக்கு சேமநலத் திட்டங்களை அமலாக்கும் நாட்டிலேயே கேரள அரசுதான் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் 1982-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.அரசு தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலை சீரமைப்பு மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டத்தை  கொண்டு வந்தது. 1986-இல் சட்டத்தை அமலாக்கு வதற்கான நடைமுறை விதிகள் உருவாக்கப்பட்டன.

1999 ஏப்ரல் 28 அரசு ஆணைப்படி உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம் 54 முறைசாராத் தொழி லுக்காக துவக்கப்பட்டது. சிஐடியு உள்ளிட்ட இடது சாரி- மத்தியத் தொழிற்சங்கங்கள் நடத்திய எண்ணற்ற போராட்டங்களின் விளைவாக 2001 சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு 2000இல் டிசம்பர் 16-இல் மெரினா கடற்கரையில் முறைசாராத் தொழிலா ளர் மாநில சிறப்பு மாநாட்டை திமுக அரசு நடத்தி யது. பின்னர் அதிமுக ஆட்சி காலத்தில் ஒரே நல வாரியமாக செயல்பட்ட முறைசாரா வாரியம் 13 வாரிய மாக பிரிக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் பதிமூன்று வாரியங்கள் 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

  நமது கோரிக்கை

தேசம் முழுவதும் உள்ள 20 கோடி முறைசாரா மற்றும் 24 கோடி விவசாயத் தொழிலாளர்க்கு தனித் தனியாக, ஒருங்கிணைந்த அகில இந்திய சமூக பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும், முறை சாரா நலவாரியங்களுக்கு தேசிய வருமானத்தில் 3 சதவீதம் அதாவது ரூ. 2,80,000 கோடி ஒன்றிய அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்க வேண்டும், இதன் மூலம் கணிசமான பென்சன் தொகை, மருத்துவ உதவிகள் போன்றவை வழங்க முடியும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆயினும்  அதை காதில் வாங்காமலேயே ஒன்றிய அரசு உள்ளது.மேலும் வேலை பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம், எட்டு மணிநேர வேலை, கண்ணியமான வேலை, காண்டிராக்ட் கொத்தடிமை முறை ஒழிப்பு, சமவேலைக்கு சம கூலி, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பணியிடங்களில் பாலியல் பலாத்காரம் அகற்றுவது போன்றவற்றில் ஒன்றிய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட வேண்டும்.

தற்போதைய நிலை

தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள நலவாரி யங்களில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி பதிவு, புதுப்பித்தல், பணப்பயன்கள் பெறுதல் போன்றவை  ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு முடிவு செய்து அப்பணியில் இறங்கியது. பெரும்பாலான மாவட்டங்க ளில் ‘சர்வர்’ வேலை செய்யவில்லை. கிராம நிர்வாக  அலுவலர் சரிபார்த்தலில் காலதாமதம், குளறுபடி,  தேவையற்ற விபரங்களை கோருவது, தொழிலாளிக ளை அலைக் கழிப்பது ஏதாவது காரணம் சொல்லி கேட்பு மனுக்களை ஏற்க மறுப்பது போன்ற பல்வேறு சங்கடங்களை தொழிலாளிகள் சந்தித்து வருவ தால் பெரும்பாலான தொழிலாளர்கள் மன உளைச்ச லுக்கு ஆளாகியுள்ளனர்.

மேற்கண்ட விவரங்களை அரசின் கவனத்திற் கும் வாரியச் செயலாளர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றும் மௌனமாக உள்ளனர். அதோடு கட்டுமானம், ஆட்டோ நல வாரியங்களில் மட்டுமே வருவாய் உள்ளது. மற்ற நல வாரியங்களுக்கு தமிழக அரசு தனது பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்க இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கண்கா ணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அது முறையாகக் கூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. நலவாரியங்களுக்கு மாநில அளவில் தொழிற்சங்கங்களிடம் பெயர்ப் பட்டியல் பெற்று இதுவரை கட்டுமானம் தவிர இதர நலவாரியக் குழுக்கள் அமைக்க அரசு முன்வராதது அரசின் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. எனவே ஒன்றிய அரசு, தமிழக அரசு வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கின்ற இத்தொழிலாளர்களை பாதுகாக்க,  

கோரிக்கைகள்

  1.  ஆன்லைன் பதிவு புதுப்பித்தல் கேட்பு மனுக்களை பெறுதலில் உள்ள குறைபாடுகளை மிகத் துரிதமாக சரி செய்ய வேண்டும்.ஆப்லைன் அதாவது நலவாரிய அலுவலகத்திற்கு நேரடியாக வந்து நலவாரிய மனுக்களை சமர்ப்பிக்கவும் அனுமதிக்க வேண்டும்,
  2.  நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான கேட்பு மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு பணப் பயன்களை தாமதமின்றி வழங்கிட வேண்டும்,
  3.  ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளிலிருந்து நிலுவைத்தொகை உடன் மாத ஓய்வூதியம் வழங்கவேண்டும். மாத ஓய்வூதியம் ரூ. 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
  4.  முறைசாரா உடலுழைப்பு தொழிலாளர் அனைவருக்கும் வேலை உறுதிப்படுத்தும்  திசை வழியில் ஒன்றிய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  5.  பணியிடங்களில் மற்றும் எங்கு விபத்து மரணம் நிகழ்ந்தாலும் நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
  6.  கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், ஓட்டுநர் நல வாரியத்திலுள்ள நிதிகளை அந்த வாரியம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் நலன்களுக்கே செலவிட வேண்டும்.
  7.   மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான முறைசாராத் தொழிலாளர் கண்காணிப்பு குழுக்களை மாதந்தோறும் கூடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
  8.  சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு தேவையான மூலப் பொருட்களின் விலைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
  9.  இதர 17 முறைசாராத் தொழிலாளர் நல வாரியங்களின் முத்தரப்பு குழுக்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.    
  10.  தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய முத்தரப்புக் குழு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது இக்குழு மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது கூட்டப்பட வேண்டும்.
  11.  இயற்கை மரண நிவாரணம் 2 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். ஈமச்சடங்கு நிதி ரூ. 25000ஆக உயர்த்த வேண்டும்.
  12. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாய் உள்ளிட்ட அத்தியாவசியப்  பண்டங்களின் விலைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும். சிமெண்ட், ஸ்டீல், பெயிண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
  13.  நல வாரியத் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்டநல வாரிய அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஏற்கனவே பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.
  14.  அனைத்து முறைசாராத் தொழில்களில் தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
  15.  உடலுழைப்பு தொழிலாளர் சட்டப்படி உடலுழைப்பு தொழிலாளர் அனைத்து சங்க ஆலோசனைக் குழுவை அரசு நியமிக்க வேண்டும்.uசுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
  16.  அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் மழைக் கால நிவாரணம் வழங்க வேண்டும்.

மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ கம் முழுவதும் ஜூலை 5ஆம் தேதி மாவட்ட தலைநக ரங்களில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தை நடத்த சிஐடியு வேண்டுகோள் விடுத்துள்ளது. இப் போராட்டத்தில் ஆயிரம் ஆயிரமாய் தொழிலாளர்கள் அணி திரண்டு ஆர்ப்பரிப்போம். அரசின் கவனத்தை நம் பக்கம் திருப்புவோம்! வெற்றி பெறுவோம்!

கட்டுரையாளர் : உதவி பொதுச்செயலாளர்,சிஐடியு


 


 

;