articles

img

கடமை தவறிய பிரதமர்... அறிவுரை சொல்ல அருகதை உண்டா? - ஆர்.எம்.பாபு

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 20-01-2022 அன்று பிரம்மகுமாரிகள் ஆசிரமத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போது “குடி மக்களின் அடிப்படைக் கடமைகளில் கவனம் செலுத்துங் கள்; உரிமைகளை மறந்து விடுங்கள்” என்று கூறி இருக்கிறார். இது, கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே என்ற வர்ணாசிரம நூலான பகவத் கீதை சொல்வ தைப் போன்றது. அந்த கூட்டத்தில், “மேலும் இப்போ தெலாம் மக்கள் உரிமைகளைப் பற்றிப் பேசி நேரத்தை விரயம் செய்கிறார்கள். ஆகவே உரிமைகளை விட்டு விட்டு கடமையை மட்டும் செய்யுங்கள்” என்றும் அறிவுரை கூறியிருக்கிறார் பிரதமர். மோடி முதல் முறையாக பதவியேற்று ஓராண்டி லேயே - 27-12-2015 அன்று நடந்த கூட்டத்தில் ‘அடிப்ப டைக் கடமைகள்’ குறித்த மக்களின் எண்ணங்களை - செயல்களை வலியுறுத்திப் பேசியது இப்போது நினை வுக்கு வருகிறது. அவரே அவரது ஆட்சிக்காலத்தில் குறிப்பாக இந்த 7 ஆண்டுகளில் மக்கள் உரிமைகளை பற்றி அதிகம் பேசுகிறார்கள் என்று ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஜனநாயகமும் உரிமையும் மறுக்கப்பட்டு வருவதால் தான் மக்கள் போராட்டங்கள் மூலம் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட வருகிறார்கள் என்பதை அவர் கவனத்தில் கொள்வது நல்லது.

நமது இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு இந்திய குடிமகனின் 11 அடிப்படைக் கடமைகளை பட்டியலிடு கிறது. ஒவ்வொரு குடிமகனுக்குமான 6 அடிப்படை உரி மைகளையும் அதே இந்திய அரசியலமைப்புச் சட்டம்  சுட்டிக்காட்டி இருக்கிறது.  அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்து இருக்கும் உரிமைகளைப் பற்றி பேசி நேரத் தை வீணாக்காமல் கடமைகளை மட்டும் செய்யுங்கள் என்று பேசுவதே அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதுதானே! பிரதமர் என்பவர் ஒரு முதன்மைக் குடிமகன் எனும் அடிப்படையிலே, அவருக்கும் இந்த அரசியல் அமைப்பு  சொல்லி இருக்கும் கடமைகள் பற்றி நாம் நினை வூட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை மதித்து நடக்க வேண்டும்; அரசியலமைப்பின் உயரிய எண் ணங்களை மதிக்க வேண்டும் : பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனையை அனுபவித்தவர் கல்யாண் சிங். அவரது இறந்த உடலின் மேல் அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இந்திய தேசியக்கொடியின் மேலேயே பாரதிய ஜனதாக்  கட்சியின் கொடியை வைத்து மூடி, அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதாக எண்ணி நம் தேசிய கொடிக்கு அவமானம் இழைத்தார்கள். இதைப் பற்றி பிரதமர் மோடி எதுவுமே கண்டித்து கருத்துக்களை சொல்லவில்லை. 

பிரதமர் மோடியே 2015 மற்றும் 2016ல் தேசியக் கொடி யால் முகத்தை துடைத்துக் கொண்டார். 2015 இல் மாஸ் கோவில் நடந்த இரண்டு நாட்டு அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் போதே பிரதமர் மோடி நடக்கத் துவங்க, அந்த நாட்டின் ஜனாதிபதி நம் பிரதமர் மோடியை அறிவுறுத்தி தேசிய கீதத்திற்கு நின்று மரியாதை செய்ய வைத்தார். 

சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்களை பின்பற்றவும் அவர்களின் எண்ணங்களை போற்ற வும் செய்ய வேண்டும் : இந்தியாவின் சுதந்திரப் போரா ட்டத்தின் தந்தை எனப்போற்றப்படும் மகாத்மா காந்தி, நேரு உள்ளிட்ட சுதந்திரத் தியாகிகளின் இலட்சி யங்களையும் ஆளுமையையும் அவமதிப்பதை பாஜக மற்றும்சங் பரிவாரத்தின் தலைவர்கள் வழக்க மாகக் கொண்டுள்ளனர். காந்தியை கொன்ற கொலைக் குற்றவாளி நாதுராம் கோட்சேவை போற்று கிறார்கள். 

சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்டவர்களை பின்பற்றவும் அவர்களின் எண்ணங்களை போற்ற வும் செய்ய வேண்டும் : இந்தியாவின் சுதந்திரப் போரா ட்டத்தின் தந்தை எனப்போற்றப்படும் மகாத்மா காந்தி, நேரு உள்ளிட்ட சுதந்திரத் தியாகிகளின் இலட்சி யங்களையும் ஆளுமையையும் அவமதிப்பதை பாஜக மற்றும்சங் பரிவாரத்தின் தலைவர்கள் வழக்க மாகக் கொண்டுள்ளனர். காந்தியை கொன்ற கொலைக் குற்றவாளி நாதுராம் கோட்சேவை போற்று கிறார்கள். 

தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை காக்க வேண்டும்: ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து சுயாட்சியை பறித்து, தேசிய ஒருமைப்பாட்டிற்கே குந்தகம் விளைவித்துள்ளது மோடி அரசு. 

நாட்டுக்கு சேவை செய்ய எப்போதும் காத்திருக்க வேண்டும்: நாட்டு மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை கூட அறிந்திராத வகையில் மக்கள் விரோத திட்டங்களையும் சட்டங்களையும் போட்டு மக்களை அவதிக்குள்ளாக்கி இருக்கிறார் மோடி. முதன் முதலாக கோவிட் தொற்று பரவும் தகவலை நாடாளு மன்றத்தில் எடுத்து சொல்லியும் கூட, உடனடியாக தேவையான முன்னேற்பாட்டை செய்யாமல் திடீர் என்று குறைந்த கால அவகாசத்தில் ஊரடங்கை அமல் படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை சாலைகளில் பல நூறு மைல்கள் நடக்க விட்டவர் மோடி. 

இந்தியா மதம், சாதியால் பிரியாமல் சகோதரத்துவ உணர்வோடு இருக்க வேண்டும்: மோடி அரசு, இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு பதிலாக மத ரீதியாக சாதி ரீதியாக பிரிவினைகளை பேசும் சக்திகளை ஊக்குவித்து வருகிறது. ஆண் பெண் சமத்துவத்தையும் குழி தோண்டிப் புதைக்க முயலு கிறது.  புதிய சட்டங்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட மதத்தி னருக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப் பிடிக்கிறது. 

இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட பண்பாட்டை பாதுகாக்க வேண்டும்: வேற்றுமையில் ஒற்றுமை என்றஇந்தியாவின் பெருமையை சீர்குலைக் கும் சூழ்ச்சிகளை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஒரேநாடு ஒரே மொழி என்ற கொள்கையை பெரும்பாலான மோடி ஆதரவாளர்கள் பேசுவது நம்  இந்தியாவின் பன்முகக் கோட்பாட்டை சிதைக்கும்.  இந்தியாவின் கலாச்சார வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பை மோடியின் கீழ் உள்ள பாஜக இடைவிடாமல் குறைத்து மதிப்பிட்டு வருகிறது. 

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க காடுகள், ஏரிகள்,  குளங்கள் போன்றவற்றை  பாதுகாக்க வேண்டும்: 2014 முதல் ஒவ்வொரு நாளும் மோடி அரசின் கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நிர்வாகக்கட்டமைப்பு மாற்றங்கள் மூலம் சூழலியல் பிரச்சனைகளில் குழப்பத்தை மட்டுமே உண்டாக்கி இருக்கிறது. நிலக்கரி சுரங்கங் கள் அமைப்பதற்கு தனியாருக்கு நிலங்கள் ஒதுக்கீடு செய்தது; அங்கே இருக்கும் மக்கள் போராடினால் துப்பாக்கி யால் சுட்டு, வழக்குகள் போட்டு சிறைக்குள் தள்ளுகிறது.

மோடி அரசாங்கத்தால் 2020 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சுற்றுச்சூழல் சட்ட வரைவு, சுற்றுச் சூழலை காப்பதற்கு பதிலாக பெரும் கார்ப்பரேட்டு களுக்கு வளங்கள் அனைத்தையும் வாரி வழங்கிட வகை  செய்கிறது. கடலோர பாதுகாப்பை நீர்த்துப்போகச் செய்யும் புதிய கடலோர ஒழுங்குமுறை விதிகளை அறி முகப்படுத்தியது. தேசிய வனவிலங்கு வாரியத்தின் தலைவராக இருக்கும் பிரதமர் இந்த வாரியத்தை  ஒரு முறை கூட கூட்டவில்லை. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002 மற்றும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 ஆகியவற்றை பலவீனப்படுத்த முயல்கிறது.

மக்களிடம் அறிவியல் உணர்வைப் போற்ற வேண்டும்: அறிவியல் என்பதே மூட நம்பிக்கைக்கு எதிரானது.  மூட நம்பிக்கைகளை அறிவியல் மூலம் பகுத்தறிந்து மக்களுக்கு அவ்வப்போது விழிப் புணர்வை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. ஆனால் அறிவிய லுக்கு அப்பாற்பட்டு, பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக விநாயகரின் தலை இணைக்கப்பட்டதாகவும், புவி வெப்பமயமாதல் என்பது நமது வயது காரணமாக சொல்வதாகவும் பிரதமரே அறிவியலுக்கு எதிராக பேசிய நிகழ்வுகள். அவமானமில்லையா? கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருந்த காலங்க ளில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு ஏற்றி, மணி அடியுங்கள் என்று சொன்னது அறிவியல் உணர்வைக் குழிதோண்டிப் புதைத்த சம்பவமல்லவா? 

பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்: அரசு டமையாக்கப்பட்ட அனைத்து சொத்துக்களும் பொதுச் சொத்துக்கள். அவற்றை பாதுகாத்து மென்மேலும் வளர்ச்சியடைய செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கிறது.  ஆனால் நரேந்திர மோடி பதவியேற்ற காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பொதுச்சொத்துக்களை குறிப்பாக ரயில்வே, வங்கிகள், விமான நிறுவனங்கள், சாலைகள் என்று ஒவ்வொன்றாக தீவிர தனியார்மயம் ஆக்கி வரு கிறது.

தேசம் முன்னேற தனிப்பட்ட முறையிலும் ஒட்டு மொத்தமாகவும் வழிவகை செய்ய வேண்டும்: ஒரு தேசம் முன்னேற்றுவதற்கு சரியான ஆலோசனை களை ஏற்று அவற்றை நிறைவேற்றிட வேண்டும். இதுவரை பிரதமர் மோடி, தேசத்தை முன்னேற்றுவதற் கான ஆலோசனைகளை - கருத்துக் கேட்புகளை கேட்ட சரித்திரம் கிடையாது. அமைச்சரவையில் கூட கருத்து கூறுவதற்கு அனுமதி இல்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசவேமுடிவ தில்லை.

பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அறிவை வழங்க வேண்டும்: சுதந்திரம் பெற்று இப்போது வரை இருக்கும் பெரிய பிரச்சனையே கல்வி தான்.  குறிப்பாக ஏழ்மையான சமூக-பொருளா தாரத்தில் பின் தங்கியவர்களுக்காக அரசின் திட்டங்கள் இருக்கவேண்டும்.  குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும்.  ஆரோக்கியத்திற்கு அடிப்படை தேவை சத்தான உணவு.   இதை மனதில் வைத்து மாநில அரசு கள் சத்துணவு திட்டங்களை கொண்டு வந்து அந்த  சிறார்களுக்கு உணவளிக்கிறார்கள்.  மாநில அரசின் நிதிப்பற்றாக்குறையினால் குறிப்பாக ஒன்றிய அரசு உரிய நேரத்தில் அவர்களது பங்கை கொடுக்காததால் இந்த திட்டங்கள் தள்ளாடி வருகின்றன. மார்ச் 2020 முதல் மோடியின் ஊரடங்கு காரணமாக நாடு முழு வதும் பொதுப் பள்ளிகள் தங்கள் மதிய உணவுத்திட் டங்களை நிறுத்த வேண்டியிருந்தது. உத்தரகண்டில் மட்டும், இதுபோன்ற பள்ளிகளில் 20 சதவீதம் குழந்தை களுக்கு இரண்டு மாதங்களாக மதிய உணவு கிடைக்கவில்லை. 

- இவ்வாறாக, மேலே சொன்ன அடிப்படைக் கடமை கள் எதையுமே செய்யாத பிரதமர் மோடி அவர்கள் “உரிமைகளைப் பற்றி கேட்காதீர்கள்” என்று சொல் கிறார்.  முன்மாதிரியாக இருக்க வேண்டிய பிரதமர் அவரது கடமைகள் என்ன என்பதை புரிந்துகொண்டு இப்போதாவது செயலாற்ற வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்.

கட்டுரையாளர் : சிபிஎம் மதுரை மாநகர் மேற்கு இரண்டாம் பகுதிக்குழு 92 வது வார்டு செயலாளர்

;