articles

img

2024 தேர்தலுக்குப் பின் மதச்சார்பற்ற சக்திகளின் ஐக்கிய முன்னணி ஆட்சியமைக்கும் -

நேற்றைய தொடர்ச்சி...   சந்திப்பு: வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன்  தமிழில்: அ.குமரேசன்

கேள்வி: 2024 பொதுத்தேர்தலில் தேசிய அளவிலான மதச்சார்பற்ற மாற்று அணி உருவாவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் இதன் பொருளா?

பதில்: ஆட்சிக்கு மாற்றாக, தேசிய அளவிலான மாற்று அமைப்பதில் இந்தியாவின் வரலாற்றைப் பார்த்தீர்க ளானால், ஆகப் பெரும்பாலும் தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் அவ்வாறு அமைக்கப்பட்டு வந்துள் ளது.  மாற்று அணிகள் ஆட்சியமைத்த 1989, 1996, 2004ஆம் ஆண்டுகளில் இதுதான் நிலைமை. 1989இல் விஸ்வநாத் பிரதாப் சிங் தலைமையிலான  அரசு அமைந்ததிலிருந்து இந்த வரலாற்றுத் தடத்தை நீங்கள் பார்க்கவேண்டும். மிகக் குறிப்பாக, 1996இல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்ததிலிருந்து இதை நீங்கள் பார்க்க வேண்டும். அடல் பிஹாரி வாஜ்பாய்  தலைமையிலான 13 நாள் பாஜக-தேஜகூ  அரசு வீழ்ந்த பிறகு அந்த ஆட்சி அமைக்கப்பட்டது. மாற்று அரசு அமைக்கப்பட்டாக வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக இருந்தது. அதற்கான குறைந்தபட்ச பொது திட்டத்தை உரு வாக்குவதில்,  பொதுச்செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் தலைமையில் கட்சி முக்கியப் பங்காற்றியது. 2004இல், வாஜ்பாய்  தலைமையிலான 6 ஆண்டு கால பாஜக ஆட்சிக்கு  மாற்றாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்ததிலும் இப்படித்தான் நடந்தது.

குறைந்தபட்ச பொதுத் திட்டம் ஒரு கொள்கை மாற்று.  ஆனால் ஒவ்வொரு முறையும்,  அரசுக்கு வெளி யிலிருந்து ஆதரவளிப்பது என்பதில் எங்கள் கட்சி தெளிவாக இருந்து வந்துள்ளது.  நான் பலமுறை சொல்லியிருப்பது போல, இவ்வாறு “வெளியிலி ருந்து ஆதரவு” அளிப்பது என்பதில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு அறிவுச் சொத்துரிமை இருக்கிறது. அதையே இப்போதும் திரும்பச்சொல்ல வேண்டிய நிலையில்,  இத்தகைய நுணுக்கங்களைத் தாண்டி,  இந்த நாட்டில்  அரசியல் உட்பட அனைத்தி லுமே பன்முகத்தன்மை இருப்பதை  நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.  வேறு சொற்களில் சொல்வ தானால், இந்தியா தனது அரசியல் கட்டமைப்பி லேயே,  பல வகைகளில் சமுதாயத்தில் பல்வேறு வட்டாரங்களின் பன்முகத்தன்மையை பிரதிப லிக்கிற ஒரு கூட்டமைப்புதான்.  சமுதாயத்தின் பன்முகத் தன்மைதான் அரசியல் பன்முகத்தன்மை யாகவும் பிரதிபலிக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே சொல்லி வந்திருக்கிற கருத்து இது. இந்தப் பன்முகத் தன்மையை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்,  மாநில அளவில்  அந்த புரி தலுடன் கூடிய சமநிலையை உருவாக்க வேண்டும். அதன் ஒட்டுமொத்த விளைவுதான் மையத்தில் மாற்று ஆட்சியை உங்களுக்கு வழங்கும். இந்த நடைமுறை நமது ஜனநாயகத்தின் முதிர்ச்சி யையும் காட்டுகிறது.ஆகவே எடுத்த எடுப்பிலேயே தேசிய மாற்று என்ற கருத்தோடு நீங்கள் போக வேண்டும் என்பதில்லை.  தேர்தல் கூட்டணியைக் கட்டும்போதோ, கொள்கை மாற்றை உருவாக்கும் போதோ  புரிந்து கொள்ளவேண்டிய மிக முக்கியமான விஷயம் இது.

கேள்வி : இந்தப் புரிதலுக்கு  வருவதில் காங்கிரஸ் கட்சி எங்கே பொருந்துகிறது?  ஒரு தேசியக் கட்சி என்ற வகையில்,  தனது கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய தேசிய அளவிலான ஓர் ஐக்கியக் கூட்டணியை அந்தக் கட்சி விரும்பக்கூடும்…

பதில் : காங்கிரஸ் கட்சியின் வழிமுறை அல்லது திட்டம் என்ன என்பது எனக்குத் தெரியாது.ஆனால் அடிப்ப டையான சில எதார்த்த நிலைமைகள் உள்ளன. அண்மையில் நடந்த தேர்தல்களில்,  உத்தரப்பிர தேசம் போன்ற பெரிய மாநிலத்தில் நடந்தது என்ன?  அடிப்படையாக பாஜக-வுக்கும்   சமாஜ்வாதி கட்சிக் கும் இடையேயான போட்டியாகத்தான்  அங்கே தேர்தல் நடைபெற்றது.   பகுஜன் சமாஜ் கட்சி 13 சதவீத வாக்குகளை பெற்றது,  ஆனால் ஒரு இடம்தான் அதற்குக் கிடைத்தது.  ஒற்றைப்படை சதவீத வாக்கு களைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன.ஆகவே அங்கே காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பங்கு இல்லை.எங்கள் கட்சி அதிக இடங்க ளில் போட்டியிடவில்லை.மதச்சார்பற்ற வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க விரும்பினோம்.மாநிலம் முழுவதும் பரவலாக சமாஜ்வாதி கட்சிக்கு ஆதர வளித்தோம்.  மற்றொரு பெரிய மாநிலமான பீகாரிலும் அடிப்படையில் பாஜக,  லாலு பிரசாத் யாதவ் தலை மையிலான  ராஷ்டிரிய ஜனதா தளம்,  நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சுற்றியே அரசியல் நிகழ்வுப்போக்கு அமைந்திருக்கிறது. தென்னிந்தியாவை எடுத்துக் கொண்டால் கர்நாடகத்தைத் தவிர வேறு எந்த மாநி லத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு மையமான இடத்தை வகிக்கிறது?

அதேபோலத்தான் இடதுசாரிக் கட்சிகளும். தென் னிந்தியாவில் கேரளத்தை தவிர வேறு  எந்த மாநி லத்திலும் இடதுசாரிகள் மையமான இடத்தை வகிக்க வில்லை.  ஒடிஷா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோ  இடதுசாரிகளோ தற்போது மையமான பங்களிப்பை வழங்குகிற இடத்தில் இல்லை.  தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்  காங்கிரஸ் கட்சி யும் அங்கம் வகிக்கின்றன.  ஆகவே மதவாதத்தை யும், நாடு முழுக்கக்  குறுகிய இந்து அடையா ளத்தை ஏற்படுத்தும் அதன் திட்டங்களையும் எதிர்த்துப் போராட விரும்புகிறவர்கள் இந்தியாவின் இந்த அரசியல் பன்முகத்தன்மையை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

கேள்வி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முந்தைய மாநாட்டிலிருந்தே, பாஜக-வுக்கு மதச்சார்பற்ற மாற்று அமைப்பதில் காங்கிரஸ் கட்சியின் பங்கு ஒரு தீவிர மான விவாதத்திற்கும் குழப்பத்திற்கும் உரிய விஷய மாக இருந்து வருகிறது. இந்த மாநாட்டிலும், இந்தி யாவின் மிக மூத்த கட்சி மதச்சார்பற்ற அணியின் ஒரு அங்கமாக இருக்கக் கூடாது என்று விவாதிக் கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன…

பதில் : காங்கிரஸ் கட்சியின் பங்கு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் குழப்பம் எதுவும் இல்லை. உண்மையில்,  ஹைதராபாத் மாநாட்டில் எடுக்கப் பட்ட நிலைபாட்டையே  கண்ணூர் மாநாடும் வலி யுறுத்தியிருக்கிறது.  புதிய நிலைபாடு எதுவும் மேற் கொள்ளப்படவில்லை.  ஹைதராபாத்  மாநாட்டுத் தீர்மானத்தில்,  காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வு தேர்தல் கூட்டு வைத்துக் கொள்ளக் கூடாது என்ப தாக இருந்த ஒரு வரி திருத்தப்பட்டு அரசியல் கூட்டு என மாற்றப்பட்டது.  அப்போதிருந்து காங்கிரஸ் கட்சி யுடன் அரசியல் கூட்டு இல்லை என்பதே எங்கள் நிலைபாடாக இருந்து வருகிறது. ஆனால், நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களின் பிரச்சனைகளுக்கான  பெருந்திரள் போராட்டங்களி லும் காங்கிரஸ் கட்சியுடன் இவ்வாறு உறவு வைத்துக் கொள்வது என்பது குறித்தும் ஹைதராபாத் மாநாடு வரையறுத்துள்ளது.  இந்த அளவுகோலின் அடிப்ப டையில் நாங்கள் இணைந்து செயல்படுவது என தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

தேர்தல்களைப் பொறுத்தவரையில்,  பாஜகவுக்கு எதிரான அதிகபட்ச வாக்குகள் பதிவாவதை உறுதிப் படுத்தும் வகையில் பொருத்தமான வேண்டுகோளை எங்கள் கட்சி விடுக்கும், உரிய தேர்தல் அணுகுமுறை களை வகுக்கும். முந்தைய இரண்டு மாநாடுகளிலி ருந்து மாறுபட்ட இந்த நிலைபாடு மதச்சார்பற்ற கட்சி களிடையே கூடுதல் வரவேற்பைப் பெற்று வரு கிறது.  இந்த அளவுகோல்களின் அடிப்படையில் ஒன்று படும் எதிர்க்கட்சிகள், அதாவது நேரடிக் கூட்டாக வும், பல்வேறு மாநிலங்களில் பிரச்சனைகளின் அடிப் படையிலான புரிதலுடனும் ஒன்றுபடுகிற எதிர்க்கட்சி கள் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வை எதிர்த்து  நிற்கும் என நான் உறுதியாகக் கருதுகிறேன். மாநிலங்களில் இதைச் செய்த பிறகு தேசிய அள வில் ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்திற்கான ஒரு கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படும்.  ஒவ்வொரு மாநி லத்திலும் இது நடைபெறும்.2024 தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற சக்திகளின் ஐக்கிய முன்னணி அரசு அமைக்கும்.

கேள்வி : முந்தைய மாநாட்டுக்குப் பிறகு அளித்த பேட்டியில், நீங்கள் பெருமுயற்சி செய்தும், கட்சி யின் அரசியல் தலைமைக்குழுவுக்குள் தலித் தலைவர் ஒருவரைக் கொண்டுவர முடியாதது குறித்த ஏமாற்றத்தை நீங்கள் வெளிப்படுத்தினீர்கள். இந்த முறை அரசியல் தலைமைக்குழுவில் தலித் ஒருவர்  இடம் பெற்றிருக்கிறார் - ராமச்சந்திர தோம்…

பதில்: உண்மையிலேயே கடந்த முறை அது ஒரு ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த மாநாட்டிற்குப் பிறகு உங்களுக்கு நான் அளித்த பேட்டியில்,  இதைச் சரிப்படுத்த நாங்கள் அக்கறை யுள்ள முயற்சிகளை மேற்கொள்வோம் என்று  சொன்னேன்.  உண்மையிலேயே அந்த வாக்குறுதி யைக் கட்சி இப்போது நிறைவேற்றியிருக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை யில் இது வெறும் அடையாளப்படுத்தும் நடவடிக்கை அல்ல.  இடதுசாரி  இயக்கங்களுக்கும் தலித் இயக் கங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற் படுத்துகிற, துடிப்புமிக்கதோர் இணைப்பை ஏற்படுத்துகிற செயல்.

கிட்டத்தட்ட பத்தாண்டு  காலத்தில் இந்த இயக் கங்கள்  குறிப்பிடத்தக்க  வளர்ச்சியைப் பெற்றிருப்ப தைப் பார்க்கிறோம்.  இதில் கணிசமான இயக்கங்க ளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தி ருக்கிறது. “ஜெய் பீம்-லால் சலாம்” (ஜெய் பீம்- செவ்வணக்கம்) என்ற முழக்கமும், “லால்-நீல்  சலாம்” (சிவப்பு-நீல வணக்கம்) என்ற முழக்கமும் நாடு முழுவதும் இந்த மேடைகளில் எழுப்பப்படு கின்றன.  மிகுந்த முன்னுரிமைக்குரிய களமாக இத னைக் கட்சி கண்டறிந்துள்ளது.அரசியல் தலைமைக் குழுவில் தோம் இணைக்கப்பட்டிருப்பது இந்த முன் னுரிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.அதே போன்று ஒரு முக்கியமான விஷயம், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அவர். மேற்கு வங்க மக்க ளிடையே புகழ்பெற்ற ஒரு மருத்துவரும் கூட.