articles

img

பெண்களின் ‘கட்டாய’ உழைப்பை அங்கீகரித்திடுக! - பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் (The Centre for Monitoring Indian Economy-CMIE) 2022 மார்ச்சில் 67.24 விழுக்காடாக இருந்துவரும் ஆண்களின் வேலை பங்கேற்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது, கிராமப்புற பெண்கள் வேலை பங்கேற்பு என்பது, வெறும் 9.92 விழுக்காடாகவே இருந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கி றது. இது மிகவும் கவலையளித்திடும் விஷயமாகும். இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம்,  வேலையிழந்த பல லட்சக்கணக்கான பெண் கள், “நமக்கு இனி எங்கே வேலை கிடைக்கப்போகி றது?” என்று விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டு மீண்டும் வேலை தேடும் முயற்சியையே கைவிட்டுவிட்டார்கள் என்றும் கணித்திருக்கிறது.  அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடு களில் வேலையிழந்து விரக்தியடைந்து, வேலை தேடும் முயற்சியைக் கைவிட்ட  தொழிலாளர்கள், வேலையில்லாதோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கி றார்கள். ஆனால் இதுபோன்றதொரு கணக்கெடுப்பு  இந்தியாவில் அரசுத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட வில்லை. இங்கே பெண்கள் தாமாகவே முன்வந்து வேலை செய்யாமல் நீங்கிவிட்டார்கள் என்பது போன்று அரசுத்தரப்பினரால் சித்தரிக்கப்படுகிறது. உண்மை யில் பெண்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டி ருக்கிறார்கள்.   கிராமப்புறங்களில் உள்ள எதார்த்த நிலை என்பது இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் கணித்திருப்பதைவிட, ஒன்றிய அரசாங்கம் பெண்க ளின் வேலைவாய்ப்பு குறித்து மறுதலித்திடும் அறிக்கை களைவிட, மிகவும் மோசமாகும். கிராமப்புறங்களில் நிலமற்ற குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெயரளவில் நிலம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் வேலை கிடைக்கவில்லை என்பதற்காக “ஊக்கம்” இழந்ததாகக் குறிப்பிட முடியாது. உண்மை யில் அவர்கள் வேலைக்கு எடுக்கப்படாமல் வேலை மறுக்கப்பட்டிருக்கிறார்கள்.

“துயரத்தின் ஆழம்”

பெண்களின் நிலை எந்த அளவிற்கு மிகவும் மோச மான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் (MNREGA) கீழ், வேலை அளிக்கப்பட்டு வந்து, தற்போது வேலை அளிக்கப் படாது, வெளியேற்றப்பட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை பல லட்சங்களாக இருப்பதைப் பார்த்தா லே புரிந்துகொள்ள முடியும். கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் (பழைய பெயர் குல்பர்கா மாவட்டம்) உள்ள கிணறுகளுக்குத் தண்ணீர் சென்றடையும் விதத்திலும், நிலத்தடி நீர் குறைந்துவருவதைச் சரி செய்திடும் விதத்திலும் 200 ஊடுருவல் குளங்கள் (percolation ponds) உரு வாக்கிட, ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் அங்கேயுள்ள நான்கு கிராமங்களில் உள்ள சுமார் 300 தொழிலாளர்களுக்கு ஒரு சில நாட்களுக்கு வேலை அளிக்கப்பட்டது. அங்கேயிருந்த மண் மிகவும் கடினமாகவும் வறண்டும் இருந்ததால், வேலையில் ஈடுபட்ட பெண்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். இந்த வேலையில்  ஆண்களை விட பெண்களே அதிகமாக ஈடுபட்டார்கள். இருவர் ஜோடியாக இந்த வேலையைச் செய்தார்கள். ஒவ்வொருவரும் சுமார் 3000 கிலோ  மீட்டர் தூரம் உள்ள சகதிச் சேற்றை மண்வெட்டியால் வெட்டி, அப்புறப்படுத்திட வேண்டும். இது, இவர்க ளின் சக்திக்கு மீறிய வேலையாகும். 

கடும் வெயில். வேலை மிகவும் கடினமாக இருந்தது. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை முழுமையாகச் செய்து முடித்தார்கள் என்றால் அவர்களுக்கு நாட்கூலியாக 309 ரூபாய் அளிக் கப்படும். ஆனால் எவ்வளவு கடுமையாக அவர்கள் வேலை செய்த போதிலும் அவர்கள் தங்கள் வேலை யைக் குறிப்பிட்ட நேரத்தில் பூர்த்தி செய்ய முடிய வில்லை. கடும் வெயில் காரணமாக, தாங்கள் இரண்டு லிட்டர் பாட்டிலில் கொண்டுவந்த தண்ணீர் குடித்துத் தீர்ந்துவிட்டால் மீண்டும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுதான் தண்ணீர் கொண்டுவர வேண்டும். பலருக்கு கைகால்களில் கடும் வலி ஏற்பட்டிருப்பதாக முறையிட்டார்கள். பலருக்கு மயக்கம் வந்துவிட்டதாக வும் கூறினார்கள். எனினும் அவர்களுக்கு அவர்களின் வேலைக்காக 280 ரூபாய் அல்லது 285 ரூபாய்தான் அளிக்கப்பட்டது. இவ்வளவு கடினமான வேலையை அவர்கள் வேறு  வழியின்றி செய்தபோதிலும்கூட, ஓர் ஆண்டில் அவர்க ளுக்கு 40 நாட்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது. இவ்வளவு கடினமான வேலையைச் செய்திட அவர்கள் முன்வந்த போதிலும், அரசாங்கம் அவர்களுக்கு வேலை கொடுக்கத் தயாரில்லை.

கட்டுமானத் தொழிலில்...

விவசாய வேலைகள் தொடங்கும் சமயத்தில் பெண்கள் விவசாய வேலைகளுக்குச் செல்கிறார்கள். அப்போதும் அவர்களுக்கு இதே கூலிதான். எனினும் விவசாயமும் எந்திரமயமாகிப் போனதால் இவர்க ளுக்கு அங்கேயும் வேலை நாட்கள் கடுமையாகக் குறைந்துவிட்டன. ஆண்டில் மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே வேலை கிடைத்தது. எனவே இவர்களில் பல பெண்கள் பகுதி நேரமாக கட்டுமானத் தொழி லாளர்களாக மாறியிருக்கிறார்கள். இவர்களை ஒப்பந்தக் காரர்களின் கீழ் பணிபுரியும் மேஸ்திரிகள் வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். இவர்கள் கட்டுமானப் பணி கள் நடைபெறும் இடங்களுக்கு தங்கள் குடும்பத்தி னரை விட்டு ஒருசில மாதங்களுக்குப் புலம்பெயர்ந்து சென்று தங்கி வேலை செய்கிறார்கள். கட்டுரையாளர் இவ்வாறு புலம்பெயர்ந்து வந்த கட்டுமானத் தொழி லாளர்களைச் சந்தித்து, “உங்களில் யாராவது கட்டு மானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கொண்டு, சட்டப்பூர்வமான பயன்பாடுகளைப் பெற்றி ருக்கிறீர்களா?” என்று கேட்டிருக்கிறார். இதற்கு அவர்கள் அளித்த பதில், ஒருவர் கூட இவ்வாறு பதிவு செய்யவில்லை என்பதேயாகும். கட்டுமானத் தளங்களில் பெண் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஆயிரம் செங்கற் களை சுமந்து முதல் தளத்திற்கோ அல்லது இரண்டா வது தளத்திற்கோ கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கொண்டுசென்றார்கள் என்றால் அவர்க ளுக்குக் கிடைக்கும் நாட்கூலி 300 ரூபாயாகும். இது, ஆண்களுக்கு கொடுப்பதைவிடக் குறைவாகும்.

கைகள் தான் சொத்து...

இந்த வேலையும் கிடைக்காத போது, பெண்கள் மிகவும் திண்டாடிப்போய்விடுகிறார்கள். இவர்களில் சிலர் கூடைகள் பின்னியும், சிலர் விளக்கமாறு தயாரித் தும் கிராமம் கிராமமாகச் சென்று விற்று வருகிறார் கள். சிலர் வீடுகளில் வீட்டு வேலைகளுக்குச் செல் கிறார்கள். சிலர் வீதிகளில் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்கிறார்கள். எப்படியாவது வாழ்ந்தாக வேண்டிய நிலைக்குப் பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் யாதவகிரி மாவட்டத்தில் கட்டுரை யாளர், சித்தமா என்னும் 45 வயது பெண்மணியைச் சந்தித்திருக்கிறார். அவருக்கு நான்கு குழந்தைகள். அவர், கட்டுரையாளரிடம் தன் கைகளைக் காட்டி, “என் கைகள்தான் எனக்கு சொத்து. இதனைக் கொண்டுதான் என் குடும்பம் வாழ்வதற்காக நான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். நான் உழைத்தால்தான் அவர்கள் சாப்பிட முடியும்,” என்றார். அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடு மையாக உயர்ந்திருப்பதால், பெண்கள் காய்கறிகள் வாங்குவதையும், தானியங்கள் வாங்குவதையும் மிகவும் சுருக்கிக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்குக் கொண்டுவரும் உண வுப் பாத்திரங்களைத் திறந்து பார்க்கும்போது அதில் கொஞ்சம் சோறு அல்லது ரொட்டி, அதனுடன் கொஞ்சம் மிளகாய் சட்னிதான் இருக்கிறது. “சாப்பிட்டு விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டால் எங்க ளுக்குப் பின்னர் பசிக்காது,” என்று இவற்றைக் கொண்டு வந்த ஷீலாவதி, அவரது சகோதரி சந்திரம்மா ஆகியோர் கட்டுரையாளரிடம் சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார் கள்.  மற்றவர்களும் இதனை ஏற்பதுபோல் தலையாட்டி னார்கள்.

கடன் வலையில் பெண்கள்

கட்டுரையாளரிடம் பேசிய பெண்கள் அநேகமாக அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் கடன் வலைக்குள் தள்ளப்பட்டிருப்பதைக் கூறியிருக்கிறார்கள். தொழி லாளர்நலச் சட்டங்களை ஒழித்துக்கட்டியிருப்பதன் காரணமாக தொழிலாளர்நலத்துறைகள் பலவீன மடைந்திருக்கின்றன. விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் வலுவாக இருக்கும் இடங்களில் மட்டுமே குறைந்தபட்ச ஊதியம் அளிக்கப்படுகிறது. நிலமுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி, நிலமற்ற விவசாயிகளுக்கு அளிக்கப்படாதது அநியாயமாகும். கிராமப்புற நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் இது அளிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் முதலாளித்துவ நடைமுறை ஆழமாக ஊடுருவிக்கொண்டிருப்பதால், மக்களின் வாழ்வாதாரங்களே கேள்விக்குறியாகியிருக்கின்றன. ஏழைப் பெண்கள் தாங்கள் உயிர்வாழ்வதற்காக பல்வேறு வழிகளில் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா தன்னுடைய 75ஆவது சுதந்திரத்தைக் கொண்டாடும் இந்தச் சமயத்தில், கிராமப்புற பெண்க ளின் அவலநிலை குறித்து,  ஆட்சியாளர்கள் கூருணர்ச்சி யுடன் ஆய்வினை மேற்கொள்வது அவசர அவசியமா கும். கிராமப்புறங்களில் கட்டாயமாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ள பெண்கள் அங்கீ கரிக்கப்பட வேண்டும். அவர்கள் நாட்டின் சட்டங்கள் மூலமாகவும் ஆட்சியாளர்களின் கொள்கைகள் மூலமாகவும் பாதுகாக்கப்பட வேண்டும்.

நன்றி: தி இந்து நாளிதழ்,  20.6.2022, 
தமிழில் : ச.வீரமணி 

 



 

;