articles

குண்டர் கும்பலும் நீதியும்

இந்தியத் தண்டனைச் சட்டத்தில் ஒரு வர் குற்ற நோக்கின்றி ஒருவரை மர ணமடையச் செய்வதற்கும் (culpable homicide), கொலை செய்வதற்கும் (murder) இடையே கூறப்பட்டுள்ள வாச கங்களுக்கு இடையே  ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. இவ்விரண்டுக் கும் இடையிலான பகுப்பாய்வு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த நுணுக்கமான வேறு பாட்டை குண்டர் கும்பல் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு கொலை செய்திருப்பவர்களுக்கு அளித் திருப்பதை ஏற்பது அவ்வளவு சாதாரண மானதல்ல; 

சாட்சியம் இல்லையென விடுதலை

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ஓர் அமர்வு நீதிமன்றம், குண்டர் கும்பல் சட்டத்தைத் தங்கள் கை களில் எடுத்துக்கொண்டு, 2018 ஜூலையில் கால்நடை வளர்ப்பு முஸ்லீம் வியாபாரி ஒரு வரை, கொலை செய்ததற்காக, நான்கு பே ருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. இருப்பினும், போதுமான சாட்சியம் இல்லை என்று கூறி, விசுவ இந்து பரி சத்தைச் சேர்ந்த நவல் கிஷோர் என்பவரை விடுதலை செய்திருக்கிறது. இதேபோன்று 2017-இல் பெஹ்லுகான் என்பவர் பசுப் பாதுகாப்புக் குழுவினரால் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டது, ஆல்வார் மாவட்டத்தில் லாலாவந்தி கிராமத்தின் அருகில் நண்பர் ஒருவருடன் இரு பசுக் களை ஏற்றிவந்த ரக்பர் கான் (31) என்பவர் பசுப் பாதுகாப்புக் குழுவினரால் அடித்தே கொல்லப்பட்ட வழக்கிலும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுகள் தண்ட னை விதிக்கப்பட்டது ஆகிய வழக்கு களின் சாயல் இருப்பதையும், நினைவு கூர்ந்திட வேண்டும். ரக்பர் கான் வழக்கில் அவர் குண்டர் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டு கொடுங்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையிலும், காவல்துறை யினர் அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்லாததால், அவர் இறந்துவிட்டார்.

நீதிபரிபாலன அமைப்பின்  அவல நிலைமை

சமீப காலங்களில் பல்வேறு மாநிலங் களில் பசுப் பாதுகாப்புக் குழுவினரின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நபர்களின் வழக்குகள் குறித்து கணக்கெடுத்தோமா னால், (இவற்றில் சில மிகவும் கொடூர மான கொலைகளை விளைவித்தவை களாகும்) இத்தகைய சம்பவங்களில் ஈடு பட்டவர்களுக்கு எதிராக அரசுத்தரப்பில் விசாரணை மேற்கொண்டு, குற்றமிழைத்த வர்களுக்குத் தண்டனை பெற்றுத்தந்துள்ள குற்றவியல் நீதிபரிபாலன அமைப்பு முறை (criminal justice system) என்பது மிகவும் அவலநிலையிலேயே இருந்து வருகிறது.  இத்தகைய பின்னணியில் ஆல்வாரில் காவல்துறையினர் குற்றமிழைத்த கயவர்களுக்கு ஏதோ ஒரு தண்டனையைப் பெற்றுத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கதேயாகும். எனினும், குற்ற மிழைத்தவர்கள் கொலை செய்ததற்கான தண்டனைப் பெறவில்லை. மாறாக குற்ற நோக்கின்றி தாக்கியதன் காரணமாக மரணம் விளைவித்ததற்காக (culpable homicide)வும், சட்டவிரோதமாகத் தடுத்த தற்காகவும் (wrongful restraint) மட்டுமே தண்டனை பெற்றிருக்கிறார்கள். இது சில பிரச்சனைகளை எழுப்பியிருக்கிறது. கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்குக் குறைந்தபட்சம் ஆயுள் தண்டனை விதித்திட வேண்டும்.

சான்றாக எடுக்காத  தொலைபேசி உரையாடல்

ரக்பர் கான் கொல்லப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பிரதான நபர் விடுதலை செய்யப்பட்டதாலும், மற்ற வர்களுக்கும் ஏழு ஆண்டுகள் மட்டும் தண்டனை அளிக்கப்பட்டதாலும், அவரது குடும்பத்தினர் மிகவும் வேதனை யடைந்தார்கள். விடுதலை செய்யப்பட்ட விசுவ இந்து பரிசத் தலைவருக்கும், மற்ற குற்றம்புரிந்தவர்களுக்கும் இடையே நடை பெற்ற தொலைபேசி உரையாடல்கள் அடிப்படையிலேயே விசுவ இந்து பரிசத்  தலைவர் மீது காவல்துறையினர் குற்ற  அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். எனினும், நீதிமன்றம் அதனைப் போதுமான சான்றாக எடுத்துக்கொள்ளவில்லை. பாதிப்புக்கு உள்ளான நபர் மீதான கொடூர மான தாக்குதலை, கொலை செய்வதற் காக அல்ல என்று தீர்மானித்ததன் காரண மாக, விசாரணை நீதிமன்றம் தாக்கியவ ர்கள் ரக்பர் கானை கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தாக்க வில்லை என்று முடிவு செய்திருக்கிறது.

அச்சுறுத்தலாக விளங்கும்  பசுக் குண்டர் படை

பசுப் பாதுகாப்புக்குழு என்பது சிறு பான்மையினர் பாதுகாப்புக்கும் அதே போன்றே சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும் அச்சுறுத்தலாக விளங்கு கிறது.  இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு மதவெறி மற்றும் வெறுப்புப் பிரச்சாரம் அடிப்படையாக இருப்பதாகக் கூறி  அவற்றை உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்த போதிலும், பசுப் பாதுகாப்புக் குழுவின ரின் வன்முறை வெறியாட்டங்கள் தொடர் கின்றன. இத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்திட தடுப்பு நடவடிக்கைகளும் இதில் ஈடுபடும் நபர்கள்மீது கடும்  தண்டனை விதிக்கும் நடவடிக்கைகளும் தேவை.

நன்றி: ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் 
தலையங்கம், (27.05.2023)
தமிழில்: ச.வீரமணி

;