articles

img

கனிவான அணுகுமுறை கொண்டு காலதாமதமின்றி நிறைவேற்றுக! - மு.அன்பரசு

ஒன்றிய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்தபோது அதை இந்தியாவிலேயே முத லாவதாக அறிவித்த மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. தற்போது சில மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தி னை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்து வரும் நிலை யில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் சேராத தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதி யத் திட்டத்தை கொண்டு வருவதற்கு சாத்தியமே யில்லை என தெரிவித்து வருவது சரியுமல்ல, நியாயமுமல்ல. 2003ஆம் ஆண்டுமுதல் அரசு ஊழியர்கள் செலுத்தி வரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு பத்து சதவீத ஊதியத்தை அரசு இதுவரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் ஒழுங்காற்று ஆணையத்திடம் கொடுக்க வில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து வதான அம்சம் என்பது அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில் கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செலுத்தியுள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தை எல்ஐசி போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள தமிழக அரசு   ஊழியர்கள், ஆசிரியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் அந்த நிதியை பொது வைப்பு நிதியில் சேர்த்துவிடலாம்.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் சேர்ந்துள்ள ராஜஸ்தான் போன்ற மாநிலங்களே இதை பற்றி கவலை கொள்ளாத நிலையில் தமிழக அரசின் நிலைப்பாடு, அது தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த விரும்பவில்லை என்பதையே காட்டுவ தாக உள்ளது. இது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளுக்கு முரணாக உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சிக்கல்களை முன்கூட்டியே தெரிந்தவர்தான் முதல்வர். அவற்றை யெல்லாம் ஆராய்ந்து பார்த்த பின்னர்தான் அவர் அதை மீண்டும் செயல்படுத்த தேர்தல் வாக்குறுதி தந்தது மட்டுமல்ல, அரசு ஊழியர்கள் தங்கள் போராட்ட த்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் சொன்ன வர் அவர்.  இவ்வளவு உணர்ந்த முதல்வர் முன்னிலை யில் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் சொன்ன கருத்துக் கள் அரசு ஊழியர்கள் மட்டத்தில் பலவித சந்தேகங் களை எழுப்பியுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (PFRDA) உறுப்பினராகவே இல்லாத தமிழ்நாட்டை மேற்படி ஆணையத்தில் உறுப்பினராக உள்ள ராஜஸ்தான் அரசின் நிலையோடு ஒப்பிட்டுப் பேசியதை முதல்வர் மறுக்காதது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கொந்தளிப்பான மனநிலைக்குத் தள்ளியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு பழைய ஓய்வூதித் திட்டத்தை அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான சட்டத்தை இயற்ற பாஜகவுடன் கைகோர்க்கத் தயங்காத காங்கிரஸ் கட்சி இன்று தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தான் ஆட்சியில் உள்ள இரண்டு மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பு களை வெளியிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் நடைபெறவுள்ள மாநில சட்ட சபை தேர்தல்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்தல் வாக்குறதியாக வழங்கவுள்ளது. தமிழக அரசு இதை கவனிக்க வேண்டும். 

சத்துணவு ஊழியர்களுக்கு...

சத்துணவு ஊழியர்ககள் சிறப்பு காலமுறை ஊதியம்  பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு வரையறுக்கப் பட்ட ஊதியம் வழங்கப்படும் என்று 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு அவை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.

வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும்

அங்கன்வாடி ஊழியர்ககள், வருவாய் கிராம உதவி யாளர்கள், ஊராட்சிச் செயலாளர்கள் மற்றும் அனைத்துத்  துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்ற தனி கோரிக்கை வைக்கப்பட்டு  2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட சட்டமன்ற  விதி எண் 110இன் கீழான அறிக்கையில் இது குறித்து  ஊதிய மாற்றத்திற்கான பரிந்துரைகளை மேற்கொள் ளும் அலுவலர் குழு பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவித்திருக்கப்பட்டிருந்தது. சென்ற  ஆட்சியில் செயல்படுத்தப்படாத இந்த கோரிக்கையை முதல்வர் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந் தார். ஆனால் அதுகுறித்தும் எந்த அறிவிப்புகளும் இதுநாள்வரை வெளியாகவில்லை. மேலும் எம்.ஆர்.பி  செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. 

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிவரன்முறை செய்து 41 மாத ஊதிய இழப்பை வழங்கிட வைக்கப்பட்ட கோரிக்கை பரிசீலிக்கப்படாமல் உள்ளது. 2002இல் தமிழக அரசின் முடிவினால் பத்தாயிரம் சாலைப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட னர். இதனால் மன உளைச்சலுக்கும் வேலையின்மை நிலைக்கும் ஆளான அவர்களில் சிலர் மனநோயாளி யாகினர்,   41 மாதங்கள் கழித்து  மீண்டும்  பணியில்  சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.  41 மாதங்கள் வேலை இல்லாமல்   கடன் வாங்கி குடும்பத்தை வறுமை நிலை யில் நடத்தி வந்த சாலைப் பணியாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கருதி அவர்களுக்கு 41 மாத  ஊதியத்தை வழங்கிட அரசுக்கு பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு அவை இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளன.  

அகவிலைப்படி

ஒன்றியஅரசு அதன் ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படியை அந்தந்த  கால விலைவாசிக்கு ஏற்றபடி உயர்த்தி வழங்கி வரு கிறது. உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வுக் கேற்ப தீர்மானிக்கப்படும் இந்த அகவிலைப்படி ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும்.  இந்த அகவிலைப்படியை நிறுத்தி வைப்பது குறைத்துத் தருவது போன்ற நடவடிக்கை கள் எல்லாம் ஊதிய மாற்றத்தின் போது பிரச்சனை களை உருவாக்கிய நிகழ்வுகள். எனவே அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு அறிவித்ததும் உடனடியாக உயர்த்தித் தர உத்தரவிடுவது அரசாங்கத்திற்கும் சுமை ஏற்றாமல் தடுக்கும்.

சரண்விடுப்பு ஒப்புவிப்பு 

சரண்விடுப்பு ஒப்புவிப்பு என்பது அரசு ஊழியர்கள் காலம்காலமாக தங்கள் விடுப்பை சரண் செய்து பெற்றுக்கொள்ளும் தொகையாகும். பண்டிகை காலங்களுக்கு, குழந்தைகளுக்கு பள்ளிக்கூட கட்ட ணங்களுக்கு, தொடர் மருத்துவச் செலவுகளுக்கென்று அரசு ஊழியர்கள் பயன்படுத்திய இவ்வுரிமைத் தொகையை கொரோனாவை காரணம் காட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்ததை அரசு ஊழி யர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் அதை இந்த ஆண்டி லிருந்து மறுஉத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும். 

தனியார்மய அரசாணைகளை ரத்து செய்க!

அரசுத் துறைகளை தனியார் மயமாக்கும் வகை யிலும் தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தடுக்கும் வகையில் வெளியிடப் பட்டுள்ள அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.  

அவுட்சோர்சிங் முறை, ஆட்குறைப்பை கைவிடுக!

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் இன்றைய அரசாங்கங்கள் தாங்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை தனியார்வசம் ஒப்படைப்பதன் மூலம் தங்களுக்கான கடமைகளிலிருந்தும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை தாயுள்ளத்தோடு தாங்கிப் பிடிக்கும் தர்மத்திலிருந்தும் விலகிக் கொள்ள நினைக்கின்றன. அரசாங்கம் என்ற சேவை மையம் தனியார்மயம் என்ற லாபமயத்திடம் அடகு வைக்கப்படும் போக்கைத்தான் இது காட்டுகிறது. அரசாங்க வேலைக்கு ஆள் எடுப்பதில் அறிவிக்கப் படாத தடை, ஓய்வு பெறுதல் மற்றும் பணிக் காலத்திலேயே இறந்துவிடுதல் போன்ற காரணங்களி னால் ஏற்படும் காலியிடங்களை நிரப்பாமல் விட்டு விடுதல், புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படாதது. தேவைப்படும் இடங்களில் தற்காலிகப் பணி யாளர்களை நியமித்துக் கொள்ளுதல், வேலை முடிந்ததும் அவர்களை விரட்டிவிடுதல், ஒப்பந்த முறை யில் பணியாளர்களை அமர்த்துதல், அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமித்தல் போன்ற பலகட்ட வடிகட்டலுக்குப்பின்னர் தமிழக அரசு பெரும்பான்மையான துறைகளை தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு வந்துள்ளது. இதன்விளைவு கள் நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத சமூகப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

4.5 லட்சம் காலிப் பணியிடங்கள்

தமிழக அரசுத்துறைகளில் சுமார் நான்கரை லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் வேலை யற்றுக் கிடக்கும் இளைய தலைமுறையினருக்கு உடனடியாக அதை வழங்கி, வேலைவாய்ப்பின்மை நிலையை அரசு ஓரளவுக்கேனும் தீர்க்க வேண்டும்.   இவை தவிர விப்ரோ வசம் உள்ள IFHRMS திட்டத்தில் உள்ள குளறுபடிகள் மற்றும் குறைகளை சரிசெய்து அதை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுவிக்கப்படாத கொரோனா சிகிச்சைக்கான தொகையை உடனே விடுவிக்க வேண்டும். கொரோனா காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிபந்தனை இன்றி கருணை அடிப்படை பணி நியமனம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கை களையும் நிறைவேற்ற தொடர்ந்து போராடி வருகிறோம்.

ஊழியர் சந்திப்பு - பிரச்சார இயக்கம்

பதவியேற்று  ஓராண்டுக்கு மேலாகியும் தமிழக முதல்வர் தேர்தலுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட இதுவரை நிறைவேற்றவில்லை என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டத்தில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது அரசு ஊழியர்களை போராட்டக் களத்திற்கு உந்தித் தள்ளியுள்ளது.   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு, துறைவாரி சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தற்போதைய தமிழ்நாடு அரசின்மீதும், குறிப்பாக மாண்புமிகு முதல்வரின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அதனால் கனிவான அணுகுமுறையையும் கோரிக்கைகளை காலதாமதமின்றி நிறைவேற்றும் உறுதியான செயல்பாடுகளையும் தான் அரசிடமிருந்து அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  இவற்றை அரசுக்கு உணர்த்தவும் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு மேலும் காலதாமதப்படுத்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கவும் தமிழ்நாட்டின் ஏழு முனைகளில்  (1.இராமேஸ்வரம் 2. காளியக்காவிளை 3.வேதாரண்யம்  4. புதுக்கோட்டை 5. கூடலூர் 6.ஒகேனக்கல் 7. திருவள்ளூர்) இருந்தும் ஊழியர் சந்திப்பு, கோரிக்கை விளக்கப் பிரச்சார இயக்கம் (ஜீப்-ஜாதா) 20.6.2022 முதல் (இன்று) 24.6.2022 வரை  நடைபெற உள்ளது. இந்த பிரச்சார இயக்கத்தில் அரசு  அலுவலகங்களில் பணிபுரியும் அத்துணை ஊழியர் களும் பங்கேற்று நம்முடைய  உறுதியை ஒற்றுமையை,  விட்டுவிடாத உரிமைப் போராட்டத்தின் வலிமையை இந்த அரசுக்கு உணர வைத்து நம்முடைய கோரிக்கை களை நிறைவேற்றும் நிர்ப்பந்தத்தைஏற்படுத்துவோம்.

கட்டுரையாளர் : தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்






 

;