articles

img

கனவு கைகூட உணவு விநியோகிக்கும் பெண்ணின் வைராக்கியம்

வங்கி பணியில் அமர வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு, வீட்டை விட்டு வெளியேறி. உணவு விநி யோக பணியை மேற்கொண்டு, அதில் கிடைக்கும் வருவாயில் வங்கி தேர்வு  பயிற்சி தயராகி வரும் இளம்பெண் அனை வரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஈரோடு மாவட்டம், வடக்கு புது பாலத் தைச் சேர்ந்தவர் ரசிகபிரியா (29). இவர் இளங்கலை கணிதம் படித்துள்ளார். சிறு வயது முதலே ரசிகபிரியாவுக்கு வங்கி யில் பணியில் சேர்ந்து அதிகாரி ஆக வேண் டும் என்பது பெரும் கனவு.  இதனையடுத்து, பெரும் முயற்சி மேற் கொண்டு ஊரக கிராம வங்கி தேர்வை எழு தினார். இதில், தேர்ச்சியும் பெற்றார். ஆனால், ரசிகபிரியாவின் குடும்பத்தினர், வெளியில் பெண்ணை வேலைக்கு அனுப்ப விருப்பமில்லததால், வங்கி தேர் வில் வெற்றி பெற்றும், நேர்காணலுக்கு கூட அனுப்பவில்லை.  இதனால், மனதளவில் ரசிகபிரியா பாதித்தார். சில நாட்கள்  வீட்டிலேயே முடங் கினார், முடக்கப்பட்டார். ஆனாலும், பெரும் கனவு விடுவதாயில்லை, யாரு டைய தயவையும் நம்பி இருக்க கூடாது. சொந்த காலில் நிற்க வேண்டும் என்கிற எண்ணம் வெறியாய் மாற, வீட்டை விட்டு வெளியேறி கோவை மாநகரில் அடைக் கலம் புகுந்தார். மீண்டும் வங்கித் தேர்வுக்கு தயாராவது என்று முடிவு செய்தர். பின்னர் கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினார். தனது அன்றாட வாழ்க்கை மற்றும் படிப்பு செலவினங்களை எதிர்கொள்ள உணவு டெலிவரி செய்யும்  பணியில் சேர்ந்து தற் போது உணவு விநியோகம் செய்து கொண் டிருக்கிறார். மேலும், பணியின் இடையே கிடைக்கும் அத்தனை நேரத்தையும் வங்கி  தேர்வுக்கு தன்னை தயார் செய்து கொண்டிருக்கிறார். கோவை என்றாலே நெரிசல் மிக்க நகரம் என்கிற மற்றொரு பெயர் உண்டு. இந்த சவலான நகரத் திற்குள் தனது இருசக்கர வாகனத்தில், உணவு கேட்டு பதிவு செய்பவர்களின் விலா சம் அறிந்து குறித்த நேரத்தில் உணவு களை விநியோகித்து வருகிறார். சில மாதங் களுக்கு முன்பு விபத்து ஒன்றும் ஏற்பட்டுள் ளது.

அனைத்து தடைகளையும் தகர்த்து கனவுகளை நனவாக்க முன்னே நகர்கி றார் ரசிகபிரியா. இதுகுறித்து ரசிகபிரியா கூறுகையில், வங்கியில் வேலை செய்வது என்னுடைய கனவு. இருப்பினும் குடும்ப சூழ்நிலை  காரணமாக சிறிது காலம் ஆசிரியராக பணி  புரிந்தேன். அப்போதே வங்கித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். கிராம வங்கியில் பணிக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தது. ஆனால் எனது குடும்பத்தினர் பல் வேறு காரணங்களை கூறி என்னை நேர்க் காணலுக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தவறான முடிவுகள் எடுத்தேன். இதனி டையே, உறவினர்களின் நிர்பந்தத்தை மீறி எனது கனவை நனவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கோவை வந்து உணவு டெலி வரி செய்யும் நிறுவனத்தில் சேர்ந்து பணி புரிந்து வருகிறேன். தினமும் காலை ஏழு மணி முதல் இரவு 10 மணி வரையில் பணி யில் இருப்பேன். சில நேரங்களில் இரவு ஒரு மணி வரையிலும் கூட பணி இருக்கும். நாளொன்றுக்கு 20 முதல் 25 டெலிவரி செய் வேன். மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயி ரம் வரை வருவாய் கிடைக்கிறது.  வேலை முடிந்து வீடு திரும்பியதும் தேர்வுக்கு தயாராவது மற்றும் செய்தித் தாள்கள் படிப்பது என்று எனது கனவை நோக்கி பயணித்து வருகிறேன். நிச்சயம் வங்கித்தேர்வில் தேர்ச்சியடைந்து வங்கி அதிகாரியாக பணியில் அமர்வேன் என் றார் வைரக்கியமாக.

-மு.சுவேதா