articles

img

இதுவரை தாக்கிய அதிதீவிர புயல்கள்.... சிறப்பு பார்வை

சென்னை:
தமிழகத்தை இதுவரை தாக்கிய அதிதீவிர புயல்கள் குறித்து ஒரு பார்வை:

1994 அக்., 31: வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல், சென்னை அருகே130 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. கன மழைக்கு, 60 பேர் பலியாகினர்.

2004க்கு முன் புயலுக்கு பெயர் நடைமுறை இல்லை.

2008 நவ., 26: ‘நிஷா’ புயல், நாகபட்டினம் - காரைக்கால் இடையே மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது.

2010 நவ., 1: ‘ஜல்’ புயல், சென்னை அருகே மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது; பாதிப்பு இல்லை.

2011 டிச.,: ‘தானே’ புயல் புதுச்சேரி - கடலுார் இடையே மணிக்கு 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின

2012 அக்., 31: ‘நீலம்’ புயல் 

மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது; 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது.

2016 டிச., 12: ‘வர்தா’ புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னை அருகே கரையைக் கடந்தது. 130 கி.மீ., மேல் காற்று வீசியது; 10 பேர் பலியாகினர்; 10 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்தன

2017 நவ., 30: அரபிக்கடலில் உருவான, ‘ஒக்கி’ புயலால் ஏற்பட்ட கன மழையால், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.

2018 நவ., 18: ‘கஜா’ புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டன.

2020 நவ., 25: வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‘நிவர்’ புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது

காலநிலை மாற்றம் காரணமாக சமீப காலமாக வீசும் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

1890ஆம் ஆண்டு முதல் 2002 வரையிலான காலகட்டத்தில் அதாவது 112 ஆண்டுகளில் தமிழகத்தை 54 புயல்கள் தாக்கிய உள்ளன.அதன்பிறகு 16 ஆண்டுகளில் 2002 முதல் 2018 வரையான காலகட்டத்தில் தமிழகம் 10 புயல்களை சந்தித்துள்ளது.
112 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த 16 ஆண்டுகளில் புயல்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.அதிலும் குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில், 2014 முதல் இப்போது 2020 வரை ஐந்து புயல்கள் தமிழகத்தை தாக்கியுள்ளன.
தானே, ஒக்கி, வர்தா, கஜா இப்போது நிவர் என கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு ஒரு புயல் என தமிழகம் சந்தித்து வருகிறது.கால நிலை மாற்றம் புயல்களின் எண்ணிக்கையை, தீவிரத்தை, தன்மையை அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆர்வலர்கள் கூறி வந்தது உண்மையாகியுள்ளது.

;