articles

img

ஞானக்கிறுக்கல்கள் 400 - சேது சிவன்

ஞானக்கிறுக்கல்கள் 400

பொதுவாகவே மிகப்பெரிய அளவில் விளக்கம், உதா ரணம் கொடுத்து விஞ்ஞானிகள், தத்துவ வாதிகள், அறிஞர்கள், பொருளாதார வல்லு னர்கள், கட்சித்தலைவர்கள் அல்லது மதம் தொடர்பாக பேசப்பட்டுள்ள முக்கிய கருத்துகள், அறிவுரைகள், தத்துவங்களை ரத்தினச் சுருக்கமாக சில வரிகள் கொண்ட வாசகங் களாக நாம் வாசித்து இருப்போம்.  ஒவ்வொரு பகுதி மக்களும் சமூக ஊடகங் களில் தமிழ், ஆங்கிலம் என அவரவர் மொழி யில் இந்த கருத்துகளை தினந்தோறும் பகிர் வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.  அதனை கிரகித்துக்கொண்ட தோழர் அருணன் அவர் இத்தனை ஆண்டுகாலம் கற்ற கிரகித்துக்கொண்ட மார்க்சிய தத்துவம், முத லாளித்துவத்தின் சுரண்டல், தனிநபர் குண நலன்கள்,  ஏகாதிபத்தியம், மதச்சார்பின்மை, மூடநம்பிக்கைகள், பகுத்தறிவு சிந்தனைகள் மத வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிரான கருத்துக் கள் ஆகியவற்றில் சிலவற்றை  மழை சாரல் போல 15, 20 வார்த்தைகளில் மூன்று வரிகளில் மேலே குறிப்பிட்ட இரு வாசகங்களை போல மிக எளிமையான வார்த்தைகளில் எழுதியுள் ளார். உதாரணமாக் கடவுள் என்ற கற்பிதத்தை தேடி போவதற்கு காரணமாக உள்ள மக்களின் துன்பங்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்தால், மக்கள் கடவுளின் பெயரால் ஏமா றவோ அல்லது அதில் மூழ்கி மூடநம்பிக்கை யின் பக்கம் திரும்பவோ அவசியம் இருக்காது. அதுவே மார்க்சியர்கள் செய்ய வேண்டிய பணி. அதற்கு பதில் வறட்டுத் தனமாக கடவுள் மறுப்பை பேச வேண்டிய அவசியம் மார்க்சிஸ்ட்டு களுக்கு இல்லை என்பதை  கடவுள் இல்லை என்பது நாத்திகம். இல்லாத கடவுள் மக்கள் மனதில் இருப்பது எப்படி  என்பதை விளக்குவது மார்க்சியம்- எனக் கூறியுள்ளார்.  தலைவர்களை காக்கா பிடித்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற பொது அறிவின் காரண மாக பகுத்தறிவு பேசி கட்சி துவங்கிய பலர் பகுத்தறிவை விட்டுவிட்டு தலைவர்களின் பின்னால் செல்லத் துவங்கியுள்ளனர். இதனை      கொள்கை வழி செல்லாது தலைவன் வழி  பலர் செல்லக் காரணம் பகுத்தறிவை விட்டு விட்டு  பொதுஅறிவை மட்டும் பயன்படுத்துவது எனவும் குறிப்பிடுகிறார். இப்படி  எளிமையாகப் புரியும் வகையில் தோழர் அருணன் ஞானக்கிறுக்கல்கள் 400 என்ற புத்தகத்தில் 400 வாசகங்களை எழுதி கடந்த ஆகஸ்ட் மாதம் சிறிய புத்தகமாக வெளியிட்டுள்ளார்.  இதை அவரது எழுத்துப்பயண வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக செய்துள்ளார். நாள்தோறும் நண்பர்களிடமும் தோழர்களிடமும் பேசும்போது இவரது நானூறு வாசகங்களில் நான்கு வாசகத்தையாவது நாம் எளிமையாக பயன்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.    ஞானக்கிறுக்கல்கள் 400  ஆசிரியர்: அருணன்,  பக்கம்: 84/விலை:ரூபாய் 100,  வெளியீடு : வசந்தம் வெளியீட்டகம், அனுமார் கோவில் படித்துறை, சிம்மக்கல், மதுரை.  கைபேசி : 93848 13030