நாமும் போற்ற வேண்டும்
அங்கே பாரு பாப்பா அழகாய் வருது குதிரை தொங்கும் பிடரி முடியோ தோகை போல அழகு. குதிரை நல்லா ஓடும் கொள்ளும் புல்லும் தின்னும் எதுவும் அதனைப் போலே இங்கு ஓடுவது இல்லை. காலும் வலுவாய் இருக்கும் காற்றுப் போலப் பறக்கும் வாலும் அழகாய் இருக்கும் வளர்ந்தே அடர்ந்தும் இருக்கும். காது விறைப்பாய் இருக்கும் கத்தி போலத் தெரியும். மீது அமர்ந்தே சென்றால் மிடுக்காய் நடக்கும் நடையும் வண்டி இழுக்க உதவும் வாழ்க்கை எல்லாம் பயணம் தொண்டு நமக்கே புரியும் தொய்வு இல்லாமல் உதவும் குதிரை ஏற்றப் பயிற்சி கொடுக்கும் உடலுக்கு நன்மை குதிரை வீட்டு விலங்கு குன்றாச் செல்வம் அதுவே. ஆடு மாடு போலே அதுவும் நமக்கு உறவு நாடு போற்றும் குதிரை நாமும் போற்ற வேண்டும்.