நோபல் அமைதி பரிசின் அரசியல் பின்னணி - அ.அன்வர் உசேன்
நோபல் அமைதி பரிசு 2025ஆம் ஆண்டு வெனி சுலாவை சேர்ந்த மரியா கொரினோ மச்சோடாவிற்கு அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ் மற்றும் இந்திய ஊட கங்கள் அனைத்தும் அவர் சர்வாதிகா ரத்துக்கு எதிரான போராளி என செய்தி போடுகின்றனர். மேற்கத்திய ஊடகங்க ளின் செய்திகளை சரிபார்க்க வேண்டும் என்பது கூட அவர்களுக்கு தோன்ற வில்லை. வெனிசுலாவின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மதுரோ ஆட்சியை அகற்ற அமெரிக்க உளவு அமைப்பு களுடன் சேர்ந்து செயல்படுபவர்தான் இந்த மரியா கொரினோ மச்சோடா. கம்யூனிச எதிர்ப்பும் இடதுசாரி முற் போக்கு கொள்கை எதிர்ப்பும் நோபல் பரிசுகளின் பின்னணியில் இருப்பது நீண்ட கால கதை. சில சமயங்களில் நியாயமாக தீர்மானிக்கப்படும் நோபல் பரிசுகள் வேறு சில சமயங்களில் அரசியல் காரணங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது உலக அரசியலின் பிரதிபலிப்பு எனில் மிகை அல்ல. நோபல் பரிசு பெறாத புகழ்பெற்றவர்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பலர் நோபல் பரிசு குழுவின் கவனத்திற்கு வராமல் போவது புரியாத புதிர்தான். உழைக்கும் மக்களின் இலக்கியத்தை படைத்த மாக்சிம் கார்க்கி/ லியோ டால்ஸ்டாய்/ அந்தோன் செகாவ்/ எமிலி ஜோலா ஆகியோர் இலக்கியப் பிரிவில் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டதே இல்லை. குறிப்பாக லியோ டால்ஸ்டாய் பலமுறை பரிந்துரைக்கப் பட்டும் இறுதியில் விருது அவருக்கு மறுக்கப்பட்டது. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் கோடிக்கணக் கான மக்களை ஈடுபடுத்துவதில் வரலாறு படைத்த காந்திஜி இன்று வரைக்கும் அவர்கள் கவனத்தில் வரவே இல்லை. இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலக சமாதானத்துக்காக இடைவிடாது குரல் கொடுத்த சோவியத் யூனியன் அல்லது அதன் தலைவர்கள் எவரும் நோபல் பரிசு கமிட்டியின் எல்லைக்குள் வரவே இயலவில்லை. இரசாயன அறிவியலில் பல சாதனை களை படைத்த கில்பர்ட் லெவிஸ் எனப்படும் அறிவியல் நிபுணர் 41 முறை பரிந்துரைக்கப்பட்டும் ஒவ்வொரு முறையும் இறுதியில் அவரது பெயர் நிராகரிக்கப்பட்டது. அதற்கு முக்கியக் காரணம் அவர் தனது நிறுவனத்தின் முதலாளியை பகைத்துக் கொண்டதும் அந்த முதலாளியின் நெருங்கிய நண்பர் நோபல் பரிசு குழுவில் இருந்ததும்தான்! ஜோசப் எப்ஸ்டின் என்ற பத்திரிகையாளர் அனைத்து தகுதிகளும் இருந்தும் நோபல் பரிசு பெறாதவர்களின் பட்டி யலை தொகுத்துள்ளார். அதில் டால்ஸ் டாய்/ ஹென்ரி ஜேம்ஸ்/ மார்க் டிவைன்/ இப்ஸன்/ எமிலி ஜோலா/ ஜேம்ஸ் ஜாய்ஸ்/ தாமஸ் ஹார்டி/ விர்ஜினியா உல்ஃப் என பலர் உண்டு. இந்த பட்டியல் இலக்கியத்துக்கு மட்டும். இப்படி ஒவ்வொரு பிரிவிலும் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த புறக்க ணிப்புக்கு பின்னால் அரசியல் கார ணங்கள் இருந்தன என்பதுதான் நோபல் பரிசுகளின் உண்மைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. சில நியாயமான விருதுகளும் உண்டு. உதா ரணத்துக்கு நெல்சன் மண்டேலா/ மார்ட்டின் லூதர் கிங்/ பாதிரியார் டுட்டூ / அமர்த்தியா சென் ஆகியோரை குறிப்பிடலாம். கம்யூனிச எதிர்ப்பு நோபல் பரிசுகளின் பட்டியலை ஆய்வு செய்தால் ஒரு நூலிழை தொடர்ந்து ஊடுருவிச் செல்வதை காணலாம். அது கம்யூனிச எதிர்ப்பு ஆகும். சோசலிச நாடுகளில் உள்ள பல கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு நோபல் பரிசுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சில: H போலந்தில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பை முன்னெடுத்த லே வலேசா.- 1983. H சீன எதிர்ப்பாளர் தலாய் லாமா- 1989. H சோவியத் யூனியனிலும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசம் சிதைவதற்கு முக்கியக் காரணமாக இருந்த கோர்பச்சேவ்- 1990. H லியூ சியோபோ எனும் சீன சோச லிசத்தின் எதிர்ப்பாளர்- 2010 H வியட்நாம் போர் மற்றும் சோவியத் யூனியனுக்கு எதிராக பனிப்போரை வடிவமைத்த ஹென்றி கிஸிங்கர்- 1973. H சோவியத் சமூகத்தில் குழப்பம் விளை விக்க முயன்ற ஆந்த்ரே சக்க ரோவ்-1975 H நவம்பர் புரட்சியை எதிர்த்த போரிஸ் பாஸ்டர்நாக்- 1958. இப்படி இந்த பட்டியல் நீளமானது. தொடக்கம் முதலே நோபல் பரிசு குழு வினருக்கு கம்யூனிச எதிர்ப்பும் இடது சாரி எதிர்ப்பும் ஆழமாக இருந்துள்ளதை அறியலாம். நோபல் பரிசை மறுத்த வியட்நாம் கம்யூனிஸ்ட் ஹென்றி கிஸிங்கருக்கு அமை திக்கான நோபல் பரிசு தர முடிவு செய்த குழுவினர் பாரபட்சம் இல்லை என பறைசாற்ற கிஸிங்கருடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்திய லி டக் தோ என்பவருக்கும் பரிசை பகிர்ந்தளித்து அறிவித்தனர். லி டக் தோ வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர் ஆவார். ஹோசிமின் அவர்க ளின் நெருங்கிய சகாவாகவும் அவர் இருந்தார். 1973ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்ட இந்த பரிசை வாங்க லி டக் தோ மறுத்துவிட்டார். இந்த பரிசு அறிவிக்கப் பட்ட பொழுது வியட்நாம் போர் முற்றுப் பெறவில்லை. அமெரிக்காவும் ஏனைய உள்நாட்டு எதிரிகளும் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான மக்கள் ராணு வத்துக்கு எதிராக தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருந்தனர். எனவே இந்த பரிசை லி டக் தோ நிராகரித்தார். மேலும் அவர் இத்தகைய பரிசுகள் எல்லாம் தேவை யற்ற “முதலாளித்துவ உணர்வுகள்” எனவும் சாடினார். உலகில் உயரிய விருது என கருதப்படும் நோபல் பரிசை நிராகரிக்கும் தைரியமும் உணர்வும் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உண்டு என்பதை லி டக் தோ நிரூபித்தார். இஸ்ரேல் தலைவர்களுக்கு அமைதி பரிசு இன்று இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள சியோனிச இஸ்ரேலுக்கு அடித்தளம் அமைத்த பலருக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. H 1978ஆம் ஆண்டு எகிப்து ஜனாதிபதி அன்வர் சதாத் மற்றும் இஸ்ரேல் தலை வர் பெகினுக்கு நோபல் அமைதி பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்தப் போரில் இஸ்ரேல் எகிப்தை தோற்கடித்து கோலன் குன்றுகள் போன்ற சில பகுதிகளை ஆக்கிரமித்தது. எனினும் இஸ்ரேல் தலைவருக்கு பரிசு. H 1994ஆம் ஆண்டு யாசர் அராஃபத் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் இட்ஸாக் ரபின், ஷிமோன் பெரஸ் ஆகியோருக்கு பரிசு பகிரப்பட்டது. இந்த ஓஸ்லோ ஒப்பந்தம் மூலம்தான் யாசர் அராஃபத் இஸ்ரேலை அங்கீ கரிக்க நிர்பந்திக்கப்பட்டார். சோவியத் யூனியன் சிதைந்த பின்னணியில் அராஃபத் இந்த சமரசத்தை ஏற்றுக் கொண்டாலும் பாலஸ்தீன மக்கள் அவர் மீது அதிருப்தி கொண்டனர். இந்த அதிருப்திதான் ஹமாஸ் உரு வானதன் தொடக்கப்புள்ளி. இது மட்டுமல்லாது ரோஹிங்கியா முஸ்லிம்களின் படுகொலையை நியா யப்படுத்திய மியான்மரின் ஆங் சான் சு கி வளைகுடா நாடுகளில் மிக அதிக துரோன் தாக்குதல்களுக்கு அனுமதி அளித்த ஒபாமா போன்றவர்களுக்கும் நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது. இவை அந்த பரிசின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. போராளியா? சீர்குலைவுவாதியா? இதன் நீட்சியாகவே வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடொ வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறி விக்கப்பட்டுள்ளது. இவர் வெனிசுலாவில் அமெரிக்காவின் ராணுவத் தலையீடு தேவை என வற்புறுத்துபவர்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட வெனிசுலாவின் இடதுசாரி ஜனாதிபதி மதுரோவை ஆட்சியிலிருந்து அகற்றி அமெரிக்க ஆதரவு ஆட்சியை உருவாக்க முயல்ப வர். பல்லாயிரக்கணக்கான வெனிசுலா மக்களின் மரணத்துக்கு வழிவகுத்த அமெரிக்க வர்த்தக தடைகளை ஆதரிப்ப வர். எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்ரே லின் இனப்படுகொலைக்கு ஆதரவு கொடுப்பவர். வெனிசுலா ஆட்சி மாற்றத்துக்கு இனப்படுகொலையாளி நேதன்யாகுவின் ஆதரவு தேவை என கோருபவர். சமீபத்தில் வெனிசுலாவின் பல படகு களை அமெரிக்கா தாக்கி பலர் கொல்லப் பட்டதற்கு இவர் எந்த எதிர்ப்பும் வெளி யிடவில்லை. இவர் நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புக்கு அர்ப்பணித்தது என்பதே இவரின் அரசியல் சாய்மானம் என்ன என்பதை அறியலாம். எனவேதான் அமை திக்கான நோபல் பரிசு தகுதிக்கு கம்யூனிச எதிர்ப்பும் இடதுசாரி எதிர்ப்பும் ஒரு முக்கிய அளவுகோலாக நோபல் பரிசு குழுவினர் உருவாக்கியுள்ளனரா எனும் ஐயம் எழுகிறது.
