வங்கதேசம் வென்றது; மதவாதம் தோற்றது
நீண்ட காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்துள் ளது. பதினெட்டு மாத கால வெகுஜன எழுச்சிக்குப் பிறகு, வங்கதேசத்தில் இறுதி யாக 2026 பிப்ரவரி 12 அன்று தேர்தல்கள் நடத்தப் பட்டுள்ளன. மக்கள் ஒரு தீர்க்கமான தீர்ப்பை வழங்கி யுள்ளனர். மத அடிப்படைவாதத்தை எதிர்த்து நின்றதன் மூலம், அவர்கள் ஒரு நிம்மதியளிக்கக்கூடிய வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
தேர்தல் முடிவுகள்: ஒரு பார்வை
வங்கதேச தேசியக் கட்சி (BNP) கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்றுள்ளது. 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அவர்கள் 212 இடங்களைக் கைப்பற்றினர். இதில் பிஎன்பி (BNP) கட்சி மட்டும் 209 இடங்களில் வெற்றி பெற்று, மொத்த வாக்குகளில் 49.97 சதவீதத்தைப் பெற்றுள் ளது. இது அந்த நாட்டு வரலாற்றில் அக்கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். இரண்டாவது பெரிய கட்சியாக ஜமாத்-இ-இஸ்லாமி உருவெடுத்துள்ளது. 1971 விடுதலைப் போரை எதிர்த்த இந்தப் பழமைவாத அடிப்படைவாத சக்திகளின் 11 கட்சிக் கூட்டணி 77 இடங்களை வென்றது. இதில் ஜமாத் மட்டும் 68 இடங்களைக் கைப்பற்றியுள் ளது- இது அக்கட்சியின் வரலாற்றிலேயே மிக அதிக மான இடங்களாகும் (இதற்கு முன்பு 1991-இல் 18 இடங்களை வென்றதே அதிகபட்சமாக இருந்தது). ஜமாத் கட்சி 31.76 சதவீத வாக்குகளைப்பெற்றுள்ளது. அதேசமயம், மாணவர் எழுச்சியின் தலைவர் களால் உருவாக்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சி (NCP) மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சி வெறும் 3.05 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. போட்டியிட்ட 30 இடங்களில் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சைகள் 7 இடங் களில் வென்றனர், அவர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்த பிஎன்பி வேட்பாளர்கள் ஆவர். இஸ்லாமிய இயக்கம் ஒரு இடத்தில் வென்றது. வேட்பாளர் மரணத் தால் ஒரு தொகுதியில் தேர்தல் நடக்கவில்லை, சிட்ட காங்-2 மற்றும் சிட்டகாங்-4 ஆகிய இரண்டு தொகுதி களின் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஏழு கட்சி ஜனநாயகக் கூட்டணி எதிர்பார்த்த அளவு சிறப்பாகச் செயல்படாவிட்டாலும், மதவாதத்திற்கு எதிரான கருத்தியலை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியது.
வங்கதேச தொழிலாளர் கட்சி (Workers’ Party of Bangladesh) தேர்தலைப் புறக்கணித்த போதிலும், பின்னர் வெளியிட்ட அறிக்கையில்: “சதிகளையும் தடைகளையும் மீறி, அமைதி மற்றும் ஆரோக்கியமான ஜனநாயக செயல்முறைக்கான தங்களின் விருப்பத்தை மக்கள் பிரதிபலித்துள்ளனர்” என்று கூறி பிஎன்பி-க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு வாக்கெடுப்பு மற்றும் கவலைகள் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்ட அரசிய லமைப்பு வாக்கெடுப்பில் ‘ஆம்’ என்ற ஆதரவு வாக்கு கள் வெற்றி பெற்றுள்ளன.
இது சில கவலைகளை எழுப்பியுள்ளது, ஏனெனில் இதன்பின்னர் நடப்பவை அனைத்தும் ஆளுங்கட்சியின் முடிவுகளையே சார்ந்து இருக்கும். இருப்பினும், விடுதலைப் போரின் உணர்வை முற்றிலும் கைவிட வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது. ஆனால், ஜமாத் தலைவர்கள் ஏற்கனவே அதற்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டனர். இந்தத் தேர்தலில் பெண்கள் மற்றும் மத/இன சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக் குறைவாக உள்ளது. 2024-இல் 19 பெண்கள், 2018-இல் 22 பெண்கள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த முறை நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் வேட்பாளர்கள் 7 பேர் மட்டுமே.
இதில் ஆறு பேர் பிஎன்பி வேட்பாளர்கள். ஒட்டுமொத்தமாக 84 பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர் (மொத்த வேட்பாளர்களில் 4.08 சதவீதம்). இது ஜனநாய கத்திற்கு நல்ல அறிகுறி அல்ல. சிறுபான்மையினர் தரப்பில் 4 பேர் மட்டுமே வென்றுள்ளனர், அவர்கள் அனைவரும் பிஎன்பி வேட்பாளர்கள். கடந்த கால வன்முறையும் இருண்டகாலமும் கடந்த 18 மாத இடைக்கால அரசாங்கத்தின் போது, வங்கதேசம் குழப்பத்தில் மூழ்கியது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்தது. ‘தவ்ஹிதி ஜனதா’ என்ற பெய ரில் கும்பல் வன்முறைகள் பரவின.
கண்மூடித்தனமான கொலைகளும் சித்திரவதைகளும் அதிகரித்தன. நாடு தினமும் வெறுப்புத் தீயில் எரிந்தது. தீவிரவாத மத வன்முறைகள் அடுத்தடுத்து நடந்தன. இந்தியா வுக்கு எதிரான சொல்லாடல்கள் தீவிரமடைந்தன. சூஃபி துறவிகள் தாக்கப்பட்டனர், தர்காக்கள் சிதைக்கப்பட்டன, பாவுல் கலைஞர்கள் துன்புறுத்தப் பட்டனர். ரவீந்திரநாத் தாகூர், நஸ்ருல் மற்றும் லாலன் ஆகியோரின் மரபுகள் ஆத்திரத்தால் எரிக்கப்பட்டன. சிறுபான்மையினர் மற்றும் ஊடக வியலாளர்கள் தாக்கப்பட்டனர். ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘டெய்லி ஸ்டார்’ போன்ற செய்தித்தாள் அலு வலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ‘சாயாநாட்’ மற்றும் ‘உதிச்சி’ போன்ற கலாச்சார நிறுவனங் களும் தப்பவில்லை.
விடுதலைப் போரின் உணர்வை யும், வரலாற்றையும், வங்காளி மொழி சார்ந்த கலாச்சா ரத்தையும் அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. ரவீந்திரநாத் தாகூரின் ‘அமர் சோனர் பங்களா’ எனும் தேசிய கீதத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் கூட எழுந்தன. வங்கதேசத்தை ஒரு இஸ்லாமிய நாடாக - அதாவது ‘பெங்காலி பாகிஸ்தா னாக’ - மாற்றுவதே இதன் இலக்காக இருந்தது. ஜனநாயகத்திற்கான புதிய வாய்ப்பு முதன்முறையாக ஜமாத் கட்சி தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று நினைத்தது. இந்தத் தேர்தல் ஒரு முக்கியத் தீர்மானமாக மாறியது: ஜமாத் ஆட்சியா அல்லது இல்லையா? வங்கதேசத்தை 1971-க்கு முந்தைய நிலைக்குக் கொண்டு செல்வதா அல்லது விடுதலைப் போரின் உணர்வைப் பாதுகாப்பதா? இந்தப் பின்னணியில் தற்போதைக்கு பிஎன்பி-யின் வெற்றி நிம்மதியை அளித்துள்ளது.
வங்கதேச மக்கள் மதப்பற்றுள்ளவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் மதவெறியர்கள் அல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்கள் ஜமாத்தின் சித்தாந்தத்திற்கு எதிராக நின்றனர். மற்றொரு ஆப்கானிஸ்தானாகவோ அல்லது பாகிஸ்தானாகவோ மாற மறுத்துவிட்டனர். இந்தத் தேர்தலின் மிக முக்கியமான முடிவு எந்தக் கட்சி வென்றது என்பது மட்டுமல்ல, தீவிரவாத வகுப்புவாத சக்திகள் அதி காரத்தைக் கைப்பற்றத் தவறியதுதான். ஜமாத்தின் நிழலில் இருந்த என்சிபி (NCP) கட்சியும் மதச்சார்பற்ற வங்கதேச மக்களால் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், ஜமாத் சக்தியைக் குறைத்து மதிப்பிடு வது தவறாகும்.
ஜமாத் தலைமையிலான கூட்டணி கால் பகுதிக்கும் அதிகமான இடங்களை வென்றுள் ளது. அவர்களுக்கு இப்போது 77 எம்.பி.க்கள் உள்ள னர். டாக்கா நகரின் 15 தொகுதிகளில் ஜமாத் 6 இடங்களை வென்றுள்ளது. ஜமாத் இப்போது நாடாளு மன்றத்திற்குள் நுழைந்துவிட்டது. அதன் தலைவர்கள் சுதந்திரமாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளனர். சமீ பத்தில், டாக்கா, ராஜஷாகி போன்ற பல்கலைக்கழ கங்களைத் தொடர்ந்து ஜெகந்நாத் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலிலும் ஜமாத்தின் மாணவர் அமைப்பான ‘இஸ்லாமி சத்ர ஷிபிர்’ பெரும் வெற்றி பெற்றுள்ளது. சவால்களும் வருங்காலமும் இந்தத் தேர்தல் ஒரு ஜனநாயக வெளியைத் திறந்து விட்டுள்ளது. ஒரு புதிய பயணம் தொடங்குகிறது. மக்கள் ஒரு நிலையான ஜனநாயக அரசாங்கத்தை விரும்புகிறார்கள் என்பதைத் தீர்ப்பு தெளிவாகக் கூறுகிறது.
இந்தத் தேர்தல் மூலம் தொடங்கிய ஜனநாயக மாற்றம் வலுப்பட வேண்டும். ‘டெய்லி ஸ்டார்’ இதழ் குறிப்பிட்டது போல: ‘ஒரு புதிய வங்கதேசத் திற்கு புதிய திசைகள் தேவை’. வங்கதேசம் பின்னோக்கிச் செல்ல முடியாது. தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, வாக்குப்பதிவு 59.44 சதவீதமாக இருந்தது (2024-இல் இது 42.04% மட்டுமே). இருப்பினும், சுமார் 40 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை. எனவே, இந்தத் தீர்ப்பு முழுமை யான பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. எஞ்சியுள்ள அந்த மக்களையும் ஜனநாயகச் செயல்முறைக்குள் கொண்டு வருவது ஜனாதிபதி தாரிக் ரஹ்மானுக்கு ஒரு பெரிய சவாலாகும். அமைதியான முறையில் தேர்தல் நடத்துவது மட்டும் போதாது.
தேர்தலுக்குப் பிந்தைய அமைதி யும் ஒழுங்கும் மிக முக்கியம். விவசாயிகள் போராடு கிறார்கள், வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது, விலைவாசி எட்டாத உயரத்தில் உள்ளது. ஊழலற்ற, அரசியல் சார்பற்ற காவல்துறையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் குழப்பத்திற்குப் பதிலாக நிலைத்தன்மை யை விரும்புகிறார்கள். அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகம் மற்றும் வகுப்புவாத சக்தி களுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு தேவைப்படு கிறது. இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்து வதும் அவசியம். இந்தத் தீர்க்கமான தீர்ப்பு மிகப்பெரிய பொறுப்பைச் சுமத்தியுள்ளது. இந்தத் திருப்புமுனையில், வங்கதேசம் ஜனநாயக மாற்றத்தை நோக்கி நகருமா அல்லது மற்றுமொரு வரலாற்று வாய்ப்பைச் வீணடிக்குமா என்பது பிஎன்பி, ஜனாதிபதி தாரிக் ரஹ்மான் மற்றும் வங்கதேசத்தின் மதச்சார்பற்ற மக்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி, பிப்ரவரி 22, 2026 தமிழில் சுருக்கம் : ராகினி
