ஒரு சுயேச்சையான அயல்துறைக் கொள்கையின் அவசியம் -
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO-Sanghai Cooperation Organisation) உச்சி மாநாட்டை நடத்துவதற்கு துறைமுக நகரமான தியான்ஜின் தயாராக இருந்தது. ஷங்காய் ஒத்து ழைப்பு அமைப்பு, தன்னுடைய அதிகாரவரம் பெல்லைக்குள் பொருளாதார ஒத்துழைப்பு, கலாச்சார பரிமாற்றங்கள், எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றையும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த அமைப்பில் 2017இல் இந்தியாவும் பாகிஸ்தா னும் முழு உறுப்பினர்களாக இணைந்தன. அதைத் தொடர்ந்து 2023இல் ஈரானும், 2024இல் பெலாரஸும் இணைந்தன. ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றபோது, சீனா சமீபத்திய காலங்களில் தான் அடைந்துள்ள அதிர்ச்சி யூட்டும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் விதத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு அடுத்துள்ள ஊடக மையத்தில் அதன் மனிதஉருவ ரோபோக்களையும், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் உருவங்களையும் காட்சிப்படுத்தி இருந்தது. அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தும் அதே வேளையில் செயற்கை நுண்ணறிவின் அபாயங்களைக் குறைப்பதில் ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டன. கவனத்தை ஈர்த்த மாற்றம் ‘மீண்டும் அமெரிக்காவை பெரிய அளவில் மாற்றிடுவோம்’ (Make America Great Again) என்கிற டிரம்ப்பின் கூக்குரலுக்குப் பதிலளிக்கும் விதத்தில் தியான்ஜின்னில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒன்றாக மாறியது இயல்பான ஒன்றேயாகும். இந்த மாற்றம் ஒரு பலதுருவ உலகின் (multipolar) கட்டாயத்தை வியத்தகு முறையில் அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்தியா மற்றும் பிரேசிலுக்கு டிரம்ப் வரிகள் மிகவும் கடுமையானவையாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, முக்கிய சாக்குப் போக்கு ரஷ்ய எண்ணெய்யை வாங்கி அதை மேலும் லாபத்திற்காக விற்பனை செய்வ தாகும். டிரம்ப் மேலும் மோசமான முறையில் இந்தியாவை ‘செத்துப்போன பொருளாதாரம்’ என்றும், இந்தியாவுடனான வர்த்தகத்தை ‘ஒரு தலைப்பட்ச பேரழிவு’ என்றும் வர்ணித்துள்ளார். மேலும் டிரம்ப், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா முழுமனதுடன் ஒத்துழைத்திடவில்லை என்றும் வருத்த மடைந்துள்ளார். அவரது உதவியாளர்களில் ஒருவர், உக்ரைன் போரை ரஷ்யா தூண்ட உதவி யதற்காக இந்தியா மீது அபத்தமான முறையில் குற்றம் சாட்டும் அளவிற்குச் சென்றுள்ளார். இவை அனைத்தும் இந்தியாவைத் துன்புறுத்து வதை நோக்கமாகக் கொண்டவைகளாகும். தியான்ஜின் பிரகடனம் தியான்ஜின்னில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங், விளாடிமிர் புடின், நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றிருப்பதன் மூலம் உலகின் பன்முகத்தன்மை மற்றும் நிலை யான உலக ஒழுங்கு நோக்கிய பார்வை வலிமை பெற்றிருக்கிறது. ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பில் கவனம் செலுத்தியுள்ளது. தியான்ஜின் பிரகடனம் எவ்விதத் தயக்கமு மின்றி எவ்விதமான சந்தேகத்திற்கும் இட மின்றி, “இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்துள்ளது”. இஸ்ரேலும், அமெரிக்கா வும் சர்வதேசச் சட்டங்களையும் ஐ.நா.சாசனத்தையும் மொத்தமாக மீறியுள்ளன என்று கூறியிருக்கிறது. ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனம் உருவாக்கப்பட்டதில் புது தில்லி பங்கேற்கவில்லை என்றும், “ஆழ்ந்த கவலையை” மட்டும் வெளிப்படுத்தியதாகவும் இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டுள்ள போதி லும், இந்தியாவின் நிலை இதற்குமுன்பிருந்த நிலையிலிருந்து சற்றே மாறுபட்டதாகும். இஸ்ரேல் தொடர்ந்த காசாவில் நடந்த இனப்படு கொலையிலும் கூட இதே அணுகுமுறையை அது முன்னர் எதிரொலித்தது. எனினும் இந்தியாவின் இந்த மாற்றப்பட்ட நிலைபாட்டை தியான்ஜின் தீர்மானம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு “பாலஸ்தீன-இஸ்ரேலிய மோதலின் தொடர்ச்சியான அதிகரிப்பு குறித்து ஆழ்ந்த கவலையை” தெளிவாக வெளிப்படுத்தியது, இதன் விளைவாக “ஏராள மான பொதுமக்கள் உயிரிழப்புகள்” ஏற்பட்டன மற்றும் காசாவில் “பேரழிவு தரும் மனிதாபி மானமற்ற சூழ்நிலையை” உருவாக்கிய நடவடிக்கைகளை இந்தியா இப்போது கண்டித்துள்ளது. போட்டியாளர்கள் அல்ல, பங்காளிகள் உண்மையில், தியான்ஜின் நிகழ்வுக்கு முன்னதாக நடந்த ஜி-மோடி உச்சிமாநாட்டின் சந்திப்பிலிருந்து காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்தியா வும் சீனாவும் ‘பங்காளிகள், போட்டியாளர்கள் அல்ல’ என்பது பொதுவான மனப்பான்மை யாக இருந்தது. இரண்டு பெரிய அண்டை நாடு களும் “பன்முனை உலகின் முக்கியத்து வம், சுதந்திர வர்த்தகம் மற்றும் அயல்துறை அமைச்சகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள படி உலக வர்த்தகத்தை நிலைப்படுத்துவதில் அவர்களின் இரு பொருளாதாரங்களின் பங்கு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் நோக்கில் “நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்மானத்திற்கு” ஒப்புக் கொள்ளப்பட்டன. இருநாடுகள் கேந்திரமான சுயாட்சிக் கொள்கையை (strategic autonomy) பின்பற்றும். இரு நாடுகளும் ‘பொது நலன்களைப் பாதுகாக்க பலதரப்பு ஒத்துழைப்பை’ வலுப் படுத்த வேண்டும் என்றும், “எல்லைப் பிரச்சனை ஒட்டுமொத்த சீன-இந்திய உறவை வரையறுக்க அனுமதிக்கக்கூடாது” என்றும் ஜி குறிப்பிட்டார். ஜியின் உருவக விளக்கத்தில், ‘யானையுடன் டிராகன் நடனமாடும் நேரம் வந்துவிட்டது’. சீனாவிற்கும் அதன் தலை மைக்கும் எதிராக விஷத்தை கக்கும் பாஜக ஐடி செல் கொள்ளையடிக்கும் கூட்டங்களை நன்கு அறிந்த இந்திய உள்நாட்டு பார்வை யாளர்களிடம் இவை அனைத்தின் முரண்பாட்டையும் மறந்துவிட முடியாது. பன்முகப்படுத்தும் வாய்ப்பு ஒரு வகையில், ரியோ டி ஜெனிரோவில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் தொடர்ச்சியாக தியான்ஜின் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, ஜி அல்லது புடின் இருவரும் நேரில் கலந்து கொள்ளவில்லை. ஜூலை 5 அன்று நடை பெற்ற வளரும் நாடுகளின் பிரிக்ஸ் கூட்டமைப்பு, ஈரான் மீதான வரிகள் மற்றும் தாக்குதல்களை அதிகரிப்பதைக் கண்டித்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தது. மத்திய கிழக்கில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை களை இலக்காகக் கொண்ட குழுவின் அறிவிப்பு, அதன் உறுப்பினர் ரஷ்யாவை விமர்சனங்களிலிருந்து காப்பாற்றியது மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனை ஒரு முறை மட்டுமே குறிப்பிட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை நிறுவின. ஆனால் கடந்த ஆண்டு இந்தக் குழு இந்தோனேசியா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. புதிய உறுப்பினர்களுடன், இந்த அமைப்பில் 10 நாடுகள் உள்ளன. கடந்த ஆண்டு உச்சிமாநாட்டில் பெலாரஸ், கியூபா, வியட்நாம் ஆகியவை சேர்ந்தன. இந்த உச்சி மாநாடு வளர்ந்து வரும் நாடுகளுக்கு மாற்று வழிகளைத் தேடுவதிலும், அவர்களின் பொருளாதார கூட்டாண்மைகளைப் பன்முகப் படுத்துவதிலும் பதிலளிக்க சிறந்த வாய்ப்பை வழங்கிடும். உள்தொகுதி வர்த்தகம் - டாலரிலிருந்து விலகும் நகர்வு பிரிக்ஸ் கூட்டமைப்பு உலகப் பொருளாதார நிலப்பரப்பை விரைவாக மாற்றியமைத்து வருகிறது. அதன் புதுமையான வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் நிதி முயற்சிகள் மூலம், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் பாரம்பரிய மேற்கத்திய ஆதிக்கச் சந்தை களுக்கு ஒரு சக்திவாய்ந்த எதிரணியாக உரு வாகி வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் வர்த்தகத்தை கணிசமாக அதிகரித்துள்ளன. ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் மற்றும் விரிவடையும் நுகர்வோர் தளத்துடன், இந்த வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் பாரம்பரிய உலகளாவிய நாணயங்கள் மற்றும் மேற்கத்திய நிதி அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உள்-தொகுதி வர்த்தகத்தை மேம்படுத்து கின்றன. உதாரணமாக, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2022ஆம் ஆண்டில் 600 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக எட்டியது. இது உள்ளூர்மயமாக்கப்பட்ட பொரு ளாதார ஒத்துழைப்பை நோக்கிய வலுவான மாற்றத்தையும் டாலரிலிருந்து விலகிச் செல்வ தற்கான நகர்வையும் நிரூபிக்கிறது. ‘பப்பி அண்ட் ஜாப்பி’ என்ற ராஜதந்திர பாணி யுடன் டிரம்ப் மற்றும் மோடியின் வெளிப்படை யான நட்புறவு, வரி ஆக்கிரமிப்பு மற்றும் அமெரிக்க விதிமுறைகளின்படி ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட இந்தியா இயலாமை ஆகியவற்றால் தெளிவாக வெளிப்படுகிறது. டிரம்ப் இந்தியாவின் நலன்களை பரந்த புவிசார் அரசியல் அர்த்தத்தில் பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது; ஆசிய அதிகார சம நிலையை நிர்வகிப்பதில் அல்லது உலக ளாவிய அதிகார சமநிலையை நிர்வகிப்பதில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் மதிப்பை அவர் பாராட்டவில்லை. இது ஆச்சரியமல்ல! ஆனால் மோடிக்கும் அவரது பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கும் கண்ணீர் சிந்துபவர்கள் மிகக் குறைவு. ஆனால் இந்திய-அமெரிக்க உறவை கவனித்து வரு பவர்களுக்கு இது ஆச்சரியமல்ல. இது உண்மையில் நடக்கக் காத்திருந்தது. மோடி அரசாங்கத்தின் சுய-பாராட்டும் மார்புத் துடிப்பு, விரோதப் போக்குகளை நிறுத்தி யதற்கும், நல்லெண்ண நடவடிக்கைக்கும் பெருமை சேர்த்ததாக டிரம்ப்பின் பெருமித வெறித்தனமான ஒருதலைப்பட்சக் கூற்று இருந்தபோதிலும், டிரம்ப் இரண்டு முறை கூச்சலிட்டாலும் அதைப் பொருட்படுத்த வில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீண்டும் இணைந்திருப்பது, பிராந்திய-உலக சக்தி சமநிலையில் இந்தியாவின் மதிப்பின் தெளிவான அறிகுறிகளாகும். இந்தியாவில் இடதுசாரிகள் தேசிய நலன் மற்றும் சுயாட்சி யை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெளி யுறவுக் கொள்கையை வலியுறுத்தி வருகின்ற னர். ஏகாதிபத்தியம் என்பது ‘தன் புள்ளிகளை இடங்களை மாற்ற முடியாத சிறுத்தை’ என்பதை நன்கு அறிந்தே உள்ளனர். அடிபணிவதிலிருந்து விலகி உண்மையான கூட்டாண்மை நோக்கி இடதுசாரிகளை மறந்துவிடுங்கள், அமெரிக்காவின் மிகவும் முக்கியமான வெளியுறவுக் கொள்கை சிந்தனையாளரான ஹென்றி கிஸ்ஸிங்கர் கூட, ‘அமெரிக்காவை எதிர்ப்பது ஆபத்தானது, ஆனால் அதைத் தழுவுவது அதைவிட மிகவும் ஆபத்தானது’ என்று வெளிப்படையாகக் கூறினார். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா அணியின ருக்கு அந்தத் தெளிவான பார்வையை வழங்க இயலாது. இது கணக்கிட வேண்டிய தருணம். அமெரிக்காவின் புவிசார் அரசியல் உத்திகளுக்கு அடிபணிவதிலிருந்து விலகி, பிரிக்ஸ் மற்றும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயல்முறை மூலம் வெளிப் படுத்தப்படும் உண்மையான கூட்டாண்மை யை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த சூழ்நிலையைப் பார்க்க வேண்டும். இதற்கிடையில், இந்த வரிவிதிப்பு போராட்டத்தின் குறிப்பிட்ட துறை தாக்கத்தை ஆய்வு செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். மேலும் நுண்ணிய சிறிய நடுத்தரத் தொழில்கள் (MSME), வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளின் நிலையை மேம்படுத்த கொள்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவை சார்ந்திருப்ப தைக் கைவிடுவதன் அதிர்ச்சியை உள்வாங்க போதுமான அம்சங்கள் உள்ளன. செப்டம்பர் 3, 2025 - தமிழில்: ச.வீரமணி