articles

வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அல்ல! - கடலூர் சுகுமாரன்

வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அல்ல!

1.7.2025 அன்று மோடி அர சாங்கம் கிட்டத் தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் 99,446 கோடி ஒதுக்கீடு செய்து வேலை வாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Employment Linked Incentive) ELI என்னும் திட்டத்தை அங்கீ கரித்தது. மூலதனம்-உழைப்பு இரண்டிற் கும் இடையே நிலவும் சமச்சீரற்ற தன்மை, முறைசார் மற்றும் முறைசாரா தொழிலாளர்க ளுக்கு இடையே நிலவும் இடைவெளி மற்றும் வேலைவாய்ப்புகள்- சூழல் இரண்டிற்கும் இடையே நிலவும் உள்ளார்ந்த முரண்பாடு இவற்றையெல்லாம் ஆராய்ந்தால் இந்த கொள்கையின் வடிவமைப்பு தொழிலாளர்க ளிடையே  மேலும் ஏற்றத்தாழ்வை தான் அதிகரிக்கும் என்று தெரிகிறது. திட்டத்தின் பிரதான குறைபாடுகள் 1. முதலாளிகளை மையமாக வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதே முதல் குறைபாடு. குறிப்பாக உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புகளை உரு வாக்க முதலாளிகளுக்கு  வழங்கப்படும் ஊக்கத்தொகை  வேலைவாய்ப்புகள் மற்றும் அதன் சூழலுக்கும்  இடையே ஏற்க னவே நிலவும் முரண்பாட்டை மேலும் அதி கரிக்கும்.தொழிலாளர்களை காட்டிலும் முதலாளிகளின் பேரம் பேசும் சக்தியை  அது அதிகரிக்கும். முறை சாரா மற்றும் திறன் குறைவான தொழிலாளர்களுக்கு பெரும் தீங்கை  விளைவிக்கும். 2.குறைவான ஊதியம், திறன் பற்றாக்குறை  இந்தியாவின் தொழிலாளர் சந்தை எப்படி உள்ளது? ஏற்கனவே வேலை வாய்ப்புகள் குறைந்து வருவது மட்டுமல்ல, கடுமையான திறன் பற்றாக்குறையும் அங்கு நிலவுகிறது. மொத்தம் உள்ள பட்ட தாரிகளில் 8.25 % பேர் மட்டுமே தங்கள் தகுதிகளுக்கு ஏற்ற வேலையை பெற்றுள்ளனர். 53 சதவீதத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மற்றும் 36 சதவீதம் முதுநிலை பட்டதாரிகளுக்கு தகுதிக்குரிய வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 4.2% பட்டதாரிகள் மட்டுமே ரூபாய் 4 லட்சம் முதல் 8 லட்சம் வரை ஊதியம் பெறும் பணிகளில் உள்ளனர். 46 சதவீதம் பேர் குறைந்த திறன் கொண்ட வேலைகளில் சுமார் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவாக சம்பா திக்கின்றனர். தொழில்துறை கூறும் திறன் கள் நம்முடைய தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த நிலையில் ஊக்கத்தொகை திட்டத்தினால் எவ்வித நன்மையும் அவர்க ளுக்கு கிடைக்கப் போவதில்லை மேலும் நம் இளைஞர்களில் (15 லிருந்து 29 வயது உடையவர்கள்) சுமார் 5% பேர் மட்டுமே முறையான தொழில் பயிற்சி கல்வியை பெற முடிந்தவர்கள்.  3.  முறைசாரா தொழிலாளிகள் புறக்கணிப்பு  பொருளாதாரத்தில் நன்கு ஒருங்கி ணைக்கப்பட்ட முறைசார் துறைகள்/நிறு வனங்களுக்குத் தான் இந்த திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. (அதாவது ஊழி யர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள்). அதே நேரத்தில் சமூக பாதுகாப்பு, முறையான ஒப்பந்தங்கள் மற்றும் நிலையான வேலை வாய்ப்பு பாதுகாப்பு இல்லாத முறைசாரா துறையில் பணியாற்றும் 90% ஊழியர்க ளை இந்த திட்டம் ஓரங்கட்டுகிறது. நல்ல நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு நிதி ஆதரவை அளிக்கிறது. குறைந்த மற்றும் பதிவு செய்யப்படாத ஊழியர்களை புறக்க ணிக்கிறது. இதனால் தொழிலாளர்க ளிடையே சமத்துவமின்மை அதிகரிக்கும். அரசின் முதலீட்டை முறைசார் தொழில் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்ளும். முறைசாரா தொழிலாளர்களோ ஆதர வற்று இந்த ஊக்குவிப்பிலிருந்து வெளி யேற்றப்படுகிறார்கள். 4. வேலையின்மையை அதிகரிக்கும் கவலை அளிக்கும் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த திட்டம் வேலை யின்மையை மறைமுகமான இயல்பான ஒன்றாக மாற்றும். மக்கள் வேலையில் இருப்பதாக தோன்றுவார்கள். ஆனால் உற்பத்தியில் அதனால் எந்த பங்கும் இருக்காது. (உதாரணத்திற்கு விவசாயம் மற்றும் முறைசாரா சேவை துறைகள்). இதன் விளைவாக உற்பத்தி தேங்கிவிடும். ஊதி யம் வீழ்ச்சி அடையும். மானியங்களை அபகரிக்க ஏற்கனவே உள்ள வேலைகளை புதிய வேலைகள் உருவாக்கம்  என அலங்க ரித்து முதலாளிகள் நாடகத்தை அரங் கேற்றுவர். 5. உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புகள் எங்கே? பொருளாதார முன்னேற்றத்திற்கு உற் பத்தித் துறை மிகவும் இன்றியமையாதது. ஆனால் அதிகரித்து வரும் தானியங்கி தொழில்நுட்பம் (Automation)மற்றும் மூல தன அதிகரிப்பின் காரணமாக வேலை வாய்ப்பின் நெகிழ்வுத்தன்மை படிப்படியாக குறைந்து வருகிறது. வெறும் 13 சதவீத வேலை வாய்ப்புகள் தான் உற்பத்தித் துறை யில் உருவாகின்றன. ஆனால் விவசாயத் துறையில் 70% பேர் பணியாற்றுகின்றனர். எனவே இந்த துறைகளில் பணியாற்றும் கிராமப்புற இளைஞர்கள் குறிப்பாக பெண்க ளுக்கு   இந்த திட்டத்தினால் எவ்வித நன்மை யும் இல்லை. வேலைவாய்ப்பு உருவாக் கத்தின் முதன்மை இயந்திரமாக உற்பத்தித் துறை விளங்குகிறது என்பது காலாவதி யான கருத்து.  வேலைவாய்ப்பு உருவாக் கத்தின் ஏற்றத்தாழ்வுகள்  இதனை நிரூ பிக்கின்றன. மாற்று என்ன? தொழிலாளர் சந்தைக் கட்டமைப்பின் ஏற்றத்தாழ்வுகள் மோடி அரசின் இந்த ஊக்குவிப்பு திட்டத்தினால் மேலும் அதி கரிக்கும். முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தி திறன் மேம்பாட்டை நிவர்த்தி செய்து வேலைத் தரத்தை மேம்படுத்தும் வழிமுறைகள் எதுவும்  இதில் இல்லை என்பதும் தெளிவாகி றது. அதற்கு  மாறாக திறன் மற்றும் கல்வி சீர்திருத்தங்களில் முதலீடு செய்வது குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்க ளுக்கு பயனளிக்கும். குறுகிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதற்கு பதிலாக நீண்டகால நிலையான வேலை வாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கூட்டு பேர உரிமையும் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும். பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டும் முன்னேற்றம் அல்ல. ஒரு சமமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான உத்திக ளாக அவற்றை மாற்றுவதில் மோடி அரசு கவனம் செலுத்த முன்வர வேண்டும். கட்டுரையாளர்கள் : ஆரோலிப்சா தாஸ் மற்றும் உபைத் முஷ்டாக்   எஸ்ஆர்எம்-பல்கலைக்கழகம்-ஏபி-இன் பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர்கள்  தி இந்து 13/8/25  தமிழில் : கடலூர் சுகுமாரன்