சிறப்பு வந்து சேரும்
அளவாய் நீயும் சேர்த்து வைக்க அறிந்து கொள்ள வேண்டும்! அளவில் லாமல் சேர்த்து வைத்தால் அடைவாய் துன்பம் நாளும்! குருவி போலக் கூடு கட்டிக் கொஞ்சி வாழ வேண்டும்! விரும்பிச் சேர்த்து வைத்த யாவும் வேண்டும் உதவி செய்யும்! விலங்கு போல வாழும் வாழ்வை விலக்கி வாழ வேண்டும்! கலங்க வைத்து வாழும் வாழ்வால் காணும் துயரே யாண்டும்! பொறுப்பில் லாமல் வாழும் வாழ்வால் புலம்ப வேண்டும் என்றும்! பொறுப்பு கொண்டு வாழ்வ தாலே பொன்னும் பொருளும் ஒன்றும்! ஆசை வலையில் விழுந்து விட்டால் அல்லல் படவே வேண்டும்! ஓசை இல்லா வாழ்வு கூட ஒன்றும் இல்லா தாகும்! திட்டம் இன்றி வாழ்வ தாலே திறமை வீணாய்ப் போகும்! திட்டம் போட்டு வாழ்வ தாலே தேர்ந்த நன்மை ஆகும்!