articles

img

தங்கள் அமைப்பால் ஆளப்படாத கேரளாவில் தவழும் அமைதியை கண்டு சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர்

தங்கள் அமைப்பால் ஆளப்படாத கேரளாவில்  தவழும் அமைதியை கண்டு சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியத் தலைவராக உள்ள பவன் ஜிண்டால் கேரளா சென்றிருந்த போது அம்மாநில கார் ஓட்டுநர் ஒருவர் மூலமாக இடதுசாரிகளின் நல்லாட்சியை பார்த்து தெரிந்து வியந்த கதை. இது பவன் ஜிண்டால் அவர்களுக்கு கார் ஓட்டுநராக பணியாற்றிய ரெஞ்சு ரெக்ஹு (renju reghu) தனது முகநூல் பக்கத்தில் எழுதியதன் மொழிபெயர்ப்பு. 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது இந்தியாவில் 11 மண்டலங்களாகப் பிரிக்  கப்பட்டுள்ளது. இதில், ஐந்து மாநி லங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிர தேசங்களைக் கொண்ட மிக முக்கிய மான ஒரு மண்டலத்தின் பொறுப்பாள ராக வட இந்தியாவின் முக்கிய தொழில திபரான பவன் ஜிண்டால் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், மோகன் பக வத்துக்கு அடுத்த நிலையில், மூன்றா வது மிக உயரிய பதவியை இவர் வகிக்கிறார். ‘கேரள ஸ்டோரி’க்கு பின் நடந்த முதல் பயணம் கடந்த எட்டு நாட்களாக, ( அக்டோபர் மாதம் முதல் வாரத்தில்) பவன் ஜிண்டா லும் அவரது குடும்பத்தினரும் சுற்றுலா வுக்காகத் தென் மற்றும் மத்திய கேர ளப் பகுதிகளில் என்னுடன் பயணித்த னர். கேரளத்திற்கு அவர்கள் முதல் முத லாக இப்போதுதான் வந்துள்ளார்கள். ‘தி கேரள ஸ்டோரி’ (The Kerala Story)  திரைப்படத்தைப் பார்த்து விட்டு அத னால் ஏற்பட்ட தாக்கத்தின்படி ஒருவித முன்முடிவுடன் தான் அவர்கள் இங்கு வந்தார்கள். இவர்களது முதல் பயணம் திரு வனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து கன்னியாகுமரிக்குத் தொடங்கியது. அன்று மதியம் விவேகானந்தர் பாறை மற்றும் விவேகானந்தர் மையத்தைப் பார்வையிட்ட பின்னர், இரவு கன்னியா குமரியில் தங்கினர். மறுநாள் காலையில்  சுசீந்திரம் கோயில் மற்றும் பத்மநாபபுரம்  அரண்மனையைப் பார்வையிட்ட பிறகு,  கோவளம் வந்து சேர்ந்தோம். நட்பு மலர்ந்த தருணம் அன்று பெருமழை பெய்தது. மாலை  நேரம் மழை ஓய்ந்த பிறகு, கார் நிறுத்து மிடத்தில் என்னைப் பார்த்த அவர்கள் அருகில் வந்து பேசினார்கள். நான் அவர்கள் தங்கி இருந்த இடம் பற்றிக்  கேட்க, “அழகாக இருக்கிறது, உணவு  மிகவும் சுவையானது” என்று இந்தி  கலந்த ஆங்கிலத்தில் சொன்னார்கள்.  எனக்கு இந்தி சரளமாகத் தெரியாத தாலும், அவர்களுக்கு ஆங்கிலம் சரள மாகத் தெரியாததாலும், நாங்கள் பாதி  இந்தியில் உரையாடினோம். இளநீர் ஐஸ்கிரீம் (Tender coconut ice cream)  சாப்பிட வேண்டும் என அவர்கள் கேட் டார்கள். ஒரு பஞ்சாபி உணவகத்தில் அதை பார்த்து வாங்கி சாப்பிட்டோம்.  முதல் நாள், எனது அலைபேசி வால்  பேப்பரில் இருந்த சே குவேரா படத்தை பவன் ஜிண்டால் கவனித்ததால், என்னு டன் அவ்வளவாக பேசாமல் முதலில் விலகியிருந்தார். ஆனால், உணவகம் சென்று சாப்பிட்ட பிறகு, அவர் என்னி டம் சற்று நெருக்கமாகப் பேசத் தொடங்கினார். கேரளாவின் சுத்தமான  சுற்றுப்புறச் சூழல் மற்றும் இங்கு வாழும்  மக்களின் முகத்தில் இயல்பாகவே ததும்பும் மகிழ்ச்சியான முகபாவம் பார்த்து வியந்த அவரது மனைவி என்னி டம் அதுகுறித்து பேசிப் பாராட்டினார்.  அவர் மனைவி என்னிடம் புகைப்  பிடிக்கும் பழக்கம் குட்கா பயன்படுத் தும் பழக்கம் உள்ளதா எனக் கேட்டார். நான் பயன்படுத்த மாட்டேன் என்று நான்  விளக்கினேன். மேலும் பொது இடங்க ளில் புகைப்பிடிப்பதை இந்தியா விலேயே முதலில் தடை செய்த மாநிலம்  கேரளா என்றும், அது தொடர்பான விழிப்புணர்வுகளால் பலர் இப்பழக் கத்தைக் கைவிட்டனர் எனவும் அவர் களுக்கு கூறினேன். பிச்சைக்காரர்கள் இல்லா கோவில்கள் மறுநாள் காலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்ம நாப சுவாமி கோயிலில் தரிசனத்திற்கா கச் சென்றோம். தரிசனத்திற்குப் பின்,  அருகே இருந்த ராஜதானி உணவகத் தில் காபி அருந்தினோம். அப்போது, தங்கள் சொந்த மாநிலத்திலும் இருப்பது  போல தமிழ்நாட்டில் பார்த்தது போல கோயில்களில் நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் கேரளாவில் இல்  லையே ஏன் என்று அவர்கள் ஆச்சரி யத்துடன் கேட்டனர்.  இங்கும் சில பிச்சைக்காரர்கள் உள்ளார்கள். அவர்கள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களிலிருந்து வருப வர்கள் என்றும், அவர்களுக்காகத் தங்குமிடங்கள் இருந்தாலும், சிலர் அங்கிருந்து தப்பித்து வந்து இங்கே பிச்சை எடுப்பதாகவும் விளக்கினேன். அன்றைய பயணம் அமிர்தானந்த மயி ஆசிரமத்தில் முடிந்தது. அங்கு நாங்கள் இரவு தங்கினோம். மறுநாள் அமிர்தானந்தமயி அம்மாவுடைய பிறந்தநாள் விழா. அதில் பவன் ஜிண்டால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஃபரிதாபாத்தில் 2,000 படுக்கைகள் கொண்ட அமிர்தா மருத்துவமனையைத் திறந்து வைப்ப தற்குச் சற்று முன்பு, பிரதமர் மோடியின்  வருகையில் ஏற்பட்ட தாமதத்தால்,  பவன் ஜிண்டாலுக்கு அமிர்தானந்தமயி அம்மையாருடன் அரை மணி நேரம்  தனியாகப் பேசும் வாய்ப்புக் கிடைத் தது.  ஒரு வி.ஐ.பி.யின் ஓட்டுநர் என்ற  முறையில், ஆசிரமத்தில் எனக்கும் வி.ஐ.பி.க்கான வசதிகளாக அறை,  உணவு என அனைத்தும் கிடைத்தன.  இருப்பினும், இசட் பிரிவுப் பாதுகாப்பு டன் ஏகே-47 துப்பாக்கிகளைச் சுமந்து கொண்டு திரிந்த பாதுகாப்புப் படையின ரின் நடமாட்டம் காரணமாக அங்கு ஒரு விதமான பதட்டத்தை நான் உணர்ந் தேன். மறுநாள் காலை, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காகப் பொறி யியல் கல்லூரி மைதானத்திற்குச் சென்  றோம். அங்கு முன்னாள் ஆளுநர் ஆரிப்  முகமது கான் மாலையிட்ட பிறகு, பவன்  ஜிண்டால் இரண்டாவது நபராக அம்மாவுக்கு மாலை அணிவித்தார். அங்கிருந்து, எங்கள் பயணம் குமரகம்  நோக்கித் தொடர்ந்தது. குடிசை இல்லாத கிராமம் பயணம் முழுவதும், அவரது மனைவி என்னிடம், “கிராமங்கள் எங்கே  உள்ளன? காணோமே? மாடுகள் எங்கே  உள்ளன? காணோமே ?” என கேட்டுக்  கொண்டே வந்தார். எங்கும் பார்த்தா லும் கடைகள் நிறைந்துள்ளதே எனவும்  அவர் குறிப்பிட்டார். நான் அதற்கும் அவருக்கு விளக்கம் கொடுத்தேன். கேர ளாவிலும் கிராமங்களும் மாடுகளும் உள்ளன. ஆனால் மாடுகள் அதற்குறிய  கொட்டகைகளில் தான் வைத்து  வளர்க்கப்படுகின்றன. எங்களிடம் முறையான வசதியான வீடுகள் உள்ளன. அவர்கள் தங்கியிருந்த ‘சூரி’  என்ற விடுதியே ஒரு கிராமப்புறத்தில் தான் அமைந்துள்ளது. சாலையின் இருபுறமும் இருந்த வீடு களைச் சுட்டிக்காட்டி, எங்கள் கேரள கிராமங்களை நான் அவர்களுக்குக் காட்டினேன். அதைப் பார்த்த அவர், “அடடா, இவை ரொம்ப நல்லா அழ கான வீடுகளாக இருக்கே! என்று ஆச்ச ரியத்துடன் கூறிவிட்டு, மீண்டும் எங்கே  குடிசைகளையே காணோம்?” என்று கேட்டார். நான் எனக்கு தெரிந்த இந்தி யில், “ இங்கு குடிசைகள் இல்லை!” என்று பதிலளித்தேன். அப்போது, அவர்களது தலைவ ரான அடல் பிஹாரி வாஜ்பாய் தான் கும ரகம் பகுதியை உலகப் புகழ்பெற்ற சுற்று லாத் தலமாக மாற்றினார் என்று நான்  கூறினேன். அது எப்படி என்று அவர்கள்  கேட்க, நான் அதற்கும் விளக்கம் கொடுத்தேன், இங்கு முதல் முதலாக வந்த ஹோட்டல் ‘தாஜ்’ தான். இந்தப் பகுதி பிரபலமடைவதற்கு முன் அது  ஒரு பிரிட்டிஷ் பங்களாவாக இருந்தது.  பிறகு ஹோட்டலாக மாற்றப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இங்கு ஒரு நாள் தங்குவதாக வந்து,  பின்னர் இங்கு நன்றாக அமைதியாக உள்ளது என கூறி தனது திட்டமிட்ட பய ணத்தை தாண்டி மேலும் ஒரு நாள்  இங்கு தங்கினார். தான் “பிரதமரான பிறகு நான் அதிக அமைதியை அனு பவித்த இடம் இதுதான்” என்று கூறி னார். அன்று சமூக ஊடகங்கள் இல்லாத  அந்தக் காலத்திலேயே, இந்தியாவின் முக்கியமான ஊடகங்கள் வாஜ்பாய் கூறிய இந்த தகவலை செய்தியாக வெளியிட்டன. அது குமரகமை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்தது. அதன்பிறகு தான் பல ஹோட்டல்கள் பெருகிவிட்டன என்றேன். சீர்திருத்தங்கள் தந்த மாற்றம் மறுநாள் அவர்களை ஆலப்புழா வுக்கு அழைத்துச் செல்லச் சென்ற போது, குமரகம் மிக அழகான இடம் என்று அவர்களே பாராட்டினார்கள். ஆலப்புழாவில் ஒரு நாள் படகு வீட்டில்  தங்கிய பிறகு, எங்கள் இறுதி பயண மான மூணாறுக்குப் புறப்பட்டோம். வழி யெங்கும், அரண்மனை போன்ற அழ கான வீடுகளைக் கண்டு அவர்கள் வியந்தனர், மேலும் வீடில்லாத மக்கள்  சாலையோரங்களில் படுத்துத் தூங்கும்  நிலை அங்கு இல்லாததையும் கவ னித்தனர். அதையும் ஆச்சரியமாகக் கேட்டனர். இதற்கு கேரள அரசின் நிலச்  சீர்திருத்தங்களும் கல்விச் சீர்திருத் தங்களுமே காரணம் என்று விளக்கம் கொடுத்தேன். அடுத்தாக, தங்கள் மாநிலங்களில் பார்ப்பதைப் போல இங்கு சாலை யோரங்களில் குப்பைக் குவியல்கள் இல்லாதது குறித்து கேள்வி கேட்டார் கள். நான் அதற்கு நகைச்சுவையாக, “உங்களுக்கு ஸ்ரீ ராம் சேனாவும் ஹனு மான் சேனாவும் இருப்பது போல, எங்க ளிடம் கேரளாவைச் சுத்தமாக வைத்தி ருக்கும் ‘ஹரித கர்மா சேனா’ (பசுமை  செயல் படை) உள்ளது” என்று கூறினேன். அவர்கள் மாநிலத்தின் சில நகரங்கள் சுத்தமாக இருந்தாலும், கிராமங்களில் குப்பைக் குவியல்கள் அதிகம் இருப்பதை அவர்களே ஒப்புக்கொண்டனர். அதிகாரத்தைக் காட்டிய அழைப்பு மூணாறில் உள்ள முத்துவான் குடி யில் இருந்த ஒரு ஹோட்டலை அடைந்  தோம். மறுநாள் காலை 9 மணிக்கு மூணா றைச் சுற்றிப் பார்க்கத் துவங்கினோம். அங்கிருந்த தேயிலைத் தோட்டங்க ளின் அழகில் அவர்கள் மயங்கிப் போயி னர். அவர்கள் டார்ஜிலிங்கையே பார்த்திருந்தாலும், மூணாறின் அழகு அவர்களைக் கவர்ந்திழுத்தது. கதகளி மற்றும் களரிப்பயட்டு நிகழ்ச்சி களை ரசித்து, ‘நேச்சர் ஹோட்டலில்’  இரவு உணவு உண்ட பிறகு, அமிர்தா னந்தமயி மடத்தின் அயோத்தியைச் சேர்ந்த சட்ட ஆலோசகர் ஓம் பிரகாஷ் என்பவரிடம் இருந்து பவனுக்கு அழைப்பு வந்தது. ஃபரிதாபாத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த ரூ. 15 லட்சம் அபராதம் தொடர்பான விசயமாகப் பேசினார்கள். மூணாறில் இருந்தவாறே, பவன் ஒரே ஒரு அமைச்ச ருக்குத் தொலைபேசியில் அழைத்து, அபராதத்தை ரூ. 3 லட்சமாகக் குறைத்தார். இரவு 8:30 மணிக்கு ஹோட்டலுக்குத் திரும்பினோம். மறுநாள், விமான நிலையம் செல்லும் வழியில், காலடி யில் உள்ள ஆதிசங்கரர் ஸ்தூபியைப்  பார்வையிடுவதற்கு அவர்கள் விரும்பி னார்கள். அதைப் பார்வையிட்ட பிறகு அந்த கோவிலில் தாங்கள் எதிர்பார்த்த கூட்டம் இல்லை, அமைதியாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் திரு விழாக் காலங்களிலோ அல்லது விசேஷ நாட்களிலோ தான் கோவி லுக்குச் செல்வார்கள் என்று கூறினேன்.  அன்றாடம் செல்வது குறைவு என்று  விளக்கினேன். விமான நிலையம் செல்லும் வழியில் ஒரு சைவ உணவ கத்தில் மதிய உணவு உண்டபோது, ஒவ்வொரு மலையாளியும் கேட்க  விரும்பும் வார்த்தைகளை அவர்கள் கூறினார்கள், “நாங்கள் மீண்டும் வட  கேரளாவைப் பார்க்க வருவோம், அப்போது உங்கள் உதவி எங்க ளுக்குத் தேவை. நீங்கள் டெல்லிக்கு வரும்போது, என்ன உதவி தேவை என்றாலும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி எனக் கூறி னார்கள். நாங்கள் இருவரும் சித்தாந்த ரீதி யாக முற்றிலும் மாறுபட்ட நிலைகளில் நின்றாலும், ஆர்.எஸ்.எஸ். அதன் 100 ஆவது ஆண்டைக் கொண்டாடும் இந்தக் காலத்தில், அவர்களால் ஒரு போதும் ஆளப்படாத இந்தக் குட்டி மாநி லமான கேரளா, இந்தியாவில் மக்கள் அதிக அமைதி, மகிழ்ச்சி மற்றும் மத  நல்லிணக்கத்துடன் வாழும் இடம்  என்பதை அவர்களுக்குக் காண்பித்த தில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்பட்டது. - தமிழில் : சேது சிவன்