முக்கியப் பிரச்சனைகளை விவாதிக்க மறுப்பது அப்பட்டமான எதேச்சதிகாரம்
மோடி அரசுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு ஆகஸ்ட் 18, 2025 அன்று கூடியது. நிறைவில் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்க ளில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரி ழந்திருப்பதற்கு அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
பிரதமரின் சுதந்திர தின உரை
பிரதமரின் சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸ் பற்றிய குறிப்புக்கு அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இதன் மூலம், மோடி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்எஸ்எஸ்-ஐ நியாயப் படுத்த முயற்சிக்கிறார். அவர் அறிவித்த மக்கள் விரோத சீர்திருத்தங்களைத் தவிர, ‘ஊடுருவல் காரர்களை’ அடையாளம் காண்பது என்ற பெயரில் முஸ்லிம் சிறுபான்மையினரைக் குறிவைத்து துன் புறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ‘மக்கள் தொகை திட்டம்’ உருவாக்கத்தையும் பிரதமர் அறி வித்திருக்கிறார். அனைத்து முஸ்லிம்களையும் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய ஊடுரு வல்காரர்களாக சித்தரிக்கும் ஆர்எஸ்எஸ் பிரச்சா ரத்தை நியாயப்படுத்துவதே இதன் நோக்கமாகும். மேலும் தீபாவளியன்று ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்திருக்கி றார். இந்தக் குறைப்பின் பலன்கள் பெருநிறுவனங்க ளுக்கு அல்லாமல், நுகர்வோரைச் சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இதன் விளை வாக ஏற்படும் எந்தவொரு வருமான இழப்பிற்கும் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
சிறப்பு தீவிர திருத்தமும் தலைமை தேர்தல் ஆணையமும்
பீகாரில் ஜூன் 24 அன்று அறிவிக்கப்பட்ட வாக்கா ளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஆரம்பத்தி லிருந்தே சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது. ஏனெ னில் அறிவிப்புக்கு முன்னதாக அரசியல் கட்சிகளு டன் ஆலோசனைகள் நடத்தப்படவில்லை. இது நிறு வப்பட்ட மரபுக்கு மாறான ஒன்று. தீவிர திருத்தங்க ளுக்கு எப்போதும் நீண்ட கால தயாரிப்பு மற்றும் ஆலோசனை தேவைப்படும். முதல் தேர்தல் ஆணை யத்திலிருந்தே, ஒவ்வொரு குடிமக்களுக்கும் உள்ள வாக்களிக்கும் உரிமையின் அனைவருக்குமான தன்மையே பொதுவான கொள்கையாக இருந்து வருகிறது. மேலும் அரசமைப்புச் சட்டத்தின் 326ஆவது பிரிவுடன் இணங்குவதை உறுதி செய்வதற்காக வாக்காளர் பட்டியலை உரு வாக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்தின் முழுமை யான மற்றும் பிரத்தியேகமான பொறுப்பாகும். நிர்ண யிக்கப்பட்ட நடைமுறையின் கீழ், உள்துறை அமைச் சகத்துடன் கலந்தாலோசித்து, சரிபார்க்கப்பட்ட ஆட்சேபணைகளின் அடிப்படையில் மட்டுமே வரைவுப் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க முடியும். வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் நடை முறையை சிறப்பு தீவிர திருத்தம் பரிந்துரைத்தது. பதி னொரு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எழுத் துப்பூர்வ விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இவற்றில் பெரும்பாலானவை பீகாரில் மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. நடை முறையில், இது பட்டியலில் சேர்க்கப்படாமல் போவ தையே குறிக்கிறது. ஏனெனில் இது ஒரு புதிய நடைமுறையாகும், இதில் ஆவணங்கள் இல்லாத வர்கள், ‘குடிமக்கள் அல்லாதவர்கள்’ எனக் கருதப் பட்டு, தானாகவே நீக்கப்படுகின்றனர். இது அரச மைப்புச் சட்டத்தின் 326ஆவது பிரிவு மற்றும் அனை வருக்கும் வாக்குரிமை என்ற கொள்கையை முழு மையாக மீறும் செயலாகும். எதிர்க்கட்சிகள் கூட்டாக தேர்தல் ஆணையத்தைச் சந்தித்தன. ஆனால் பெரு மளவில் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற அச்சுறுத்த லை ஏற்படுத்திய நிலைமை சரிசெய்யப்படும் என்ற எந்த உத்தரவாதமும் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்படாமல் அவர்களின் மனு சுருக்கமாக தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் விளைவாக, எதிர்க்கட்சிகள் குடிமக்களை வாக்குரிமை இழப்பிலிருந்து பாதுகாக்க நடவ டிக்கை எடுத்தன.
நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வாக்காளர் பட்டிய லில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்க ளையும், அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்க ளையும் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது வரவேற் கத்தக்க முன்னேற்றமாகும். ஏனெனில் தேர்தல் ஆணையம் மேற்கண்ட செயல்முறை முழுவதும் வெளிப்படைத்தன்மையைப் பராமரிக்கத் தவறி விட்டது. பல ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டி யுள்ளபடி, வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் சிறு பான்மை சமூகங்கள், பெண்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை தொடர்பாக பீகாரில் பரவலான அதிருப்தி நிலவு கிறது. இந்த செயல்முறையை எதிர்ப்பதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் பிரதமர் மோடி ‘ஊடுருவல்காரர்களுக்கு’ எதிராக ஆற்றிய உரையில் கூறியது போல், ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும் தேர்தல் ஆணை யத்தின் ஒருதலைப்பட்சமான தன்மை, மக்களி டையே பிரச்சாரம் செய்து அவர்களை அணிதிரட்டு வதன் மூலம் அம்பலப்படுத்தப்பட வேண்டும். பீகார் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் நாடாளுமன்றத்திலும், தில்லியில் பொது இடங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளன. இந்த விஷயத்தில் எடுக்க வேண்டிய கூட்டு நிலைப்பாடு குறித்து விவாதிக்க நீண்ட இடை வெளிக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணி கூடியது. இது ஒரு ஆக்கப்பூர்வமான முன்னேற்றமாகும்.
பீகாரின் 25 மாவட்டங்களை உள்ளடக்கி 16 நாள் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடத்த ‘இந்தியா’ கூட்டணி முடிவு செய்துள்ளது. இது செப்டம்பர் 1ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் மாபெரும் பேரணியுடன் முடிவடையும். மக்களவைத் தேர்தலின் போது பெங்களூரு சட்ட மன்றத் தொகுதிகளில் ஒன்றில் (மாதேவ்புரா) நடந்த மிகப்பெரிய ‘வாக்கு திருட்டு’ குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் படி சுதந்திரமான பங்கு வகிக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் மீதான அவநம்பிக்கை அதிகரித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் சொந்த பதி வுகளிலிருந்து பெறப்பட்ட ஆவண ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே மேற்கண்ட அம்ப லப்படுத்தல் நடந்தது. தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தக் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக ஏளனப் படுத்தி, கற்றையான பொய்களைப் பரப்பியது. இது பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகு முறையை மேலும் நிறுவியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர்
நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்பினைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. பீகாரில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த அரசாங்கம் அனுமதி மறுத்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மாநில அரசுகளின் உரிமைகளை மீறும் விளையாட்டுச் சட்டமுன்வடிவு உட்பட பல சட்டமுன்வடிவுகளை ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கிறது. சுரங்கங்கள் மற்றும் கனி மங்கள் சட்டம்; அணுசக்தி பொறுப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்யும் சட்டமுன் வடிவுகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த திட்ட மிட்டுள்ளது. கனிம ஆய்வு மற்றும் அணுசக்தி உற் பத்தியின் முக்கிய துறைகளில் தனியார் மற்றும் வெளிநாட்டு மூலதனம் நுழைவதை எளிதாக்குவ தற்காக இந்த சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. நாட்டின் நலன்களுக்கு எதிரான இந்த சட்டமுன் வடிவுகளை எதிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சி களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. கடுமையான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அரசாங்கம் பிடி வாதமாக மறுப்பது அதன் எதேச்சதிகாரத் தன்மை யைப் பிரதிபலிக்கிறது. இதன் விளைவாக, நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய மக்களைப் பாதிக்கும் பல பிரச்சனைகள் ஒருபோதும் இடம்பெறு வதில்லை.
இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு
வர்த்தக ஒப்பந்தத்தை எட்டத் தவறியதற்காக 25 சதவீதமும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதற்கு 25 சதவீதமும் என 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா, இந்தியா மீது விதித்துள் ளது. இது இந்தியாவின் விவசாயம், மீன்வளத் துறை மற்றும் குறு, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்க ளைக் கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக ஜவுளி உற் பத்தியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது பணவீக்கத்தை அதிகரிக்கும். ஏனெனில் நாம் கட்டாயப்படுத்தப்பட்டு செலுத்த வேண்டிய அதிக விலைகள் காரணமாக அனைத்துப் பொருட் களின் விலைகளும் உயரும். இந்திய அரசாங்கம் ரஷ்ய எண்ணெய் இறக்கு மதியைக் குறைத்து, அதன் எரிசக்தித் தேவை களுக்கு அமெரிக்காவை அதிகம் நம்பியிருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. சலுகை களைப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில், அமெ ரிக்க விமான நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்புக் கொள்முதலை கணிசமாக அதிகரிப்பதாக உறுதி யளித்ததன் மூலம் அரசாங்கம் அமெரிக்காவைத் திருப்திப்படுத்தவும் முயன்றது. இந்திய அர சாங்கம் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணி யக்கூடாது. அதற்குப் பதிலாக, அது தன் உறவுகளை பன்முகப்படுத்துவதில் கவனம் செலுத்தி, பல்துரு வத்தன்மையை வலுப்படுத்தப் பாடுபட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து சுயாட்சியை பாதுகாக்க...
370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு- காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. கூறப்பட்ட நோக்கங்கள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. ஒன்றிய அரசு பயங்கரவாதத்தை ஒழிக்க வோ அல்லது ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கவோ தவறிவிட்டது. பஹல்கா மில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் பொய்யான கூற்றுகளை அம்பலப்படுத்தியது. ஆறு மாதங்க ளுக்குள் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய தற்காக ஒன்றிய அரசை உச்ச நீதிமன்றம் பொறுப் பேற்கச் செய்வதற்குப் பதிலாக, பஹல்காம் தாக்குத லின் காரணமாக மாநில அந்தஸ்து குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல என்று கூறியது துரதிர்ஷ்டவசமானது. இந்த ஐந்து ஆண்டுகால நேரடி ஒன்றிய நிர்வாகத்தில், ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டுள் ளன. வாக்குறுதியளிக்கப்பட்ட எந்த வளர்ச்சியும் நடைபெறாததால், ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய அனைத்துப் பகுதி மக்களிடையேயும் பரவ லான அதிருப்தியும் கோபமும் நிலவுகிறது. ஜம்மு- காஷ்மீரின் மாநில அந்தஸ்தையும், அதன் சுயாட்சி யையும் மீட்டெடுக்கும் போராட்டத்தில் மக்கள் அணி திரட்டப்பட வேண்டும்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்க!
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு (2006) மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு ஆகிய இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு வேறுபட்ட முறையில் எதிர்வினையாற்றி யது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருந்த மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில், அரசாங்கம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நீதிமன்ற உத்தரவுக்கு தடை பெற்றது. இதற்கு நேர்மாறாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்துத்துவா தீவிர வாதக் கூறுகளாக இருந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில், அரசாங்கம் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. இது மகா ராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மாநில அரசின் வகுப்புவாத சார்பை தெளிவாக அம்பலப் படுத்துகிறது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன் றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும், குற்றம் சாட்டப்பட்ட வர்கள் முறையாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படு வதை உறுதி செய்யுமாறும் மகாராஷ்டிரா மாநில அரசை அரசியல் தலைமைக்குழு வலியுறுத்து கிறது.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
தன்கரின் திடீர் ராஜினாமாவால் அவசியமாகி யுள்ள குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து அரசியல் தலைமைக்குழு விவா தித்தது. பொது வேட்பாளர் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியின் வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் ‘இந்தியா’ கூட்ட ணியுடன் ஒருங்கிணைந்து செயல்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.