articles

img

வரதட்சணை கொடுக்காமல் வாங்காமல் திருமணம் செய்யும் பண்பாட்டை உருவாக்குவோம்

வரதட்சணை கொடுக்காமல் வாங்காமல் திருமணம் செய்யும் பண்பாட்டை உருவாக்குவோம்

வரதட்சணை கொடுக்கா மல் வாங்காமல் திரு மணம் செய்யும் பண் பாட்டை உருவாக்குவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வரதட்சணை ஒழிப்பு மாநில சிறப்பு மாநாடு செவ்வாயன்று (செப்.9) செங்குன்றத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெ.சண்முகம் பேசியதன் சுருக்கம் வருமாறு: சட்டத்தையும் மீறி நடக்கும் வரதட்சணை வரதட்சணை வாங்குவது குற்றம்  என்று சட்டம் சொல்கிறது. வாங்குவது குற்றமல்ல, அதை கேட்டு கொடுமைப் படுத்துவது, வன்கொடுமை செய்வது தான் குற்றம் என்ற மனநிலையை ஏற்படுத்தி வருகிறார்கள். மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், வரதட்சணை வாங்குவது, கொடுப்பதை பலரும் ஏற்கவில்லை. ஆனால், எல்லோருமே கொடுத்துள்ளனர், வாங்கி யுள்ளனர் என்பது தெரிய வருகிறது. எல்லா சாதிகளிலும் பரவிய கொடுமை பிராமணர்களிடத்தில் இருந்த வரதட்சணை முறை, தற்போது அனைத்து சாதியிலும் உள்ளது. திருமண முறை, தாலி உருவம், கட்டும்  முறை என சாதிக்கொரு முறை கடைப் பிடிக்கப்பட்டாலும், வரதட்சணை மட்டும் அனைத்து சாதியிலும் ஒரே முறையில்தான் வாங்குகிறார்கள். பழங்குடி சமூகத்தில் பெண்ணுக்கு பரிசம் கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் நல்ல பழக்கம் இருந்தது.  பொதுச்சமூகத்தில் உள்ள வரதட்ச ணை என்ற கெட்ட பழக்கம் பழங்குடி சமூகத்திலும் ஊடுருவிவிட்டது. இந்தியாவில் 95 சதவீத திருமணங்களில் வரதட்சணை இந்தியாவில் 95 சதவீத  திருமணங்கள் வரதட்சணையோடு தான் நடக்கிறது. ஆனால், வரதட்ச ணை தடுப்பு சட்டமும் அமலில் உள்ளது. சட்டத்தால் எதையும் மாற்ற முடியாத நிலை உள்ளது. எதிர்பார்த்த, அள வற்ற அபரிமிதமான வரதட்சணை கிடைக்காத போது பெண்ணை கொடு மைப்படுத்துவது, வன்கொடுமை செய்வது, தற்கொலைக்கு தூண்டுவது, கொலை செய்வது நாடு முழுவதும் நடக்கிறது. தமிழகத்தில்  வரதட்சணை மரணங்கள் தமிழகத்தில் 2019ல் 22, 2020ல் 40, 2021ல் 27 வரதட்சணை மரண ங்கள் நிகழ்ந்துள்ளன. ஒப்பீட்டளவில் பிற மாநிலங்களோடு தமிழகத்தில் குறைவாக உள்ளது. அதற்காக, இந்த விஷயத்தில் தமிழ்நாடு முற்போக்கு மாநிலம் என்றெல்லாம் கருத முடியாது. பெண்கள் அதிகம் படித்து ஆளுமை மிக்கவர்களாக மாறியுள்ளனர். நல்ல ஊதியம் பெற்றாலும் வரதட்சணையை கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. குடும்ப கவுரவம், பெண்ணுக்கு பாதுகாப்பு என்ற பெய ரில் வரதட்சணை என்ற குற்றத்தை நியாயப்படுத்துகின்றனர். இதை சமூக குற்றமாக சமூகம் பார்க்க வேண்டும். இந்தப்பிரச்சனையில் கேரளம் முன்னுதாரணமாக உள்ளது. அந்த நிலையை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும். அன்பால் இணைக்க வேண்டும், பணத்தால் அல்ல இளைஞர்களும், பெண்களும் வரதட்சணை வாங்கவும், கொடுக்கவும் மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டும். குடும்பத்தை அன்பால் இணைக்க வேண்டும், பணத்தால் இணைப்பது பொருத்தமானதல்ல. வரதட்சணை ஒரு சமூக பிரச்சனை. எனவே இதற்கெதிரான சமூக இயக்க த்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெ டுக்கிறது. ரிதன்யா சோகம் ஜோதிடம் பார்த்து, பொருத்தம் பார்த்து, பலநூறு பவுன் நகை போட்டு, ஆடம்பரமாக பட்டதாரி ரிதன்யாவுக்கு திருமணம் செய்தார்கள். நிறுவனத்தை நடத்தும் ஆளுமை மிக்க அவர், வரதட்சணை கொடுமையால் 78வது  நாளில் தற்கொலை செய்து கொண்டார். அவரது குரல்பதிவு அனை வரையும் உலுக்கியது.  மணமக்களுக்கு மனப் பொருத்தம் உள்ளதா  என பார்க்கத் தவறிவிடுகிறார்கள். ஆண்கள் செய்யும் அயோக்கிய தனத்தை, வன்செயல்களை பொறுத்துக் கொண்டு அனுசரித்து  போக வேண்டும் என்று நியாயப்படுத் தும் போக்கு உள்ளது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிற பெண்களின் குரலாக ரிதன்யாவின் குரல் பதிவு வெளிப்பட்டது. பாலின சமத்துவம் அவசியம் கணவன் மனைவி இருவரும் ஒரு வர் உணர்வை மற்றொருவர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்ற பாலின சமத்துவத்தை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இதை கட்சித் திட்டத்திலேயே மார்க்சிஸ்ட் கட்சி வைத்துள்ளது. வரதட்சணையால் ஒரு மரணம் நிகழ்ந்தது என்ற செய்தி வராத நிலையை உருவாக்குவோம். வரதட்சணை ஒழிப்புக் களமாக தமிழ கத்தை மாற்றுவோம். வரதட்சணை கொடுக்காமல் வாங்காமல் திருமணம் செய்யும் பண்பாட்டு வழக்கமாக மாற்ற முயற்சிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.