சிரிங்க அப்புறம் சிந்திங்க
முதலில் சிரிக்க வைத்துப் பின்னர் சிந்திக்க வைக்கும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இக்நோபல் பரிசு 1991 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. மார்க் ஆப்ரகாம்ஸ் என்பவரின் மனதில் உதித்ததுதான் இந்த இக்நோபல் பரிசு வழங்கும் திட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும் பத்து பேருக்குத் தருகிறார்கள். நோபல் பரிசு பெற்றவர்கள்தான் இந்த இக்நோபல் பரிசுகளை வழங்குகிறார்கள். பரிசுகளை வழங்கும் விழாவில் பார்வையாளர்கள் காகித விமானத்தை மேடையை நோக்கி எய்வார்கள். பரிசு பெறுபவர்களுக்கு பேச அனுமதி தரப்படும் நேரம் ஒரு நிமிடம் மட்டுமேயாகும். ஆண்ட்ரூ கெய்ம் என்ற ஆய்வாளர் மட்டுமே நோபல் மற்றும் இக்நோபல் ஆகிய இரண்டையும் பெற்றிருக்கிறார்.
1. சரக்கடித்த பூச்சிகள் சரக்கை ஊற்றிக் கொடுத்து பூச்சிகள் என்ன செய்கின்றன என்று பார்த்திருக்கிறார்கள். சரக்கடித்தால் மனிதர்கள் மட்டுமல்ல, பூச்சிகளும் தடுமாறுகின்றனவாம். அவற்றின் பறக்கும் திறன் பாதிக்கப்படுகிறது. பொதுவாகப் பூச்சிகள் ஒலி அலைகளை அனுப்பி, அவை எதிரொலித்துத் திரும்புவதை வைத்து சுற்றியுள்ள பொருட்கள், திசை மற்றும் தொலைவு ஆகியவற்றை உணர் கின்றன. உள்ளே மது சென்றால், இதுவும் பாதிக்கப்படுகிறதாம். இப்படி ஒரு ஆய்வை மேற்கொண்ட பிரான்சிஸ்கோ சான்செஸ் உள்ளிட்ட நான்கு ஆய்வாளர்களுக்கு “விமானப் போக்கு வரத்து”க்கான இக்நோபல் வழங்கப்பட்டுள்ளது. 2. வரிப்பசு..! வரிக்குதிரைகளுக்கு இருப்பது போன்ற வரிகளை பசுவின் மீது பூசிவிட்டால் பூச்சிக்கடிகளில் இருந்து பசு தப்பித்து விடுமா என்று ஆய்வு செய்த ஒரு ஜப்பானியக் குழுவுக்கு “உயிரியலுக்கான” இக்நோபல் வழங்கப்பட்டி ருக்கிறது. 3. ஒரு பிளேட் பிளாஸ்டிக்..!! டெப்லான் சாப்பிட்டு கலோரியை அதிகரிக்கா மல் திருப்திகரமாகச் சாப்பிட்ட உணர்வு கிடைக்கும் என்ற ஆய்வை மேற்கொண்ட நான்கு ஆய்வாளர்களுக்கு “வேதியியலுக்கான” பரிசு அளித்துள்ளனர். டெஃப்லான் ஒரு வகை நெகிழி யாகும். வேதியியலில் பாலிடெட்ராபுளோரோ எத்திலீன் (polytetrafluoroethylene - PTFE) என்பது ஒரு சேர்மமாகும். எப்படி டெஃப்லான் தடவப்பட்ட பாத்திரங்களில் உணவுப் பொருட்கள் ஒட்டாமல் இருக்கின்றனவோ, அதேபோல் ஜீரண மண்ட லத்திற்குள்ளும் சுமூகமாகச் செல்லும் என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள். 4. தாய்(பூண்டு)ப்பால்..!! தாய்ப்பால் தருபவர் அதிகமாக அளவில் பூண்டு சாப்பிட்டால் என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் என்று குழந்தை வளர்ப்பு அனுபவங்களை ஆய்வு செய்துள்ளனர். தாய்ப்பாலில் இந்த சுவை கலந்து வருவதையும், அதை குழந்தைகள் மிகவும் விரும்புகின்றன என்றும் கண்டுபிடித்துள்ள கேரி பியூசாம்ப், ஜூலி மென்னெவேலா ஆகிய இருவருக்கும் “குழந்தை மருத்துவத்தில்” பரிசு அறிவித்துள்ளனர். 5. நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி!! ஷூ வைக்கும் அலமாரி குறித்து இந்தியா வைச் சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். மாடிப்படிக்கு அடியில், வாச லுக்கு அருகில், வீட்டுக்குள் எங்கே வைத்தால் சரியாக இருக்கும் என்பது அவர்களின் ஆய்வா கும். எவ்வளவுதான் இடம் இருந்தாலும், ஷூவை வீட்டிற்கு அல்லது அறைக்கு வெளியில்தான் விடு கிறார்கள். அதிலிருந்து வரும் கெட்ட வாடைதான் காரணம் என்று கண்டுபிடித்து, புறஊதாக் கதிர்கள் செலுத்தும் வசதியை உருவாக்கித் தந்திருக்கி றார்கள். அந்தக் கதிர்கள் பாக்டீரியாக்களை அழித்து, நாற்றத்தைப் போக்கியிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் “பொறியியல்” பிரிவில் பரிசு கிடைக்கிறது. 6. இலக்கியத் தரத்தில் நக ஆய்வு மறைந்த ஆய்வாளர் மருத்துவர் வில்லியம் பி பீனுக்கு, 35 ஆண்டுகாலம் தனது நகம் ஒன்றை ஆய்வு செய்து வந்தததற்காகத் தந்திருக்கிறார்கள். சில நூல்களாகவும், பல கட்டுரைகளாகவும், அதை அவர் பதிவு செய்துள்ளார். அந்த நூல்கள் ஆவ ணங்களைப் போல அல்லாமல் மிகவும் சுவாரஸ்ய மாக, இலக்கியத் தரத்திலும் உள்ளது. இதனால் அவருக்கு “இலக்கியப்” பிரிவில் பரிசு தரப்பட் டுள்ளது. 7. பல்லியும் பீட்சாவும் குறிப்பிட்ட சில வகை பீட்சாக்களை சில குறிப்பிட்ட வகை பல்லிகளுக்குக் கொடுத்து ஆய்வு செய்ததற்காக நான்கு பேருக்கு “ஊட்டச்சத்து”ப் பிரிவில் பரிசு வழங்கியுள்ளனர். பல்லிகள் எந்த அளவுக்குச் சாப்பிடுகின்றன என்று பார்த்திருக்கிறார்கள். நான்கு பாலாடைக்கட்டி கள்(Cheese) கொண்டு தயாரிக்கப்பட்ட பீட்சாக் களை பல்லிகள் சப்புக் கொட்டிச் சாப்பிட்டுள்ளன. 8. பீ கேர்ஃபுல்...! நம் ஊரில் சரக்கடித்து விட்டு சிலர் ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவதைப் பார்த்திருக்கிறோம். ஜெர்மனியில் இதை மூன்று பேர் ஆய்வு செய்துள்ளனர். மது அருந்தாதவர்களைவிட, சுமா ரான அளவு மதுப்பிரியம் கொண்ட ஜெர்மானி யர்கள் டச்சு மொழியில் சரளமாகப் பேசியி ருக்கிறார்கள். சுமாரான அளவில் மது எடுத்துக் கொள்பவர்களால் அந்நிய மொழியை எளிதில கற்றுக் கொள்ள முடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். இந்த ஆய்வைச் செய்த மூன்று ஆய்வாளர்களுக்கு “அமைதி”க்கான பரிசு தருகிறார்கள். 9. இயற்பியல் விதி சமையல்..! பாஸ்தா சாஸ் (Pasta Sauce) உணவு வகை யைத் தயாரிக்கையில் பாலாடைக்கட்டி திரண்டு கட்டியாக மாறிவிடாமல் திரவநிலையில் இருக்க ஜெல் பயன்படுத்தி முயற்சித்திருக்கி றார்கள். இதற்கு சில இயற்பியல் விதிகளைப் பின்பற்றியதால் “இயற்பியல்” பிரிவில் இக்நோபல் பரிசு கிடைத்துள்ளது. 10. “ஆண்ட பரம்பரை” “நான் எப்புடிப் பண்ணினேன் தெரியுமா... என்னை மாதிரி வருமா” என்று எப்போ தும் தன்னைப் பற்றியே பேசுகிறவர்கள், தன்னை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தங்களையே “ஆண்ட பரம்பரை” என்று சொல்லிக் கொண்டு வலம் வருவார்கள். அவர்களி டம் போய் “உங்களை மாதிரி வருமா.. நீங்க ஜீனி யஸ்தான்” என்று சொல்லி விட்டால் என்ன நடக்கும் என்று ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்களின் சுயநலம், தற்புகழ்ச்சி அதிகரிக்கும் என்ற முடி வுக்கு வந்தனர். இந்த ஆய்வைச் செய்த இரு வருக்கு “உளவியல்” பிரிவில் பரிசு வழங்கி யுள்ளார்கள்.
