articles

img

மோதி மிதித்து விடு - ஆர் பத்மகுமாரி

மோதி மிதித்து விடு

மாலையில் அம்மா செய்து கொடுத்த வடையை மிகவும் ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.ராகுல். அம்மாவும் அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து அன்றைய தினம் பள்ளிக்கூடத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டிருந்தாள். பேச்சின் இடையில் “ ராகுல், நீ இந்த வருடம் பள்ளிக்கூடம் துவங்கியதில் இருந்து உன் தோழி ரதி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? அவள் எப்படி இருக்கிறாள்” எனக் கேட்டாள். “ இந்த வருடம் அவளை”பி” பிரிவிற்கு மாத்திட்டாங்க. நான்”ஏ” பிரிவில் இருக்கிறேன். அதனால் அவளை பார்க்க முடியலை “ என்றான்.

“நேற்று மாலை பூக்கடையில் ரதியின் அம்மா வைப் பார்த்தேன். ரதியைப் பற்றித்தான் பேசினாங்க.  அவள் வாய் ஓயாமல் சிரித்துப் பேசிக் கொண்டி ருப்பாளே இப்போது வீட்டில் யாருடனும் அதிகம் பேசு வதில்லையாம்.எப்போதும் அவள் தானே முதல் ரேங்க் வாங்குவாள். ஆனால் இப்போது சரியாகப் படிப்பதில்லையாம். எப்பவும் சோகமாகவே இருக்கிறாளாம். என்ன செய்யறதுன்னு தெரியலை” என்று புலம்பினார்கள் என்றாள் அம்மா. ராகுலுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்ன  ஆச்சு அவளுக்கு என்று யோசித்தபடியே அம்மாவிடம்  தயக்கத்தோடு “வீட்டிலும் அப்படித்தான் இருக்கி றாளா? பள்ளிக்கூடத்திலும் அவள் என்னிடம் பேசுவதே  இல்லை. அவளிடம் பழைய கலகலப்பு இல்லை.அரு கில் நான் பேசப்போனால் முகத்தை திருப்பிக் கொண்டு  போகிறாள்” என்றான். “அவள் வகுப்பறையில் எப்படி இருக்கிறாளாம் யாரிடமாவது விசாரித்தாயா?” “இல்லை அம்மா நான் அவள் செக்சனில் இருக்கும்  மற்ற நண்பர்களிடம் விசாரிக்கிறேன்” என்றான் ராகுல். அடுத்த நாள் உணவு இடைவேளையில் சாப்பிட்டு  விட்டு கை கழுவப் போன போது அங்கே ரதியின் தோழி  மேரியைப் பார்த்தான் ராகுல்.அவளிடம் பேசலாம் என்று போய் பக்கத்தில் நின்றான் அவனைப் பார்த்ததும்  மேரி கையைக்கூட கழுவாமல் ஓடிவிட்டாள். ராகுலுக்கு  ஒன்றும் புரியவில்லை.மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து ஆட்டோவுக்காக காத்துக் கொண்டிருந்த போது ரதியின் வகுப்பில் படிக்கும் மாணவி சுபாவும் ஆட்டோவுக்காக காத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவன் சுபாவிடம் சென்று” சுபா எப்படி இருக்க, படிப்பெல்லாம் எப்படி இருக்கு? “ என்று பேசத் துவங்கியவுடன் அவன் பேசுவது காதில் விழா தது போல் கொஞ்ச தூரம் தள்ளிப் போய் நின்று கொண்டாள். “பி” செக்சன் மாணவிகளுக்கு என்ன பிரச்சனை  ஏன் பேசத் தயங்குகிறார்கள். ரதி, சுபா, மேரி  எல்லோரும் என்னிடம் நன்றாகத் தானே பேசிக்  கொண்டிருந்தார்கள்.போன வருடமெல்லாம் ஆட்டோவுக்காக காத்திருக்கும் நேரத்தில் எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டு விளையாடிக் கொண்டு மகிழ்ச்சியாக தான் இருந்தோம். இப்போது ஏன் இப்படி  விலகி ஓடுகிறார்கள்? நாளைக்கு அவர்கள் வகுப்பில் படிக்கும் நண்பன் முரளியுடன் இதைப் பற்றி பேச வேண்டும் என முடிவு செய்தான். அடுத்த நாள் விடுமுறை. எதிர்பாராமல் முரளியே கணக்கு பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்க ராகுல்  வீட்டுக்கு வந்தான். ராகுல் அவனிடம் “முரளி உங்க  கிளாஸ் மாணவிகள் எல்லாம் ஊமையாகி விட்டாங்களா?யாருமே முகம் கொடுத்து பேசுவ தில்லை. நாமெல்லாம் எவ்வளவு நல்ல நண்பர்களாக இருந்தோம். இப்போது ஏன் இப்படி மாறிட்டாங்க?” என வருத்தத்தோடு கேட்டான். முரளி சற்று நேரம் அமைதியாக இருந்தான். பிறகு ரகசியமான குரலில்  “எங்க வகுப்பில் புதிதாக வந்திருக்கும் கணக்கு வாத்தி யாரால பிரச்சனையா இருக்கு. இதை பற்றிப்பேச எனக்குப் பயமா இருக்கு. நான் சொல்லப் போகும் விஷயத்தை யாரிடமும் நீ சொல்லக்கூடாது” என்றான். “கணக்கு வாத்தியார் சரியாகப் பாடம் நடத்துவது இல்லையா? அடிக்கிறாரா?என்ன பிரச்சனை தைரி யமாகச் சொல் என முரளியின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு கேட்டான் ராகுல். “கணக்கு வாத்தியாரே பெரிய பிரச்சனை தான். குறிப்பாக மாணவிகளுக்கு பெரும் பிரச்சனை. அவர்  நடவடிக்கை சரியில்லை” என்று முரளி கிசுகிசுத்தான். “என்ன, மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்கி றாரா?” என ராகுல் கேட்டவுடன்முரளி சுற்றும் மற்றும்  பார்த்துவிட்டு யாரும் அருகில் இல்லை என்பதை உறுதி  செய்து கொண்டு “ஆமாம். அவர் வகுப்பில் எப்போ தும் மாணவிகளைப் பார்த்துக் கொண்டே தான் பாடம் நடத்துவார். மாணவிகள் ஏதாவது சந்தேகம் கேட்டால் அவர்கள் பக்கத்தில் போய் உரசிக்கொண்டு நிற்பார். கன்னத்தில் தட்டிக் கொண்டே விளக்கம்சொல்வார். மாணவிகளின் தோள் மீது தேவையில்லாமல் கையைப் போட்டுக்கொண்டு பேசுவார்.” “இப்படி நடந்து கொள்ளும் பொழுது மாணவி கள் எதிர்ப்பை காட்ட வேண்டியது தானே” என்று  கேட்டான் ராகுல்.”ம்..... ம், கொஞ்சம் விலகிப் போவார்கள் முகத்தைச் சுளித்துக் கொள்வார்கள் , வேற என்ன செய்ய” என்று கூறிய முரளியிடம் “மாண வர்கள் எல்லாம் இதை வேடிக்கை பார்ப்பீர்களா “என்று  கேட்டான். முதலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான்  இருந்தோம். எங்கள் வகுப்பில் இருக்கும் எழிலன்  உனக்குத் தெரியும் தானே. அவன் தான் மாணவி களிடம்இவ்வாறு கணக்கு வாத்தியார் தவறாக நடந்து கொள்ளும் பொழுது நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தான். ஒரு நாள் அவர் மாணவிகள் பக்கம் செல்லும் பொழுது  எழிலன் தன்னுடைய டிபன் பாக்ஸ் எடுத்து டமால் என்று  கீழே போட்டான். அவனுடைய டிபன் பாக்ஸ் திறந்து உள்ளே இருந்த இட்லியெல்லாம் சிதறியது. சத்தம் கேட்டவுடன் வாத்தியார் திரும்பிப் பார்த்துவிட்டு எழி லனை அடிக்க ஆத்திரத்துடன் ஓடி வந்தார். இன்னொரு நாள் அவர் மாணவிகளை நெருங்கிய பொழுது பின்னால் பெஞ்சிலிருந்து இன்னொரு மாண வன் “சார் தலைமை ஆசிரியர் வராரு” என்று கத்தி னான் யார் கத்தியது என்று நாங்கள் காட்டிக் கொடுக்க வில்லை. மாணவர்கள் அனைவரையும் வகுப்புக்கு வெளியே போகச் சொல்லிவிட்டார். இப்படி பல  தடவை அவர் மாணவிகள் பக்கம் போகும் போதெல்லாம் நாங்கள் ஏதாவது ரகளை செய்து அவரை திசை திருப்புவோம். நாங்கள் திசை திருப்பு கிறோம் என்பதை புரிந்து கொண்டார். அவர் மாண வர்களிடம் மிகவும் கடுமையாக நடக்கத் துவங்கி விட்டார்.தவறாக கணக்கு போட்டால் நோட்டைக் கிழித்து வீசி எறிவது, வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் வகுப்புக்கு வெளியே போகச் சொல்வவது, தவறாக செய்த கணக்கை 50 முறை எழுதி கொண்டு வர சொல்லுவது என்று கடும் தண்டனைகள் கொடுப்பார்”. ரதி, சுபா, மேரி என சில மாணவிகளின் வீட்டுப்பாடம்  மற்றும் பரீட்சை நோட் இதையெல்லாம் திருத்தி ஆசி ரியர்களின் அறையிலேயே வைத்துவிட்டு வந்துவிடு வார். இவர்கள் நோட்டுப் புத்தகத்தைக் கேட்டால் ஆசிரி யர்கள் அறைக்கு வந்து வாங்கிக்கொள்ளச் சொல்லு வார். மாணவிகள் அங்கு போகும் சமயத்தில் வேறு  ஆசிரியர்கள் இல்லாத போது ஆபாசமாகப் பேசுவது,  கையைப் பிடித்து இழுப்பது, ஆபாச வீடியோக்கள் காண்பிப்பது என மிகத் தரக் குறைவாக நடந்து கொள்வார்”. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராகுல் நாம் எல்லோரிடமும் பேசி இந்த பிரச்சனைக்கு முடிவு  கட்ட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டான். அடுத்த நாளே செயல்படவும் துவங்கினான். பி செக்சனில் தைரியமான மாணவி சுதாதான். முதலில் அவளிடம் தான் பேசினான். அவன் பேசியதெல்லாம் பொறுமையாக கேட்ட பின் “ராகுல் இந்த விஷயம் வெளியே தெரிந்தால்  எங்கள் வகுப்பு மாணவிகள் தான் அவமானப்படு வார்கள் “என்றாள். அதற்கு ராகுல் “மாணவிகள் தவறு ஏதும் செய்யவில்லையே? எதற்காக அவ மானப்பட வேண்டும்? தவறு செய்யும் ஆசிரியர் தான்  அசிங்கப்பட வேண்டும். அவமானம், அசிங்கம் என  பயந்து கொண்டு எதிர்ப்பு காட்டாமல் இருப்பது தான் இதுபோல மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்பவர்களுக்கு பலமாகவும் சாதகமாகவும் ஆகி விடுகிறது”. இப்படி நிறைய மாணவர்களிடம் மாணவி களிடமும் பேசினான். பலர் மிகவும் பயந்தார்கள். ஒரு பெண் இது தெரிந்தால் என் படிப்பை நிறுத்தி விடு வார்கள் என்று அழுதாள். ராகுல் சோர்ந்து போய்விடவில்லை. திரும்பத் திரும்ப எல்லோரிடமும் பேசினான் சுதாவும் மாணவி களிடம் பேசி தைரியப்படுத்தினாள். இவர்களது விடா முயற்சியால் 8 மாணவர்களும் ஐந்து மாணவிகளும் சேர்ந்து தலைமை ஆசிரியரிடம் கணக்கு வாத்தியார் குறித்து புகார் அளிப்பது என முடிவு செய்தனர். முடிவின்படி அடுத்த நாள் மாலை பள்ளி முடிந்த பின் தலைமை ஆசிரியரிடம் கணக்கு ஆசிரியர் மீது புகார் அளித்தனர். மாணவ மாணவிகளிடமிருந்து ஆசிரி யர் மீது பாலியல் புகார் வந்ததால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார் தலைமை ஆசிரியர். எல்லோரையும் சமா தானம் செய்து வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தார்.  எந்த சமாதானத்தையும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை.  கணக்கு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை  நாங்கள் இங்கிருந்து போகமாட்டோம் என்று தலைமை ஆசிரியர் அறையிலேயே அமர்ந்து கொண்ட னர். பள்ளிக்கூடம் முடிந்து இரண்டு மணி நேரம் ஆகி யும் குழந்தைகள் வீட்டுக்கு வரவில்லையே என பிள்ளை களைத் தேடி பள்ளிக்கூடத்திற்கு பெற்றோர் வந்து விட்ட னர். ஆசிரியரின் தவறான நடவடிக்கை குறித்த விஷயம்  வெளியில் பரவ ஆரம்பித்தது. பள்ளிக்கூட வாசலில் பெரும் கூட்டம் கூடியது. பள்ளிக்கூடம் உள்ள சாலை யில் வாகனப் போக்கு வரத்து தடைபட்டது. ஆசிரி யருக்கு எதிராக கண்டன குரல்கள் ஓங்கி ஒலித்தன. மாணவ- மாணவிகளின் கூட்டு முயற்சி தீர்வை நோக்கி  பிரச்சனையைத் திருப்பியது.