தமிழகத்தில் அதிக மழை வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனை பெற வேண்டும் : பெ.சண்முகம் வலியுறுத்தல்
கோவில்பட்டி, செப்.21 - வானிலை ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட 30 சதவீதம் அதிக மழை பெய்யும் என அறிவித்துள்ள நிலையில், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தினார். கோவில்பட்டியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக் குழு கூட்டம் நிறைவடைந்த தை யொட்டி வெள்ளியன்று மாலை செய்தி யாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: மழை எதிரொலி நடவடிக்கை வடமாநிலங்களில் பெய்த பலத்த மழை யால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். தமிழகத்தில் வழக்கமாக மழை பெய்தாலே சென்னை மாநகரம், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் பாதிப்பு கள் கடுமையாக இருக்கும். பொருள் சேதங்களும் அதிகமாக இருக்கும். இத்த கைய சூழ்நிலையில் வழக்கத்தைவிட 30 சத வீதம் அதிக மழை பெய்யும் என கூறப்படுவ தால், தமிழக அரசு இப்போதே தயார்நிலை யில் இருக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி, அரசியல் கட்சியினர் சொல்லும் ஆலோச னைகளைப் பெற்று அவசியமான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்த ஊழியர் கொள்கைக்கு எதிர்ப்பு தமிழ்நாடு அரசு ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறு வனத்தை தொடங்கி, இனிமேல் இதன் மூலமாகத்தான் ஊழியர்கள் பணியமர்த்தப் படுவார்கள் என அறிவித்துள்ளது. நிரந்தரப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதே இந்த நிறு வனத்தின் நோக்கம். இதனால் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லாமல் போகும். எந்த ஊழியருக்கும் பணி பாதுகாப்பு இருக்காது. இந்த ஊழியர் விரோதக் கொள்கையை எங்கள் கட்சி ஏற்கவில்லை.
வாக்குறுதி நிறைவேற்றம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்காததே கார ணம் என்றும் கூறியுள்ளார். பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக் கீட்டில் தொடர்ந்து பாரபட்சம் காட்டிவரு கிறது. தமிழகத்தைப் போலவே கேரளமும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு அன்புக்கரங்கள் போன்ற புதிய திட்டங்களையும் நடைமுறைப் படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. பிற வாக்குறுதிகளையும் நிறைவேற்றவேண்டும். காவல்துறை சீர்திருத்தம் காஞ்சிபுரத்தில் வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதால் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய நீதிமன்றம் உத்தர விட்டது. திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு போன்ற சம்பவங்களில் நீதிமன்றத் தின் கண்டனங்களுக்கு காவல்துறை ஆளாகி யுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்ட அம லாக்கம் குறித்து காவல் அதிகாரிகளுக்கு போதுமான பயிற்சி அளிக்க வேண்டும். விஜய் பிரச்சாரம் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்டம் கூடுவது இயல்பானது. இதற்கு முன் னரும் இதேபோன்று கூட்டங்கள் கூடி, பின் னர் அது எங்கே போனது என்பதே தெரியா மல் போய்விட்டது. 2026 தேர்தல் முடிவுக்கு பிறகுதான் விஜய்யின் உண்மையான அர சியல் பலம் தெரியும். தீப்பெட்டித் தொழில் அழிவு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா தருணத்தில் சிறுகுறு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். தீப்பெட்டித் தொழில் அழிந்த தற்கு காரணம் ஒன்றிய பாஜக அரசு அறி வித்த 18 சதவீத ஜிஎஸ்டி வரிதான். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். (ந.நி.)
