articles

img

சமத்துவம் மா முத்துசாமி

சமத்துவம்    மா முத்துசாமி

அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாள். வகுப்பு தோழிகளுடன் ஊருக்கு அருகில் உள்ள வேப்பமரத்தடியில்கூடினார்கள்.

“சுனிதா, உனக்கு என்னென்ன விளை யாட்டுகள்எல்லாம் தெரியும்? சும்மா எப்பபாத்தாலும் ஆணும் பெண்ணும் சமம்  என்று சொல்கிறாயே .ஆம்பளபசங்க மாதிரி கிராப்பு வேறவெட்டிக்கிற” என்று  ஒரு தோழி கேட்டவுடன் “எனக்கு நீச்சல் தெரியும். கிரிக்கெட் விளையாடுவேன். கபடி, கேரம் செஸ் மற்றும் சைக்கிள் ஓட்டுவேன்” என்றாள் சுனிதா. “சரி, அப்படீன்னாமரம் ஏறுவியா? இந்த வேப்பமரத்துல ஏறு பாப்போம்” என்றவுடன்“ஏறபயமில்லை எனக்கு” என்றாள் சுனிதா “சரி. என்னெ மட்டும் கேக்கறீங்களே.  உங்களுக்கெல்லாம் என்னென்ன விளை யாட்டு தெரியும் சொல்லுங்கபாப்போம்” என்றுகேட்டாள். உடனே ஒரு தோழி“எனக்கு பாண்டி  ஆடத்தெரியும். தாயம் விளையாடுவேன். பரமபதம் தெரியும்” என்று கூறியவுடன், சரி சரி உங்களுக்கு தெரிஞ்சது இது. எனக்கு தெரிஞ்ச விளையாட்டு அது. சரி விடு” என்றாள்  என்னால் மரம் ஏற முடியும். நீச்சலும்அடிக்க முடியும் என்றாள் ஐந்தாம்  வகுப்பு படிக்கும் சுனிதா. உடனே“அடியே, சுனிதா நாளைக்கு பரீட்சை இருக்கிறது. வேண்டாம் இந்த  விபரீத விளையாட்டு எல்லாம்” என்றாள் சுனிதாவின் நெருங்கிய தோழி பானு. “அதெல்லாம் ஒன்னும் ஆகாது.பாத்துக்கலாம் என்று கூறி தன் பாவாடையைகீப்பாச்சி போட்டு பின்பக்க மாக சொருகிக்கொண்டு அந்த வேப்ப மரத்தில் ஏறினாள்.நான்கு அல்லது ஐந்து  அடி உயரம் ஏறிய பின் மரத்தடியில் நின்று கொண்டு இருந்த அனைவரும், சாதித்து விட்டாள் வெற்றி பெற்று விட்டாள்  என்று ஆவென்று வாயை பிளந்து கொண்டு வாய்க்குள் ஈ போவது கூடதெரி யாமல் மேலே பார்த்துக் கொண்டி ருந்தனர். சிறிது நேரத்தில் தொப்பென்று கீழே விழுந்தாள்சுனிதா. வலது கையில் காய்ந்த அந்தவேப்பங்கொப்புடன்இடது கையை தரையில் ஊன்றியதால் முழங்கையில் நல்ல காயம். அந்த வழியாக வந்த பெரியவர் ஒருவர்  பார்த்துவிட்டு“ஏம்பாப்பா இந்த தேவையில்லாத வேலை எல்லாம் உனக்கு எதுக்கு. பொம்பள புள்ளை  அடக்க ஒடுக்கமாவீட்டில அம்மா வுக்கு ஏதாச்சும் ஒத்தாசை செய்துகிட்டு இருப்பியா.இப்ப வீட்டுக்கு போனா அம்மா அப்பா நல்லாநாலு சாத்து சாத்து வாங்க”என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். பிறகு அனைவரும்சுனிதாவை அழைத்துக் கொண்டு அவளுடைய வீட்டிற்கு சென்றனர். சுனிதாவைப்பார்த்த அவளின் பெற்றோர் “இன்று என்ன சாதனையை செய்தீர்கள்” என்றார்கள். ஆமப்பாஇன்று நான் செய்தது சாதனைதான்.மரம் ஏறினேன். தவறி போய் ஒரு மரக்கிளையைபிடித்தேன். அது காய்ந்த கொப்பு என்று தெரிய வில்லை. ஒடிந்து கீழே விழுந்து விட்டேன்  என்றாள் சுனிதா. உடனே “பரவாயில்லையம்மா. எங்க ளுக்கு என்ன வருத்தம்னா நாளைக்கு பரீட்சை. அதுதான்” என்றனர் இரு வரும். சரி. எல்லாரும் அவரவர்வீட்டுக்கு போகச் சொல்லி விட்டு சுனிதாவை  அழைத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு சென்று காண்பித்து கட்டு போட்டுவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையில் மற்ற தோழிகள் அவரவர் வீட்டுக்கு செல்லும் போது அவ  அம்மா அப்பா நல்லா திட்டு திட்டி நாலு சாத்து சாத்துவாங்கன்னு நினைச்சோம். அப்படி எதுவும் நடக்கவில்லையேடி என்றனர். சுனிதாவின் நெருங்கிய தோழியான பானு “ அப்பா ஒரு முற்போக்கானவர். ஆண் பெண் என்று பேதும் பார்க்க மாட்டார். அம்மாவும் அப்படித்தான். தன்  மகனையும்மகளையும்சமமாகத் தான் நடத்துகிறார்கள்.வளர்க்கிறார்கள். அடுத்த நாள் தன் அண்ணன் ஆனந்த னுடன்சைக்கிளில் பள்ளி சென்று தேர்வு  எழுதினாள் .எப்போதுமே இருவரும்  தனித்தனியாக தான் சைக்கிளில்செல் வார்கள். வேறொரு நாள் பள்ளியில்ஏழாம் வகுப்பு வகுப்பாசிரியை, ஒவ்வொரு மாணவமாணவிகளையும் அன்றாடம் வீட்டில் செய்யும் வேலைகள் குறித்து விவாதித்தபோதுமாணவர்களில்பலரின் பெற்றோர்கள் ஆண்பிள்ளைகள் செய்யும் வேலையை ஆம்பிளைகளும் பெண் பிள்ளைகளை செய்யும் வேலைகளை பெண் பிள்ளைகளும் தான் செய்ய வேண்டும் என்றுகூறிய தாகக்கூறினார்கள். ஆனந்தன் எழுந்து “நான் காலையில் எழுந்ததும் வாசலைப்பெருக்கி தண்ணீர்  தெளிப்பேன். என் தங்கை கோலம் போடு வாள். எனக்கும் கோலம் போடத்தெரி யும். துணிமணிகளை துவைத்துப்போடு வேன். என் தங்கை சுனிதா துணிகளை  காய போடுவாள். நான் பாத்திரங்களை துலக்குவேன். வீடு பெருக்குவேன். இருவரும் அனைத்து வேலைகளையும் மாறி மாறி செய்வோம். இது பெண்கள்  செய்ய வேண்டிய வேலை, இது ஆண்கள்  செய்ய வேண்டிய வேலை என்று எங்கள்  வீட்டில் பாகுபாடு இல்லாமல் எங்களை வளர்த்திருக்கிறார்கள் எங்கள் பெற்றோர்” என்றான். உடனே மற்ற மாணவ மாணவிகள் கொல்லென்று சிரித்தனர் உடனே“ஆசிரியை, ஏன் சிரிக்கி றீங்க.ஆனந்தன் வீட்டில் அப்படி. அத னால் தான் அவன் படிப்பிலும் படு  கெட்டிக்காரத்தனமாகவும் விளை யாட்டிலும் படு சுட்டியாகவும் இருக்கி றான். முதல் மாணவனாகவும்பரிசுகள் வாங்குகிறான்.நீங்கள் எல்லாம் அவனுக்கு பின்னால் தானே எல்லா வற்றிலும்” என்றதும் அனைவரும் மூஞ்சியை தொங்க போட்டனர். ஆனந்தனின்தந்தையும்தாயும் அரசு அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். தொழிற்சங்கச் செயல்பாடுகளிலும் போராட்டங்களிலும் முன்னணியில் இருக்கிறார்கள். அதுதான் ஆண் பெண் என்ற பேதமற்ற செயலுக்கு காரணம். சுனிதாவிற்கும் ஆனந்தனுக்கும் ஜான்சி ராணி, வேலுநாச்சியார், ராணி மங்கம்மாள், தன் உடம்பெல்லாம் எண்ணையை பூசிக் கொண்டு வெள்ளையனின் ஆயுத கிடங்கை அழித்தொழித்த குயிலி, சுதந்திர போராட்ட வீரர்கள் தில்லையாடி வள்ளி யம்மை, அஞ்சலை அம்மாள், மக்க ளுக்காக தன் இன்னுயிரை துச்சமென மதித்த தியாகி லீலாவதி, விண்வெளி வீராங்கனை சுனிதாவில்லியம்ஸ் ஆகி யோரது வாழ்க்கை வரலாறு புத்த கங்களை தம் பிள்ளைகளுக்கு கொடுத்து  படிக்க சொல்வார்கள்.