articles

ஐபாக்கை வெளியேற்றும் அறைகூவல் - ஆர்.சிங்காரவேலு

ஐபாக்கை வெளியேற்றும் அறைகூவல்

ஆகஸ்ட் 31-ல் பாலஸ்தீனத்திற்கான இர ண்டாவது மக்கள் மாநாடு அமெரிக்கா வின் மிச்சிகன் மாநிலத்தில் டெட்ராய்ட் மாநக ரில் நடைபெற்றது. மூன்று நாட்களில் பல கூட்டு அமர்வுகள், பட்டறைகள், தனித்தனி அமர்வுகள் நடைபெற்றன. சர்வதேச பாலஸ்தீன ஆதரவு இயக்கம்குறித்து விவாதிக்கப்பட்டது. 4,600 பேர் மாநாட்டில் பங்கேற்றனர். இறுதியாக ஆக. 31-ல் அமெரிக்காவின் முதலாவது பெண் சென ட்டர் ரஷீதா த்லைட் (Rashida Tlaib) நிறைவுரை யாற்றினார். அமெரிக்க இஸ்ரேல் பொது நிர்வா கங்களின் குழுவை (American Israel Public Affairs Committee) அமெரிக்க அரசியலிலிருந்து வெளியேற்றுவதற்கான பிரச்சாரம் பரவலாக நடத்துவது என அறைகூவல் விடுத்தார். ஐபாக் (AIPAC) அமைப்பு வலுவான அமெ ரிக்க-இஸ்ரேல் உறவுகளை வலியுறுத்துகிறது. அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கை யை இஸ்ரேலுக்கு சாதகமாக மாற்ற பாடுபடும் அமைப்பு. ஐபாக்கை ஆதரிக்கும் செனட்டர் கள் சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல் லப்படுகின்றனர். அவர்களின் தேர்தல் வெற்றி க்கு ஐபாக் நிதி திரட்டுகிறது. பல்வேறு கருத்துக் கணிப்புகளில் மிகப் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இஸ்ரேலின் யுத்தத்தை வெறுக்கின்றனர். ‘ஐபாக்கை அமெரிக்க அரசிய லிலிருந்து அகற்றுவோம்’ என்ற மனுவில் அமெரிக்கர்கள் கூடுதலாக கையெழுத்திட்டு வருகின்றனர். ஐபாக் ஆதரவுடன் 129 ஜனநாயகக் கட்சியினர் செனட்டர்களாக 2024 தேர்தலில் வெற்றி பெற்றனர். ஜனநாயகக் கட்சியில் நியூயார்க் மற்றும் மிசௌரியில் உறுதியான பாலஸ்தீன ஆதரவு வேட்பாளர்களை எதிர்த்து நின்றவருக்கு ஏராளமான பணத்தை ஐபாக் வழங்கியது. ‘ஐபாக் சுதந்திரமான பேச்சுரிமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தொழிலாளர்களின் பொருளாதார நலன்களுக்கு பெரிதும் குந்தகம் விளைவிக்கிறது. முடிவற்ற யுத்தங்களை ஆத ரிக்கிறது. சர்வதேச ராஜாங்க உறவுகளைச் சீர்குலைக்கிறது’ என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.