articles

img

ஆவின் பால் விற்பனை உயர்வு

ஆவின் பால் விற்பனை உயர்வு

சென்னை, ஆக.5- சென்னை நந்தனம் ஆவின் இல்  லத்தில் ஆவின் முக வர்களுக்கு உறைகலன் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசுகையில், “கடந்த  ஆண்டு மொத்தம் 25 கோடி ரூபாய்க்கு ஆவின் பால் விற்பனையான நிலையில், இந்தாண்டு சுமார் 33 கோடி ரூபாய்க்கு விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30 சதவீதம் உயர்ந்துள்ளது” என்றார்.