articles

பொருளின் மீது அல்ல; தேசத்தின் மீதே கொடிய வரி - சு.வெங்கடேசன் எம்.பி.,

பொருளின் மீது அல்ல; தேசத்தின் மீதே கொடிய வரி

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களுக்கு ஏற்கனவே 16 சதவிகிதம் வரி இருந்தது. பேச்சுவார்த்தையில் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்று சொல்லி 25 சதவிகித வரி விதித்தார் டிரம்ப். ரஷ்யாவில் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என மிரட்டி மீண்டும் 25 சதவிகித வரி விதித்தார். இதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 90 பில்லியனில் ஐம்பது சதவிகிதம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஒரு பொருளின் மீது வரி விதித்தால், அது பொருள் மீதான வரி. ஆனால் தற்போது டிரம்ப் இந்தியா மீது விதித்திருப்பது பொருளின் மீதான வரி அல்ல - ஒரு நாட்டின் மீதான வரி தாக்குதல்.  ஜவுளி பொருட்களை வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்தால் 17%, வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்தால் 19%, இந்தியாவில் இருந்து என்றால் 50 சதவிகிதம் என வரி போடுவது பொருளை அடிப்படையாகக் கொண்டதல்ல - நாட்டை அடிப்படையாகக் கொண்டது. இது தனிப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி அல்ல. ஒட்டுமொத்த இந்திய பொருட்களின் மீதான யுத்தம். இது நாட்டின் மீதான தாக்குதலாகும்.  மோடி அரசின் தோல்வி இது போன்ற பிரச்சனையான காலத்தில் நம்மைப் பாதுகாக்க மோடி வரமாட்டார். இந்தியா கூட்டணி கட்சிகள் தான் வந்து நிற்கிறோம். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இவ்வளவு ஆணவத்தோடு செயல்படுவதற்கு மோடி அரசு கடந்த 12 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக் கொள்கையே காரணம். முதலில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்க ஆதரவுக் கொள்கையாக மாற்றினார்கள். பிறகு அதைக் கண்மூடித்தனமான அமெரிக்க ஆதரவு வெளியுறவுக் கொள்கையாக மாற்றினார்கள். அதையும் பின்னர் கண்மூடித்தனமாக டிரம்ப் ஆதரவுக் கொள்கை என்று மாற்றினார்கள். தன் காலுக்குக் கீழே அடிபணிந்து கிடப்பவரைக் கருணையோடு நடத்த வேண்டும் என்று எவரும் நினைக்கமாட்டார். பாஜக ஆட்சியாளர்கள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை முற்றாகத் தோல்வியடைந்துவிட்டதைத் தான் இது காட்டுகிறது.  அடிமைத்தனத்தின் உச்சம் அண்மையில் இந்தியாவில் பருத்தி இறக்குமதி வரியை நீக்கினார்கள். அதை அமெரிக்காவின் வேளாண்மைத் துறையினர் வரவேற்கின்றார்கள். நவம்பர்-டிசம்பரில் உள்நாட்டுப் பருத்தி சந்தைக்கு வர இருக்கும் நிலையில் இவ்வாறு இறக்குமதி வரியை நீக்குகின்றார்கள். இதனால் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் துவங்கியுள்ளார்கள். மற்ற நாடுகளின் பருத்திக்கு இறக்குமதி வரி நீக்கினாலும் பரவாயில்லை. ஆனால் அமெரிக்காவிற்கு 11 சதவிகித இறக்குமதி வரியாவது இருக்க வேண்டும். அவர்கள் இந்தியாவுக்கு 50% வரி விதிக்கும்போது, நமது நாட்டின் அரசு அமெரிக்காவுக்கு வரி விலக்கு கொடுக்கும் அடிமைத்தனம் அப்பட்டமாக நடைபெறுகிறது.  தொழில்நுட்பத் துறையும் பாதிப்பு அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவினரிடம் பேசிய டொனால்டு டிரம்ப் பெங்களூரில் ஐடி தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டாம் என்று வெளிப்படையாகப் பெயர் குறிப்பிட்டுக் கூறுகிறார். டொனால்டு டிரம்ப், மோடி இருவரும் அவரவர் நண்பர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் போர் ஆலோசகர் சமீபத்தில் பேட்டி கொடுத்தபோது கூறிய விஷயம் மிகவும் முக்கியமானது. உக்ரைன் போரை மோடி நடத்துகிறார் என்றார். அதற்கு மோடி எந்தக் கருத்தும் சொல்லவில்லை. உண்மையில் இவர்கள் நடத்திய ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறியபோதும், அது உண்மையில்லை என்றோ, டிரம்ப் என்ற பெயரைக்கூட பிரதமர் உச்சரிக்கவில்லை. இதுபற்றிக் கேள்வி எழுப்பியபோது மாநிலங்களவைக்கு உள்ளேயே அவர் வரவில்லை. ரூபாயின் வீழ்ச்சி: ‘மானத்தின்’ சரிவு 2014க்கு முன்பு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 58லிருந்து 60 ஆக வீழ்ந்தபோது பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் மானம் போய்விட்டது என்று கூறினார். இப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 90 என்ற அளவில் வீழ்ந்துவிட்டது. இப்போது ‘மானம் மரியாதை’ எல்லாம் எங்கே போய்விட்டது? ஏன் பேச மறுக்கிறார்கள்?  தமிழ்நாட்டின் பாதிப்பு தமிழ்நாடு பொருள் உற்பத்தி மாநிலம். எனவே அமெரிக்க வரி விதிப்பினால் இங்கு தான் பாதிப்பு அதிகம். உத்தரப்பிரதேசத்திற்கோ, ராஜஸ்தானுக்கோ, அசாமுக்கோ பாதிக்காது. மோடிக்கு ஒருபுறம் டிரம்ப்பின் மீது பயம், மற்றொருபுறம் தமிழ்நாட்டின் மீது பயம். நாம் நமக்கான உரிமையைக் கேட்டுப் போராடுகிறோம். தீர்வுகள் :  இன்றைய நெருக்கடியிலிருந்து மீள;  உடனடி நடவடிக்கைகளாக: - வராக்கடன் விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும்;  ஜிஎஸ்டி வரியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; இவையெல்லாம் தற்காலிகத் தீர்வுக்கான நடவடிக்கைதான்.  நீண்டகால தீர்வு: இந்தியா தனது சொந்த அரசியல் பலத்தில் கம்பீரமாக முதுகெலும்புடன் செயல்படும் வெளிநாட்டுக் கொள்கை மற்றும்