articles

பிளவுபடுத்தும் தத்துவத்தின் நூற்றாண்டு - ச வீரமணி

பிளவுபடுத்தும் தத்துவத்தின் நூற்றாண்டு

ஆர்எஸ்எஸ் இயக்கம் உருவாக்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலை யில் இப்போது ஒரு வினோதமான காட்சி  உச்சநீதிமன்றத்தில் அரங்கேறியுள்ளது, இது நாடு  முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதி மன்ற வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள  வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் என்பவர், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்கள் மீது காலணியை வீசி இருக்கிறார். நீதிபதி கவாய் இந்து  மதத்தைப் பற்றி இழிவான கருத்தைத் தெரிவித்ததால் அவ்வாறு செய்ததாக அந்த வழக்குரைஞர் தெரிவித்தி ருக்கிறார். சில ஊடகங்கள் வழக்கம்போல், இது வெறும் காகிதக்கட்டு, இது காலணி (ஷூ) அல்ல  என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயன்றிருக் கின்றன. பலர், கிஷோரின் செயல், மத உணர்வுகளைப் புண்படுத்தியதால் ஏற்பட்ட வேதனையின் வெளிப் பாடு என்று கூறி அவருக்கு வக்காலத்து வாங்கியிருக்கின்றனர். காந்தி படுகொலை இந்த அருவருப்பான செயலைக் குறிக்கும் வெறுப்பு மற்றும் பழிவாங்கும் சூழல், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் தருணத்தில் நடைபெற்றிருக்கிறது என்பது நம் கவனத்திலிருந்து தப்ப முடியாது, அவற்றில் மிக  முக்கியமானது மகாத்மா காந்தியின் படுகொலை.  அந்தக் கொடூரமான செயலில் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் இருந்தபோதி லும், போதுமான அளவிற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூறி எம்.எஸ்.கோல்வால்கர் மற்றும் பல முக்கியமான ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் படேல், கோல்வால்கருக்கு எழுதிய கடிதத்தில், மகாத்மாவின் கொலைக்கு வழிவகுத்த ‘சூழலை’ உருவாக்கியது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சார மும், இந்து மகா சபாவும்தான் என்று மிகவும் தெளி வான முறையில் தெரிவித்திருந்தார். உண்மையில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அதன் ‘மகத்துவத்திற்காக’ போற்றும் ஒன்றிய அரசின் முயற்சிகள், ஒரு பெரிய பொது விவாதத்தை எழுப்பி  இருக்கிறது. அந்த இயக்கத்தின் சந்தேகத்திற்குரிய கடந்த காலத்தின் மீது கவனம் செலுத்த வைத்திருக் கிறது. இந்தக் கொண்டாட்டம் உண்மையில் அதன் ஸ்தாபனக் கொள்கைகள், அதன் நச்சு சித்தாந்த வேர்கள் மற்றும் சாவர்க்கர் இந்துத்துவா என்று வரை யறுத்ததை நடைமுறைப்படுத்துவதற்காக அவர்கள் மேற்கொண்டுவரும் வழிமுறைகளைப் படிக்க ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறது. சாவர்க்கர் தனது  ‘இந்துத்துவாவின் அடிப்படைகள்’ என்ற நூலில்  இந்த சித்தாந்தத்தின் அடிப்படைகளை வகுத்தி ருந்தாலும், இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும், அதற்கு ஸ்தாபன பலத்தை அளித்து வருவதும் ஆர்எஸ்எஸ் இயக்கம்தான். சாவர்க்கர் கூறும் இந்துத்துவாவின் அடிப்படை சித்தாந்தக் கொள்கைக்கும் இந்து மதத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்துத்துவா என்பது அர சியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஓர் அர சியல் திட்டமாகும். அவரது சொந்தவார்த்தை களிலேயே கூறுவதானால், இந்து சமூகத்தின் சாதி சார்ந்த படிநிலைத் தன்மை காரணமாக, இந்து மதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் இடையிலான குழப்பம் இந்துக்களை ஒன்றிணைப்பதற்கு ஒரு தடையாக மாறி இருக்கிறது. எனினும், பல ஆண்டுகளாக, ஆர்எஸ்எஸ் எழுப்பி வரும் கோரிக்கைகள் மற்றும் முழக்கங்களிலிருந்து கூட, பிராமணியம் ஒரு சமூகக் கண்ணோட்டமாக இந்துத்துவா நடைமுறைகளுக்குச் சொந்தமானது என்பது தெளிவாகி இருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஆர்எஸ்எஸ் இதழான ஆர்கனைசர், தன்னுடைய 1947 ஆகஸ்ட் 14 அன்று (அதாவது சுதந்திரத்திற்கு முன்பு  வெளியான) இதழில், ‘எங்கே?‘ (‘Whither’) என்ற  தலையங்கத்தின் கீழ், ஒரு தேசம் (‘nationhood’) என்ற  கருத்தையே நிராகரித்தது. “தேசம் பற்றிய தவறான கருத்துக்களால் நாம் இனி பாதிக்கப்பட அனு மதிக்கக் கூடாது. இந்துஸ்தானில், இந்துக்கள் மட்டுமே  தேசத்தை உருவாக்குகிறார்கள், தேசிய அமைப்பு அந்த பாதுகாப்பான மற்றும் உறுதியான அடித்த ளத்தில், இந்து மரபுகள், கலாச்சாரம், கருத்துக்கள் மற்றும் அபிலாஷைகளின் அடிப்படையில் இந்துக் களால் மட்டுமே கட்டமைக்கப்பட வேண்டும்...என்ற  எளிய உண்மையை உடனடியாக அங்கீகரிப்பதன் மூலம் பெரும்பாலான மனக் குழப்பங்களையும் தற்போதைய மற்றும் எதிர்காலப் பிரச்சனைகளையும் நீக்க முடியும்”  என்றது. மூவர்ணக் கொடிக்கு இழிவு ஆர்கனைசர் அதே  இதழில் தேசியக்கொடியை இழிவுபடுத்தி, “விதி வசத்தால் ஆட்சிக்கு வந்தவர்கள்  நம் கைகளில் மூவர்ணக் கொடியைக் கொடுத்தா லும், அதை ஒருபோதும் இந்துக்களால் மதிக்கவோ, சொந்தமாக்கவோ முடியாது” என்று எழுதியது.  இதேபோன்றே ஆர்எஸ்எஸ், தேசிய கீதத்தையும் எதிர்த்தது. இது தற்செயல் நிகழ்வு அல்ல. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே காலனித்துவ நுகத்தடி யிலிருந்து தேசிய விடுதலைக்காக நடந்து வந்த பொது வான போராட்டத்தில் இருந்து அவர்கள் விலகியே இருந்தார்கள் என்பது மட்டுமல்ல, “எங்கள் முதன்மை  அர்ப்பணிப்பு இந்துக்களிடம்தான்” என்று கூறும் அளவுக்கு அவர்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்கள். எனவே, பிரிட்டிஷாருக்கு எதிராக நாம் ஒன்றுபடுவதற்குப் பதிலாக, நாம் ‘இந்துக் களை ஒன்றிணைத்து அவர்களை இராணுவமயமாக்க வேண்டும்’  என்று அந்த இதழில் எழுதியிருந்தார்கள். ஜனநாயக மதச்சார்பற்ற அரசமைப்புச்சட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்ட போதிலும் கூட, அதை இந்தியர்களுக்கு எதிரானது (un-Indian) என்றே கண்டித்து ஆர்எஸ்எஸ் கூறி வந்தது. 1949 நவம்பர் 30 ஆம் தேதியிட்ட ஆர்கனைசர் இதழ், மனுஸ்மிருதியையே  சட்டப்பூர்வமானமுறையில் நம்  அரசமைப்புச் சட்டமாக மாற்ற வேண்டும் என்று  கோரி தலையங்கம் தீட்டி இருந்தது. அந்தத் தலை யங்கத்தில்  அது மேலும், “நமது அரசமைப்புச் சட்டத்தில்,  பண்டைய  பாரதத்தின்  தனித்துவமான அரசமைப்பு வளர்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடப்பட வில்லை. மனுவின் சட்டங்கள், ஸ்பார்டாவின் லைகர்கஸ் அல்லது பாரசீகத்தின் சோலோனுக்கு (Solon of Persia) நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப் பட்டவைகளாகும். இன்றுவரை, மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள  சட்ட விதிகள் உலகத்தின் பாராட்டு தல்களைப் பெற்று வருகின்றன. மேலும் அவை தன்னிச்சையான முறையில் கீழ்ப்படிதலையும் இணக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. ஆனால் நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பண்டிதர் களுக்குத்தான் அதில் ஒன்றுமேயில்லை” என்று எழுதியிருந்தது. கோல்வால்கர் அரசமைப்புச் சட்டத்தை முற்றி லுமாக நிராகரித்தார், “நமது அரசமைப்புச் சட்டம்  மேற்கத்திய நாடுகளின் பல்வேறு அரசமைப்புச் சட்டங்களிலிருந்து, பல்வேறு கட்டுரைகளை ஒன்றி ணைத்த ஒரு சிக்கலான மற்றும் பன்முகத்தன்மை கொண்டதாகும். அதில் நம்முடையது என்று கூறுவதற்கு எதுவுமே கிடையாது. நமது தேசிய நோக்கம் என்ன, நமது வாழ்க்கையில் நமது முக்கிய  அம்சம் என்ன என்பது குறித்து அதன் வழிகாட்டும் கொள்கைகளில் ஒரு வார்த்தையாவது உண்டா?” என்று கேள்வி எழுப்பினார். வெறுப்பைக் கக்கும் சித்தாந்தம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டு களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் உமிழ்ந்து வந்த  வெறுப்பு சித்தாந்தமே, ‘இந்தி, இந்து, இந்துஸ்தான்’ என்ற முழக்கமாகவும், பின்னர் ‘ஒரே மக்கள், ஒரே  தேசம்’ என்ற முழக்கமாகவும் மாறி வந்துள்ளது. எனவே, ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் நாட்டின் பிரதமர் பதவியை வகிக்கும் வரை, ஆர்எஸ்எஸ்-இன்  சித்தாந்த அடிப்படை பல்வேறு வடிவங்களில் எந்த வொரு வெளிப்படையான தடையும் இல்லாமல் நடை முறைப்படுத்தப்படும். அந்த அடையாளத்தை மறைக்க அவர்கள் ஒருபோதும் கவலைப்பட்ட தில்லை. இவர்களுக்கு இப்போதைய ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அரசமைப்புச்சட்டத்தின் மீது,  உள்ளார்ந்த வெறுப்பு இருந்தபோதிலும், அதனைத் தங்களுடைய குறுகிய மதவெறி, பாசிச இந்து ராஷ்ட் ரத்தால் மாற்ற முயற்சிக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்திற்கு அவ்வப்போது அவர்கள் மரியாதை செலுத்தி வந்தபோதிலும், சரியான நேரத்தில் இறுதி யாக அதனை அவர்கள் அகற்றிவிடலாம். எனினும், இந்த இரண்டு காலணிகளையும் இரண்டு  கால்களிலும் அணிந்து கொள்வது சில நேரங்களில் கடினமான செயலாக மாறும். எனவே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மகிமைப்படுத்தும் முயற்சிகள் அதன் கடந்த நூறாண்டு கால வஞ்சகமான செயல்பாடு களுடன் முரண்படுகின்றன. நீதிபதி கவாய் மீதான  வழக்கறிஞர் தாக்குதலை பிரதமர் தாமதமாக மிகவும் மென்மையான முறையில் விமர்சனம் செய்த போதிலும், அவர் தலைமை நீதிபதியின் சமநிலை  மற்றும் கண்ணியமான பதிலுக்கு பாராட்டு தெரி வித்த போதிலும், வலதுசாரி சமூக ஊடகங்கள் அவ ருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வலதுசாரி ஊடகங்களின் மண்டையில் மனுஸ்மிருதி சித்தாந்தம் நிரம்பியிருப்பதன் காரணமாக, தலித் அடையாளம் மற்றும் புத்தமத நம்பிக்கை கொண்ட தலைமை நீதிபதிக்கு எதிராக விஷத்தைக் கக்கு வதற்கு  அவர்களுக்கு  வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. எனவே, ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டு விழா, அவர்களின் வஞ்சகமான கடந்த காலத்தையும், சுதந்தி ரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி,  கூட்டாட்சி ஆகியவற்றிற்கான நாட்டின் அர்ப்பணிப்பு உள்ளிட்ட நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்ப டைக் கொள்கைகளை களங்கப்படுத்த அவர்கள் மேற் கொண்டுவரும் இழிவான முயற்சிகளையும் வெளிப் படுத்த நமக்கு வாய்ப்பளித்திடும். பீப்பிள்ஸ் டெமாக் ரசி தன் வாசகர்களுக்கு அவற்றை முழுமையாகத் தோலுரித்துக் காட்டிடும் பணியை வரவிருக்கும் காலங் களில் மேற்கொள்ள உறுதி எடுத்துக்கொள்கிறது. அக்டோபர் 8, 2025 தமிழில்: ச.வீரமணி