articles

img

10 ஆண்டுகள் போராட்டங்களும் வெற்றிகளும் டாஸ்மாக் குடோன் சுமைப்பணித் தொழிலாளர்கள் - எஸ்.குணசேகரன்

10 ஆண்டுகள் போராட்டங்களும் வெற்றிகளும் டாஸ்மாக் குடோன் சுமைப்பணித் தொழிலாளர்கள்

தமிழகம் முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் என 5 மண்டலங்களில் 43 டாஸ்மாக் குடோன்களில் சுமார் 2500 சுமைப்பணி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சிஐடியுவில் ஒருங்கிணைப்பு  (2003-2011) 2003 நவம்பரில் டாஸ்மாக் குடோன்கள் தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படத் தொடங்கின. 2011இல் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் சிஐடியுவில் ஒருங்கிணைப்புக் குழுவாக ஒன்றிணைந்தனர். அன்றைக்கு இறக்குக் கூலி பெட்டிக்கு ₹1.25 பைசாவிலிருந்து 25 பைசா, 50 பைசா என படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது. 4 மண்டலங்களில் இருந்த சுமைப்பணி தொழிலாளர்கள் சம்மேளன முயற்சியால் மாவட்ட சிஐடியுவில் இணைக்கப்பட்டனர். 15.08.2013இல் மதுரையில் மாநாடு நடைபெற்றது.

500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். முதல் வெற்றி - கூலி உயர்வு (2014) மாநாட்டில் இறக்குக் கூலி, ஏற்றக் கூலி, இபிஎஃப், இஎஸ்ஐ மற்றும் குடிநீர், ஓய்வறை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கோரப்பட்டன. தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு 05.11.2014இல் இறக்குக் கூலி ஒரு பெட்டிக்கு ₹2.50 பைசாவிலிருந்து ₹3.50 பைசாவாக உயர்த்தப்பட்டது. இபிஎஃப், இஎஸ்ஐ வெற்றி சம்மேளன தலையீட்டில் சிஐடியு மாவட்டக் குழுக்கள் மற்றும் ஆடிட்டர்கள் மூலம் தொழிலாளியிடமிருந்து பிடிக்கப்பட்ட பணம் சம்பந்தப்பட்ட நிர்வாகங்களில் செலுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் தொடர்ந்து இபிஎஃப் செலுத்தியதால் பல குடோன்களில் இன்று சுமைப்பணி தொழிலாளர்கள் பென்ஷன் பெற்று வருகிறார்கள். மிகப்பெரிய போராட்டம் (2023) 2023 செப்டம்பரில் அடுத்த இறக்குக் கூலி உயர்வு வழங்க வேண்டிய நேரத்தில் முன்கூட்டிய ஒருங்கிணைப்புக் குழு நடத்தப்பட்டது. 20.12.2022இல் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் குடோன்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தை இல்லாததால் 6.5.2023 முதல் “இறக்குக் கூலி உயர்வு வழங்கும் மதுபான கம்பெனி பெட்டிகளை மட்டுமே இறக்குவோம்” என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இரண்டு நாட்கள் எந்த மதுபான பெட்டிகளும் இறங்கவில்லை. இந்த நேரடி நடவடிக்கையால்தான் மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. சென்னை ஆர்ப்பாட்டம் 13.4.2023இல் சென்னையில் இறக்குக் கூலி உயர்வு மற்றும் இதர கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுதான் டாஸ்மாக் குடோனில் சுமைப்பணி தொழிலாளர்கள் இருப்பதை பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியாக்கள் அறிந்தது. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 31.7.2023இல் காலால் துறை அமைச்சர் ஈரோடு முத்துச்சாமியை நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. 26, 27.9.2023இல் அனைத்து டாஸ்மாக் குடோன் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெற்றிகரமான பேச்சுவார்த்தை 01.12.2023இல் மதுபான உற்பத்தியாளர் சங்கத்துக்கும், தொழிலாளர் சம்மேளனத்துக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று 18 சதவிகிதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. 01.01.2024 முதல் அமலுக்கு வந்த புதிய கூலி விகிதங்கள்: லிக்கர் பெட்டிக்கு ₹5.50லிருந்து ₹6.50, பீர் பெட்டிக்கு ₹4.00லிருந்து ₹4.75, பெட்டிக்குள் பெட்டிக்கு ₹6.50லிருந்து ₹7.70. கூலி உயர்வுகளின் வரலாறு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: - 2014 நவம்பர் 5 - 2017 டிசம்பர் 6 - 2020 செப்டம்பர் 4 - 2024 ஜனவரி 1 போனஸ் வெற்றி 2022க்கு முன்பு போனஸே இல்லாமல் இருந்து தொடர்ச்சியான போராட்டத்தால் 2022 தீபாவளிக்கு முன்னதாக 18 குடோன்களில் போனஸ் வழங்கப்பட்டது. திருவாரூரில் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒவ்வொரு தொழிலாளருக்கும் ₹3000 போனஸ் பெறப்பட்டது. 2023இல் 24 குடோன்களில் ₹500-1000 என்றும், கோவையில் ₹5000 என்றும், திருவாரூரில் ₹3000 என்றும் வழங்கப்பட்டது.

ஏற்றுக்கூலி மற்றும் ஹேண்ட்லிங் லாஸ் வெவ்வேறு காண்ட்ராக்டர்கள் காரணமாக ஏற்றுக்கூலியில் ஏற்றஇறக்கங்கள் உள்ளன. சிஐடியு ஒரே மாதிரியான ஏற்றக்கூலி ₹3.50 வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. பல இடங்களில் போராட்டத்தால் ₹2.90, ₹3.20 பெறப்படுகிறது. ஹேண்ட்லிங் லாஸ் என்ற பெயரில் ₹20,000-30,000 வரை சுரண்டல் நடைபெறுகிறது. வலுவான குடோன்களில் ₹5000-6000 மட்டுமே செலுத்தப்படுகிறது. டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் அமைப்பு ரீதியாக ஒற்றுமையுடன் திரண்டதால் இறக்குக்கூலியில் கணிசமான உயர்வும், இபிஎஃப், இஎஸ்ஐ பலன்களும், போனஸ், குடிநீர், ஓய்வறை, கழிப்பறை வசதிகளும், ஞாயிற்றுக்கிழமை வார விடுப்பு உரிமையும் பெற்றுத் தந்துள்ளது. இன்னும் செல்ல வேண்டிய தூரம் உள்ளது. “ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம்” என்ற கோட்பாட்டுடன் ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! வெற்றிபெறுவோம்!!!