சுமைப்பணித் தொழிலாளர் சங்க ஸ்தாபக தலைவர் எம்.ஏ.பாபு காலமானார்: தலைவர்கள் அஞ்சலி
கோயம்புத்தூர், ஜூலை 7 -
கோவை மாவட்டத்தில் 50 வருடத்திற்கும் மேலாக தொழிற்சங்க தலைவராய் உழைப்பாளி மக்களின் உரிமைக்கான போராட்டத் தில் முன்னின்ற தோழர் எம்.ஏ.பாபு, திங்களன்று (ஜூலை 7) காலமானார். 1970 இல் கோவையில் சிஐடியு உதயமான போது, அதைத் தோற்றுவித்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர். தொடர்ந்து 12 மாநாடுகளில் மாவட்ட நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்த வர் தோழர் எம்.ஏ.பாபு. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கோவை மாவட்ட சிஐடியு நிர்வாகியாக இருந்து செயல் பட்டுள்ளார். அவசர நிலை காலத்தில் 20 மாத காலம் சிறையில் இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மேற்கு நகர குழு உறுப்பினராக கிட்டத்தட்ட 30 ஆண்டு கள் பணியாற்றியுள்ளார். அணி திரட்டப்படாத தொழில்களான சுமைப்பணி தொழிலாளர் சங்கம், மரம் அறுக்கும் தொழிலாளர் சங்கம், ஆட்டோ தொழி லாளர் சங்கம், ஹோட்டல் தொழிலாளர் சங்கம், பொதுத் தொழிலாளர் சங்கம், மலர் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை உருவாக்கிய ஸ்தாபக தலைவர். தொடர்ந்து பல ஆண்டுகள் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் நீண்ட காலம் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தலைவர்கள் அஞ்சலி
தோழர் பாபு உடல் வடகோவை சிந்தாமணி பின்புறம் உள்ள திருவிக படிப்பகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் என்.குணசேக ரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மூத்த தலை வர் யு.கே.வெள்ளிங்கிரி மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலை வர் ஆர்.வெங்கடபதி, சிஐடியு கோவை மாவட்டத் தலை வர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் இணைக்கப்பட்ட சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தீக்கதிர் பொது மேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், எண்ம பதிப்பு பொறுப்பாசிரியர் எம்.கண்ணன், செய்தி ஆசிரியர் அ.ர.பாபு, கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க பொதுச் செய லாளர் ஆர்.ராஜன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி னர். திங்களன்று மாலை அவரது உடல், கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ள கபர்ஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு திரளான சிஐடியு, சிபிஎம் ஊழி யர்கள் பங்கேற்றனர்
. சுமைப் பணி சங்கம் இரங்கல்
சுமைப் பணித் தொழிலாளர் சம்மேளனத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், சுமைப் பணி தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவருமான தோழர் எம்.ஏ.பாபு மறைவுக்கு சிஐடியு தமிழ்நாடு சுமைப் பணித் தொழிலாளர் சம்மேளனக் குழு இரங்கல் தெரி வித்துள்ளது. “1970-களிலேயே கோவை மாவட்டத்தில் சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியவர், தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் துவக்ககாலத்திலிருந்து நிர்வாகியாக பொறுப்பேற்று சம்மேளன வளர்ச்சிக்கு முன்னணியில் செயல்பட்ட வர். மேலும் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளை கோவை மாவட்டத்தில் உருவாக்கி வளர்த்தெடுத்தவர். அரை நூற்றாண்டு காலம் தொழிற்சங்க தலைவராக செயல்பட்டவர். சுமைப்பணி தொழிலாளர்கள் அக்கா லங்களில் சந்தித்த பல்வேறு தாக்குதல்களை களத்தில் நின்று தொழிலாளர்களை ஒன்று திரட்டி முறியடித்து தொழிலாளர்களின் நலனையும் உரி மையையும் காத்த மகத்தான தலைவர் தோழர் எம்.ஏ. பாபு” என சுமைப் பணித் தொழிலாளர் சங்கம் புக ழஞ்சலி செலுத்தியுள்ளது.
தலைவர்கள் இரங்கல்
தோழர் எம்.ஏ. பாபு மறைவுச் செய்தியறிந்து, சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்தியச் செயலாளர் ஆர்.கரு மலையான், மூத்த தோழர் ப.மாரிமுத்து ஆகி யோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.