articles

img

தொழிலாளி - விவசாயி ஒற்றுமை ஓங்குக! - சிஐடியு மே தினப் பிரகடனம்

இந்த மே நன்னாளில், போராடிப்பெற்ற உரிமை களை, வர்க்க ஒற்றுமையைப் பாதுகாத்திட, முதலாளித்துவ தாக்குதலை எதிர்த்துப் போராடிவரும், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கத்திற்கு,  இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)  தனது சகோதர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி, ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் உலகளாவிய போர்க்குணமிக்க வர்க்க அமைப்பான, உலக தொழிற்சங்க சம்மேளனத்திற்கு வாழ்த்துக்கள். 

இடதுசாரி அரசுகளுக்கு வாழ்த்து

சீனா, கியூபா, வியட்நாம் மற்றும் வடகொரியா ஆகிய  சோசலிச நாடுகளின் தொழிலாளி வர்க்கத்திற்கு வாழ்த்துக்கள். உலகம் முழுவதையும் பாதித்துள்ள முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியினால் உருவாகும் கடும் சவால்களுக்கு மத்தியில், சோசலிச நாடுகள், தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் அனைத்து மக்களுக்கும் சுகாதாரம், கல்வியை உறுதிப் படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளன.  ஐநா தீர்மானங் களை, உலக மக்களின் பொதுக் கருத்துக்களை மதிக்காமல், கியூபா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் கடந்த 60 ஆண்டுக்கு மேல் விதித்துள்ள மனிதாபி மானமற்ற பொருளாதாரத் தடைகளை சிஐடியு வன்மை யாக கண்டிக்கிறது. பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், கியூபாவால் உலகின் தலைசிறந்த சுகாதார கட்டமைப்பு ஒன்றை வளர்த்தெடுக்க முடிந்துள்ளது; பல நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை நல்கி வருகிறது. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான - பழிவாங்கும் போக்குகளினால் உருவா கியுள்ள நிதி நெருக்கடி சவாலை சந்திக்கின்ற போதும், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, உழைக்கும் மக்களின் உரிமைகள், வாழ்க்கைத் தரம் பாதுகாக்கும் கொள்கைகளை அமலாக்க முயல்கிறது. கேரள அரசை வாழ்த்துவோம்! நல வாரியங்கள் மூலமாக, பல்வேறு பிரிவு தொழிலாளிகளுக்கும் பணப்பயன்களை அளிப்பதில், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமை களை பாதுகாப்பதில் கேரள அரசு மகத்தான சாதனை களை புரிந்து வருகிறது. பாஜக குண்டர்களின் கொடூரத் தாக்குதலை எதிர் கொண்டு  போராடும் திரிபுரா மக்களுக்கும், ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் சிஐடியு தனது உறுதியான ஒருமைப்பாட்டை தெரிவிக்கிறது. தேர்தல்கள் வரும் நேரத்தில், இடதுசாரி ஆதரவாளர்களை பயமுறுத்தும் வகையில், பாஜக குண்டர்கள் தாக்குதலை தீவிரப் படுத்தவும் செய்கிறார்கள். மனிதாபிமானமற்ற தாக்கு தல்களை துணிச்சலுடன் எதிர்கொள்ளும், இடதுசாரி சக்திகளை ஆதரிக்கும் மக்களையும் சிஐடியு வாழ்த்து கிறது! மேற்கு வங்கத்தில் திரிணாமுல்  காங்கிரஸ் ஆட்சி யாளர்களின் வன்முறைகளை எதிர்த்துப் போராடும் உழைக்கும் மக்களை சிஐடியு வாழ்த்துகிறது!

பாலஸ்தீனம்

2023 அக்டோபர் 7 முதல் காசாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் கொடிய யுத்தத்தை  இஸ்ரேல் நடத்தி வருகிறது. 33,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேல் பெண்கள் மற்றும் குழந்தைகள். காசாவின் மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் குறி வைத்து குண்டுவீச்சு நடத்துகிறது. காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் சென்றடைவதை தடுத்து, சொல்லொண்ணா கடும் துயரங்களை பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள்  உட்பட உலகம் முழுவதும் உள்ள மக்கள் மற்றும்  இஸ்ரேலின் யூத இன மக்களும் கூட இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டிக்கின்றனர்; பாலஸ்தீனருக்கு ஆதரவாக நிற்கின்றனர். இஸ்ரேல் நடத்தி வரும் யுத்தத் தின் நூறாவது நாளில் 45 நாடுகளில் 120 மாநக ரங்களுக்கு மேல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. அமெரிக்காவின் பல பெரிய   தொழிற்சங்கங்கள் இஸ்ரேலின் யுத்தத்தை கண்டித்துள்ளன. பாலஸ்தீன  மக்களுக்கு ஒருமைப்பாட்டை வழங்கி வருகின்றனர். சில அறிக்கைகள்  விட்ட போதிலும், அமெரிக்கா, இஸ்ரே லை பகிரங்கமாக தொடர்ந்து ஆதரித்து வருகிறது. அமெ ரிக்காவின் பாசாங்குத்தனம் அம்பலமாகி வருகிறது. பாலஸ்தீனருக்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் வகையில் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்திய உலக மக்களை சிஐடியு வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது . இந்தியாவிலும், தொழிலாளி வர்க்கம் மேலும் வலுவாக, தீவிரமாக பாலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கங்களை முன்னெடுக்குமாறு சிஐடியு அறைகூவல் விடுகிறது. உடனடி போர் நிறுத்தம், காசாவிற்கு தங்கு தடை யற்ற வகையில் நிவாரண உதவி செல்ல வேண்டும் என சிஐடியு கோருகிறது. 1967 எல்லைகள் அடிப்படை யில், சுதந்திர பாலஸ்தீனம்  அமைய வேண்டும் என்ற பாலஸ்தீன  மக்களின் கோரிக்கையை நாம் ஆதரிக் கிறோம்! பாலஸ்தீன பிரச்சனையில் ஊசலாட்டம் காட்டும் மோடி அரசை சிஐடியு கண்டிக்கிறது. இஸ்ரேலிய ஆக்கிர மிப்பை எதிர்க்கும் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா வழங்கி வந்த பாரம்பரிய ஆதரவு கைவிடப்படுகிறது. மோடியின் ஆட்சியில் இஸ்ரேலின் ஆயுதங்கள் , நவீன பாதுகாப்பு சேவை மற்றும் வேவு பார்க்கும் அமைப்பு களை மிக அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா  உள்ளது.  பாலஸ்தீன  தொழிலாளருக்கு பதிலாக, இந்தி யாவின் கட்டுமானம் மற்றும் வீட்டு வேலை செய்யும் தொழிலாளரை இஸ்ரேலில் பணியமர்த்தும் இஸ்ரேலின் இழி முயற்சிக்கு இந்திய அரசு ஒத்துழைத்து வருவதை சிஐடியு கண்டிக்கிறது. நமது தொழிலாளர்களின் உயி ருக்கு பாதுகாப்பு இல்லை. இஸ்ரேலின் இனப்படு கொலை யுத்தத்திற்கு, மறைமுகமாக நமது தொழிலாளி களை ஈடுபடுத்துவதில், இந்திய அரசு துணைபோயுள்ளது!

உக்ரைன்!

உக்ரைனில் நடைபெற்று வரும் ஏகாதிபத்திய யுத்தம், மூன்றாவது ஆண்டில் நுழைந்துள்ளது. ரஷ்யாவை பலவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் தோல்வி அடைந்த போதிலும், பல  நூறு கோடி டாலர் பெறுமான ஆயுதங்களை உக்ரை னுக்கு வழங்கி, யுத்தத்தை தொடர்ந்து  நீட்டிக்கச் செய்துள்ளன.  உக்ரைன் யுத்தத்திற்கு அமெரிக்கா 7500  கோடி டாலர் நிதி உதவி வழங்கியது. உலகம் முழு வதும் லட்சக்கணக்கானோர் இறந்தாலும், பல லட்சக் கணக்கானோர் வீடற்றவர்களாக, அனாதைகளாக மாறி னாலும், அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற  நாடுகள் பெரும் லாபத்தை, தங்களது ஆயுத உற்பத்தி ஆலைகள் மூலம் பெறுகின்றன. பதற்றமான புவி  அரசியல் நிலைமைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி கார்ப்பரேட்டுகள் பல நாடுகளை, மக்க ளை கொடூரமாகச் சுரண்டி வருகின்றன. 2023ல் அமெரிக்காவின் எரிசக்தி கம்பெனி எக்ஸான் மொபில் 5500 கோடி டாலர் அபரிமித லாபம் ஈட்டியதாக பதிவு செய்துள்ளது. 2022ல்  மட்டும் அமெரிக்காவில் 5 பெரிய ஆயுத உற்பத்தி கான்ட்ராக்ட் நிறுவனங்கள் 19600 கோடி டாலர் வருவாய் ஈட்டின. மேலும் உக்ரைன் யுத்தத்தால்  கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. செங்கடலில் இஸ்ரேல் செல்லும் கப்பல்கள் மீது, இனப்படுகொலையைக் கண்டிக்கும் வகையில் நடைபெறும் தாக்குதல்களால்,  கப்பல்களில் சரக்கு கட்டணம் 40 சதவீதம் கூடியுள்ளது.

சர்வதேச ஏகபோகங்களின் ஆதரவுடன், ஏகாதி பத்தியம் உலகம் முழுவதும் யுத்தங்களை /மோதல்களை  ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக புவி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பதற்றமான பிரதேசங்களில் இத்தகைய ஊக்குவிப்பு உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் இறையாண்மையை அரிக்கும் வகையில் ஊடுருவல் பொருளாதாரத் தடைகள், சீர்குலைவு நட வடிக்கைகள், பறிமுதல் மூலமாக நவீன தாராளமய கொள்கைகளை திணிக்கிறது. ஏகாதிபத்திய சதி முயற்சிகள் குறித்து உலக தொழிலாளி வர்க்க இயக்கம்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தொழி லாளர் வர்க்கம் மற்றும் மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை கூர்மைப்படுத்த வேண்டும் எனவும்  சிஐடியு  அறைகூவி  அழைக்கிறது. அனைத்து வகை சுரண்டலில் இருந்தும், தொழிலாளி வர்க்கத்தை /சமூகத்தை விடுதலை செய்யும் பணியில், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் சித்தாந்த உணர்வை உயர்த்து வது, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் ஒருங்கி ணைந்த - மையமான அம்சமாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஏகாதிபத்திய யுத்தங்களை, ராணுவ தலையீடுகளை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. நேட்டோ  ராணுவ கூட்டமைப்பை கலைக்க வேண்டும்; உலக அமைதியை நிலைநாட்டும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சிஐடியு கோருகிறது.

சீனாவின் முக்கியப் பங்கு

யுத்தத்தை ஏகாதிபத்தியம் ஊக்குவிக்கிறது. நேர்மாறாக, அமைதியை ஊக்குவிக்க சோசலிச  சீனா  முயற்சி எடுத்து வருகிறது. ஈரானும்,  சவூதி அரேபியாவும் அமைதி உடன்பாட்டை காண்பதில் சீனா ஒத்துழைத்தது. சிரியா மீதான அரபு லீக் நாடுகளின் தடை நீங்கவும் சீனா  முன்முயற்சி எடுத்தது. சவூதி அரேபியா மற்றும் வியட்நா முடன் இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா எட்டியுள்ளது. சீனாவும், ரஷ்யாவும் தங்களுக்கிடையே ஒருங்கி ணைப்பை கெட்டிப்படுத்தியுள்ளன.  இத்தகைய இரு தரப்பு மற்றும் பலதரப்பு பொருளாதார முயற்சிகளால், உலக வணிகத்தில் டாலரை தவிர்க்கும் நிலை வலுப்பட்டு வருகிறது. டாலர் இருப்பு 50 சதவீதத்திற்கு கீழ்  குறைந்துள்ளது. சோவியத் யூனியனில் பின்னடை விற்குப் பிறகு உருவான அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ உலகம் படிப்படியாக பலவீனமடைந்து வரு கிறது என்பதைக் காண முடிகிறது.

உலகளாவிய போராட்ட எழுச்சி!

முதலாளித்துவ தாக்குதலுக்கு எதிராக, அடக்குமுறை, பழிவாங்குதல், அரசுகளின் துணையோடு நிர்வாகங்கள் ஏவிவிடும் தனிநபர் தாக்குதல்களை எதிர்கொண்டு, வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கம் நடத்தி வரும் வீரமிக்க போராட்டங்களை சிஐடியு வரவேற்கிறது இடைவிடாத போராட்டங்களில் பங்கேற்று வரும் உலகத் தொழிலாளர்களை சிஐடியு வாழ்த்துகிறது. தொழி லாளர்கள் தங்களின் உடனடிக் கோரிக்கைகள் மீதான போராட்டங்களை; மனிதனை மனிதன் சுரண்டாத வகையில் முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவு கட்டும் சோசலிச அமைப்பை உருவாக்கும் போராட்டத்துடன் இணைக்க வேண்டும். அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகளில் வலதுசாரி சக்திகள் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின்  அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. ஆளும் வர்க்கங்களின் துணையுடன், இத்தகைய வலது சாரி சக்திகள் நிறவெறி, குறுகிய தேசிய இனவெறி, புலம் பெயர்வோர்க்கு எதிரான உணர்வுகள் ஆகியவற்றை வளர்க்கின்றன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது நவீன தாராளமய கொள்கைகளினால் அதிருப்தியுற்ற மக்களைத் திரட்டிப் போராடுகின்றன. ஆனால் அவர்களே அதிகாரத்திற்கு வந்துவிட்டால், அதே கொள்கைகளை அமலாக்குகின்றனர். மக்களை பிளவுபடுத்தி, ஒன்றுபட்ட போராட்டங்களை பலவீனப்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில் எதேச்சதி கார, சர்வாதிகார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. பல நாடுகளில் நவீன தாராளமயக் கொள்கை களுக்கு எதிரான மக்களின் கோபத்தை பயன்படுத்தி இடதுசாரிகள் போராட்ட அலைகள் மூலம் செல்வாக்கு அடையக் கூடாது என்பதற்காக, முதலாளித்துவ வர்க்கம் இத்தகைய வலதுசாரி சக்திகளை ஊக்குவிக்கின்றன. தொழிலாளர், உழைக்கும் மக்கள் மற்றும் நாம் வாழும் உலகம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முதலாளித்துவ அமைப்பிற்கு துப்பில்லை. சமகால மக்களின் தேவைகளான கண்ணியமான/ கௌரவமான வாழ்க்கை, வேலை, வாழ்க்கை ஊதியம், வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவைகளை முதலாளித்துவம் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது.  இதற்கான தேவையான ஆதாரங்கள், செல்வத்தை உழைக்கும் மக்களே உருவாக்கினாலும் இதுதான் நிலை. லாப வெறி என்பது தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை தீவிரமாக்கியதுடன், தேச வளம், இயற்கை வளம் அனைத்தையும் கொள்ளை அடிக்கிறது. தேசத்திற்கு, சுற்றுப்புற சூழலுக்கு, மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்களை பொருட்படுத்த மறுக்கிறது.  முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் அமைப்பு ரீதியாக ஆழமடைந்து வரும் நெருக்கடியில் இருந்து மீள, லாபத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ அமைப்பு, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை மேலும் தாக்குகிறது. மக்களின் ஜன நாயக மனித உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுக்கிறது. இது தோல்வியடையும். சமூக அமைப்பு என்ற ரீதியில் முத லாளித்துவம் முட்டுச் சந்தில் சிக்கித் திணறுகிறது. தோல்வி யுற்ற முதலாளித்துவ அமைப்பில் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தில் தலைமை ஏற்க வேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்று கடமை.

தேர்தலும் நமது கடமையும்!

எட்டு மணிநேர வேலை  உள்பட அடிப்படை உரிமை களைக் காப்பது மே தினப் போராட்டத்தின் அடையாளம். கார்ப்பரேட் - மதவெறியர் கள்ளக் கூட்டணி மோடி அரசு, 18 வது நாடாளுமன்றத் தேர்தலில் தீர்மானகரமான தோல்வியைச் சந்திக்க வேண்டும். கடந்த 10 ஆண்டு மோடி ஆட்சியில் தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினர் தங்கள் வாழ்வை, வாழ்வாதாரத்தை பாதுகாக்க இடைவிடாமல் போராடி வந்துள்ளனர். நாசகர தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாக்கப்படுவதற்கான அரசு அறி விக்கையை ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்த முடிந்துள்ளது. மேலும் வலுவான ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம், சட்டத் தொகுப்புகளை புதை குழிக்கு அனுப்ப வேண்டும்! தொழிலாளர், விவசாயிகள் மற்றும் அனைத்து பிரிவு உழைக்கும் மக்கள், ஒட்டுமொத்த தேசத்தின் நலன்களுக்கு எதிரான, நாசகர நவீன தாராளமய கொள்கைகளை முறியடிக்க மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்! வேலையின்மை அபாயகரமாக உயர்ந்துள்ளது. பசி, வறுமை, தொழிலாளர் படும் துயரங்கள் அதி கரித்துள்ளன. சுகாதாரம், கல்வி, உணவு & சரிவிகித  சத்துணவு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, மின்சாரம் என அனைத்தும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்ப தற்கான வணிகத் தளங்களாக மாற்றப்பட்டுள்ளன. குடும்பங்களில் கடன் சுமை தலைவிரித்தாடுகிறது. ரத்தமும் வியர்வையும் சிந்தி, தொழிலாளர் உரு வாக்கிய தேசிய செல்வத்தை, விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டும் கபளீகரம் செய்து வருகின்ற னர். அசமத்துவம், அசாதாரணமான நிலையை எட்டி உள்ளது! உலகின் மிக மோசமான அசமத்துவ சமூ கங்களில் ஒன்றாக இந்திய சமூகம் மாற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரமும், தொழில் உறவுகளும், ஆலைகளின் செயல்பாடுகளும், தேச வளத்தின் மீது, சில ஏகபோக கம்பெனிகள் ஆதிக்கம் செலுத்தும் திசை  வழியில் அமைகின்றன. இதன் பிரதிபலிப்பை ஜனநாயக நடைமுறைகள், நிறுவனங்களின் சீர்குலைவுகளில் காணமுடியும். ஏகபோகங்களின் கொள்ளைக்கு சாதக மான வசதிகளை அரசு செய்து தருகிறது. சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மீதான பயங்கரவாதம், ஜனநாயகம் ஒடுக்கப்படுவது போன்ற பல்வேறு உத்திகளை அரசியல் நிர்வாகம் கையாள்கிறது.

பாஜகவின் அரசியல் சித்தாந்த குரு ஆர்எஸ்எஸ். மதவெறியைப் பரப்புவதன் மூலம் உழைக்கும் மக்க ளின் ஒற்றுமை, ஒன்றுபட்ட போராட்டங்களை பாஜக சிதைத்து வருகிறது. பற்றி எரியும் வாழ்வாதாரப் பிரச்ச னைகளிலிருந்து மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டு, மதம், சாதி, மொழி, வட்டார உணர்வுகள் தூண்டப்பட்டு, நவீன தாராளமயக் கொள்கை என்ற பொது எதிரிக்கு எதிரான போராட்டங்களை, மக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் கலவரங்களாக மாற்றுகின்றது. தலித்கள், பழங்குடி மக்கள் மற்றும் பெண்களை கீழ்த்தரமாக கருதும் மனுதர்மம் கொண்டு, மதச்சார்பற்ற அரசியல் சட்டத்திற்கு வேட்டு வைக்க பாஜக முயல்கிறது. இந்து மதத்திற்கும், இந்து மதத்தை பின்பற்றும் மக்களின் நலன்களுக்கும் துளியும் சம்பந்தமில்லாத, இந்துத்வா  ராஜ்ஜியத்தை அரசியல் திட்டமாக்கிட பாஜக முயல்கிறது. வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கப் பிரிவு, தேசிய புலனாய்வு முகமை  போன்ற அரசு நிர்வாகத்தின் பல பிரிவுகள் மீதான அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாற்று கருத்து கொண்டவர்கள், எதிர்க்கட்சிகளை ஒடுக்கி வருகிறார்கள். பயங்கரவாத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் சுயேட்சையான பத்திரி கையாளர், மாணவர், தொழிற்சங்க போராளிகள், மனித  உரிமைக்கு குரல் கொடுப்போர் கைது செய்யப்படு கின்றனர். நிதி ஆதாரங்களின் மீது மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு கொண்ட ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்க மறுக்கிறது. ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதன் பெயரால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க விரும்புகிறது. தேர்தலில் பணம் விளையாடுவதை அனுமதியோம் எனப் பீற்றிக்கொண்ட பாஜக, உலகிலேயே பெரிய  மோசடியான தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அம் பலப்பட்டு நிற்கின்றது. கார்ப்பரேட் நன்கொடை யாளர்களுக்கு  சாதகமாக பாஜக அரசு உருவாக்கிய கொள்கைகள் அம்பலமாகியுள்ளன. ‘பத்தாண்டு ஆட்சி ஒரு ட்ரெய்லரே; மெயின் படம் இனிமேல் தான்’ என மோடி அறிவித்தார். மோடி  மீண்டும் பிரதமரானால், அவரது அரசு தொழிலாளர், விவசாயிகள், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை  புறக்கணிக்கும்! அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் மாற்றப்படும்! ஆர்எஸ்எஸ் கட்டளைக்கு இணங்க நாடாளுமன்ற ஜனநாயகம் முடக்கப்பட்டு, இரக்கமற்ற சர்வாதிகாரி போல் மோடி நடந்து கொள்வார்! 2023 ஜனவரி 30ல் அனைத்து தொழிற்சங்கங்க ளின் தேசிய சிறப்பு மாநாடு 2023 ஏப்ரல் 5-ல் தொழி லாளர், விவசாயிகள் தில்லி கூட்டு பேரணி, மக்களை/ நாட்டை பாதுகாக்க, மோடி அரசை தேர்தலில் வீழ்த்து மாறு அறைகூவல் விட்டது.  இந்த கடமையை அனை வரும் உறுதி செய்வார்கள் என சிஐடியு நம்பிக்கை தெரி விக்கிறது. தொழிலாளர், விவசாயிகளின் கூட்டு, ஒற்றுமை, கூட்டுப் போராட்டங்கள் மூலம் நவீன தாராள மயக் கொள்கைகளை பின்னுக்குத் தள்ளுவோம்! மத வாத பிளவுவாத சக்திகளை முறியடிப்போம்!

தொழிலாளர்களிடம் செல்வோம்!

எங்கெல்லாம் தொழிலாளர்/ மக்களின் போராட்டங் கள், மக்கள் ஆதரவு மாற்றுக் கொள்கைகளுடன், அரசியல் ரீதியாக உணர்வு பெற்ற தலைமையின் கீழ் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம், முற்போக்கு அரசுகள் அமைகின்றன. ஆனாலும் இத்தகைய முற்போக்கு  அரசுகள் அமையும் நாடுகளில் வலதுசாரி சக்திகள் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவுடன் அரசுகளை நிலை குலைய வைக்கும் செயல்களில் ஈடுபடுகின்றன. முற் போக்கு அரசுகளின் நிலைத்தன்மை என்பது தொழி லாளி வர்க்க இயக்கத்தின் விழிப்புணர்வு ,உஷார் தன்மை களை பொறுத்தது. சர்வதேச நிதி மூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்படும் நவீன தாராளமய கொள்கைகளின் நாசகர விளைவுகள் குறித்து தொழி லாளர் வர்க்கத்திடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் சிஐடியு மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளது! சர்வதேச ஒருமைப்பாடு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை சிஐடியு வலுப்படுத்தும்!

சபதமேற்போம்!

‘எதிர்த்து நிற்போம்; போராடித் தடுப்போம்’ (DEFIANCE and RESISTANCE)   என்ற நிலைக்கு,தொழிலாளி வர்க்கத்தின்  ஒன்றுபட்ட போராட்டங்களை, உயர்நிலைகளுக்கு எடுத்துச் செல்ல சிஐடியு சூளுரைக்கிறது! தொழிலாளர், விவசாயிகள் மற்றும் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின், கௌரவமான வாழ்க்கை யை உறுதிப்படுத்த, சுரண்டலற்ற சோசலிச சமுதாயம் அமைக்கும் சிஐடியு-வின் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குறிக்கோளை அடைய, ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தையும் ஒன்றுபடுத்துவது, போராடுவது என்ற பாதையில் சிஐடியு பீடு நடை போடும்!

மே தினம் ஓங்குக! 
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேர்வீர்!
ஏகாதிபத்தியம் /முதலாளித்துவம் ஒழிக!
வெல்லட்டும் சோசலிசம்! 
தொழிலாளி- விவசாயி ஒற்றுமை ஓங்குக!
தமிழில் : ஆர்.சிங்காரவேலு





 


 



 

;