articles

img

வரலாற்றுச் சக்கரத்தை பின்னோக்கிச் சுழற்றுவதா? - அமானுல்லாகான்

245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்ட நாள் 1956, ஜனவரி 19. 66 ஆண்டுகளுக்கு பின்னர்  இன்று எல்.ஐ.சி பங்கு விற்பனை பேசப்படுகிற நேரம். பெருமை மிகு வரலாற்று முடிவை பின்னோக்கி இழுக்கிற முடிவை அரசு எடுத்து வருகிற வேளையில்  30 ஆண்டுகளாக களத்தில் இந்த சவாலை சந்தித்து வருகிற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் அமானுல்லாகான் நேர்காணல்:

கேள்வி: எல்.ஐ.சியில் பங்கு விற்பனைக்கான, தீவிர மான வேலைகளை ஒன்றிய அரசு செய்து வருகிறதே? 

அமானுல்லாகான் : நடப்பு நிதியாண்டிற்குள் எல்.ஐ.சியின் பங்குகளை பங்குச் சந்தையில், ஐ.பி.ஒவின் மூலமாக பட்டியலிட நான்குகால் பாய்ச்சலில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான தனி மசோதாவை கொண்டு வர வேண்டிய அரசாங்கம் அதைச் செய்தால் இப்பிரச்சனை மக்கள் மத்தியில் கூர்மையான விவாதத்திற்கு வருமென்பதால் 2021-22 நிதி மசோதாவின் ஒரு பகுதியாக கொண்டு வந்தது. வெளிப் படைத் தன்மை அற்ற அணுகுமுறை ஆகும் இது.  எல்.ஐ.சி யின் சட்டத்தில் தேவையான மாற்றங்களை செய்து, பங்குசந்தையில் பட்டியலிடுவதற்கு வழி செய்துள் ளது. மேலும் வெளிநாட்டு மூலதனத்திற்கு ஆதரவாக, அவை இந்த விற்பனையில் பங்கேற்கும் வகையிலான மாற்றங்களையும் செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. எல்.ஐ.சியின் ஆரம்ப 10% பங்கு விற்பனையின் மூலமாக மட்டும் சுமார் ரூ.1 லட்சம் கோடியை திரட்டுவதற்கான அறிகுறிகள் உள்ளன. இதுவரையிலான மிகப்பெரிய பங்கு விற்பனை நடவடிக்கையாக இது இருக்கும். 

கேள்வி: தொழிற்சங்கங்கள் ஏன் எல்.ஐ.சி யை பங்கு விற்பனையை எதிர்க்கின்றன? 

பதில்: எல்.ஐ.சியில் திணிக்கப்படும் ஐ.பி.ஒ தனியார் மயமாக்கலின் முதல்படியாக அமையும். மேலும் ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயமாக்கலின் அடிப்படை நோக்கங் களுக்கு அச்சுறுத்தலாகவும், எதிராகவும் அமையும்.  இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தேவை யான மூலதன உருவாக்கத்திற்காக, தேசத்தின் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை மக்க ளின் சேமிப்பை கொண்டு ஏற்படுத்துவதற்காக, செப்டம் பர் 1, 1956-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தால் எல்.ஐ.சி எனும் பொதுத்துறை நிறுவனம் நிறுவப் பட்டது. எந்த அடிப்படை நோக்கத்திற்காக பொதுத் துறை நிதிநிறுவனமாக எல்.ஐ.சி நிறுவப்பட்டதோ, அதன் தார்மீக அடிப்படை நோக்கங்களை அடைவதற் காக கடந்த 65 ஆண்டுகளாக வெற்றிகரமாக தன்னை  அர்ப்பணித்து இந்நிறுவனம் செயல்படுகிறது. இந்தி யாவின் பொருளாதாரத் துறைகளில், இம்மாபெரும் நிறு வனத்தின் காலடித்தடங்கள் இல்லாதவை எதுவும் கிடை யாது எனும் அளவில், இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கும் அதன் பொருளாதார பங்களிப்பிலும்  பிரிக்க முடியாத அங்கமாக, சக்தியாக எல்.ஐ.சி திகழ்ந்துவருகிறது. இது வரை  நாட்டின் அடிப்படை வளர்ச்சிக்காக, எல்.ஐ.சியின் மகத்தான பங்களிப்பாக  ரூ.36 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது. அதன் முதலீடுகளில், 82% க்கும் அதிக மானவை அரசு பத்திரங்கள் மற்றும் அரசின் உள் கட்டமைப்பு துறைகளில் செய்யப்பட்டுள்ளன.  இவ்வளவு வெற்றிகரமான நிறுவனத்தை பங்கு விற்ப னைக்கு ஆளாக்க வேண்டிய தேவை என்ன என்பதே தொழிற்சங்கங்களின் கேள்வி.

கேள்வி: அரசின் பங்கு விற்பனை முடிவு எல்.ஐ.சி யின் மூலதன தேவையிலிருந்து எழுகிறதா? 

பதில்: எல்.ஐ.சி என்றுமே மூலதனம் தேவை என்று அரசிடம் சென்று நின்றதும் இல்லை. கேட்டதும் இல்லை. 1956-ல் ரூ.5 கோடி அரசின் மூலதனத்துடன் எல்.ஐ.சி தொடங்கப்பட்டது. மேலும் 2011-ம் ஆண்டு அமலாக் கப்பட்ட இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணைய விதி முறைகளை பூர்த்தி செய்ததற்காக, அதன் மூலதனம் ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டது.  இம்முறை அரசின் கரங்களிலிருந்து அல்லாமல் எல்.ஐ.சி நிறுவனமே இம் முதலீட்டை  செய்தது.  ஆரம்ப கட்ட முதலீடான ரூ.5 கோடி க்கு பிறகு அரசு இந்நிறுவனத்தின் வணிக வரிவாக் கத்திற்காக எந்த கூடுதல் மூலதனமும் அரசிடம் கோர வில்லை என்பதே எல்.ஐ.சியின் தனித்தன்மை. பாலசி தாரர்களின் சேமிப்பைக் கொண்டே அதன் விரிவாக்க மும், வளர்ச்சியும் இது நாள்வரை எட்டப்பட்டுள்ளது. ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்ட மூலதனத்தைக்கூட பாலிசிதாரர்களின் சேமிப்பிலிருந்துதான் வழங்கியது. இந்நிறுவனம் மக்களை காக்கும் அறக்கட்டளையாக அல்லது பரஸ்பர நிதிநிறுவனமாக செயல்படுகிறது என்றால் மிகையில்லை. இவ்வாறு செயல்படும் எல்.ஐ.சி யின் பங்குகளை விற்பது அறநெறிக்கு எதிரான செயலாகும். 

கேள்வி: எல். ஐ.சி சட்டத் திருத்தம் பாலிசிதாரர்க் கான போனசில் என்ன மாற்றத்தை கொண்டு வரும்? 

பதில்: எல்.ஐ.சியின் வருடாந்திர கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் சரிபார்க்கப்பட்டு 5 : 95 என்ற விகிதத்தில், அர சிற்கு 5 சதவீத வருவாயை அரசுக்கு ஈவுத்தொகையாக வும், அதன் பாலிசிதாரர்களுக்கு 95%, பாலிசிகளின் மீதான போனஸாகவும் விநியோகித்து வருகிறது. இந் நடைமுறை எல்.ஐ.சியின் தற்போதைய சட்டத்திருத்தால் 10 : 90 என்று மாற்றப்படவுள்ளது.

கேள்வி: தேசியமயமாக்கல் நிர்ணயித்த இலக்குகளை எல்.ஐ.சி எந்த அளவிற்கு அடைந்திருக்கிறது? 

பதில்: கடந்த 64 ஆண்டுகளில் தன்னிகரற்ற சேவை களின் மூலமாக, எல்.ஐ.சி அதன் தேசியமயமாக்கலின் அற்புதமான நோக்கங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் ஆயுள் காப்பீட்டை விரிவு செய்துள்ளது. இந்திய நாட்டின் மிகவும் அங்கீகரிக்கக்கூடிய ஒரு நிறுவனமாக அது உருவெடுத்து வளர்ச்சி அடைந்துள்ளது. 40 கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்களை தன்னகத்தே கொண்டும், கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவும் மாறியுள்ளது. எல்.ஐ.சி நிர்வாகத் தின் கீழ் ரூ.38 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. அவற்றின் மூலம், ஆண்டுக்கு ரூ.4 முதல் 5 லட்சம் கோடி நிதி மூலதனத்தை ஈட்டுகிறது. இந்நிறு வனம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அரசுக்கு ரூ.28,695 கோடியை ஈவுத்தொகையாக மட்டும் வழங்கி யுள்ளது. இன்சூரன்ஸ் பரவல், தேச நிர்மாணத்திற்கு நிதியாதாரம், அரசுக்கு வருவாய் என மூன்று அளவுகோல்க ளிலும் அதன் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை.

கேள்வி: தனியார் நிறுவனங்களின் போட்டியை எதிர் கொண்டு எல்.ஐ.சி எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது? 

பதில்: எல்.ஐ.சி 23 தனியார் காப்பீட்டு நிறுவனங்க ளுடன் இந்திய சந்தையில் போட்டியிடுகிறது. 20 வரு டங்களை கடந்த பிறகும்கூட காப்பீட்டு பிரீமிய வருவாயில் 66 சதவீத சந்தைப் பங்கு, மற்றும் பாலிசிகளில் எண் ணிக்கை அடிப்படையில் 75 சதவீத சந்தைப் பங்குகளு டன் தொடர்ந்து சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகிறது.  2020-21 நிதியாண்டில் எல்ஐசி தனது மொத்த பிரீமிய வருவாயாக (புது வணிகம் + தொடர் பிரீமியம்) ரூபாய் 4.02 லட்சம் கோடியை ஈட்டியுள்ளது. எல்.ஐ.சியின் முத லீடுகள் மூலமாக ரூ.2.72 லட்சம் கோடியை ஈட்டியுள் ளது. இம்மாபெரும் நிறுவனத்தின் 2020-21ம் ஆண்டின் மொத்த நிகர வருமானமாக ரூ.6.82 லட்சம் கோடி ஈட்டியதோடு மட்டுமில்லாமல் தனது பாலிசிதாரர்க ளுக்கு ரூ.2.1 லட்சம் கோடியை முதிர்வு தொகையாக வும் மற்ற உரிமை கோரல்கள் மூலமாகவும் வழங்கி யுள்ளது.  பல ஆண்டுகளாகவே, உலகளவில் சிறந்த உரிமை கோரல்களை வழங்குவதன் மூலமாகவும், மொத்த பாலிசிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் சேவையின் தரத்தின் வாயிலாகவும், மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி உருவெடுத்து இருக்கிறது. அதன் வெளிப்படையான செயல்பாட்டை உலகிற்கு வெளிக் காட்டுகிறது. இதை விட என்ன வேண்டும்! போட்டியை ஒரு பொதுத்துறை நிறுவனம் எதிர்கொள்ள முடியும், வெற்றி காண முடியும் என்பதற்கு உதாரணம். 

கேள்வி: மூர்க்கத்தனமாக எல்.ஐ.சியில் அரசு ஏன் ஐ.பி.ஓவை திணிக்க முயல்கிறது? 

பதில்: இப்பிரச்சனைக்கான வேர்கள் இந்திய அரசு, 1991-ம் ஆண்டு செயல்படுத்த தொடங்கிய நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளில் இருக்கிறது.  இதன் முக்கிய நோக்கங்களாக பொதுத் துறைகளை  தனியார்மயமாக்குதல், தனியார் துறைக்கு அதிக முக்கி யத்துவத்தை வழங்குதல், வணிகத்தில் அரசின் கட்டுப் பாடுகளை நீக்குதல், வணிகத்தில் தாராளமான கட்டுப் பாடுகளற்ற அந்திய நிதிமூலதனத்தின் பாய்ச்சலை அனுமதித்தல் மற்றும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஏழைகளுக்கான மானியங்களை வெட்டுதல் போன்ற அரசின் முக்கிய பொருளாதார கொள்கை முடிவுகளின் பின்புலத்தில்தான் இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.   வெற்றிகரமான காப்பீட்டு துறையும், இந்த பிற் போக்கான அரசின் கொள்கைகளால் குறி வைக்கப்படு கிறது.  மல்ஹோத்ரா குழுவின் பரிந்துரைகள் யாவும், காப்பீட்டுத் துறையில் நவதாராளவாத அரசின் பொரு ளாதார நிகழ்ச்சி நிரலுக்கான நகர்வுகளே ஆகும். இந்தியா மற்றும் வெளிநாட்டு நிதிமூலதனம் பங்கேற்ப தற்கு ஆதரவாக, காப்பீட்டு துறையை திறந்துவிடவும், எல்ஐசியின் மூலதனத்தை ரூ.5 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்த்தவும், 50% அரசின் பங்குகளை விலக்கிக் கொள்ளவும் இக்குழு பரிந்துரைத்தது. 25 ஆண்டு காலம் கழித்தும் இந்த பரிந்துரைகளை அம லாக்கவே அரசாங்கம் முனைப்பு காண்பிக்கிறது. 

கேள்வி: தனியார்மயமாக்கலுக்கான மல்ஹோத்ரா குழுவின் பரிந்துரைகள் பல ஆண்டுகளாக எவ்வாறு நினைத்த வேகத்தில் முன்னேற இயலவில்லை?

பதில்:இக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கு அடுத்தடுத்து உருவான ஆட்சியாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபடும் போதெல்லாம் காப்பீட்டு ஊழியர்களிடமிருந்தும், பொதுமக்களுடமிருந்தும் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. பொதுமக்களின் ஏகோபித்த கருத்துகளைப் புறந் தள்ளி, ஆயுள் காப்பீட்டு தேசியமய அடிப்படைகளுக்கு எதிராக, 1999-ல் வாஜ்பாய் அரசாங்கம் இத்துறையை தனியாருக்கு திறந்துவிட்டது. ஆனால் அதில் பெரும் வெற்றியை தனியார்கள் இன்றுவரை எட்ட முடிய வில்லை. தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய தொடர் எதிர்ப்பு பிரச்சாரத்தின் காரணமாக, அடுத் தடுத்து இத்துறையில் அரசு ஏற்படுத்தும் தொடர் தாக் குதல்களை முறியடித்து, தற்காக்க முடிந்துள்ளது. இன்றுள்ள பாஜக அரசாங்கத்தின் நிதித் தேவை களை பூர்த்தி செய்து கொள்வதற்காக,  மிருகத்தனமான நாடாளுமன்ற பெரும்பான்மை தன்னிடமிருக்கும் காரணத் ணத்தால், எல்.ஐ.சியின் பங்கு விற்பனைக்கு தயாராகி வருகிறது. 

கேள்வி: இன்று அரசு முன்வைக்கும்வாதங்களுக்கு, உங்களது பதில்கள் என்ன? 

பதில்: அதிக பொறுப்பு மற்றும் வெளிப்படைத் தன்மையை எல்.ஐ.சியின்  பங்கு விற்பனை ஏற்படுத்தும் என ஒரு வாதத்தை அரசு முன்வைக்கிறது.  எல்.ஐ.சி தனது பாலிசிதாரர்களின் நலன்களை பாதுகாப்பதில் கறைபடாத சாதனையுடன் செயல்படுகிறது. அதன் கணக்கு களை இந்திய நாடாளுமன்றத்தின் மூலமாக  வெளி யிட்டு, மக்களுக்கும் அதை உணர்த்தி வருகிறது. ஆகவே வெளிப்படைத் தன்மைக்கு எந்த பஞ்சமும் இல்லை. இந்நிறுவனத்தின் பங்கு விற்பனை வாயிலாக மிகப்பெரிய நிதியாதாரங்களை அரசு திரட்ட  முடியும் என்கின்ற வாதம் அரசால் முன்வைக்கப்படுகிறது. அது அர்த்தமற்றது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் மிக அதிகமான உபரி மூலதனத்தை எல்.ஐ.சியே அரசுக்கு உருவாக்கி கொடுத்து வருகிறது.  அதை பங்குச் சந்தையில் ஈடுபட செய்வதன் மூலம், பொதுமக்களை அதன் முதலீட்டாளர்களாக மாற்ற முடியும் என்கின்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இது நகைப்பிற்குரிய ஒன்று, உண்மை என்னவென்றால் இந்திய பங்குச்சந்தையில் மொத்த மக்கள் தொகை யில் 3% மட்டுமே பங்குச்சந்தையில் ஈடுபட்டு வருகின்ற னர். எல்.ஐ.சியின் பங்குகளை விற்பனை செய்வது மிகப் பெரும் பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும், பன்னாட்டு நிதிநிறுவனங்களுக்கும் , மிக மலிவான விலையில் பொதுத்துறையை விழுங்குவதற்கான வழி வகைகளையே யதார்த்தத்தில் உருவாக்கும். 

கேள்வி: எல்.ஐ.சி பற்றிய நியாயமான மதிப்பீடு செய்யப்படுமா? 

பதில்: எல்ஐசியின் மதிப்பீட்டை அளவிடுவது மிகப் பெரிய சவாலாகும். தற்சமயம் 50க்கும் அதிகமான பாலிசிகளை சந்தையில் எல்.ஐ.சி விற்பனை செய்கிறது. எதிர்கால சந்தைக்கேற்ற வகையிலான அதன் பலன்க ளை முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும். இந்திய ரயில்வே துறைக்கு  அடுத்தபடியாக, இந்தியாவின் ஒவ் வொரு பகுதியிலும் தனது அசையா சொத்துக்களை எல்.ஐ.சி கொண்டுள்ளது. எனவே அதன் மதிப்பீடுக ளையும் அளவிட வேண்டியுள்ளது. இந்தியா மற்றும் பல வெளிநாடுகளிலும் எல்.ஐ.சி அதன் துணை நிறு வனங்களை கொண்டுள்ளது. அதன் மதிப்பீடுகளையும் அளவீடு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக  இந்நிறுவனத்தின் நன்மதிப்பை, மக்களிடம் பெற்றுள்ள நம்பிக்கையை அளவிடுவது மிகமிகக் கடினமானது.  இச் சூழலில் எல்.ஐ.சியின் பங்கு மதிப்பீடுகள் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. தோராயமாக ரூ.10 முதல் 15 லட்சம் கோடிக்கு குறைவாக மதிப்பிட முடியாது.ரூ.5 கோடி அரசின் முத லீட்டில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம், இன்று அதன் மதிப்பு பிரமிக்கத்தக்க வகையில் வளர்ச்சி அடைந் துள்ளது. இதன் பங்கு விற்பனை, ஒரு நியாயமான மதிப் பீடாக இருக்குமா என்று சொல்வது மிகக் கடினம், ஏன் என்று சொன்னால் இதுவரை விற்கப்பட்ட பல்வேறு அரசு பொதுத்துறை நிறுவனங்கள், அதன் உண்மை மதிப்பீடு களை விட குறைத்துதான் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

கேள்வி: எதிர்கால நடவடிக்கையாக நீங்கள் கருது வது என்ன? 

பதில்: பங்கு விற்பனைகள்  இறுதியாக தனியார் மயத்தை நோக்கி செல்வதையே அனுபவம் நமக்கு உணர்த்துகிறது. தேசத்தின் வளர்ச்சி என்ற அடிப்படை நோக்கங்களை தகர்த்து, பங்குதாரர்களின் லாபத்தை அதிகரிப்பதில் அதீத கவனம் செலுத்துவதை இப் போக்குகள் ஊக்குவிக்கும். எல்ஐசியின் முழு வணிக செயல்பாடுகளும் லாபம் நோக்கியதாக மாற்றப்பட நேரிடும். சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கான காப்பீடு என்கின்ற நிலை மாறி, உயர்தட்டு மக்களுக்கானதாக அதன் முக்கியத்துவம் மாற்றப்படும், காப்பீட்டு பிரீமியம் உயர்த்தப்படும். கிராமப்புற இந்தியாவைப் புறந்தள்ளி, நகர்ப்புற மற்றும் பெருநகரங்களில் அதன் சந்தை கவ னம் அதிகரிக்கும். பாலிசிதாரர்களுக்கு அதிகமான லாபத்தை உறுதி செய்யும் பாரம்பரியமாக நடைமுறை யிலுள்ள பாலிசிகள் நீக்கப்பட்டு, பங்குதாரர்களின் லாபத்தை அதிகரிக்கும் வகையிலான புதிய பாலிசி களின் விற்பனை மேலோங்கியிருக்கும். இவ்வாறு மாறும் சூழ்நிலையில் சமூக பொருளாதார கட்டமைப்பிற்கு தேவையான நிதி ஆதாரங்களை அரசுக்கு வழங்குவ தில் கடுமையான பின்னடைவை சந்திக்க நேரிடும். 

கேள்வி: வெளிநாட்டு நிதி மூலதனம் பங்கு விற்பனை யில் ஈடுபடும்போது அதன் தாக்கம் என்ன? 

பதில்: அந்நிய நிதிமூலதனத்தை  பங்கு விற்பனை யில் அரசு அனுமதிக்கும் பட்சத்தில், உள்நாட்டுச் சேமிப் பின் மீது அதிக கட்டுப்பாடுகளை அது விதித்து, தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு எல்.ஐ.சி அளித்துவரும் நிதி ஆதாரங்களில், தனது பங்குகளின் மீதான அதிகாரத்தை பயன்படுத்தி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 

கேள்வி: இப்பிரச்சனையில் சமூகத்திடம் நீங்கள் முன்வைக்கும் வேண்டுகோள் என்ன? 

பதில்: எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எந்த அவசிய மும் இல்லை. இம்மாபெரும்  நிறுவனத்தில் திணிக்கப் படும் ஐ.பி.ஓ நடவடிக்கை எதிர்காலத்தில் தனியார்மயத் திற்கு வழிவகுக்கும். அதற்கான முதற்கட்ட நடவடிக்கை யாகும் இது. இந்திய தேசிய பொருளாதாரத்திற்கு கடு மையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய தேச பொரு ளாதாரம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த சுயசார்பு பொருளாதாரத்தை பின்பற்றிட, மக்கள் நலன்களை  பாதுகாக்க, அரசின் எல்.ஐ.சியின் பங்கு விற்பனையை, அதன் இறுதிவடிவமான தனியார்மயமாக்கலை நோக்கிய போக்கை முழுமையாக எதிர்க்க வேண்டிய பொறுப்பு மக்கள் நலன்சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உள்ளது.

தமிழில் தொகுப்பு : விஜயகுமார், தஞ்சாவூர்,  நன்றி: வயர் இணைய இதழ்

;