articles

img

வைக்கம் சத்தியாக்கிரக போராட்டத்துக்கு ஊக்கமளித்த மதுரை பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்

வைக்கம் கோயிலின் மேற்குப் பகுதியில் மட்டும் இருந்த சத்தியாகிரக போராட் டத்தை நான்கு பக்கங்களுக்கும் விரிவுபடுத்தி போராட்டத்திற்கு காந்திஜியின் நெருங்கிய சீடரான மது ரையைச் சேர்ந்த பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் வலுவூட்டி னார். செங்ஙனூரைச் சேர்ந்தவரும், பிரபல பத்திரிகை யாளருமான போத்தன் ஜோசப்பின் சகோதரர் ஜார்ஜ்  ஜோசப். இவர், காந்திஜியின் ‘யங் இந்தியா’ பத்திரிகை யில் பணியாற்றியவர். வைக்கம் சத்தியாகிரகம் அமைதியாகத்தான் தொடங்கியது, ஆனால் டி.கே.மாதவன் மற்றும் கே.பி. கேசவமேனன் கைது செய்யப்பட்டதால், கேரளா முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவானது. இந்நிலையில்தான் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் மதுரையில் வழக்கறிஞர் பணியை நிறுத்திவிட்டு வைக்கம் வருகிறார். கே.கேளப்பன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிறையில் இருந்தபோது, போராட் டத்தின் முழுப் பொறுப்பை ஜார்ஜ் ஜோசப் ஏற்றுக்கொண்டார். அவர் வைக்கம் படகுத் துறையில் தினசரி நடக்கும் கூட்டங்கள் மூலம், கோவில் தெரு வழி நடக்கும் அடிப்படை உரிமை குறித்து உரை நிகழ்த்தி  மக்களை உற்சாகப்படுத்தினார். விரைவில் அவரும் கைது செய்யப்பட்டார்.

பெரியாரை வைக்கத்துக்கு வரச் செய்ததில் டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன் ஆகியோருடன் ஜார்ஜ் ஜோசப்புக்கும் முக்கியப் பங்கு உண்டு. வைக்கம் சத்தியாகிரகத் தியாகி சிற்றேடத்து சங்கு பிள்ளையை, செங்ஙனூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் இருந்து போலீசார் கைது செய்தனர். தடையை மீறி நடத்தப்பட்டக் கூட்டத்திற்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் பின் மனைவி சுசன்னா தலைமை தாங்கினார். ஜார்ஜ் ஜோசப், வைக்கம் சத்தியாகிரகத்தை ஒட்டு மொத்த இந்திய மக்களின் அடிப்படை உரிமையாகப் பார்த்தார். ஆனால் அன்றைக்கு  காங்கிரஸில் இருந்த பலர், இது இந்து சமுதாயத்தின் உயர் சாதியின ருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையிலான பிரச்சனை என்றும், இந்துக்களே தீர்க்க வேண்டிய விசயம் என்றும் பார்த்தனர். காந்தியும் இப்போராட் டத்தில் வேற்று மதத்தினர் பங்கேற்பதை ஊக்குவிக்க வில்லை. இது ஜார்ஜ் ஜோசப்பை வருத்தமடையச் செய்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவரும், மனைவியும் மதுரைக்கு காரில் திரும்பி சென்றனர்.