articles

img

வியாழனும் சனியும் இணைந்த மகத்தான காட்சி....

இன்றைக்கு டிசம்பர் 21 (திங்கள்) மாலை 6.30 - 8 மணி வரை வியாழன் கோளும் சனிக்கோளும் சந்திக்க உள்ள அற்புதமான நிகழ்வு நடைபெற்றது. இதனை பெரிய இணைப்பு அல்லதுபேரணைப்பு என்று சொல்லலாம்.திங்களன்று (டிச.21) தென்கோளார்த்த சங்கராந்தி. அதாவது Winterwinter Soltice. திங்களன்றுதான் குறைந்த பகல் நேரம் உள்ள நாள்; அதுபோலவே அதிக இரவு நேரம் உள்ள நாள். டிச.21 முதல் சூரியன் வடக்கு நோக்கி நகரத்துவங்கும். மார்ச் 21 சம கால நாள். இரவு பகல் சரியாக 12 மணி நேரத்தில் இருக்கும்.நம் சூரிய மண்டலத்தில் பூமியையும் சேர்த்து8 கோள்கள் உள்ளன.

சூரியனை ஒட்டி முதல் சுற்றுப்பாதையில் புதன் கோள். அடுத்து இரண்டாவது சுற்றுப்பாதையில் வெள்ளி. பூமி மூன்றாவது கோள். செவ்வாய் நான்காவது கோள். அடுத்து 5 வது மிகப் பெரிய ராட்சத கோள்(வாயு அரக்கன்) வியாழன். இது 886.68 மில்லியன்  கி.மீ (88.688 கோடி கி.மீ.) தூரத்தில் உள்ளது. இதன் விட்டம் 116.460 கி.மீ. வியாழன்சூரியனை சுற்றி வர 12 ஆண்டுகள் ஆகின்றன. சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரியகோள் சனி. இதற்கு வளையங்கள் உண்டு. வியாழன் கோளுக்கும் மெல்லிய வளையங்கள் உண்டு. சனி கோள் பூமியிலிருந்து 1.6166 பில்லியன் கி.மீ (161.66 கோடி கி.மீ) தூரத்தில் உள்ளது. இதன் விட்டம் 139,820 கி.மீ. இது சூரியனைச் சுற்றி வர 29 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு கோள்களுக்கும் இடையில் உள்ள தூரம் 734,000 மில்லியன் கி.மீ.பொதுவாக இந்த இரண்டு பெரிய கோள்களும் அருகருகேதான் சுற்றி வருகின்றன. ரைஸ்பல்கலைக்கழக வானவியலாளர் பாட்ரிக் கார்ட்டிகன் கூற்றுப்படி, டிச.21 மாலை 6.30மணியளவில்  வியாழன் கோளும் சனிக்கோளும் ஒன்றையொன்று 0.1 டிகிரி என்ற அளவில் அருகில் சந்திக்க உள்ளன. அதுவும் நீண்ட இரவுதினமான டிசம்பர் 21-இல் இது போன்ற ஒரு பேரணைப்பு சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாம். 

பொதுவாக சனியும் வியாழனும், ஒவ்வொரு20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றையொன்று கடந்து செல்லுமாம். அப்படி கடந்து செல்வது இம்முறை மிக அருகில் அணைத்துக் கொண்டது போல உள்ளது. இந்த இரண்டு கோள்களும் கி.பி.769-லிலும், 1623-லிலும்வந்தனவாம். ஆனால் அப்போது வெறும்கண்ணால் பார்த்திருக்கின்றனர். இப்போதுதான் தொலைநோக்கி மூலம் இந்த அரிய நிகழ்வை பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இதற்கு இடையில் 1226, மார்ச் 4 ஆம் நாள் இது போலவே நிகழ்ந்ததாம். இதனை ஒருவர் பார்த்து பதிவு செய்துள்ளார். மீண்டும் இது போல சனி - வியாழன் சந்திப்பு2080 - இல் நிகழுமாம். 

===பேரா.சோ.மோகனா===

;