articles

img

தடை உடைத்து வீறு நடைபோட்டு வா! - எஸ்.வாலண்டினா

மனுவின் வழி அறமானது ஒரு நாள் அதை மாற்றும் நாளே தமிழர் திருநாள்- பாரதிதாசன் 

ஒன்றாய் பிறந்து,ஒன்றாய் வளர்ந்து, ஒன்றாய் விளையாடி, ஒன்றாய் படித்து ஆணும் பெண்ணும் குறிப்பிட்ட வயது வரை சமமாகத்தான் இருக்கிறோம்.குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அச்சம்,  நாணம், மடம் பயிர்ப்பு ஆகியவைகளை திணித்து இந்த கட்டுப்பாடு களை கடைப்பிடிப்பது பெண்ணின் கடமை என போ திக்கின்றனர். சிந்தனை, பேச்சு, இயங்கும் வெளி, உணவு, உடை, திருமணம், கல்வி,  என்ன செய்வது, எப்படி இருப்பது என அனைத்தையும் தீர்மானிப்பது பெண்ணின் கையில் இல்லை. மதங்கள், பண்பாடு, கலாச்சாரம் இவைகளை பாதுகாப்பதை பெண்ணின் கடமையாக இச்சமூகம் கருதுகிறது. பாலின சமத்து வம் குறித்த  ஐ.நா சபையின் ஆய்வு 183 நாடுகளில் இந்தியா 163 ஆவது இடத்தில் இருக்கிறது என தெரி விக்கிறது. சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பெண்க ளுக்கு 33% இட ஒதுக்கீடு கேள்விக் குறியாகவே உள்ளது. 16ஆவது  நாடாளுமன்ற தேர்தலின் போது நரேந்திர மோடி, நான் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவேன் என்றார். 2010இல் மாநிலங்களவையில் ஏகமனதாக ஏற்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்று வரை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற முடியவில்லை.ஆண் ஆதிக்க சிந்தனையும் பெண்கள் குறித்த பிற்போக்கான சிந்தனையும்  இட ஒதுக்கீட்டில் அமலாக்கத்திற்கு தடையாக உள்ளது. சமூ கத்தில் ஆண் பெண் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வு பெண்களுக்கு எதிரான வன்முறையாக ஏவுகிறது.

கண்களும் ஒளியும் போல கவின்மலர் வாசம் போல பெண்களும் ஆண்கள்தாமும் பெருந்தமிழ் நாடு தன்னில் தண்கடல் நிகர்த்த அன்பால் சமானத்தர் ஆனார் என்று பண்வந்து காதில் பாயும் நாள் என்னாளோ?

-என்றார் பாரதிதாசன்‌.

ஐ‌நாவின் உலக பெண் தின அறைகூவலில் 2023 ற்குள் பாலின சமத்துவம் நிலை நாட்டுவோம் என்று  கூறியிருக்கிறது. உலகளவில் 143 நாடுகளில் அர சியல் சாசன சட்டத்தில் சமத்துவம் வலியுறுத்தப்பட்டுள் ளது. 119 நாடுகளில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் அமலாக்கத்தில் உள்ளது‌. 125 நாடுகளில் பணியிடங்க ளில் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது‌151 நாடுகளில்  குறைந்தபட்ச கூலி  சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. இன்னும் ஏராளமாய் முன்னேற வேண்டி உள்ளது. 


இந்தியா பாலின சமத்துவத்தில் பின்தங்கியுள் ளது‌. எனவேதான் ஒரு போக பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிற பெண்களின் உடல் மீதான ஆளுமை என்பது மேலோங்கி நிற்கிறது. தென்னிந்தியாவில் பெரி யார் பெண்ணின் விடுதலைக்காக பேசினார். வட இந்தியாவில் அம்பேத்கர் மனு தர்மத்தை கொளுத்தி னார். இமயம் முதல் குமரி வரை சாதி, மதம் ,இனம் கடந்து பெண்களை திரட்டி பெண்களின் உரிமைகள்  பாதுகாப்பதற்காகவும் கோரிக்கைகளுக்காகவும் பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசாத அரசுக ளின் கொள்கைகளுக்கு எதிராக போராடும் போர் வாளாய் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் திகழ்கிறது. இந்திய நாடு விடுதலை அடைந்து 25ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடிக் கொண்டி ருக்கிறோம். சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் தியாகம் செய்தவர்கள் ஆண்களுக்கு நிகராய் பெண்க ளும் தான்‌ஒட்டுமொத்தமாக சுதந்திரப் போராட்ட வீரர் களின் கனவு தேச விடுதலையாக மட்டுமே இருந்த போது பெண் போராளிகளின் கனவு மண் விடுதலை யோடு பெண் விடுதலையும் வேண்டும் என்ற கோரிக் கையாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் பெண் மதிக்கப்படுகிறாளா? உரிய முக்கியத்துவம் பெறுகி றார்களா? என அலசிக் கொண்டு தான் இருக்கிறோம்.  விடை 10 சதவீதம் மதிப்பெண்கள் மட்டுமே ‌போட முடியும். தமிழகத்தில் மொத்த மக்கள்தொகை 2011இல் 7 , 28 , 38, 858, இதில் ஆண்கள்-3,61,58,871,  பெண்கள்- 3,59,80,087. சரிபாதியான பெண்கள் சமூகத்தில் சம மாகவும் அனைத்து துறைகளிலும் சமத்துவமாகவும் மதிக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை. இதை உடைப்பதே நமது நோக்கமாகும்.

உண்ணும் உணவுக்கும் உடுத்தும் உடைக்கும் தேர்வு செய்யும் உரிமைக்கும் என அனைத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள சவால் நிறைந்த இச்சமூக சூழலில் அதை மறுத்து பெண்ணின் அரசியல் செயல் பாட்டை சுயேச்சையான செயல்பாட்டை முடக்கிவிட வேண்டும் என நினைக்கும் பிற்போக்காளர்கள் அதிகம் தலைதூக்கியுள்ளனர்.  

தமிழகப் பெண்களின் முப்பது சதவீதம் மட்டும்தான் கண்ணியமானவர்கள் என்று கூறுகிறார். எஸ்.வி.சேகர் (பிஜேபியினுடைய தலைவர், நடிகர்). பத்திரிகை துறை யில் இருக்கும் பெண்கள் அதன் நிறுவனர்களின் படுக் கையை பகிர்ந்து கொண்டால் மட்டும் தான் பொறுப்புக்கு வர முடியும் என்கிறார். முந்தைய ஆளுநர் பெண்களின் தலையை தடவுவது, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்ப தென கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அமைச்சர்கள் சிலர் கூட பல பெண்களை ஏமாற்றி பாலி யல் வல்லுறவுக்கு உட்படுத்தி பல்வேறு துன்புறுத் தல்களை ஏற்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இவை தமிழகத்தில் பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் தெரிவிக்கிறது. 

பெண்களின் உரிமையை பாதுகாப்பதற் காக அவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவ தற்காக நானூறு  கிலோ மீட்டர் நடை பயணத்தை தமி ழகத்தில் மேற்கொண்ட போது, அதன் ஒரு குழு வாடிய பயிரை கண்ட பொழுதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் பிறந்த வடலூரிலிருந்தும் இன்னொரு குழு  திருவண்ணாமலையிலிருந்தும் புறப்பட்டது. பல நூற்றுக்கணக்கான பெண்கள் சீருடையுடன் சிங்கப் பெண்களாய் சீரிய நடை போட்டனர். வன்முறையற்ற தமிழகம் புதுச்சேரி,போதையற்ற தமிழகம் புதுச்சேரி என்பது நோக்கமாக முன்வைக்கப்பட்டது. நோக்கம் நிறைவேற இன்னும் பல ஆண்டுகள், கடந்த காலங்க ளை விட வேகத்தோடு போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. பிஜேபி அரசின் இந்துத்துவா கொள்கை பெண்களை மீண்டும் நான்கு சுவற்றுக் குள் தள்ள முயல்கிறது. முன்பை விட முனைப்புடன் செயல்படுவோம். தடை உடைத்து முன்னேறிட அனைத்து பகுதி பெண்களையும்  அழைக்கிறது மாநில மாநாடு.  செப்டம்பர் 29 அன்று மாநிலம் முழுவதும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பெண்களின் பேரணி பொ துக்கூட்டம் நடைபெற உள்ளது . செப்டம்பர் -30 அக் டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரதிநிதிகள் மாநாடும் சிறப்பாக நடைபெற உள்ளது. தமிழக பெண் ளை பாதுகாக்கும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட உள்ளன.ஒன்றாய்த் திரள்வோம்!வெற்றி பெறுவோம்! 

கட்டுரையாளர்: மாதர் சங்க மாநிலத் தலைவர்

;