articles

img

லெனின் - தன்னிகரற்ற கட்சி அமைப்பாளர் - அ.அன்வர் உசேன்

ஜனவரி 21 தோழர் லெனின் நினைவு தினம். சமூக மாற்றத்துக்கான சோசலிச புரட்சியை சாத்தி யமாக்க வேண்டும் எனில் கம்யூனிஸ்ட் கட்சி அவசியம் என்பதும் அத்தகைய கட்சி அந்தந்த சமூகத்து க்கு பொருத்தமான சித்தாந்த கோட்பாடுகளையும் அந்த சித்தாந்தத்தை செயல்படுத்துவதற்கு இசைந்த ஸ்தாபன கோட்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் எனும் ஆழமான புரிதலையும் உருவாக்கி யவர் லெனின். “அரசு அதிகாரத்தை கைப்பற்றுவ தற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” என லெனின் மிகத்தெளிவாகக் கூறினார். “மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை, ஸ்தாபன ஒற்றுமை மூலம் மேலும் உறுதிப்படுத்துவதன் மூலம்தான் தொழிலாளி வர்க்கம் வெல்லற்கரிய சக்தியாக பரிணமிக்க முடியும்” எனவும் லெனின் வலுவாக பயிற்றுவித்தார். மார்க்சும் ஏங்கெல்சும் சுயேச்சையான கட்சியை உரு வாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினாலும் அதன் கட்டமைப்பையும் அதன் பல்வேறு உட்கூறுகளையும் வடிவமைத்த சிற்பி லெனின் எனில் மிகை அல்ல.

கட்சி உறுப்பினருக்கு  தகுதி என்ன?

1903ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் (அன்று ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) போல்ஷ்விக் பிரிவின ரான லெனின் ஆதரவாளர்களுக்கும் மென்ஷ்விக் பிரிவினருக்கும் கடும் கருத்து மோதல் உருவான முக்கியக் கோட்பாடு “கட்சி உறுப்பினர் ஆவதற்கு யாருக்கு தகுதி உள்ளது?” என்பதாகும்.  ஒருவர் கட்சித் திட்டத்தை ஏற்றுக்கொண்டாலே போதுமானது; அவர் கட்சி உறுப்பினர் ஆகிவிடலாம் என மென்ஷ்விக் பிரிவின் தலைவரான மார்டோவ் வாதிட்டார். ஒரு படி மேலே போய் “வேலை நிறுத்தத்தில் அல்லது ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்கும் எவர் ஒருவரும் கட்சி உறுப்பினராக தன்னை அறிவித்து கொண்டால் அதனை நாம் அனுமதிக்க வேண்டும்” எனவும் கூறினார். இந்தக் கருத்தை மிகக்கடுமையாக நிராகரித்த லெனின், ஒருவர் கட்சி உறுப்பினர் ஆவதற்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என வாதிட்டார்: கட்சித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், கட்சி அமைப்பு ஏதாவது ஒன்றில் இணைந்து பணியாற்ற வேண்டும், கட்சிக் கட்டுப்பாடுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு இயந்திரத்தை எதிர்த்துப் போராடும் ஒரு  அமைப்பின் உறுப்பினர்கள் ஊசலாட்டம் இல்லாத வர்களாகவும் வர்க்க உணர்வைப் பெற்ற திறமையான போராளிகளாகவும் தொழிலாளி வர்க்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என லெனின் வலியுறுத்தினார். தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் உன்னதமான வர்க்க உணர்வு படைத்த போராளிகள்தான் கட்சியில் உறுப்பினராக வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படைதான் கட்சி; வர்க்கம் முழுவதுமே கட்சி அல்ல என லெனின் வாதிட்டார். கட்சி உறுப்பினர்களின் தரம் குறித்து லெனின் முன்வைத்த கோட்பாடுகள் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இன்றும் பொருந்தக் கூடியது.

ஜனநாயக மத்தியத்துவம்

இணையற்ற கட்சி அமைப்பாளர் என்ற முறையில் லெனின் அவர்களின் மகத்தான பங்களிப்பு ஜன நாயக மத்தியத்துவம் எனும் கோட்பாடு ஆகும். கம்யூ னிஸ்ட் கட்சியின் அமைப்பு கோட்பாடுகளில் உயிர்நாடி ஜனநாயக மத்தியத்துவம்தான். முதலாளித்துவ வாதிகளால் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குத லுக்கு உள்ளாகும் சில முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று ஜனநாயக மத்தியத்துவம். ஜனநாயகமும் மத்தி யத்துவமும் முரண்பட்ட அம்சங்கள் போல தோன்றினா லும் உண்மையில் அவை ஒன்றுக்கொன்று இணைந்தவை. லெனின் வழிகாட்டுதலில் கம்யூனிஸ்ட் அகிலம் 1921ஆம் ஆண்டு உருவாக்கிய “கட்சி அமைப்பின் கோட்பாடுகள்” எனும் மிகச்சிறந்த ஆவ ணத்தில் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது:

“கம்யூனிஸ்ட் கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது பாட்டாளி வர்க்க ஜனநாயகமும் மத்தியத்து வமும் இரண்டறக் கலந்த (fusion) கோட்பாடாக இருக்க வேண்டும். ஒன்றிலிருந்து இன்னொன்றை  பிரிக்க முடியாத உண்மையான செழுமைப்படுத்தப் பட்ட புத்தாக்கக் கலவைதான் (synthesis) ஜனநாயக மத்தியத்துவம்” என ஆவணம் முன்வைக்கிறது. மத்தியத்துவம் என்பது தலைமையின் கைகளில் அதி காரங்களை குவித்துக் கொள்வது என பொருள் அல்ல; அல்லது கட்சி உறுப்பினர்கள் மீது தலைமை தனது மூர்க்கத்தனமான அதிகாரத்தை திணிப்பது என்பது அல்ல. மாறாக மத்தியத்துவம் எனில் கம்யூ னிஸ்ட் செயல் நடவடிக்கைகளை மத்தியத்துவப் படுத்துவது என்று பொருளாகும் எனவும் இந்த ஆவணம் தெளிவாக்குகிறது.

விவாதங்களில் ஜனநாயகம்! அமலாக்கத்தில் மத்தியத்துவம்!

பிரச்சனைகள் விவாதிக்கப்படும் பொழுது அனை வரும் தமது கருத்துகளை கிளைகள் அல்லது குழுக்க ளில் விரிவாக பேசும் உச்சபட்ச ஜனநாயகமும் முடிவு கள் எடுக்கப்பட்ட பின்னர் கட்சி ஒரே மனிதனாக நின்று முடிவுகளை செயல்படுத்தும் மத்தியத்துவமும் இணைந்து இருப்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சம் ஆகும்.   “விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்” எனும் சிறு கட்டுரையில் லெனின் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நாடாளுமன்ற (டூமா) தேர்தல்களில் பங்கேற்பது என கட்சி மாநாடு முடிவு செய்தது. தேர்தல்களில் பங்கேற் பது என்பது ஒரு மிக முக்கியமான முடிவார்ந்த செயல் நடவடிக்கை! தேர்தல் காலத்தில் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் எனவோ அல்லது  பங்கேற்பு க்கு எதிராக விமர்சனம் செய்யும் உரிமையோ எந்த கட்சி உறுப்பினருக்கும் கிடையாது. ஏனெனில் இது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்கும். ஆனால் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பங்கேற்பு குறித்து விமர்சனம் செய்யும் உரிமை ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் முழுமையாக உண்டு” விவாதங்களுக்கு பின் முடிவு எடுத்த பிறகு அவற்றின் அமலாக்கத்தில் “செயல் ஒற்றுமை” மிக அவசியம். சிறுபான்மை கருத்து உடையவர்கள் முடிவு  அமலாக்கத்தில் ஒதுங்கியிருப்பதோ அல்லது முடிவு கள் குறித்து விமர்சிப்பதோ கட்சியின் ஒற்றுமைக்கு பயன் தராது. “அமைப்பு(ஸ்தாபனம்) இல்லாமல் ஒற்றுமை சாத்தியம் இல்லை; சிறுபான்மை கருத்துடையோர் பெரும்பான்மை கருத்துக்கு தலைவணங்காமல் அமைப்பு சாத்தியம் இல்லை” என்பது லெனின் அவர்களின் ஆழமான கருத்து.

லெனின் வாழ்விலிருந்து கற்போம்

தனது நியாயமான கருத்து நிராகரிக்கப்பட்டதாக ஒருவர் நினைத்தால் என்ன செய்வது? அதற்கும் லெனின் வாழ்வு நமக்கு படிப்பினையை தருகிறது. 1917 பிப்ரவரியில் ரஷ்ய தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைப்பாளிகளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஜார் மன்னன் ஆட்சியை தூக்கி எறிந்தனர். ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவு வது என்பதே குறிக்கோள். ஆனால் ஆட்சியைக் கைப்பற்றிய முதலாளித்துவவாதிகள் வழக்கம் போல உழைப்பாளிகளுக்கு துரோகம் இழைக்க முனைந்தனர்.  எனவே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை சோசலிசப்  புரட்சியாக நீட்டிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ரஷ்ய சூழல் அதற்கு உகந்ததாக உள்ளது எனவும் லெனின் கணித்தார். “ஏப்ரல் ஆய்வு குறிப்புகள்” எனும் ஆவணத்தை உரு வாக்கி போல்ஷ்விக் கட்சியின் விவாதத்துக்கு முன் வைத்தார். 

லெனின் கருத்தை கட்சி  ஏற்கவில்லை. மிக முக்கி யத்துவம் வாய்ந்த பீட்டர்ஸ்பர்க் கமிட்டி 13க்கு 2 என்ற வாக்கு விகிதத்தில் லெனின் கருத்தை நிராகரித்தது. மாஸ்கோ மற்றும் பல கமிட்டிகளும் லெனின் கருத்தை நிராகரித்தன. பிராவ்தா பத்திரிகை லெனின் கருத்தை கண்டித்து கட்டுரை வெளியிட்டது. பல முக்கியத் தலைவர்களும் லெனின் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் லெனின் சோர்வு அடையவில்லை. பல நாட்கள் கட்சிக்குள் தனது கருத்தின் நியாயத்தை பொறுமையாக விளக்கினார். புறச்சூழல்கள் குறித்து எடுத்துரைத்தார்.  அப்பொழுது மிக வேகமாக நடந்த சில நிகழ்வுகளும் லெனின் மதிப்பீடு சரியானதே என்பதை கட்சி ஊழியர்களுக்கு நிரூபித்தன. நீண்ட கருத்து பரிமாற்றத்துக்கு பின்னர் போல்ஷ்விக் கட்சி லெனின் கருத்தை (பெரும்பானமை அடிப்படையில்) அங்கீகரித்தது. அதற்கு பின்னர் இந்த கருத்தை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவா திப்பதை லெனின் உத்தரவாதப்படுத்தினார். மென்ஷ் விக்குகளும் லெனின் கருத்தை ஏற்க வேண்டிய சூழல் உருவானது. எல்லாவற்றிற்கும் மேலாக புரட்சி யின் தேவையை பெரும்பான்மையான உழைப்பாளி கள் அங்கீகரிப்பதையும் லெனின் உத்தரவாதப்படுத்தி னார். அதற்கு பின்னர்தான் புரட்சி எழுச்சிக்கு அறை கூவல் விடுக்கப்பட்டது. தனது கருத்தின் நியாயத்தை பெரும்பான்மையோர் ஏற்கும்வரை பொறுமையாக லெனின் செயல்பட்டார். தான் சரியென நினைக்கும் கருத்தை பெரும்பான்மை நிராகரித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை லெனின் வாழ்வு நமக்கு கற்றுக் கொடுக்கிறது. 

 

 

;