தொழிலாளர் சட்டங்களில் நீக்குப் போக்கான, உயர் அளவிலான நெளிவு சுழிவுகளைப் பின்பற்றுவதால் வேலைவாய்ப்பு குறையவே செய்கிறது. அதிலும் குறிப்பாக, நேரடியான, நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை வேகமாக குறைகிறது.
ஒன்றிய தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவ், பிசினஸ் லைன் நாளிதழில் ஜூன் 23 இல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதன் தலைப்பு ‘தொழிலாளர் சீர்திருத்தங்களும் வேலை வாய்ப்பு உயர்வும்’. இக்கட்டுரையில் ‘தொழிலாளர் ஒழுங்குமுறை கட்டமைப்பு கறாராக இருந்து வருவ தால் உற்பத்தி வளர்ச்சி, முதலீடு வளர்ச்சி, வேலை வாய்ப்பு விரிவாக்கம் பாதித்துள்ளது’ என்று அவர் வாதிடுகிறார். அசோசெம், இந்திய தொழில்களின் மகாசம்மேளனம் (CII), இந்திய வர்த்தக கழகங்க ளின் சம்மேளனம் (FICCI), சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், வி.வி. கிரி தேசிய தொழிலாளர் இன்ஸ்டியூட் ஆகிய அமைப்புகளின் அறிக்கைகளை தொழிலாளர் அமைச்சர் தனது வாதத்திற்கு பக்க பலமாக பயன்படுத்துகிறார். 1990 முதல் வளர்ச்சி குறித்த ஏராளமான கதைகள் புனையப்பட்டு வந்த வண்ணம் உள்ளன. இந்தியா வில் 1990 களிலிருந்து நவீன தாராளமயக் கொள்கை கள் அமலாகி வருகின்றன. தொழிலாளர் சீர்திருத்தங்க ளுக்கும் வளர்ச்சிக் கதைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விவாதம் துவங்கும் முன்னால், நாட்டின் வேலையின்மை குறித்து பரிசீலிப்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் நமது அமைச்சர் வேலையின்மை குறைந்து வருவது போல் சித்தரிக்கி றார். உண்மை நிலை என்ன? வேலையின்மை மிகவும் அபாயகரமாக வளர்ந்து வருகிறது என்பதே.
இந்திய சமூக பொருளாதார வரலாற்றில், 31 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட திருப்பத்திற்கு பிறகு நாடு கூர்மையான வேலையின்மை மற்றும் வேலை இழப்பு பிரச்சனைகளோடு போராடி வருகிறது. இந்தியா ஸ்பெண்ட் (India Spend) என்பது பொருளா தார ஆய்வு நடத்தும் நிறுவனம். இதன் 2019 ஆம் ஆண்டு அறிக்கைப்படி, தாராளமயக் கொள்கை கள் அமலாக துவங்கியதிலிருந்து போதுமான வேலை வாய்ப்புகளை நமது நாடு உருவாக்க வில்லை என்பதை இந்த நிறுவனத்தின் தரவு ஆய்வா ளர்கள் கண்டறிந்துள்ளனர். உருவான வேலை வாய்ப்புகளிலும் 92 சதவிகிதம் முறைசாரா அரங்கில் தான். கொரோனா பெரும் தொற்று பரவியதால் 2020-21இல் நாடு தழுவிய பொதுமுடக்கம் திணிக்கப் பட்டது. இதனால் பெருமளவு தொழில்கள் சீர் குலைந்தன. ஆனால் கொரோனாவிற்கு முன்பே வேலையின்மை பூதாகரமாக தொடர்ந்து இருந்துள் ளது. 40 ஆண்டுகளில் மிக மோசமான வேலையின்மை விகிதம் 6.1 சதவிகிதமாக 2017 -18 இல் இருந்தது என தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) தெரிவித்துள்ளது. கொரோனாவிற்கு முன்பே இந்த மோசமான நிலை. 2020 ஏப்ரல், மே தொடர்ந்து வந்த மாதங்களில் வேலையின்மை விகிதம் குறைய வில்லை.
உதாரணமாக, 2021 டிசம்பரில் 5.3 கோடி இந்தியர் பெருமளவில் பெண்கள் உள்பட வேலை யற்றோராக இருந்தனர் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) மதிப்பீடு செய்து ள்ளது. 2021 டிசம்பரில் வேலையின்மை விகிதம் 7.91 சதவிகிதமாக இருந்தது. அக்னிபாதைத் திட்டத்திற்கு எதிராக, நாடு தழுவிய இளைஞர்களின் கோபம், பரந்த அளவிலான ஆர்ப்பாட்டங்களாக வெடித்தது. இது அச்சுறுத்தும் வகையில் வளர்ந்து வரும் வேலையின்மையின் கடுமையை பளிச்சென எடுத்துக்காட்டுகிறது. நமது இளைஞர்களின் கிட்டத்தட்ட கலகம் எனும் கூறும் வகையில் ஏற்பட்ட வெடிப்புக்கு முன்பே, ஆங்காங்கே பெரும் திரளாக வேலை தேடி மனு போட்டுள்ள இளைஞர்கள், பெரும் திரளான, தன்னெ ழுச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விவரங்கள் ஏராளமாக வருகின்றன. சமீபத்தில் 35 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு 1.25 கோடி பேர் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்திற்கு மனு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் சீர்திருத்த அனுபவங்கள்
வி.வி .கிரி தேசிய லேபர் இன்ஸ்டிட்யூட் ஆய்வு 122/2017, சஞ்சய் உபாத்தியாயா மற்றும் பங்கஜ்குமார் ஆகியோர் நடத்தினர். ராஜஸ்தானிலும் இதர சில மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் சட்ட திருத்தங்கள் முதலீடுகளை ஈர்ப்பதில், வளர்ப்ப தில், வேலைவாய்ப்பு வளர்ச்சியில் பிரதிபலிக்க வில்லை. அதாவது சீர்திருத்தங்கள் வெற்றி பெற வில்லை. இது தொழிலாளர் அமைச்சரின் அனுமா னங்களுக்கு எதிர்மறையாக இருப்பதை காண முடியும். ஆய்வின் முடிவு என்ன? இத்தகைய மாநிலங்களில் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகள், தாக்கத்தை பொறுத்தவரை தொழிலா ளர் மீது சுமத்தப்பட்ட கூடுதல் சுமைகளை தெளிவாகக் காணலாம். இடைக்காலத்திலாவது தொழிலாளர் மீது சுமத்தப்பட்ட கடும் துயரங்களை நீக்கிட உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும். கட்டுப்பாடுகள் அற்ற தொழிலாளர் சந்தையால் ஒட்டுமொத்தமாக வளர்ச்சி வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுவது, வி.வி. கிரி இன்ஸ்டியூட்டின் எந்த ஆய்வு அடிப்படையில் ஏற்பட்டது என நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தொழிலாளர் சட்ட கட்டுப்பாடுகளை அகற்று வதில் ராஜஸ்தான் அரசு மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகள் சாலச்சிறந்தவை என அமைச்சர் அடிக்கடி கூறுகிறார் அல்லவா? அவரது கவனத்திற்கு மிக சமீ பத்திய இது குறித்த ஆய்வு அறிக்கையை சமர்ப் பிக்கின்றோம். நிலைத்து நிற்கும் வேலைவாய்ப்பு குறித்த அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழக மையம், ராஜஸ்தான் சோதனைகள் குறித்து மட்டும் தனி ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. ஆய்வின் தலைப்பு “ராஜஸ்தானில் தொழிலாளர் சீர்திருத்தங்கள் - வரமா? அல்லது தடையா?” ஆய்வின் முடிவுகளை ஆய்வு செய்த திதி கோஸ்வாமி மற்றும் சௌரப் பால் ஆகியோர் 2021 ஜனவரியில் வெளியிட்டனர். “எங்களது அனுபவப்பூர்வமான ஆய்வு எதை காட்டுகிறது? சீர்திருத்தங்களால் தொழிலாளர் வேலை குறைகிறது. இது நாம் விரும்பும் விளைவு அல்ல,” என மேற்கண்ட ஆய்வு முடிவு கூறுகிறது. இது போன்ற முடிவையே, 2010இல் சௌஜா, 2014இல் கபூர், சந்துரு, 2015-இல் சாட்டர்ஜி மற்றும் கான்பூர், தீக்கின் மற்றும் ஹால்டர், 2019-இல் ராய் சௌத்ரி, 2020-இல் ராய், டுபே மற்றும் ராமையா அறிக்கைகளும் கூறுகின்றன. தொழிலாளர் சட்டங்க ளில் நீக்குப் போக்கான, உயர் அளவிலான நெளிவு சுழிவுகளைப் பின்பற்றுவதால் வேலைவாய்ப்பு குறையவே செய்கிறது. அதிலும் குறிப்பாக, நேரடி யான, நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை வேகமாக குறைகிறது.
உலக வங்கி 2014இல் “தொழில் நடத்துவதை எளிமையாக்குவது” குறித்த ஆய்வை வெளியிட்டது. இந்தியாவில் 10 -இல் ஒரு பங்குக்கும் சற்று மேலான அளவு கம்பெனிகள் மட்டுமே தொழி லாளர் சட்ட நெறிமுறைகள் பெரிய தடையாக உள்ள தாகக் கருதுகின்றன. குஷீரா என்பவர் 2002-இல் ஒரு ஆய்வு மேற்கொண்டார் அவர் கூறுவது என்ன? குழந்தை உழைப்பு முறை நீக்குதல் மற்றும் கொத்த டிமை முறை நீக்குதல் போன்ற சர்வதேசத் தொழிலா ளர் ஸ்தாபனத்தின் அடிப்படை தொழிலாளர் கோட்பாடுகளைப் பின்பற்றினால் சிறந்த உழைப்பா ளிகள் உருவாகின்றனர். தொழிலாளர் உழைப்பு மதிப்பிற்கும் (தொழிலாளர்க்கான செலவு), உற்பத்தித் திறனுக்கும் உள்ள உறவு மேம்படுகிறது. சங்கம் சேரும் உரிமை, கூட்டுப் பேர உரிமை போன்றவை மூலம் கூடுதல் சமூக அரசியல் நிலைத்தன்மை ஏற்படுகின்றன. 1991 பிரீமேன் மற்றும் மெடாப் என்ன கூறினர்? ஒரு கம்பெனியின் உற்பத்தி மேம்பாட்டிற்கு தொழிற் சங்கம் உதவியாகவே இருக்கிறது.
நமது நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் சரி பாதிக்கு மேல் உள்ளனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமானது. இந்த இளைஞர்களின் இளமைத் துடிப்பை பயன்படுத்த, அனைவருக்கும் வேலை வழங்கும் வகையில் தொழிலாளர் சந்தை அமைய வேண்டும்; இதற்கு ஏற்ப வளர்ச்சி இருக்க வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படை உள்நாட்டு, வெளி நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான கொள்கை களை விட்டொழிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியோ வேலை வாய்ப்பு வளர்ச்சியோ தொழிலா ளர் சட்ட சீர்திருத்தங்களால் ஏற்படாது. தொழிலாளி யின் வாங்கும் சக்தி உயர்ந்து, சரக்குகளுக்கான கிராக்கி உயர்ந்தால் தான் வளர்ச்சி சாத்தியம். உலகின் வலுவான பொருளாதாரங்களைப் போல் நம் நாடும் முன்னேற தொழிலாளர் சட்ட திருத்தங்கள், விதிகள் அமலாக்கம் நிச்சயமாக உதவி செய்யாது; நம் தொழிலாளர்களை அடிமைகளாக்கத்தான் உதவும்; மக்களின் நுகர்வு சக்தி பெருமளவு குறைந்து வறுமைத் தாண்டவம் ஆடும். அது தொழிலா ளர் சந்தையில், முதலீடுகளில், வேலை வாய்ப்புகளில் மந்த நிலையையே ஏற்படுத்தும்.
நமது அமைச்சருக்கு நாம் நினைவூட்டுகிறோம். தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் என்று இல்லாத, தொழிலாளர் சட்டங்கள் சீர்திருத்தம் என்பதன் பெய ரால் சட்டங்களை தளர்த்தாதபோதே, 2014க்கு முன்பு அதிக வளர்ச்சி விகிதத்தை நம் நாடு கண்டுள்ளது. நாட்டின் செல்வத்தை உருவாக்கும் தொழிலாளர் நலன்களை பலி கொடுத்து, பெரும் மூலதனக் காரர்கள் நலன்களுக்கு ஒத்திசைவான தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும்.
கட்டுரையாளர் : தேசிய செயலாளர், சிஐடியு. தமிழில் : ஆர்.சிங்காரவேலு