articles

மணிப்பூரில் அமைதி திரும்பி விட்டதா? - தமிழில்: ச.வீரமணி

பிரதமர் மோடி, தன்னுடைய சுதந்திர தின உரையின் துவக்கத்தில் மணிப்பூர் நிலை மையைத் தொட்டிருக்கிறார். ஆனால்,  அவர் கூறிய விஷயங்கள் மணிப்பூர் மக்களையும், நாட்டில் மணிப்பூர் குறித்துக் கவலைப்படுவோர் அனைவர் மத்தியிலும் ஏமாற்றத்தையே அளித்தி ருக்கிறது.  அங்கே மோதல்கள் எப்படி ஏற்பட்டன, மக்கள் எப்படி உயிரிழந்தார்கள் மற்றும் பெண்கள் அவ மதிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று மேலோட் டமாகப் பேசியபின், அங்கே கடைசி சில தினங்க ளாக அமைதி திரும்பி இருப்பதாகவும் கூறியி ருக்கிறார்.  ஒன்றிய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இணைந்து அங்கே அமைதியை நிலைநாட்டியிருப்ப தாகவும், பிரச்சனைகளைத் தீர்த்து வைத்திருப்பதா கவும் கூறியிருக்கிறார். ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டு, இன மோதலை ஏற்படுத்துவ தற்குக் காரணமாக இருந்த பாஜக முதலமைச்சர் பைரேன் சிங், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதுதான், இந்தப் பேச்சின் பொருள். கொடூரமான முறையில் பாலியல் குற்றங்களுக்கு ஆளானவர்களுக்கு நீதி வழங்கு வது குறித்தோ, கூருணர்வுமிக்க மணிப்பூர் மாநிலம் எப்படி இனமோதலுக்கும், கலவரங்களுக்கும் தள்ளப்பட்டது என்பது குறித்தோ எதுவும் மோடி யின் உரையில் இல்லை. இவருடைய உரையின் அரசியலில், 2024 தேர்தலை மனதில் கொண்டு வண்ணம் தீட்டப்பட்டிருக்கிறது.

அதேபோல, எதிர்க்கட்சிகள், சிறுபான்மை மக்களை ‘தாஜா’ செய்யும் அரசியலை நடத்து கின்றன என மோடி அவதூறு பரப்பியிருக்கிறார். இவருடைய சுதந்திரதின உரையில் இது புதிய தும், தீய அறிகுறியுடன் கூடியதுமாகும். தில்லி  செங்கோட்டையில் இருந்து,  70 கிலோ மீட்டர் தூரத்தில் ஹரியானா மாநிலத்தில் நூ என்னுமிடத் தில் ஒரு சில தினங்களுக்கு முன்புதான் மியோ முஸ்லீம்கள் மீது இந்துத்துவா குண்டர்களாலும், மாநில அரசாங்கத்தாலும் கொடூரமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. முஸ்லீம்களின் வீடுகளும் கடைகளும் புல்டோசர் கொண்டு தரை மட்டமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை யில்தான், மோடி, சிறுபான்மையினர் ‘தாஜா’ செய்யப் படுவதாகக் கூறி கண்டித்திருக்கிறார்.  மக்களவைத் தேர்தலைக் குறி வைத்து, மத வெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்பதற்கான சமிக்ஞையே  சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கள் என்பது தெள்ளத் தெளிவாகும். ஒட்டு மொத்தத்தில்,  நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை என்பது பாஜக-ஆர்எஸ்எஸ்-சின் நச்சு அரசி யலை பகிரங்கமாகவே வெளிப்படுத்தி இருக்கிறது.