articles

img

பேரு வெச்சையே? சோறு வெச்சையா? - கே.ரங்கராஜ், சிஐடியு, திருப்பூர் மாவட்ட செயலாளர்.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் குவிக்கின்ற பல லட்சக்கணக்கான தொழிலாளர் களை திருப்பூர் வாழ வைக்கிறது. அந்த தொழிலாளி களின் உழைப்பால் திருப்பூரும் வாழ்ந்து கொண்டி ருக்கிறது. லட்சக்கணக்கான பனியன் தொழிலாளிகளின், பல ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளிகளின், இன் னும் பனியன் தொழில் சார்ந்து உழைக்கின்ற எண்ணற்ற தொழிலாளிகளின் உழைப்பும், வியர்வையும் கலந்து திருப் பூரை உலக வரைபடத்தில் உற்றுப் பார்க்க வைத்திருக்கி றது. இந்திய மொழிகள் எல்லாம் திருப்பூரை உச்ச ரித்துக் கொண்டே இருக்கிறது. பின்னலாடை தொழிலில் உள்நாட்டு வர்த்தகத்திலும், வெளிநாட்டு வர்த்தகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக முன் னேறி பல ஆயிரம் கோடிகள் அன்னிய செலாவணிகளை ஈட்டி கொடுத்த திருப்பூர் பின்னலாடை தொழில் இன்று மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது. பருத்தியையும், பஞ் சையும், நூலையும் வைத்து, வர்த்தக சூதாடிகளும், பதுக்கல்  பேர்வழிகளும் ஒன்றிய மோடி அரசின் அரவ ணைப்போடு தங்களின் லாபவெறிக்காக ஆடிய ஆட்டம் திருப்பூர் பின்னலாடை தொழிலை சிதைத்து கந்தலா டையாக மாற்றி விட்டது.

கொரோனாவை விட கொடூரமான தாக்குதல்

கடந்த காலத்திலும், தொழிலாளிகளுக்கு சிக்கலும், நெருக்கடிகளும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடி அப்படிப்பட்டதல்ல. தேசத் தையோ, தொழிலையோ, தொழிலாளர்களை பற்றியோ சிறிதும் சிந்திக்காத ஒன்றிய அரசின் கையாலாகாத்தன மாகும். இதன் பின்னணியையும், அதற்குள் ஒளிந்திருக்கிற மோடி அரசின் நுணுக்கமான அரசியலையும் எடுத்துச் சொல்லி, பல தரப்பினரையும் இணைத்துக் கொண்டு திருப்பூரின் பின்னலாடை தொழிலையும், தொழிலாளர்க ளையும் காப்பாற்றிட ஒரு பொறுப்பு மிக்க அரசியல் அமைப்பாய், தொழிற்சங்கமாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிஐடியு தொழிற்சங்கமும் பல்வேறு இயக்கக் களை முன்னெடுத்து நடத்தியுள்ளோம். தொடர்ந்து நடத்திடுவோம். எனினும், இப்போது பனியன் தொழிலுக்கு ஏற்பட்டி ருக்கிற நெருக்கடி, இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு பல அனுபவங்களை தந்து  கொண்டிருக்கிறது திருப்பூர். திருப்பூர் மாநகரின் அகல மான, பிரதான சாலைகளில் இரு மருங்கிலும் பிரம்மாண்ட மான கண்ணாடி மாளிகைகளை போல கட்டிடங்கள் இருந் தாலும், அவற்றை கடந்து குண்டும், குழியுமாக இருக்கும் சாலைகளில் ஊருக்குள் இதுவரை காணாத புலம்பல்கள் களையும், துயரங்களையும் பார்க்க முடியும். நான் பேசிய அந்த பனியன் தொழிலாளி, பவர் டேபிளில் 20 வருடத்திற்கும் மேலான அனுபவம் பெற்றவர். வேலை  குறைந்த காரணத்தால் இந்த ஏழு மாத காலத்தில் மட்டும், ஏழு கம்பெனிகளில், கிடைத்த வேலைகளை எல்லாம் செய்திருக்கிறார். மனைவிக்கும் சரியாக வேலை இல்லாத நிலையில் சராசரியாக வாரம் 2500 தான் அவ ருக்கு கிடைத்திருக்கிறது. ஒரு விரக்தி நிலையில் தான்  அவர் பேசினார். வீட்டு வாடகை ரூபாய் 4000 மூன்று  மாதமாக கொடுக்க முடியவில்லை. குடும்பச் செலவுகளை ஈடு கட்ட முடியாமல், மைக்ரோ பைனான்ஸில் வாங்கிய கடனுக்கு வட்டி ஏறிக் கொண்டே இருக்கிறது. 10-ஆம்  வகுப்பு, 8-ஆம் வகுப்பு படிக்கிற இரண்டு பையன்கள். கண வன், மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போயும் கடன் இல்லாம நிம்மதியாக வாழ முடியவில்லை என்று நொந்து  பேசினார். அடுத்த வீதியில் வசித்த இவரது நண்பர் தனது மனைவி, 7 வயது பெண் குழந்தை அவரது தந்தை யோடு வசித்தவர்.

வீட்டு வாடகை, கடன் தொல்லைகள் தாங்க முடியா மல் இரவோடு இரவாக குடும்பத்தோடு காணாமல் போய் விட்டார். பூட்டிய வீட்டை உடைத்தால் பிரச்சனை ஆகுமா? காவல் நிலையம் போகலாமா? என்று வீட்டுக்காரர் புலம் பிக் கொண்டிருப்பதாக கூறினார். இவர்கள் இருவரும் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி தான். ஆனால் வட மாநி லத்தைச் சார்ந்தவர் அல்ல. தமிழ்நாட்டின் தென் மாவட்டத் தைச் சார்ந்தவர். இதைப்போன்றோ, இதை விட கூடுத லாகவோ ஊருக்குள் பல சம்பவங்கள் நடந்து கொண்டி ருக்கின்றன. கொரோனா பேரிடர் தாக்கியபோது அதிலிருந்து மக் களை காப்பாற்றுகிற முன் களப்போராளிகள் என்று தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிக ளைச் செய்பவர்களை கூறுவார்கள். இன்று பனியன் தொழி லுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதலில் முன் களப் போராளிகள் வேறு யாரும் அல்ல, தொழிலாளிகள் தான்.  ஆனால் தாக்குதலை தாங்க முடியாமல் துவண்டு துடித்துக் கொண்டிருக்கிறார்கள் பனியன் தொழிலாளிகள்! 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என இரவு, பகல் ஓயா மல் உழைத்த பனியன் தொழிலாளி நடுத்தெருவில் நிற்கி றான், என்றால் டாலர் சிட்டி, குட்டி ஜப்பான் என்று பெருமை பேசுவதில் அர்த்தம் இல்லை. தலைமுறை, தலைமுறை யாக உழைத்த பனியன் தொழிலாளி மேம்படாததற்கு என்ன காரணம் என்ற கேள்வி முக்கியமானது.

ன காரணம் என்ற கேள்வி முக்கியமானது. கொஞ்சம், கொஞ்சமாக ஒவ்வொரு உரிமைகளையும் இழந்து முறைசாரா தொழிலாளிகளைப் போல, மிகப்  பெரும்பாலான பனியன் தொழிலாளிகள் நிறைந்து இருக்கின்றார்கள். பனியன் தொழில் தொழிற்சாலை சட்ட (Factary Act) வரம்பிற்குள் இருக்கும்போது, அதில் வேலை செய்யும் பனியன்  தொழிலாளி நிரந்தர தொழி லாளி என்பதை இழந்து,  பீஸ்ரேட் தொழிலாளியாக வும், ஒப்பந்த தொழிலாளி யாகவும் எப்படி மாறிப்  போனான்? நவீன தாராள மயத்தின் தாக்கத்தில்,  உலக வர்த்தகத்தின் லாபவெறி சதுரங்க ஆட்டத்தில், வெட்டுப்படும் சிப்பாய்களாக பனியன் தொழிலாளிகள் தங்கள் உரிமைகளை இழந்து கொண்டிருக்கிறார்கள். நிரந்தரம் இல்லாமல், எவ்வித சட்ட, சலுகையும் இல்லா மல், தங்கள் வாழ்க்கைக்கான ஊதியத்திற்காக மாறி, மாறி  ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். நிறுவனங்கள் குறைந்த கூலிக்கான ஆட்களை தேடிக் கொண்டே இருக்கி றார்கள்.  எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் சரி தகுந்த ஏற்பாடுகளைச் செய்து அவர்களை கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு பெயரும் அரசு வைத்துள்ளது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்று! பேரு வெச்சையே? சோறு வெச்சையா? என்று தலையில் கொட்டும் கேள்வி ஒன்று தமிழில் உள்ளது.

லம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்று பெயர் வைத்தீர் களே? புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டம் 1979-ஐ  செயல்படுத்தினீர்களா? என்ற கேள்வியை எழுப்ப வேண் டிய முக்கியமான தருணம் இது. தொழிற்சாலை சட்டம், ஒப்பந்த (காண்ட்ராக்ட்) தொழிலாளர் சட்டம், புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டம் 1979 ஆகியவற்றை நடை முறைப்படுத்திடவும், தொழிற்சங்கங்களுடன் போடப் பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைத்திடவும், தொடர்ந்து இயங்குவதும், போராடுவதும் பனியன் தொழிலாளர்க ளின் வாழ்வுரிமையை காப்பதில் முதன்மையானதாகும். இந்தச் சிந்தனைகளை புதிய தலைமுறை பனியன்  தொழிலாளிகளிடமும், புலம்பெயர்ந்த தொழிலாளிகளி டமும் கொண்டு சேர்த்து ஒன்று படுத்திட வேண்டும். பாவேந்தர் பாரதிதாசனின், “அறிவை விரிவு செய் அகண்டமாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு மக் களை! அணைந்து கொள் உனை சங்கமமாக்கு!”என்ற வரி களின் நிதர்சன வெளிச்சத்தோடு,  சாதிவெறி, மதவெறி, இன வெறிகளை கடந்த தொழிலாளி வர்க்க நெறியோடும், நம்பிக்கையோடும், தொழிலாளிகளின் வாழ்வுரிமையை காத்திட முன் செல்வோம்! நாம் வெல்வோம்!!
 

 

;