articles

img

ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி வேண்டும்; முதல்வர் தலையிட வேண்டும்! - ஏ.ராதிகா

ஸ்ரீமதி விஷயத்தில் தமிழக  முதலமைச்சருக்கு தெரியாமல் பல விஷயங்கள் மறைக்கப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. தமிழக முதலமைச்சர் தனது நேரடி கண்காணிப்பில் வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், போராட்டம் என்பது சட்ட விரோத செயல் அல்ல; அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கிற உரிமை. இதை ஒடுக்கும் மனோபாவத்தை  கொண்டிருப்பவர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள் ளாக்கிய மரணம் கள்ளக்குறிச்சி கனியா மூர் சக்தி பள்ளியில் மாணவி ஸ்ரீமதி சந்தே கத்திற்கு இடமான முறையில் மரணம் அடைந்தது. இது குறித்து ஆரம்பம் முதலே  பல்வேறு சந்தேகங்கள், சர்ச்சைகள் பள்ளி தாளாளர் மீது எழுந்துள்ளது. பள்ளி தாளாளர் ஆர் எஸ் எஸ் பின்புலத்தை மையமாகக் கொண்டு செயல்படுபவர் என்பது நாடறிந்த உண்மை. ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருவதை பல்வேறு தரப்பினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.   தமிழகத்தில் எப்போ துமே சர்ச்சைக்குரிய வகையில்  பேசி  அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பாஜக தலைமை, இது வரை ஸ்ரீமதி வழக்கில் மௌனம் காத்து வருவது, பாஜக வோடு பள்ளி தாளாளர் இப்போது வரை கொண்டி ருக்கும் நெருக்கம் காரணமாகத்தான் என்பதே உண்மை. 

மாதர் சங்கம் தலையீடு

சம்பவம் நடந்த உடனேயே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இப்பிரச்சனையில் தலையீடு செய்தது. இப்பிரச்சனையில் இன்று வரை சிபிசிஐடி விசார ணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத சூழலில், ஸ்ரீமதிக்கு நியாயம் கேட்டு தமிழக காவல்துறையின் நடவடிக்கையை விரைவுபடுத்தக் கோரி சிபிசிஐடி அதிகாரியை சந்திக்க மாதர் சங்கத்தின் சார்பில் முயற்சி செய்தோம். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. உடனடியாக சிபிசிஐடி அதிகாரிக்கு மாதர் சங்கத்தின் கோரிக்கைகளை மனுவாக அனுப்பி வைத்தோம். மாதர் சங்கம் அனுப்பிய மனுவிற்கு எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில் ஒட்டுமொத்த தமிழக காவல்துறைக்கும் பொறுப்பாக இருக்கும் தமிழக டிஜிபி அலுவலகத்தின் முன்பு மாதர் சங்கத்தின் கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட போராட்ட வடிவை தேர்வு செய்தோம்.

டிஜிபியுடன் சந்திப்பு

போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்ற நிலை யில், ஒரு கட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்கள் டிஜிபியை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகிறபோது அவ்வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்; ஆனால் ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் இன்றுவரை அது நடைபெறவில்லை. ஆகவே உடனடியாக போக்சோ வழக்கு பதிவு செய் யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். அடுத்ததாக  சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர், அவர் மகன்கள் மீது எழும் நியாய மான சந்தேகங்கள் மீது காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினோம். மாதர் சங்கத்தின் கோரிக்கைகளை  மிகப் பொறு மையாக நிதானமாக கேட்ட தமிழக டிஜிபி அவர்கள், ஸ்ரீமதி வழக்கில் பள்ளி நிர்வாகம் எந்த தவறும் செய்ய வில்லை என்ற தனது ஆணித்தரமான கருத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், மாதர் சங்கத் தலைவர்கள் தனது கோரிக்கைகளை மீண்டும் உறுதிபட டிஜிபி அவர்களிடம் தெரிவித்தனர்: 

கோரிக்கைகள்

1) ஸ்ரீமதி என்கிற இளம்பெண்ணின்  மரணம் சந்தேக சூழலில் நடந்துள்ள பின்னணியில், பாலியல் துன் புறுத்தல் அல்லது வல்லுறவு நடந்திருக்கும் சாத்தி யக் கூறுகளை முறையாக விசாரித்து, உரிய போக்சோ பிரிவுகளை இணைக்க  வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையில், பிறப்புறுப்பு பகுதியில் காயங்கள் இல்லை என வந்திருப்பதை வைத்து மட்டும், பாலியல் தாக்குதல் நடக்கவில்லை  என்ற முடிவுக்கு வர முடியாது. பாலியல் துன்புறுத்தல் மற்றும் வல்லுறவு பற்றிய போக்சோ  சட்ட வரையறையின் படியே இதனை அணுக வேண்டும்.

2) ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் உட்பட விசாரணையின் பொது வான கட்டங்களை பாதிக்கப்பட்ட பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 1985 ஐநா சபை உடன் படிக்கை இதனை வலியுறுத்துகிறது. தகவல் வளையத்தின் வெளியே அவர்களை நிறுத்துவது சரியல்ல.  

3) குற்றம் சாட்டப்பட்டு, பிணையில்   விடுவிக்கப்பட்ட வர்களின் பிணையை   ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) சிபிசிஐடி விசாரணையை துரிதப்படுத்தி குற்றப் பத்திரிகை   தாக்கல் செய்து வழக்கு நடத்தப்பட  வேண்டும்.

 5) ஸ்ரீமதியின் தாயார் குறித்து முகநூலில் அவ தூறாக சித்தரித்தவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

6) பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும்.  

7) குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.

8) அரசு தரப்பில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அவர்கள் கண்காணிப்பில் பள்ளியை நடத்த வேண்டும்.

9) சம்பவம் நடந்த பின் தலையிடாமல் மெத்தனமாக இருந்ததன் மூலம் தடய அழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்த உள்ளூர் காவல்துறையினர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இந்தக் கோரிக்கைகளை வலுவாக வலியுறுத்திய பிறகு, தமிழக காவல்துறை அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தின்  தலைவர்களை  நடத்திய விதம் என்பது துளியும் ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. 

அடக்குமுறை தீர்வல்ல

போராட்டத்தின் முதல் நாள் நள்ளிரவு துவங்கி வட மாவட்டங்களிலும், சென்னையிலும் மாதர் சங்க தலைவர்களின் வீடுகளுக்கு சென்று பெண்களை காவல்துறை மிரட்டியது. அனைத்தையும் எதிர் கொண்டு, டிசம்பர் 24 அன்று டிஜிபி அலுவலகம் முன்பு சாரை சாரையாக திரண்ட மாதர் சங்கப் பெண்கள் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான  வன்முறையை ஒரு போதும் அனுமதியோம்; எங்கள் வீட்டு குழந்தை ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டும் என்று விண்ணதிர முழக்கமிட்டனர். போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்தபோது பஸ் மற்றும் தனியார் வாகனங்களில் இருந்தவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மிகுந்த அமைதி காத்தனர். போராட்டம் நடக்கும் வழியில் வந்த ஆம்பு லன்ஸ்களுக்கு பெண்கள் வழி விட்டு, பிறகு போராட் டத்தை தொடர்ந்தனர். பொதுமக்களுக்கு எந்த வகை யிலும் இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை முன்னெடுத்தனர். மறுநாள், சென்னையில் போராட்டத்தில் கலந்து கொண்ட 250 பேர் மீது காவல் துறை வழக்கும் பதிவு செய்திருக்கிறது. 

முதல்வர் தலையிட வேண்டும்

தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழக பெண்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. வாழ்வாதாரம், பெண் கல்வி உள்ளிட்ட விஷயங்கள் கூடுதல் அக்கறை எடுத்து தமிழக அரசு செயல்படுவதை ஜனநாயக மாதர் சங்கம் மனமுவந்து வரவேற்கிறது. வன்முறை பிரச்ச னைகளால் பெண்கள் பாதிக்கப்படுகிற போது அவர்க ளுக்கு உறுதுணையாக தமிழக அரசு இருந்துள்ளதை மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறோம். அதே நேரத்தில் ஸ்ரீமதி விஷயத்தில் தமிழக  முதலமைச்சருக்கு தெரியாமல் பல விஷயங்கள் மறைக்கப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. தமிழக முதலமைச்சர் தனது நேரடி கண்காணிப்பில் வழக்கின் விசாரணையை துரி தப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  மேலும், போராட்டம் என்பது சட்ட விரோத செயல் அல்ல; அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கிற உரிமை. இதை ஒடுக்கும் மனோபாவத்தை கொண்டி ருப்பவர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இப்பிரச்சனையில் மாதர் சங்கத்தின் கோரிக்கை களை எடுத்து வைக்க தமிழக முதலமைச்சரை சந்திப்ப தற்கான நேரம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்ரீமதி வழக்கில் நீதிக்கான போராட்டத்தை அனைத்து தளங்களிலும் தொடர்வோம்.  மாதர் சங்கப் போராட் டத்தை தமிழகத்தில் பல்வேறு காட்சி ஊடகங்களும் youtubeகளும் செய்தியாக்கி இருந்தன. இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து தங்களது ஆதரவு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்துள்ளவர்களின் 95 சதவீதம் பேர் இப் பிரச்சனையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை; தமிழக முதல்வர் உரிய கவனம் செலுத்திட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர். ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு நாம் நடத்திய போராட்டத்தை வரவேற்றுள்ளனர். எனவே இப்பிரச்ச னையில் முதல்வர் தலையிட்டு நியாயமான நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

கட்டுரையாளர்: மாநில பொதுச் செயலாளர்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்




 

;