articles

img

மக்கள் உயிரை விட ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களின் நலன் பெரிதா? - நாகை வி.பி.மாலி

சென்னை, மார்ச் 23-  மக்களின் உயிரை விட ஆன்லைன் சூதாட்ட உரி மையாளர்களின் நலன்  பெரிதா? என்று சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியது. தமிழ்நாடு சட்டப்பேர வையில் வியாழனன்று (மார்ச் 23) முதலமைச்சரால் மீண்டும் கொண்டுவரப்பட்ட இணையவழி சூதாட்டத் தைத் தடை செய்தல் மற்றும்  இணையவழி விளை யாட்டுக்களை ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்ட மசோதாவை வரவேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை வி.பி.மாலி பேசியது வருமாறு:- ரம்மி உள்ளிட்ட ஆன் லைன் சூதாட்ட விளை யாட்டின் பாதகமான விளை வுகளின் பின்னணியில், அதனை ஒழுங்குபடுத்த ஆலோசனைகள் கோரி உரு வாக்கப்பட்ட நீதியரசர் கே. சந்துரு தலைமையி லான நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படை யில், கடந்த ஆண்டு தமிழ் நாடு அரசு மேற்கூறிய ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது.  அதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

கடந்த அக்டோபர் மாதம்  தமிழ்நாடு சட்டப்பேர வையில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவர் சில சந்தேகங்களை கேட்ட போது, நேரிலேயே சந்தித்து தெளிவான விளக்கமும் மாநில அரசின் தரப்பில் தரப்பட்டது பல மாதங்கள் மசோதாவைக் கிடப்பில் போட்டு வைத்துவிட்டு, மார்ச் 6 ஆம் தேதி, அந்த  சட்டத்தை இயற்ற தமிழ் நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்து,  ஆளுநர் மசோதாவைத் திருப்பி அனுப்பியிருக் கிறார். மாதக் கணக்கில் இந்த மசோதாவை முடிவை டுக்காமல் வைத்திருந்த ஆளுநருக்கு இப்பொழுது தான் தெரிகிறதா? அந்த சட்டத்தை இயற்ற தமிழ் நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது, இது  வன்மையான கண்டத்திற் குரியது.  ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்தும் நிர்வாகி கள் ஆளுநரை நேரில் சந்தித்ததும் அதற்கு பிறகு ஆளுநர் இம்மசோதாவை திருப்பி அனுப்பியதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும்  ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து 44 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்களின் உயிரை விட ஆன்லைன்  சூதாட்ட உரிமையாளர் களின் நலன் பெரிதா?

செயல்பாட்டை  முடக்கும் பாஜக

அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்த ஆளு நர், அதே நோக்கத்துடன் கூடிய மசோதாவுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்க மறுப்பது, அதுவும் நீண்ட கால தாமதத்துக்கு பிறகு திருப்பி அனுப்புவது, முற்றி லும் நியாயமற்றது  பாஜக  அல்லாத மாநில அரசுக ளின் செயல்பாட்டை முடக்கு வதற்கான அரசியல் கருவியாக பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் தொடர்ந்து பயன்படுத்தப் பட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு ஆளுநரின் இச்செயல்பாட்டை பார்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு மீண்டும், சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி முடிவு செய்திருப்பது வர வேற்கத்தக்கது. மேலும், இது  சம்பந்தமாக உச்ச  நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப் படுத்த வேண்டும். தேசிய அளவில் இத்தகைய சட்டம் கொண்டுவர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக-பாஜக ஆதரவு

திமுக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை முழுமையாக ஆதரித்து பேசிய அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம்,“ஆன்லைன் சூதாட்டங்களை செய்து சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு முழு அதிகாரமும் உரிமையும் இருக்கிறது”என்றார். பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது,“இன்னொரு வல்லுநர் குழு அமைத்து அதன் கருத்தையும் கேட்டு மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டு வரலாம் என்றும் முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் இந்த மசோதாவுக்கு ஆதரவு கொடுப்பதாகவும் கூறினார்.

ஆளுநரை திரும்பப் பெறுக

படிக்காத கிராமத்து பாமரன்கூட ஏற்றுக்கொள்ளும் ஒரு சட்டம்தான் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம். அத்தகைய ஒரு சட்டத்திற்கு அரசியல் அமைப்பு சட்டப்படி  ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் அதை மீறியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நலனில் ஆளுநருக்கு துளிகூட அக்கறையில்லை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் மக்கள்தான் எஜமானர்கள். ஆளுநர் அல்ல என்பதை  புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறிய உறுப்பினர்கள் வேல்முருகன், ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, மாரிமுத்து, சதன்திருமலைகுமார், ஷாநவாஸ், ஜி.கே.மணி ஆகி யோர் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலி யுறுத்தினர்.

 

;