articles

img

எந்த நெறிமுறையும் இல்லாத ஒரு கும்பல்தான்

இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது

ஐக்கிய முற்போக்கு கூட்டணி (2004 – 2009) முதலாவது ஆட்சி காலத்திலும், பாஜகவின் தற்போதைய ஆட்சிக்காலத்திலும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படும் வாய்ப்பைப் பெற்றவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயன். இந்த இரு வேறு ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, 77ஆவது சுதந்திர தின தீக்கதிர் சிறப்பிதழுக்காக அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தற்போது மத்திய ஆட்சியில் இருப்போர் நடவடிக்கைகள் ஆரோக்கியமற்றதா கவும், நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை சிறுகச்சிறுக தகர்க்கக்கூடியதா கவுமே தெரிகிறது. ஹிட்லர் நாடாளுமன் றத்தை பயன்படுத்தி அதிகாரத்துக்கு வந்து அந்த நாடாளுமன்றத்தையே தகர்த்தது போலவே, ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் அர சியல் முகமான பாரதிய ஜனதா கட்சி மூலம் நாடாளுமன்றத்தை சீர்குலைக்கிறது. நான் முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட் டணியின் ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். பிரதமர் மன் மோகன் சிங் இருந்தார். இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 61 எம்பிக்கள் இருந்தோம். இந்திய வர லாற்றில் முதல்முறையாக இடதுசாரிகள் நாடா ளுமன்றத்தில் வலிமையாக இருந்த காரணத் தால், பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. நாடா ளுமன்றத்துக்கு உள்ளே அப்போது பாரதிய ஜனதா கட்சி செய்த கலகம் கொஞ்சநஞ்சமல்ல. இன்றைக்கு சபாநாயகரைச் சுற்றி நடக்கும் ஆர்பாட்டங்கள் ஒன்றும் புதிதல்ல.

சுமூகப்படுத்திய விவாதங்கள்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது விவாதங்கள் நடந்தன எந்த முரண்பாடு எங்கே தோன்றுகிறதோ அப்போதே எதிர்க்கட்சி யாக இருந்த பாரதிய ஜனதா மற்றும் அனைத்து எதிர்கட்சிகளையும் அழைத்துப்பேசி சுமூகப் படுத்துவார்கள். போற்றுதலுக்கும் மதிப்புக்கும்  உரிய சோமநாத் சாட்டர்ஜி சபாநாயகராக இருந் தார். அவர் நாடாளுமன்றத்தை நடத்திய முறையே ரசிக்கத்தக்கது. கவனிக்கத்தக்கது முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளத்தக்கது. எந்தக் கட்சி சார்புமின்றி அரவணைத்து செயல் பட்டார். ஒருமுறை விவாதம் நடந்து கொண்டிருந்த போது அப்போது எம்பியாக இருந்த மம்தா பானர்ஜி, தன் இருக்கையில் இருந்த ஒரு கோப்பை தூக்கி துணை சபாநாயகரை நோக்கி வீசினார். அந்த கோப்பு துணை சபாநாயகரின் மேசையின் மீது போய் விழுந்தது. அப்போது கூட மம்தா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆனால் இன்று நாடாளுமன்ற உறுப் பினர்கள் விதிமுறைகளை வலியுறுத்தி பேசி னாலே அவர்களை சஸ்பெண்ட் செய்கிறார்கள். அன்று காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்த போதும் ஒருவரைக்கூட சஸ்பெண்ட் செய்த தில்லை.

அப்போதும் கண்ணியத்தை குலைத்த பாஜக

அன்றும் நாடாளுமன்றத்தின் கண்ணிய மான நடவடிக்கையை சீர்குலைக்கும் வேலையை பிரதான எதிர்க்கட்சியான பாரதிய  ஜனதா கட்சியே செய்தது. பிரதான எதிர்க்கட்சித் தலைவரே, சபையில் பின்னால் இருப்பவர் களை முன்னால் வரச்சொல்லி பிரச்சனையை ஏற்படுத்தி சபையின் கண்ணியத்தைக் குலைக் கும் வேலையைத் தூண்டிவிட்டார்.  நானே நேரில் பார்த்திருக்கிறேன். அத்தனை செயல் களையும் ஆட்சியாளர்கள் சகித்துக் கொள்வார் கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்த தில்லை. ஆனால் இன்று அந்த நடைமுறை தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் டிவி ஷன் கேட்கும்பொழுது, யார் ஆதரவு, யார்  எதிர்ப்பு என்று கேட்க வேண்டும். ஆனால் இன்று நிர்தட்சன்யமாக நிராகரித்து சட்டங்களை நிறை வேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாம் தரப் பேச்சாளராக பிரதமர்

பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத் தில் ஒரு அவச்சொல்லைக்கூட உபயோகித்த தில்லை. ஆனால் இப்போது வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன், பிரதமர் ஒரு மூன்றாந்தரப் பேச்சாளரைப் போல பேசுகிறார் அது அரு வெறுப்பாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் உள் ளது. அவர் 19 முறை அவைக்கு வந்திருக்கிறார் சில நிமிடங்கள் இருந்துவிட்டு போய்விடுவார். விவாதங்களுக்கு பதில் அளிப்பதில்லை. மோடி ஒரு முறைகூட பத்திரிகையாளர் களை சந்திக்கவில்லை. இப்போதுகூட மணிப் பூர் பிரச்சனையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப் பைப் போல, உண்மையான பத்திரிகையாளர் கள் யாரும் இல்லாமல், பத்திரிகையாளர்களி டம் பேசுவது போல் கேமராக்களை வைத்து பாசாங்கு செய்திருக்கிறார். யாரும் கேள்வி  கேட்கக் கூடாது என்பதுதான் அவரது நிலைப் பாடு. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது அடிப்படை உரிமை. அதைக் கூட அனுமதிப்பதில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போதைய நிலை மிகவும் வேதனை அளிக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை கொஞ்சம் கூட மதிப்ப தில்லை. நாடாளுமன்றத்தில் நான் அமர்ந்து பார்க்கும்பொழுது, ஜனநாயகப் பண்பு நிரம்பிய நேரு உட்கார்ந்திருந்த இருக்கையில் இன்று மோடி உட்கார்ந்திருக்கிறார். நம்பவே முடிய வில்லை. மன்மோகன்சிங் பத்தாண்டு ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற செயல்பாட்டு முறையை எவரும் குறை சொல்ல முடியாது. ஆனால் மோடி உண்மையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பேசுகிறார்.

ஆணவம், அகம்பாவம்

நாடாளுமன்றத்தில் அரசு முன்வைக்கும் நிலைப்பாடுகள் மீது எதிர்க்கட்சிகள் பேசும் போதுதான் கருத்து பரிமாற்றத்தில் உண்மை கள் வெளிவரும். பிரதமர் என்பவர் ஆட்சித் தலைவர் என்ற முறையில் பதிலளிக்க வேண்டி யவர். ஆனால் தன் கடமையை அவர் மறுக்கி றார். நாடாளுமன்ற முறைகளை ஆணவத் தோடு நிராகரிக்க முயற்சிக்கிறார். 303 எம்பிக் கள் இருக்கிறார்கள் என்ற அகம்பாவத்தில் அப்படி நடந்து கொள்கிறார்கள். எந்த நெறிமுறையும் இல்லாத ஒரு கும்பல் தான் இன்று அதிகாரத்தில் இருக்கிறது. சுருங் கச் சொல்வதென்றால் பிரதமர் பதவி என்பது மிகவும் பொறுப்புள்ள பதவி. பொறுப்புள்ள இடத்தில் பொறுப்பற்ற நபர்கள் வந்துவிட்டார் கள். நாடாளுமன்ற ஜனநாயக முறை நசுக்கப் பட்டுள்ளது.

மனுதர்ம மன்னராட்சிக்கு முயற்சி

நாடாளுமன்றத்தை பயன்படுத்தி நாடாளு மன்றத்தை தகர்ப்பதுதான் பாரதி ஜனதா கட்சி யின் தந்திரம். அதுதான் கோல்வால்கர் சொன் னது. “ஜனநாயகம், கம்யூனிசம் ஆகியவை அந்நிய கருத்துக்கள் அதை நிராகரிக்க வேண் டும் மன்னர் ஆட்சி காலத்தில்தான் இந்தியா செழித்து சிறந்து விளங்கியது,” என்று கற்றுக் கொடுத்தது ஆர்எஸ்எஸ் குரு கோல்வால்கர். ஜனநாயக ஆட்சி முறையை மாற்றி அரசியல் சட்டத்தை ரத்து செய்து வர்ணாசிரம, மனுதர்ம அடிமைத்தனத்தின் அடிப்படையில் புதிய  அரசியல் சட்டத்தை தயாரித்துக் கொண்டிருக் கிறார்கள் என்ற செய்தி நம்பத்தகுந்த வட்டா ரங்களில் இருந்து வருகின்றன. அவர்களது லட்சியத்திற்கு அரசியல் சட்டம் தடை என்று பார்க்கிறார்கள்.  பாரதிய ஜனதாவின் ஆட்சியில் பாதுகாப்புத் துறை, ராணுவம், நீதித்துறை, நிர்வாகம், சட்டம் இயற்றுதல், பண்பாட்டுத்துறை, வரலாற்றுத் துறை என சகல துறைகளிலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் ஊடுருவி இருக்கிறது. 2024 தேர்த லில் பாஜக தோற்கடிக்கப்பட்டு இந்தியா அணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் பரப்பியிருக்கும் விஷத்தை போக்குவதற்கு 25 ஆண்டு காலமாகும்.

தீமையைத் தடுக்க தேவை இடதுசாரிகள்

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு மிருக பலம் உள்ளது. இடதுசாரிகள் ஐந்து பேர் என்ற  மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். எண்ணிக்கைக்கு தக்க நேரம் ஒதுக்குவது என் பது ஜனநாயகத்திற்கு பொருத்தமானதல்ல. அதிகம் பேர் இருப்பவருக்கு அதிக நேரம் என்று ஒதுக்கக்கூடாது. இதனால் பெரும் பாலான நேரத்தை ஆளுங்கட்சியினரே எடுத்துக் கொள்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் அதிக மாக இடம்பெற்றால்தான் மக்களின் பிரச்சனை கள் அங்கு விவாதிக்கப்பட முடியும். கம்யூ னிஸ்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நாட்டுக்கும், மக்களுக்கும் தீங்குகள்  தடுக்கப்படும். தேச சொத்துகள் சூறையாடப் படாமல் தடுக்கப்படும். அதிகாரத்தை பயன்ப டுத்தி பணம் சுருட்டுவது தடுக்கப்படும். மக் களை விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசியல்ரீதி யாக விழிப்படைய செய்யும்போது தான் நாடாளு மன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.