articles

img

போராட்டங்களின் தேரோட்டம் - அ.சவுந்தரராசன்

தோழர் ம.காமுத்துரை எனக்குத் தெரிந்த தேர்ந்த எழுத்தாளர். இது வரை பதினான்கு சிறுகதைத் தொகுப்புகளும், ஆறு நாவல்களும் எழுதி உள்ளார். இது ஏழா வது நாவல். அவரது வளர்ச்சியும், முதிர்ச்சியும் இந்த நாவலில் தெரிகிறது. தொ.மு.சி.ரகு நாதன், கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ் போன்ற சோசலிச யதார்த்த எழுத்தாளர்களின் வரிசையில் நிற்பவர். கொடிவழி என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த நாவல் முதலாளி, தொழிலாளி, தொழிற் சங்கம், போராட்டம், பழிவாங்கல் எனும் - அனே கமாக தமிழ் வாசகர்கள் அதிகம் அறிந்திடாத - கதைக் களத்தைச் சுற்றி நாவல் பின்னப்பட்டி ருக்கிறது.   ஆலையை அமைப்பதற்கு நிலம் வாங்கும் போது விவசாயிகளிடம் வக்கனையாகப் பேசு கிற மில் முதலாளி, காரியம் முடிந்தபிறகு எப்படி தலைகீழாக மாறுகிறான் என்பது தொடங்கி, சமகால தொழிலாளர் பிரச்சனையையும் மிக  லாவகமாக சொல்லிச் செல்கிறது இந்நாவல். தோழர் ம.காமுத்துரை ஒரு மில் தொழிலாளி யாக பணியாற்றிய போது அவர் பட்டபாடுகளும், அவருக்குக் கிடைத்த பட்டறிவுகளுமே கதையாகி யிருக்கிறது.

எனது ஐம்பது ஆண்டுகால தொழிற்சங்க வேலையில் அன்றாடம் சந்தித்த, சந்திக்கிற அதே மனிதர்கள் கதை மாந்தர்களாய் உலா வரு வதைப் படிக்கும் போது கதை என்னை முன்னு க்கும் பின்னுக்கும் இழுத்துக் செல்வதாக உண ர்ந்தேன். என்னையே நான் திரும்பிப் பார்ப்பதாக வும் உணர்ந்தேன். இந்த கதையில் உள்ள உயிர்ப்பும், தொழி லாளர்களின் உளவியலும் ஊடாடிச் செல்லும் தன்மை நம்மைக் கதையில் லயிக்க வைக்கிறது. தொடர்ந்து படிக்க வைக்கிறது. அந்த வகையில் தோழர் காமுத்துரைக்குள்ளே இருக்கும் கதை சொல்லி பெரும் வெற்றி பெற்றிருக்கிறார். தொழிற்சங்க இயக்கம், அது முளைவிட்ட காலத்திலிருந்தே முதலாளிகளின் கொடுந் தாக்குதலுக்கு ஆளானது. தொழிலாளர்கள் கூடு வதும், கூட்டாக செயல்படுவதும் தங்களது சுரண்டலை தீவிரப்படுத்துவதைக் தடுத்துவிடும் என்று முதலாளிகள் அறிவார்கள். சொல்லப் போனால் வர்க்கப் போரைப்பற்றி தொழிலாளி களைவிட முதலாளிகளுக்கு புரிதல் அதிகம். முதலாளித்துவ உற்பத்தியின் மீது தொழி லாளி வர்க்கம் தொடக்கத்தில் நடத்திய பெருந் தாக்குதல் வேலை நேரக்குறைப்பிற்கானது. கூடு தல் வேலை நேரம் என்பதுதான் முதலாளிகளின் கூடுதல் லாபத்திற்கான ஊற்றுக்கண். எனவே அவர்கள் வேலை நேரத்தைக் குறைப்பதை கடுகளவும் ஏற்க மாட்டார்கள். இந்த மோதலில் தொழிலாளர்கள் கொடுத்த ஒன்றுபட்ட அழுத்தந் தான் முதலாளிகளையும் அவர்களது அரசு களையும் உலுக்கி அசைத்தது. 

எட்டு மணி நேர வேலை என்பது முத லாளித்துவ சுரண்டலின் மீது விழுந்த பேரிடி. தொழிற்சங்க இயக்கம் சாதித்த இமாலய சாதனை அது. அதனால்தான் மேதினம் உலகப் பெருந்தினமாய் இன்றளவும் போற்றப்படுகிறது. 1871 ஆம் ஆண்டில் பாரீசில் அமைந்த “பாரீஸ் கம்யூன்” என்கிற தொழிலாளி வர்க்க ஆட்சிதான் முதல் புரட்சிகரமான ஆட்சி. போராட்டப் பாரம்பரியமான தொழிற் சங்கத்தின் மாட்சி இது.  அந்நாளிலேயே முத லாளிகளோடு அனுசரணையாக நடந்து கொள்ளும் தொழிற் சங்கங்களும் முதலாளி களின் தயவோடு உருவாக்கப்பட்டன.  முதலாளித்துவச் சுரண்டலையும் அடக்கு முறைகளையும் சமரசமில்லாமல் எதிர்த்துப் போராடுவது என்ற போராட்ட பாரம்பரிய சங்கங் கள்தான் மே தினப் பாரம்பரிய சங்கங்கள். அதன் வாரிசுகளாய் தேனியில் உள்ள ஒரு பஞ்சாலை யில் நடைபெறும் போராட்டம்தான் இக்கதையின் மையப்புள்ளி. தொழிலாளர் உலகில் இன்றும் எரியும் பிரச்சனையும் இதுதான். இதுவரை நடந்துள்ள வேலை நிறுத்தங் களில் ஊதிய உயர்விற்காக நடந்தவற்றை விட சங்கம் அமைக்கும் உரிமைக்காகவும், உரு வாக்கிய சங்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும் நடந்த போராட்டங்கள்தான் அதிகம். தீவிரமான நீண்ட போராட்டங்களில் பெரும்பாலானவை சங்க உரிமை, கூட்டுப் பேர உரிமை, தொழிலாளர் கள் விரும்பும் தலைமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை போன்றவற்றிற்காகத்தான் நடந்துள்ளன.

1990க்குப் பிறகு புதிதாக வந்துள்ள பெரிய நவீன தொழிற்சாலைகளிலும், பன்னாட்டு நிறு வனங்களிலும் இந்தியா, முழுவதும் நடை பெறும் முட்டல், மோதல்கள் தொழிற்சங்க உரிமைகளுக்கானதுதான். தமிழகத்தில் இந்த உரிமைப் பிரச்சனையில்தான் ஹூண்டாய், ஃபாக்ஸ்கான், யமஹா, ராயல் என்ஃபீல்டு ஆலைகள் உள்ளிட்ட பெரும் போராட்டங்கள் நடந்தன நடந்து கொண்டும் இருக்கின்றன. இதுபோன்ற வேலை நிறுத்தங்களில் ஈடுபடு கிற தொழிலாளர்கள் சிற்சில இடங்களில் தலைமையின் சொற்களை மீறியும்கூட போராட்டத்தில் குதித்துவிடுவது உண்டு. அவர் களை வாட்டும் கொடுமையும் கொதிப்பும் கொந்த ளிப்பும் அப்படி. தொழிற்சங்க அனுபவமின்மை, முதலாளியின் ஆத்திரமூட்டலுக்கு இரையாகும் தன்மை, கூட்டாக நின்று உற்பத்தியை நிறுத்து வதற்குப் பதிலாக வன்முறையில் இறங்குவது,

தனிநபர் சாகசங்களில் ஈடுபடுவது போன்ற பல திரிபுகள் வெளிப்படுவது வேலையிழந்து, வருமானமிழந்து நிற்கிற தொழிலாளர்கள் போராட்டத்தை குறை சொல்வது, எங்களை இப்படிக் கொண்டு போய் சிக்கவைத்துவிட்டீர் களே என்று தலைவர்களைக் குற்றஞ்சொல்வது, பெரும் ஆர்ப்பாட்டங்கள், கூச்சல்களால் என்ன பயன் என்று செருமுவது, உண்டியல் குலுக்கவைத்து விட்டீர்களே என்று நக்கலாய்ப் பேசுவது, ஒருவருக்கு ஒருவர் திட்டியும், ஏசியும், பேசியும் மோதிக்கொள்வது போன்ற விஷயங்கள் எல்லாம் ஒவ்வொரு போராட்டத்திலும் நடந்தவண்ணம் இருக்கும். இதையெல்லாம் சமாளித்து பொதுக் கருத்தில் தொழிலாளர்களை உடன்படவைத்து நம்பிக்கையூட்டி செயல் ஊக்கப்படுத்து வதில்தான் தலைமையின் வெற்றி இருக்கிறது. இவைபோன்ற பல உணர்ச்சிமய பிரச்சனை களை தொழிற்சங்க இயக்கத்தில் அன்றாடம் மூழ்கிக் கிடப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.  தோழர் காமுத்துரையின் கூர்த்த பார்வை  நுணுக்கமாக எல்லாவற்றையும் உள்வாங்கி  அடைகாத்து அத்தனையையும் காட்சிகளாக்கி கொடி வழி நாவலில்வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஒவ்வொரு தொழிலாளிக்குள்ளும் நடைபெறுகிற மனப் போராட்டத்தை படம்பிடிப்ப தற்கு உளவியல் பார்வை வேண்டும். அத்த கைய உளவியல் பார்வையில் மிக எடுப்பாக  பல விஷயங்கள் கதையில் வெளிப்படுகின்றன. இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு அத்தியாயமும் கலாபூர்வமாக காட்சிப்படுத்தப் பட்டிருப்பது சிறப்பு.

வேலை நிறுத்தத்தை உடைப்பது, முதலாளி ஒரு சங்கத்தவர்களைப் பழிவாங்குவது, பணம் கொடுத்து விலை பேச நினைப்பது, அவர்கள் வட்டி லேவா தேவிக்காரர்களிடம் சிக்குவது, சாதிச் சண்டையை மூட்டிவிடுவது, காவல் துறையை வைத்து பொய்வழக்குகள் போட்டு அலைய வைப்பது. தொழிலாளர் துறை மற்றும் நீதி மன்றங்கள் செய்கிற தாமதங்கள் என்று இப்படி ஒவ்வொன்றும் எனது அன்றாட அனுபவமாக நான் பார்த்துக் கொண்டிருப்பவை. அவைகள் வாசகனுக்கு கதை அனுபவமாக மாற்றப்பட்டு இந்த நாவல் தருகிற சித்திரம் புதிய தலைமுறைத் தொழிலாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். நம்பிக்கையூட்டும். தொழிலாளர்களது வாழ்க்கை போராட்டங்களின் தேரோட்டந்தான் என்ற தெளிவைத் தரும்.  சமீபத்தில் தமிழக அரசு ஒரு சட்டம் போட்டு எட்டு மணி நேரத்தை அகற்ற முயற்சித்ததை எதிர்த்து வெடித்த போராட்ட எழுச்சியும், அதனால் அரசு பின்வாங்கியதும் தொழிற்சங்கங்களின் தேவையை உணர்த்துகின்றன. நாவலில் மே தினக் கொண்டாட்டத்திற்கான தயாரிப்பு களோடும், பெருந்திரட்டல் மூலம் முதலாளி க்கு எச்சரிக்கை விடும் நோக்கோடும் தொழிலா ளர்கள் கூடி ஆளுக்கொரு வேலை செய்யும் காட்சியும் எந்தவிதமான செயற்கைத் தன்மை யும் புகாமல் நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நாவலில் என்னை மிகவும் உணர்ச்சி  வசப்படுத்திய ஒரு சம்பவம் வருகிறது. திரு மணத்திற்கு முடிவு செய்து பூ மாற்றிக்கொண்ட மாப்பிள்ளைக்கு பஞ்சாலையில் வேலை போய் விடுகிறது. மணப்பெண் மாமன் மகள்தான் என்றாலும், சிறுவயதிலிருந்து இருவரையும் இணைத்துப் பேசி மகிழ்ந்தவர்கள் என்றாலும் பெண்வீட்டார் திருமணத்தை நிறுத்தி விடுகின்ற னர். வேலை போனதுதான் காரணம். இதுபோன்று நிறைய திருமணங்கள் நின்று போவதை பார்த்து என் அனுபவத்தில் தாங்க முடியாத வேதனைப்பட்டுள்ளேன். பெற்றோ ருக்கு சமாதானம் சொல்ல முடியாமல் சில நேரங்களில் கண்ணீர் வடித்துள்ளேன். இப்போ தும் அப்படி ஒரு திருமணம்  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தடைப்பட்டிருக்கிறது. நெஞ்சில் ஈரமற்ற முதலாளிகள் இதுபோன்ற  எந்தக் காரணத்திற்காகவும் மனம் மாறுவ தில்லை. கதையில் இந்த இருவரும் ஓடிவந்து கோவிலில் திருமணம் முடித்துக்கொண்டார்கள். அவர்களை தொழிற்சங்கம் தனது அலுவல கத்தில் வைத்து பாதுகாத்து வாழவைக்கிறது. கதை முழுவதும் தேனியின் வட்டார வழக்குச் சொற்களால் மிகவும் இயல்பாக சொல்லப் பட்டுள்ளது. காமுத்துரையின் எழுத்துக்களில் வட்டார வழக்குச் சொல்லாட்சி நிரம்பி இருப்பது தனிச்சிறப்பு தனித்திறமை.  தொழிலாளர்களைப் பற்றிய, சமூக  உணர்வை  ஊட்டுகிற... சாதி, மத வேறுபாடுகளை சாடுகிற... மானுடம் ஒன்றே ! என பறைசாற்றுகிற தோழர் ம.காமுத்துரையின் இந்நாவல் தொழி லாளர்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லப் பட வேண்டும். எடுத்துச் செல்வோம்!

கொடிவழி
ஆசிரியர் : ம.காமுத்துரை
வெளியீடு : எதிர் வெளியீடு 
விலை:ரூ.399