இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தான் பெண்கள் முதல்முறையாக போராட் டக் களம் என்ற சமூகத் தளத்தில் அடியெடு த்து வைத்தார்கள். பெண் கல்வி, திருமண வயது வரம்பை உயர்த்துவது, விதவை மறுமண உரிமை யைப் பெறுவது போன்ற பெண் விடுதலைக்கான போராட்டங்களில் ஈடுபடுவதோடு, ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து நாட்டை விடுதலை செய்யும் போராட்டத்தில் பெண்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். சுதந்திரப் போராட்ட காலத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்ட பெண் போராளிகளால் இந்திய இடதுசாரிப் பெண்கள் இயக்கம் தோற்றம் பெற்றது.
இடதுசாரிப் பெண் தலைவர்கள்
தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்ட காலத்தி லேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத் துக்கொண்ட கே.பி.ஜானகி அம்மாள், திருச்சி பொன்மலை ரயில்வே தொழிலாளர் சங்க வளா கத்தில் சிறுமியாக விளையாடித் திரிந்த காலத்தி லேயே தனது அன்னை லட்சுமியுடன் இணைந்து புடம்போட்ட கம்யூனிஸ்டாக உருவெடுத்த பாப்பா அம்மா, இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து தொழிலா ளர் வர்க்க இயக்கம், கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்ட ஷாஜாதி, சனாதன சூழலில் பிறந்து முற்போக் கான சமூகம் படைக்க ஒரு போராளியாக தன்னை மாற்றிக்கொண்ட ருக்மணி அம்மாள், இவர்களைப் போன்ற எண்ணற்ற இடதுசாரி இயக்கப் பெண்கள், தொழிலாளர் இயக்கப் பெண்களால் தமிழ்நாட்டின், இந்தி யாவின் இடதுசாரி மாதர் இயக்கம் உருப்பெற்றது.
தமிழகத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தை ஸ்தாப னமாக்கும் முயற்சிகள் 1970-களில் தொடங்கப்பட்டன.
1973 ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9 தேதிகளில், திண்டுக்கல்லில் தமிழகத்தின் மகத்தான 99 பெண் தலைவர்கள் ஒன்று கூடி தமிழக ஜனநாயக மாதர் சங்கத்தைத் துவக்கினர். பெண் விடுதலை! சமத்துவம்! சோசலிசம்! என்ற முப்பெரும் லட்சியங்களை அடிப்ப டையாகக் கொண்டு மாதர் சங்கம் செயல்படும் என்று பிரகடனப்படுத்தினார்கள். அமைப்பு விதிகள், கொடி ஆகியவை இறுதி செய்யப்பட்டன. பெண்கள் மத்தியில் பரந்து விரிந்த ஒரு வெகுஜன அமைப்பாக ஜனநாயக மாதர் சங்கத்தைக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. 1973-74 ஆம் ஆண்டு உறுப்பி னர் பதிவுக்குப் பிறகு மாநில அளவில் முதல் மாநாடு நடத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
1974 ஆம் ஆண்டிற்குள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை உறுப்பினராக இணைத்து, 1974 டிசம்பர் 30, 31, 1975 ஜனவரி 1 ஆகிய மூன்று நாட்க ளில் திருவாரூரில் முதல் மாநில மாநாட்டை எழுச்சிகர மாக நடத்தியது. இம்மாநாட்டில் தலைவராக கே.பி. ஜானகி அம்மா, செயலாளராக பாப்பா உமாநாத் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மைதிலி சிவராமன், ஷாஜாதி, விஜயா ஜானகிராமன், ஜானகி ராமச்சந்தி ரன், வீரம்மாள், கிருஷ்ணம்மாள், கஸ்தூரி, குஞ்சிதம் பாரதி மோகன்,தந்தாயி, நாகம்மாள், ரோகிணி, தன லட்சுமி, ருக்மணிஅம்மாள் ஆகியோர் நிர்வாகி களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அமைப்பைக் கட்டிய வேர்கள்
50 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் வீட்டிற்கு வெளியில் வந்து அமைப்பு ரீதியாக செயல்படுவது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்த காலகட்டத் தில், மாதர் சங்கத்தின் வேர்கள் தமிழகத்தில் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று, பெண்களை சந்தித்து, ‘நாம் அமைப்பாய் ஒன்று திரள வேண்டும். ஒன்றுபட்ட போராட்டங்கள் மட்டுமே பிரச்சனை களுக்கு தீர்வு!’ என்பதை ஆணித்தரமாக பெண்களி டம் எடுத்துரைத்தனர். இன்றைக்கு இருப்பதைப் போல நவீன தொலைத்தொடர்பு வசதிகள் பெரிதாக இல்லாத காலத்தில் நம் முன்னோர்கள் இரவு பகலாகப் பணி யாற்றி அமைப்பை வளர்த்தெடுக்க அரும்பாடு பட்டனர்.
பேருந்து வசதி இல்லாத கிராமங்களில் நாட் கணக்கில் தங்கி இருந்து அமைப்பை உருவாக்கினர். அமைப்பை உருவாக்கியதோடு அல்லாமல் அன்றை க்கு மக்கள் போராட்டங்களை, குறிப்பாக பெண்கள் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினர்.
கடுமையான குடிநீர்ப் பஞ்சம், ரேசன் கடை பிரச்சனை, பெண்கள் மீதான வன்முறை பிரச்சனை களைக் கையில் எடுத்தனர். பெண்கள் மீதான வன்முறை பிரச்சனைகளை கையில் எடுக்கும்போது, பெண்கள் குறித்த பிற்போக்குத்தனமான கருத்துக்க ளை கம்யூனிச கண்ணோட்டத்தோடு அணுகினர்.
பெண்களுக்கான அமைப்பு, சங்கம் என்றாலே, பெண்கள் மீது காலங்காலமாகத் திணிக்கப்பட்டி ருக்கிற அழகு, சமையல், கலை, குடும்பம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது என்ற கற்பிதத்தை உடைத்து, ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ என்பதெல்லாம் பெண்ணை பின்னோக்கிய சமூகத்திற்கு அழைத்துச் செல்லும் மூடத்தனங்கள், அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தும் எங்க ளுக்கு அச்சமும் நாணமும் எதற்கு?! என்று எளிய பெண் களை கேள்வி கேட்க வைத்தது மாதர் இயக்கம்.
வீட்டை விட்டு வெளியில் வராத பெண்களிடம் உலக அரசியலை கொண்டு சென்றது. ஈரான், ஈராக் நாடுகளுக்கு இடையே போர் உக்கிரமடைந்திருந்த சூழலில், உள்நாட்டுப் பொருளாதாரம் மிக மோச மாக பாதிக்கப்பட்டு இருந்தது. போர் நடைபெறும் நாடு களில் பெண்கள், குழந்தைகள் சொல்ல முடியாத துய ரங்களுக்கு ஆளானார்கள். அப்போது, திருச்சியில் உலக சமாதான மாநாடு நடத்தி, போரை நிறுத்த நட வடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுத்தது தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.
உலகின் மிகப்பெரிய சோசலிச நாடாக இருந்த சோவியத் ரஷ்யா குறித்த பல்வேறு விபரங்களைப் பற்றி மாதர் சங்கக் கூட்டங்களில் நமது தலைவர் கள் பேசினார்கள். சோசலிச சமூகத்தில் பெண்ணுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரத்தையும், சோசலிச நாடுக ளில் பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்றம் குறித்தும் பகிர்ந்துகொண்டு, பெண் விடுதலை க்கு சமூக மாற்றம் ஒன்றே தீர்வு என்ற புரிதலைக் கட்டமைத்தார்கள். பெண் விடுதலை, சமத்துவம், சோஷலிசம் என்ற இலட்சியத்தைக் கொண்ட வலுவான இடதுசாரி பெண்கள் அமைப்பாக ஜனநாயக மாதர் சங்கம் வளர்த்தெடுக்கப்பட்டது.
மாபெரும் சக்தியாக....
தமிழ்நாட்டில் ஜனநாயக மாதர் சங்கம் 50 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும் இன்றைய தினம் (டிசம்பர் 9) தமிழகத்தில் ஏழரை லட்சம் உறுப்பினர்கள் இருக்கி றார்கள். 40 மாவட்டக் குழுக்கள், முழு நேர ஊழி யர்கள், பஞ்சாயத்து பிரதிநிதிகள், பல்வேறு வழக்குக ளில் நீதியை நிலைநாட்டிய பெருமை, அநீதிக்கு எதிராக போராடும் வல்லமை என நாம் எட்டியிருக் கும் உயரம் மிகப் பெரியது. இருப்பினும், இன்னும் அசுர பலம் பொருந்திய அமைப்பாக நாம் மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
நீளும் பட்டியல்
கடந்த 50 ஆண்டு கால தமிழகத்தில், பெண்கள் பிரச்சனையில் தலையீடு என்றால், ‘ஜனநாயக மாதர் சங்கத்தை தவிர்த்து வேறு ஒரு அமைப்பை யோசிக்க முடியாது’ எனும் அளவிற்கு, மாதர் சங்கம் தலையிட்ட வழக்குகள் நடத்திய போராட்டங்களைப் பட்டிய லிட்டால் பக்கங்கள் போதாது.
சின்னாம்பதி வழக்கு, நாலு மூலைக்கிணறு வழக்கு, வாச்சாத்தி வழக்கு, சிதம்பரம் பத்மினி வழக்கு, போலி சாமியார் பிரேமானந்தா வழக்கு, கல்பனா சுமதி வழக்கு, முத்தாண்டி குப்பம் வசந்தா, பொதும்பு வழக்கு, அரியலூர் நந்தினி, பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்களில் தலையீடு, கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரச்ச னையில் தலையீடு, கலா ஷேத்ரா கல்லூரி மாணவி கள் பாலியல் சீண்டல் பிரச்சனையில் உடனடி தலையீடு – இப்படி மாதர் சங்க போராட்டப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
பெண்கள் மீதான வன்முறை பிரச்சனை என்றால், உடனடியாக ஜனநாயக மாதர் சங்கம் களத்திலே நிற்கி றது. பிரச்சனையை மாநிலம் முழுவதும் கொண்டு சென்று சமரசம் இல்லா போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
மதவாத, சாதியத்திற்கு எதிராக...
இந்தியாவில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் மதவாத கருத்துக்கள் வலுவாக பரப்பப் பட்டு வரும் சூழலில் காவி-கார்ப்பரேட் கூட்டுக்கு எதிராக தொடர்ச்சியான பிரச்சாரத்தையும், போராட் டத்தையும் நாம் முன்னெடுத்து வருகிறோம். தமிழ கத்தில் சாதிய கொடுமைகள் தீண்டாமை கொடுமை களுக்கு எதிராக தொடர்ச்சியாகக் களமாடி வருகி றோம். சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக களத்தில் நிற்கிறோம்.
தமிழகத்தில் பெண்ணுரிமை பிரச்சனைக ளாகட்டும், மக்கள் பிரச்சனைகள் ஆகட்டும், அதில் தலையீடு செய்வதற்காக மகளிர் சட்ட உதவி மையம் அமைத்து பல்வேறு பிரச்சனைகளில் சட்ட ரீதியான தலையீடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகி றோம்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ கத்தில் தொடங்கி 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்நாளில் கடந்த காலப் போராட்டப் பாதை நமக்க ளிக்கும் உத்வேகத்தோடு ஆணும் பெண்ணும் சமம் என்பதை உறுதி செய்யும் பணி தொடர சபதமேற் போம்!
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், ஜனநாயக மாதர் சங்கம்