பெண்கள், குழந்தைகள் மீதான வன் முறைகளை தடுத்து நிறுத்துவதுடன், தமிழக குழந்தைகள் நல ஆணை யத்திற்குத் தலைவரையும் உடனடியாக நியமிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மாநிலக்குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா முன்மொழிய, கோ. அரவிந்தசாமி வழிமொழிந்தார். அந்த தீர்மானம் வருமாறு:
வன்முறையே வாழ்வாக மாறிவிட்ட மோசமான நிலை
இந்தியாவில் வன்முறையே வாழ்வாக மாறிவிட்ட மோசமான நிலையில் பெண்கள் உள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எத்தனை சட்டங்கள் வந்தாலும் பெண்களின் பாது காப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. 18 வயதிற்கு முன்பு திருமணம் கூடாது என்ற சட்டம் இருந்தாலும் குழந்தைத் திருமணங்கள் அன்றா டம் நடந்து கொண்டே உள்ளன. வரதட்சணை ஒழிப்புச் சட்டம் உண்டு. ஆனால் வரதட்சணைக் கொடுமை நின்றபாடில்லை.
கொஞ்சமும் குறையாத பெண்கள் மீதான வன்முறை
ஒரு பெண் வீட்டிற்குள் இருந்தாலும் வன்முறை. பொது வெளிக்கு சென்றாலும் வன்முறை. காத லித்தால் படுகொலை. காதலிக்க மறுத்தால் அமில வீச்சு. விஞ்ஞானம் வளர்ந்தாலும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு பஞ்சமே இல்லை. இந்தியாவின் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படுகின்றனர். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் 90 சதவிகிதம் தெரிந்தவர்களாலேயே நிகழ்த்தப் படுகின்றன. இந்தியாவில் 2023-இல் மட்டும் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் 3 லட்சத்து 65 ஆயி ரத்து 100 என்ற எண்ணிக்கையிலும், குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகள் 63 ஆயிரத்து 414 என்ற எண்ணிக்கையிலும் பதிவாகியுள்ளன.
குழந்தைகள் மீதான வன்முறை 93 சதவிகிதம் அதிகரிப்பு
குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளில் 93 சதவிகிதம் அதிகரித்துள் ளன. உதாரணமாக 2021-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் எண்ணிக்கை 12 ஆயி ரத்து 653. ஆனால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் 635 பேர் மட்டுமே. இது பெரும்பா லான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுவதையே காட்டுகிறது. இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் மூன்றில் ஒன்று குழந்தை திருமணம். கடந்த ஆண்டை விட குழந்தைத் திருமணங்கள் 50 சதவிகிதம் இந்தியாவில் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டு 1054 குழந்தை திருமணங்களும் 2024-ஆம் ஆண்டு 1640 குழந்தை திருமணங்களும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. சிறு வயது பிரசவங்கள் குழந்தை களின் ஆயுட்காலத்தை குறைக்கின்றன. கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறிக்கின்றன. ஆட்சியாளர்கள், காவல்துறை அலட்சியம் இத்தகைய குற்றங்கள் காவல்துறை மற்றும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது, அவற்றை அலட்சியமாகப் பார்க்கும் போக்கும், குற்ற வாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதும் ஆட்சியா ளர்களின் வாடிக்கையாகி விட்டன. பல வழக்குகளில் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர். கோவை ஈஷா யோகா மையத்தில் மர்மமான முறையில் காணாமல் போகும் பெண்கள், சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலைக்கு சென்ற 15 வயது குழந்தை கொடூரமான முறையில் படுகொலை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத் காரம் என தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
பாலின சமத்துவம் குறித்து பயிற்சியளிக்க வேண்டும்
பண்பாட்டுத்தளத்திலும் பெண்ணடிமைத்தனம் போற்றி பாதுகாக்கப்படுகின்றன. பெண்களைப் பாது காக்கும் சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத் தப்படுவது இல்லை. மறுபுறம் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இந்தியாவிலும் தமிழகத்திலும் நடந்து கொண்டி ருக்கும் இத்தகைய குற்றங்களைத் தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த தமிழக குழந்தை கள் நல ஆணையத்திற்கு உடனடியாகத் தலைவரை நியமிக்க வேண்டும். பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை சட்டத்திற்கு உட்பட்டு நீதிமன்ற வழி காட்டுதல் படி கையாளுவதற்கான வகுப்புகளை காவல் துறை அதிகாரிகளுக்கு அரசு நடத்திட வேண்டும், அரசு அதிகாரிகள் - காவல்துறை அதிகாரிகளுக்கு பாலின சமத்துவம் குறித்த வகுப்புகளை அரசே நடத்திட வேண்டும். பாலியல் கல்வி குறித்தும்பாடத்திட்டங் களில் இடம்பெற வேண்டும் என இம்மாநாடு கோருகிறது. இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.