டொனால்டு டிரம்ப்பின் பதவியேற்பு விழா வரலாற்றில் ஓர் அருவருப் பான பாசிச நிகழ்வாக நினைவில் கொள்ளப்படும். அதில் புதிய ஜனாதிபதி டிரம்ப், வெளி யேறும் பைடனின் நிர்வாகம், குடியேற்றவாசிகள், எதிரிகளாக அவர் கருதும் அமெரிக்க மக்களின் பரந்த பிரிவினர், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு அப்பாற்பட்ட உலக மக்கள் ஆகியோருக்கு எதிராக வெறுப்பு நிறைந்த உரையை நிகழ்த்தினார்.
மாபெரும் எழுத்தாளரின் எச்சரிக்கை
மாபெரும் அமெரிக்க எழுத்தாளர் சின்க்ளேர் லூயிஸின் பாசிச எதிர்ப்பு நாவலான “இட் கான்ட் ஹாப்பன் ஹியர்” இல் கற்பனை செய்யப்பட்ட கொடூர மான, ஊடக மோசடி செய்பவரும் பிரச்சார வீரருமான ஜனாதிபதி பஸ் வின்ட்ரிப்பின் அவதாரமாக டிரம்ப் தோன்றினார். அந்த அரசியல் நாவலின் புனை கதை, இங்கே உண்மையாகி நின்றது. லூயிஸின் டிஸ்டோபியன் நாவல் 1935இல் வெளி யிடப்பட்டது, அமெரிக்காவில் பாசிசத்தின் எழுச்சிக்கு எதிரான எச்சரிக்கையாக இது கருதப்பட்டது. நெருக்க டியில் சிக்கிய முதலாளித்துவத்தைப் பாதுகாப்ப தற்காகவும், இலாபங்கள் மற்றும் வரம்பற்ற செல் வத்தைத் தேடுவதற்காகவும், அமெரிக்க ஆளும் வர்க்கம் ஜெர்மனியில் ஹிட்லர் செய்தது போன்ற- ‘தேசிய வாதம்’ என்ற பெயரில் கொடூரத்தை ஆட்சியில் அமர்த்தும் என்று அந்த நாவல் எச்சரித்தது. தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 20, 2025 அன்று நடந்த கோரமான பதவியேற்பு விழா லூயிஸின் எச்சரிக்கையை நிரூபித்துள்ளது.
ஹிட்லரின் மறு வடிவமாக...
டிரம்ப் தனது பதவியேற்பு உரையின் பாசிச உத்வே கத்தை மறைக்க முயற்சிக்கவில்லை. ஜெர்மன் அதிபர் பதவிக்கு உயர்த்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, 1933 பிப்ரவரி 1 அன்று ஹிட்லர் ஆற்றிய முதல் வானொலி உரையின் தொனியிலும் உள்ளடக்கத்திலும் தற்போது டிரம்ப்பின் உரை வெளிப்படையாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அன்றைக்கு ஹிட்லரின் உரை, புனித மான ஜெர்மன் “வோல்க்” ஐ காட்டிக்கொடுத்ததாக அவர் குற்றம்சாட்டிய வைமார் குடியரசு மற்றும் அதன் தலைவர்களை விஷமத்தனமாக கண்டனம் செய்வ தற்கு அர்ப்பணிக்கப்பட்டது. துரோகிகள் அனைவரும் அகற்றப்படுவார்கள், மேலும் ஜெர்மனி மீண்டும் மகத்துவம் பெறும் என்று ஹிட்லர் கூறினார்.
யாருக்குப் பொற்காலம்
டிரம்ப், ஹிட்லரின் “ஆயிரம் ஆண்டு ரைச்” என்ற கருத்தை எடுத்து, அதை அமெரிக்காவின் “பொற் காலம்” என மறுவடிவமைத்துள்ளார். ஆனால் இந்த “பொற்காலம்” டிரம்ப்பிற்கும், அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பில்லியனர்களான எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற பணக்கார முதலாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவர்களுடன் இத்தாலியின் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜாவியர் மிலே போன்ற சர்வதேச பாசிச நண்பர்களும் இணைந்து கொண்டனர்.
அரசியல் துணிவற்ற எதிர்க்கட்சியினர்
வெளியேறும் ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், முன்னாள் ஜனாதிபதிகள் கிளிண்டன், ஒபாமா மற்றும் சார்லஸ் ஷூமர், பெர்னி சாண்டர்ஸ், ஹகீம் ஜெஃப்ரிஸ் உட்பட ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மற்றும் தற்போதைய தலை வர்களும் விழாவில் கலந்து கொண்டனர். டிரம்ப், அவர்களை பகிரங்கமாக இழிவுபடுத்தி பேசியபோ தும், அமைதியாக மரியாதையுடன் கேட்டுக் கொண்டி ருந்தனர். அவர்களில் எவருக்கும் வரலாற்று உணர்வோ, ஜனநாயக கொள்கைகள் மீதான பற்றோ இல்லை. ஒரு பாசிச ஜனாதிபதியின் பதவியேற்பை பகிரங்கமாக எதிர்த்து விழாவை விட்டு வெளியே றும் அரசியல் துணிவு கூட இல்லை. மாறாக, அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பிற்போக்கான அர சாங்கத்திற்கு “அமைதியான அதிகார மாற்றம்” என்று பாராட்டினர்.
போர் வெறியின் உச்சம்
அமெரிக்க விரிவாக்கத்திற்கான திட்டங்களை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். பனாமா கால்வாயை “திரும்ப கைப்பற்றுவதாக” அறிவித்தார். மெக்சிகோ, எல் சால்வடார் மற்றும் வெனிசுலாவில் உள்ள குற்றக் கும்பல்களை ஐஎஸ்ஐஎஸ் (ISIS) மற்றும் அல்-கொய்தாவிற்கு இணையான “வெளிநாட்டு பயங்கர வாத அமைப்புகளாக” அறிவிக்கப் போவதாக கூறி னார். இது அந்த நாடுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த சட்டப்பூர்வ சாக்குப்போக்காக அமையும். 1897-1901 காலகட்டத்தில் கியூபா, போர்ட்டோ ரிகோ, குவாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடு களை ஸ்பானிய-அமெரிக்கப் போரில் கைப்பற்றிய ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லியின் சாதனைகளை டிரம்ப் போற்றினார். வட அமெரிக்காவின் உயர மான மலையான அலாஸ்காவின் தெனாலிக்கு மெக்கின்லியின் பெயரை மீண்டும் சூட்டுவதாக உறுதி யளித்தார். மெக்சிகோ வளைகுடாவை “அமெரிக்க வளைகுடா” என்று மறுபெயரிடப் போவதாகவும் அறி வித்தார். சமீப வாரங்களில் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என்றும், கனடாவை 51வது மாநி லமாக இணைக்க வேண்டும் என்றும் அவர் விடுத்த அழைப்புகள் வெளிப்படையாக பேசப்படவில்லை, ஆனால் அவை மறைமுகமாக புரிந்து கொள்ளப் பட்டன.
குடியேற்றவாசிகளுக்கு குறி
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் “தேசிய அவசரநிலையை” உடனடியாக அறிவித்து, “வெளி நாட்டு படையெடுப்பை” தடுக்க இராணுவத்தை நியமிப்பதாக டிரம்ப் அறிவித்தார். குடியேற்ற எதிர்ப்பு ஆணைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாக, தஞ்சம் கோரும் அனைவரையும் சர்வதேச சட்டத்தை மீறி வெளியேற்றி “மெக்சிகோவில் தங்க வைக்கும்” கொள்கையை மீண்டும் டிரம்ப் அமல்படுத்துவார். குடியேற்ற வாசிகள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வேலைத் தளங்களில் சோதனைகளை அதிகரிக்க காவல்-இராணுவ அமைப்பு பலப்படுத்தப்படும். இது நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான, இறுதியில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களை கைது செய்ய வழிவகுக்கும். இந்த ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் விரைவில் குடியேற்றவாசிகள் மற்றும் உள்நாட்டு தொழிலாளர் வர்க்கம் முழுவதையும் பாதிக்கும். 2017ஆம் ஆண்டு பணக்காரர்களுக்கான வரிக் குறைப்பை நீட்டிப்பது; அமெரிக்க இராணுவ இயந்திரத்தை மேலும் பெருமளவில் விரிவுபடுத்து வதற்கு நிதியளிக்க சமூக நலத்திட்டங்களை வெட்டு வது என்ற தனது பரந்த திட்டத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும், தடை செய்ய டிரம்ப் முயல்கிறார்.
எளிய மக்கள் அந்நிய எதிரிகளாம்!
1798ல் இயற்றப்பட்ட கொடூரமான அந்நிய எதிரிகள் சட்டத்தை (Alien Enemies Act) வெகுஜன தடுப்பு மற்றும் நாடு கடத்தல் திட்டங்களுக்கு பயன்படுத்தப் போவதாகவும் டிரம்ப் அறிவித்தார். போர் மற்றும் வறுமையில் இருந்து தப்பி வரும் லட்சக்கணக்கான குடியேற்றவாசிகளை, ‘படையெடுக்கும் ராணுவமாக’ சித்தரித்தார். இந்த சட்டம் கடைசியாக இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவில் வசித்த ஜெர்மன், இத்தாலிய மற்றும் ஜப்பானிய குடியேற்ற வாசிகளின் ஜனநாயக உரிமைகளை பறிக்கப் பயன் படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி, அச்சுறுத்தல் அளவைப் பொறுத்து இந்த நபர்கள் பதிவு செய்யப் பட்டு, கண்காணிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப் பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர். குடியேற்ற சமூகங்களை அச்சுறுத்தி, தொழிலா ளர் வர்க்கத்தை பிரித்து, மேலும் அடக்குமுறைக்கான சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம்.
தேவ தூதரின் ‘தெளிவான விதி’
கடந்த கோடையில் கொலை முயற்சியில் இருந்து தப்பித்ததை - “அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்க கடவுள் என்னை காப்பாற்றினார்” என்று தேவதூதர் தன்மையில் விவரித்தார். பதவியேற்பு விழாவின் ஆடம் பரமும் சடங்குகளும் டிரம்ப்பை கடவுளால் தேர்ந்தெ டுக்கப்பட்ட கிறிஸ்தவ தேசியவாதியாக காட்டும் வகை யில் மத மற்றும் இராணுவவாத சொற்களாலும் சின் னங்களாலும் நிறைந்திருந்தது. செவ்வாய் கிரகத்திற்கு முதல் விண்வெளி வீரர் களை அனுப்பி மற்றொரு கிரகத்தில் அமெரிக்க கொடி யை நாட்டுவதே அமெரிக்காவின் “தெளிவான விதி” என்று டிரம்ப் அறிவித்தார். பலவீனமான அண்டை நாடுகளின் செலவில் அமெரிக்கா விரிவடைவதற்கான கடவுள் கொடுத்த உரிமையை குறிக்கும் “தெளிவான விதி” முழக்கம் முதன்முதலில் 1844 தேர்தலில் தென் பகுதி அடிமை முத லாளிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஜனநாயக கட்சியால் முன்வைக்கப்பட்டது. பசிபிக் வடமேற்கில் கனடாவுடனான எல்லைப் பிரச்சனையில் ஆக்கிர மிப்பு போக்கை நியாயப்படுத்தவும், 1845இல் டெக்சாசை அடிமை மாநிலமாக இணைப்பதற்கும், இறுதியாக 1846-1848 போரில் மெக்சிகோவின் பாதியை கைப்பற்றி இணைப்பதற்கும் “தெளிவான விதி” பயன்படுத்தப்பட்டது. ஆப்ரஹாம் லிங்கன் இந்த முழக்கத்தை,அடிமைத்தனத்தை விரிவாக்கும் முழக்கம் என்று கண்டித்தார். டிரம்ப் அதை முதலா ளித்துவ பணக்கார வர்க்கத்தின் போர் முழக்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
தான் என்ற ஆணவத்தின் உச்சம்
“ஃபியூரர்” டிரம்பின்- அதாவது ‘கொடூரர்’ டிரம்ப்பின் பதவியேற்பு உரையில் சுய புகழ்ச்சித் தன்மை தெளிவாக தெரிந்தது. தேசிய அவசரநிலை அறிவிப்புகளின் பெயரில் ஒருதலைபட்சமாக செயல் படுத்தப்பட வேண்டிய பரந்த நடவடிக்கைகளை அறி விக்கும் இயக்கு சக்தியாக தன்னை காட்டிக் கொண்டார். நியூ டீல் என்ற ரூஸ்வெல்ட்டின் “100 நாட்கள்” சட்டமாக்கப்பட்ட முன்மொழிவுகளாக இருந்தது போல அல்லாமல், டிரம்ப் தனது சொந்த அதி காரத்தில் பிறப்பிக்கப்படும் “100 ஆணைகளை” அறி வித்தார். அவரது உரையில் நாடாளுமன்றம் அல்லது தமது குடியரசுக் கட்சி பற்றிய குறிப்பு கூட இல்லை, மாறாக தனது தனித்துவமான மற்றும் தனிப்பட்ட பங்கை மட்டுமே வலியுறுத்தினார்.
மாபெரும் மோதல் துவங்குகிறது
ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வலிமை யை டிரம்ப் மிகப்பெரிதாக மதிப்பிட்டுள்ளார். டிரம்ப் பும் குடியரசுக் கட்சியினரும் கொண்டு வரப்போகும் பாசிச திட்டங்களுக்கு எதிராக அமெரிக்காவிலும், உல களவிலும் எழப்போகும் எதிர்ப்பை அவர் குறைத்து மதிப்பிட்டுள்ளார். டிரம்ப், வில்லியம் மெக்கின்லியை போற்றலாம். ஆனால் மெக்கின்லி 1897 முதல் 1901 வரை, ஏகாதி பத்திய காலகட்டத்தின் தொடக்கத்தில், அமெரிக்கா உலக வல்லரசாக உயர்ந்து வந்த காலத்தில் ஜனாதி பதியாக இருந்தார். டிரம்பின் ஜனாதிபதி பதவி, அமெ ரிக்காவிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவம் முட்டுச்சுவரை எட்டியுள்ள காலகட்டத்தில் வருகிறது. டிரம்ப்பின் பார்வை ஒரு மாயை. ஆனால் அது குறைந்த ஆபத்தானது அல்ல. மற்ற முதலாளித்துவ அரசாங்கங்களிடமிருந்து வரும் தவிர்க்க முடியாத எதிர்ப்புக்கும், முக்கியமாக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்- மக்களின் எதிர்ப்புக்கும் அவரது அரசாங்கம் கொடூர மாகவும் வன்முறையாகவும் பதிலளிக்கும். ஜனநாயக கட்சியினர் இந்த ஆபத்துக்களை நன்கு அறிவர். பதவி விலகும் இறுதி நேரத்தில், ஜனாதி பதி பைடன் தனது குடும்ப உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற ஜெனரல் மார்க் மில்லி, முன்னாள் பொது சுகாதார அதி காரி டாக்டர் அந்தோணி பவுசி மற்றும் ஜனவரி 6, 2021 டிரம்ப்பின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை விசா ரித்த சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். டிரம்ப் நிர்வாகம் தனது அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் வழக்குகளை தொடரும் என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்தினார்.
ஜனநாயகக் கட்சியினர் தங்களை டிரம்ப்பின் கோபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதில் கவலை கொண்டுள்ளனர். ஆனால் தாக்குதலுக்கு ஆளா கப்போகும் லட்சக்கணக்கான குடியேற்றவாசி களையும், தொழிலாளர் வர்க்கத்தினரையும் பாது காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி எடுக்கவும் மாட்டார்கள். டிரம்ப் தனது உண்மையான சமூக அடித்தளத் துக்கு நேர் எதிர் விகிதத்தில் பணவெறி பிடித்த உலக மகா பணக்காரர்களின் பிரதிநிதியாக வெள்ளை மாளி கைக்குள் நுழைகிறார். பதவியேற்பு விழா, பொது மக்கள் முன்னிலையில் ‘கேபிட்டல்’ கட்டடத்தின் வெளியே நடத்தப்படாமல், ரொட்டண்டா அறைக்குள் நடத்தப் பட்டதே அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உண்மை யான தனிமைப்படுத்தப்பட்ட நிலையை காட்டுகிறது. தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் எலான் மஸ்க் இரண்டு முறை ‘ஹிட்லர் வணக்கம்’ செலுத்தினார். ஆனால் பணக்காரர்களின் சர்வாதிகார ஆர்வத்தை தொழிலாளர் வர்க்கம் ஏற்கவில்லை. ஜனவரி 20, 2025 அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு வர்க்க மோதலின் காலகட்டத்தை துவக்கி வைத்திருக்கிறது. ‘வேர்ல்டு சோசலிஸ்ட்’ இணைய ஏட்டில் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும்,
பத்திரிகையாளர்களுமான பேட்ரிக் மார்ட்டின், டேவிட் நார்த் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம் ராஜூ பாய்