articles

img

கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம் - டி.ரவீந்திரன் ,மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது 1930ம் ஆண்டு வெளியிட்ட முதல் நகல் அறிக்கையில், “தொழி லாளர்களையும், விவசாயிகளையும் நசுக்கிக் கொண்டிருக்கக்கூடிய வறுமையிலிருந்து விடுவிக்கவும், நாட்டின் விடுதலையை வென்றெடுப்பதும், விவசாய புரட்சிப் பதாகையை உயர்த்திப் பிடிக்க வேண்டியதும் அவசியமாகும்” என்று குறிப்பிட்டது. இந்த விவசாய புரட்சியானது நிலப்பிரபுத்துவ அமைப்பை உடைத்தெறியச் செய்யும் பிரிட்டீஷ் மூலதனம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கெதிரான ஒரு போராட்டமாக இந்தியாவின் புரட்சிகர விடுதலைக்கான அடிப்படையாக அமைந்தது.  நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம்  நிலங்கள் குறிப்பிட்ட சிலரிடம் குவிந்து கிடந்த காலகட்டத்தில், நிலப்பிரபுத்துவம் விவசாயிகளை ஒடுக்கி, உழைப்பை சுரண்டியது. இந்த சூழலில், அனைத்து வகை நிலப்பிரபுத்துவ முறைகளையும் ஒழித்து, நிலமற்றவர்களுக்கு நிலங்களை மறுவிநியோகம் செய்திட வேண்டும் என்றும், விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் முதன்முதலில் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. 

மாநிலங்களில் நடந்த முக்கிய போராட்டங்கள் 

தேபாகா இயக்கம் : குத்தகை விவசாயிகளின் உரிமைக்காக “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கத்துடன் தேபாகா இயக்கம் நடத்தப்பட்டது. இது விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட உதவியது. தமிழ்நாடு : கீழத்தஞ்சையில் விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி கொடூர கொத்தடிமை முறைகளை எதிர்த்து செங்கொடி சங்கம் தீரமிக்க போராட்டங்களை நடத்தியது. “அடித்தால் திருப்பி அடி” என்ற கோஷத்துடன் ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்வு பெற்று ஒன்றுபட்டனர்.  மராட்டியம் : தானே மாவட்டத்தில் வொர்லி பழங்குடி மக்களை அணிதிரட்டி அடிமை உழைப்பை ஒழித்துக் கட்டும் நீடித்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.  தெலுங்கானா : கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நிலப்பிரபுக்களிடம் உள்ள நிலங்களை கையகப்படுத்தி, முப்பது லட்சம் மக்கள் வசித்த மூவாயிரம் கிராமங்களை விடுவித்து, பத்துலட்சம் ஏக்கர் நிலங்களை நிலமற்றவர்களுக்கு வழங்கினர். 

தற்கால போராட்டங்கள் 
புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக 1990களில் புதிய பொருளாதார கொள்கை முன்மொழியப்பட்டபோது, இது விவசாயத்தில் உற்பத்தி செலவை அதிகரிக்கச் செய்யும், விளைபொருட்களின் விலைகள் வீழ்ச்சி அடையும், விவசாயிகளை கடனாளிகளாக்கும் என்று எதிர்த்து போராடியது. 

விவசாய சட்டங்களுக்கு எதிராக

மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 13 மாத கால விவசாயிகளின் போராட்டத்திற்கு உறுதிமிக்க ஆதரவை தெரிவித்து உடனிருந்தது.

நிலச்சீர்திருத்தம் மற்றும் சட்டப் பாதுகாப்பு 


போராட்டங்களின் விலை 
கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களில் 4000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். ஆட்சியாளர்களின், நிலப்பிரபுக்களின் அடக்குமுறைகளுக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும், தூக்குக்கயிறுக்கும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். 
முதல் கம்யூனிஸ்ட் அரசின் சாதனைகள் 
1957ல் கேரளத்தில் இ.எம்.எஸ் தலைமையில் முதன்முதலில் அமைந்த கம்யூனிஸ்ட் அரசு நிலச்சீர்த்திருத்த சட்ட மசோதாவை கொண்டு வந்தது. பின்னர் கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா மாநிலங்களில் ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையான நிலச்சீர்த்திருத்தத்தை அமுல்படுத்தி லட்சக்கணக்கான மக்களுக்கு நிலங்களை பகிர்ந்தளித்தது. 
வங்காளம் மற்றும் பிற மாநிலங்கள் 
வங்கத்தில் விவசாயிகளை அணிதிரட்டி நிலத்துக்கான போராட்டத்தை கம்யூனிஸ்ட்கள் நடத்தினர். பீகார், உத்தரபிரதேசம், பஞ்சாப், திரிபுரா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றனர்.
தற்கால போராட்டங்கள்
* விவசாய விளைநிலங்களை தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டம்
* சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து வெற்றிகரமான போராட்டம்
* சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம்
* எம்.எஸ்.பி-ஐ கட்டாயம் அமுல்படுத்த மத்திய சட்டம் கோரிக்கை
கிராமப்புற வேலை உறுதித் திட்டம் 
விவசாயத்தில் வேலைநாட்கள் குறைந்து வேலையின்மை, வறுமை அதிகரித்து வரும் நிலையில், கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்துவதில் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய பங்கினை ஆற்றியது.
முன்மாதிரி செயல்பாடுகள் 
 கேரளாவில் சிபிஐ(எம்) சாதனைகள்
* ஒரு குவிண்டால் நெல்லுக்கு நாட்டிலேயே அதிகப்படியான விலையாக ரூ.2,870 வழங்கி கொள்முதல்
* 16 வகையான காய்கறிகளுக்கு உற்பத்தி செலவுடன் 20% கூடுதல் விலை வழங்கும் திட்டம் 
நம்பிக்கைச் செங்கொடி 
விடுதலை போராட்ட காலம் முதல் ஒரு நூற்றாண்டு காலமாக இந்திய விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக செங்கொடி இயக்கம் அளப்பரிய தியாகங்களை செய்து போராடி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகளின் - விவசாய தொழிலாளர்களின் நம்பிக்கையாக தொடர்ந்து விளங்கி வருகிறது.